ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?
By
கிருபன்
in அரசியல் அலசல்
Share
-
Tell a friend
-
Topics
-
4
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது. எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார். இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், எட்கா தொடர்பிலும் முன்னதாக தெரிவித்த கருத்தைத் தேசிய மக்கள் சக்தி தற்போது மீளப் பெறுமா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார். இதன்போது கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உள்நாட்டில் மின்சக்தி உற்பத்தி செய்வதாகவும் மேலதிக மின்சக்தியை பிம்ஸ்டெக் அமைப்பின் பொருளாதார ஒத்துழைப்புடன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் நாம் முன்னதாக கூறியிருந்தோம். இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனை விடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் கைச்சாத்திடவில்லை. இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மின்சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்கொண்டு செல்லப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டை காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313907 -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,RICK SCHULTING கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த எலும்புகளை வீசி எறிந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்தச் சம்பவம் 'பழிவாங்கும்' நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எதிரொலித்ததாகவும் கூறுகிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக் ஷூல்டிங். இந்த வன்முறையில் இறந்தவர்களை "மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்கும் நோக்கிலும்" சடலங்களை "அவமதிக்கும் நோக்கிலும்" ஒரு சடங்காக உட்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி? மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம் வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள் எத்தனை பேர் உயிரிழந்தனர்? மூவாயிரத்திற்கும் அதிகமான எலும்புத் துகள்கள் சாமர்செட் பகுதியில் மெண்டிப் ஹில்ஸ் என்ற இடத்தில் சார்டர் வாரன் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என 37 பேர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அந்தக் காலத்தில் பிரிட்டனில் இருந்த கிராமங்களில் பெரும்பாலும் 50 முதல் 100 பேர் வரை வாழ்ந்து வந்தனர் என்றும் இந்தத் தாக்குதல் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பில் தள்ளியிருக்கும் என்றும் தெரிவித்தனர். பிரிட்டனில் வெண்கல காலம் கி.மு. 2500-2000 முதல் கி.மு. 800 வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள், ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் கல்லில் செய்யப்படுவதற்குப் பதிலாக வெண்கலத்தில் செய்யப்படத் தொடங்கினர். புதுப்புது விவசாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, பெரிய மற்றும் நிரந்தரமான நிலங்கள் பிரிக்கப்பட்டன. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 கல்லால் ஆன ஆயுதங்களால் தாக்குதல் பட மூலாதாரம்,RICK SCHULTING படக்குறிப்பு, கடுமையான வன்முறைச் செயல்களில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன இந்தத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எந்தவித பதில் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு வல்லுநர்கள் தெரிவித்தனர். எலும்புகளில் காணப்படும் கீறல்கள் மற்றும் வெட்டுகள் ஆகிய அடையாளங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் வேண்டுமென்றே கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டு மனிதர்களைத் துண்டுகளாக வெட்டிச் சாப்பிட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. "இந்த அடையாளங்களை ஒரு விலங்கின் எலும்பில் பார்த்திருந்தால், சந்தேகமே இன்றி இரைச்சிக்காக இவை வெட்டப்பட்டுள்ளன என்பதைக் கூறிவிடுவோம்," என்கிறார் பேராசிரியர் ஷூல்டிங். தாக்குதல் நடத்தியவர்கள் மனிதர்களை பசி மற்றும் பஞ்சம் காரணமாக உண்ணவில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால், அருகில் இருந்த விலங்குகளின் எலும்புகள் போதுமான உணவு இருந்ததை உறுதி செய்கிறது. இதுதான் இந்தக் காலகட்டத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பெரியளவிலான வன்முறை நிகழ்வு. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 உறவுச் சிக்கலால் நிகழ்ந்ததா? பட மூலாதாரம்,RICK SCHULTING படக்குறிப்பு, இதிலுள்ள கீறல்கள், உறுப்புகள் துண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறது அந்தக் காலத்தில், வளங்களுக்கான தேடலில்தான் வன்முறை உருவானது என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன. இதனால், உறவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த முறிவுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையான காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "கோபம், பயம், மனக்கசப்பு போன்ற காரணங்களால் தூண்டப்பட்டால் மட்டும்தான் ஒரு மனிதரை இப்படி பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ய முடியும்," என்று கூறுகிறார் ஷூல்டிங். "இதை ஒரு தனிநபர் செய்யவில்லை. ஒரு சமூகத்தை அழிக்க மற்றொரு சமூகம் ஒன்றுகூடி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்றார் ஷூல்டிங். "இது தவறு என்று நினைத்தீர்கள் என்றால், இதற்காக நீங்கள்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டத்திடம் சென்று நியாயம் கேட்க முடியாது," என்றார் ஷூல்டிங். இந்த விஷயத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு பக்கமும் வன்முறையை அதிகரிக்கும் ஆட்கள் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன?17 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு பஷர் அல்-அசத் முதல் அறிக்கை - என்ன கூறியுள்ளார்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RICK SCHULTING பிரிட்டனில் வெண்கல காலத்தின் தொடக்கம் பெரும்பாலும் அமைதியான வன்முறையற்ற காலமாகவே கருதப்பட்டது. ஏனெனில் தாக்குதல்களுக்கான ஆதாரம் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டது. வாள் அல்லது கோட்டைப் பாதுகாப்பு போன்ற அமைப்பு எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர் இந்தக் காலகட்டத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டிருந்தது, என்றார் ஷூல்டிங். நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன 'கோட்டா கோச்சிங் தொழில்' வீழ்ச்சி அடைகிறதா?57 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?17 டிசம்பர் 2024 வரலாறு வன்முறை மிகுந்ததா? பட மூலாதாரம்,ANTONY AUDSLEY படக்குறிப்பு, கடந்த 1970களில் சாமர்செட்டில் உள்ள குகைகளில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன இது ஒருமுறை மட்டுமே நடந்த தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்தச் சம்பவத்திற்கு பின்விளைவுகள் இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர். "ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் இந்த வன்முறையில் இருந்து பின்வாங்கி, சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளனர்," என்றார் ஷூல்டிங். ஆனால், இதற்காகவே கடந்த காலம் வன்முறை மிகுந்து இருந்ததாக எண்ணிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஷூல்டிங். "வெண்கல காலத்தைத் தாண்டி மனிதனின் இயற்கை குணத்தைப் பற்றி அறிய இது நமக்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்," என்றார் அவர். இந்த ஆராய்ச்சி 'ஆன்ட்டிக்விட்டி' (antiquity) ஆய்விதழில் வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1d3xrq04w0o -
இதற்கு தலைவராக சிறிலங்கா ஜனாதிபதி தோழர் அணுராவை நியமிக்குமாறு ..தோழர் புத்தன் அறிவுரை வழ்ங்குகின்றார் ...
-
வாழ்க தமிழரசு கட்சி ...வெல்க உங்கள் கொள்கை ....நீங்கள் சகல கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து உங்கள் இலட்சியத்துக்காக போராடினீர்கள் ..நன்றிகள்...தொடர்ந்து போராடுங்கள்...பல தடங்கள் வருகின்றது சுழிச்சு முன்நோக்கி செல்கின்றீர்கள் வாழ்க ..வெல்க....
-
ஈரானை குறிவைத்து ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது Andre Damon 6 February 2024 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம் அமெரிக்க F-35B மின்னல் வேக ஸ்டெல்த் போர் விமானங்களுடன் விமானப்படையின் B1-B லான்சர் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடல் மீது பறக்கின்றன. ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு வார அல்லது மாதக்கணக்கான தாக்குதல் என்று அதிகாரிகள் கூறிய ஒன்றை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களிலுள்ள 85 இலக்குகள் மீது 125 க்கும் அதிகமான குண்டுவீச்சுக்களை நடத்த டெக்சாஸிலுள்ள டைஸ் விமானப்படை தளத்தில் இருந்து அணுஆயுதமேந்தும் திறன் கொண்ட B-1B குண்டுவீச்சு விமானங்களை அனுப்பினார். “ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), கட்ஸ் படை (Quds Force) மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்கள்” பயன்படுத்திய இராணுவ தளங்களை இலக்கில் வைத்ததாக அமெரிக்கா கூறியது. இத்தாக்குதல்கள் சட்டவிரோதமானவையாகும், சிரியா மற்றும் ஈராக் அரசாங்கங்களை மீறி நடத்தப்பட்டன, காங்கிரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டன அல்லது அமெரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கான எந்த முயற்சியும் இல்லாமல் நடத்தப்பட்டதாகும். ஒரு ஈராக்கிய அதிகாரி ஈராக்கில் நடந்த தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் “ஈராக்கிய இறையாண்மையை மீறுவது” ஆகவும் கண்டித்தார், மேலும் அமெரிக்காவானது “ஈராக்கையும் அப்பிராந்தியத்தையும் எதிர்பாராத விளைவுகளுக்கு இழுக்கும் ஒரு அச்சுறுத்தல்” என்றும் சேர்த்துக் கொண்டார். சிரிய அரசு ஊடக நிறுவனங்களானது “அமெரிக்க ஆக்கிரமிப்பு” செயலைக் கண்டித்தன. 62 மைல்களுக்கும் அதிகமான நீளமுள்ள நாட்டின் பரந்த பகுதியான, கிழக்கு சிரியாவில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஏகாதிபத்திய-சார்பு சிரிய கண்காணிப்பகம் AFP க்கு அறிவித்தது. கடந்த வாரம் ஜோர்டானில் மூன்று அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. சிப்பாய்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் காண பைடென் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு சுருக்கமான மூன்று பத்தி அறிக்கையை வழங்கியபோது, குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே தங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன. யதார்த்தத்தில், இந்த சிப்பாய்களின் மரணங்கள், பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கடந்த மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பிரமாண்டமான இராணுவ விரிவாக்கத்தின் விளைவேயாகும். காஸாவில் இனப்படுகொலைத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு நிதி, ஆயுதங்கள், விநியாக ஆதரவு மற்றும் அரசியல் மறைப்பை வழங்கியது போல், பரந்த மோதலைத் தூண்டும் வேண்டுமென்றே என்ற நோக்கத்துடன் அமெரிக்கா அப்பிராந்தியம் முழுவதும் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் படைகளைக் கொண்டு அப்பகுதியை நிரப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தாக்குதல்களை அறிவிக்கையில், பைடென் இவ்வாறு அறிவித்தார், “அமெரிக்காவானது மத்திய கிழக்கிலோ அல்லது உலகில் வேறெங்கிலும் மோதலை விரும்பவில்லை.” இத்தகைய அறிக்கைகள், ஒவ்வொரு நாளும் வெறுப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப கூறப்பட்டாலும், அர்த்தமற்றவையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் முழுவீச்சிலான போரை “விரும்புகிறதோ” இல்லையோ, அது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்பு உட்பட பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகளின் மீது தொடர்ந்து குண்டுவீசியும், பட்டினி போட்டும் வந்துடன் படையெடுத்தும் வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சியின் பாகமாக மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் இந்த விரிவாக்கப் போரின் இலக்கை அமெரிக்கா “நாடுகிறது” என்பது தெளிவாகிறது. இந்த இலக்கையொட்டி, பைடென் மத்திய கிழக்கில் புதிய இராணுவத் தாக்குதலானது ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். குண்டுத்தாக்குதல்கள், “நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரங்களிலும் இடங்களிலும் தொடரும்” என்று பைடென் கூறினார். பைடென் மேலும் ஓர் அச்சுறுத்தலையும் சேர்த்துக் கொண்டார், “எங்களுக்கு தீங்கு செய்ய முனையும் அனைவருக்கும் இது தெரியட்டும்: நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு விளைவித்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.” “இது முதல் தொகுப்புப் பதில்கள்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார், அவர் “எதிர்காலத்தில் மேலும் பதில்கள் இருக்கும்” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “நிரந்தர போரின்” தொடர்ச்சியையும் விரிவாக்கத்தையும் குறிக்கின்றன. தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் முற்றிலும் விமர்சனமின்றி இருந்தன, அவை “பதிலடி” மற்றும் “தற்காப்பு” என்ற போலியான நியாயப்படுத்தலை மீண்டும் கூறின. அரசியல் அமைப்பிற்குள் இருந்த விமர்சனம் பைடென் அதிகளவு நடவடிக்கைகள் எடுக்காததற்காக கண்டனம் செய்தது. “பைடென் இறுதியாக ஈரானைத் தடுத்து நிறுத்துவாரா” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைடென் அளவுக்கு அதிகமான “கட்டுப்பாட்டை” கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டியது, வெள்ளை மாளிகையானது “எதிரி இலக்கு நடைமுறைக்கு அமெரிக்க துருப்புகள் இனியும் தீனியாக இருக்காத வகையில் சரியான இலக்குகளுக்கு எதிராக போதுமான பலத்தைப் பயன்படுத்த” அழைப்பு விடுத்தது. அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் முன்னணி உறுப்பினர்களும் உடனடியாக தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்தனர், செனட் ஆயுத சேவைகள் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ஜாக் ரீட் பகிரங்கமாக அவற்றை ஆதரித்தார். இந்தப் பெரும், நீண்ட தூர குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா எத்தகைய தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு தெளிவாக நிரூபணம் ஆகும். “அமெரிக்க குண்டுவீச்சு விமானத்தின் திறன் என்னவென்றால், நாங்கள் விரும்பும் நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் தாக்க முடியும்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டக்ளஸ் ஏ. சிம்ஸ் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார். முக்கியமாக, இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் அணுகுண்டு தாங்கிகளாக இருக்கின்ற வேளையில், அதே வகையான தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இத்தாக்குதல்கள் ஈரானின் பிரதான நிலப்பகுதியை நேரடியாக இலக்கு கொள்ளவில்லை என்றாலும், வெள்ளை மாளிகை அவற்றிற்கு முன்னதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு புதிய சுற்று பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. ஜோர்டானில் இருந்து வரும் விமானங்கள் வரவிருக்கும் தாக்குதல்களில் கூட்டுச்சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை குறிப்புக் காட்டியுள்ளது. இது எந்த அளவிற்கு மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் பிராந்தியப் போரின் பெரும் சுழற்சிக்குள் இழுக்கப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் சவூதி அரேபியா, எகிப்து, கட்டார், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அவரது சுற்றுப்பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் நிகழ்ந்துள்ளன. “காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நிலையாகவும், அதிகரித்த முறையிலும் வழங்க அனுமதிக்கும் மனிதாபிமான போர் இடைநிறுத்தம்” குறித்த பேச்சுவார்த்தை தான் தனது நோக்கம் என்று பிளிங்கன் கூறினார். யதார்த்தத்தில், பிளிங்கனின் விஜயம், ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பிராந்திய போரை விரிவாக்குவதற்கு வசதி செய்து கொடுப்பதையும், அமெரிக்க ஆதரவுடன் காஸா மக்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவை முடுக்கி விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 1 அன்று, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “100,000 க்கும் அதிகமான காஸாவாசிகள் இறந்துவிட்டதாகவோ, காயமடைந்துள்ளதாகவோ அல்லது காணாமல் போயுள்ளதாகவோ மற்றும் இறந்துவிட்டதாகவோ கருதப்படுகிறது” என்று கூறினார். யூரோ-மெட் மானிட்டரின் ஜனவரி 13 அறிக்கையை டெட்ரோஸ் மேற்கோள் காட்டினார், அது கொல்லப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் என்று குறிப்பிட்டது. யூரோ-மெட் இன் புள்ளிவிபரங்களின்படி, 32,246 காஸாவாசிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. இவர்களில் பெண்கள் 6,860 பேரும் குழந்தைகள் 12,660 பேரும் உள்ளனர். காஸாவில் 190,000 வீடுகளை இஸ்ரேல் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்துள்ளது, இது மொத்த வீட்டுத் தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஆனது காஸாவில் கட்டிடங்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டதை அறிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டது, அதாவது “நவம்பர் முதல் குறைந்தபட்சம் 33 கவனமாக திட்டமிடப்பட்ட அழிப்புகளாக மசூதிகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் ஒட்டுமொத்த பிரிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தகர்த்துள்ளனர்,” என்று குறிப்பிட்டது. டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது, “இத்தகைய தகர்ப்புகளை நடத்த, சிப்பாய்கள் கண்ணிவெடிகள் அல்லது பிற வெடிகுண்டுகளை வைத்து, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் நுழைந்து, பின்னர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து வெடிக்க வைக்கும் விசையை இழுத்து வெளியேற வேண்டும்.” கடந்த வாரம், சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய அரசாங்கம் இனப்படுகொலை நம்பத்தகுந்த வகையில் செய்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததுடன், மேலும் இனப்படுகொலை நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் தடுக்க உத்தரவிட்டது. ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறைந்தது 874 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இதனுடன் பாரிய கூட்டு மரண தண்டனைகள் குறித்து மேலதிக சான்றுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. அதாவது இந்த வாரம் கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட 30 பேரின் பெரும் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது உட்பட, அவர்கள் உடனடியாக நியாயமான விசாரணையின்றி உடனடியாக கொல்லப்பட்டதாகத் தோன்றுகிறது. ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலாயக்கற்றவை என்பதையே காஸாவில் நடந்து வரும் மற்றும் அதிகரித்து வரும் இனப்படுகொலையும் மத்திய கிழக்கு முழுவதிலும் பாரிய புதிய அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையும் தெளிவுபடுத்துகின்றன. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இந்த வெடிப்பை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது அவசியமாகும். https://www.wsws.org/ta/articles/2024/02/06/hixh-f06.html
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts