Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது.

எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார்.

இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், எட்கா தொடர்பிலும் முன்னதாக தெரிவித்த கருத்தைத் தேசிய மக்கள் சக்தி தற்போது மீளப் பெறுமா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

உள்நாட்டில் மின்சக்தி உற்பத்தி செய்வதாகவும் மேலதிக மின்சக்தியை பிம்ஸ்டெக் அமைப்பின் பொருளாதார ஒத்துழைப்புடன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் நாம் முன்னதாக கூறியிருந்தோம்.

இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதனை விடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் கைச்சாத்திடவில்லை.

இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மின்சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்கொண்டு செல்லப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நாட்டை காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/313907



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாறு தெரிந்தவர் நீங்கள். நாம் மேற்கை நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது கனவும் அரவணைப்பும் இந்திய ரசிய சீன கியூபா மற்றும் வியட்நாம் சார்ந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கதவையும் காதையும் முற்றிலுமாக மூடிய பின்னரே நாம் அடுத்தவரை நாடினோம்.  போர்க்குற்றங்கள் மற்றும் பேரளிவுகளுக்கு எல்லோரும் தான் காரணம். அதில் இந்திய ரசிய சீன பங்கு மிக மிக அதிகம். மேற்குலகம் சில தடைகள் எச்சரிக்கைகளை யாவது செய்தது. அதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டுப்பாடற்ற இந்திய ரசிய சீன ஆதரவுடன் இலங்கையில் தமிழர்களே முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.  
    • முப்பட்டைக்கண்ணாடியினூடே jeyamohanDecember 17, 2024 (1) அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர எழுத்துக்கள் முழுமையாகவே படிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மானுடத்தின் தொல்வரலாறு குறித்து நமக்கிருக்கும் விரிந்த சித்திரமே அங்கிருந்து உருவாகி வந்ததுதான். ‘அழியாத சொல்’ எனும் சொற்சேர்க்கை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவை கல்லில் பொறிக்கப்பட்டமையால் அழிவற்றதாகின்றனவா? இல்லை. எந்த நூலிலும், எங்கும் எழுதப்படாததனாலேயே கூட இந்திய வேதங்கள் அழிவின்மையை அடைந்து இன்று வரை ஒலிபிசகாமல் நீடிக்கின்றன. அழிவின்மை என்பது அச்சொற்களுக்கு மானுடம் அளிக்கும் இடத்தில் உள்ளது. நகரங்கள் இடிந்தழிகின்றன. மலைகள் கூட கரைந்து மறைகின்றன. ஆனால் இலக்கியத்தை மானுடன் நெஞ்சோடணைத்து பேணி கொண்டு யுகங்களைத் தாண்டி வந்துகொண்டே இருக்கிறான். எழுதப்பட்டவை எவையும் அழிவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவை ஒருவேளை நேரடியாக நினைவில் நின்றிருக்காமல் ஆகலாம். மறைந்து போய்விட்டவை என்று அவற்றைப்பற்றி ஆய்வாளர்கள் சொல்லலாம். மறைந்துவிட்டவை, அழிந்தவை அல்ல. அவை உருகி மறுவடிவை அடைந்தன, மறுபிறப்பு கொண்டன என்றே என்னால் சொல்லமுடிகிறது. அழிவின்மை என்பது சொல்லில் உறையும் உண்மைக்கு மானுடம் அளிக்கும் எதிர்வினை. மானுடன் சொல் அழிவதை விரும்புவதில்லை. சொல் அவனுடைய தெப்பம். அதைப் பற்றிக்கொண்டே அவன் மிதக்க முடியும். அது எந்நிலையிலும் மூழ்கிவிடலாகாது. அந்த அளவுக்கு சொல்லுக்கிருக்கும் பங்களிப்பு தான் என்ன? இப்படித் தோன்றுகிறது, மானுடவாழ்க்கை இங்கு தன்னியல்பான விரிதலுடன் முட்டி மோதி பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இது உருவான ஊற்றும் அறியக்கூடுவதல்ல. செல்லும் திசை அறியக்கூடுவதல்ல. இதன் எந்தத் தருணமும் ஏதேனும் ஒரு வடிவ ஒழுங்குக்குள் நிற்பதும் அல்ல. முற்றிலும் சிதறுண்டதென்பதுதான் வாழ்க்கைக்கு நாம் அளிக்கும் அறுதியான வரையறை. அவ்வளவு பேருருவம் கொண்ட இவ்வாழ்க்கை நமக்கு வசப்படாத காட்டு விலங்கு. அதை முழுக்க நாம் நம் ஆளுகைக்குள் கொண்டு வர முடியாதெனினும் அதன்மேல் ஏறியே ஆகவேண்டும். அது நம் எல்லைக்குள் காலத்திற்குள் சற்றேனும் நமக்கு துணை நின்றாக வேண்டும். அந்தப்பெருங்களிற்றை பழக்கப்படுத்துவதற்கு அதை வென்று நிறுத்துவதற்கு அதற்கிணையான பெருங்களிறொன்று நமக்குத் தேவையாகிறது. களிறே எப்போதும் களிற்றைப் பிடித்து பழக்கி அளிக்கிறது. இந்த இரண்டாவது பெருங்களிறே இலக்கியம். இது பிறிதொருவனத்தில் நாம் நமது பெருந்தவத்தால் பிடித்து பழக்கி வசப்படுத்தி ஏறிக்கொண்ட ஒரு விலங்கு. மொழியெனும் காட்டில் துளித்துளியாக தொட்டுச் சேர்த்து புனைந்து புனைந்து நாம் உருவாக்கிக்கொண்டது இது. இதன் பேருருவம் இங்கு பிரபஞ்ச வெளி நிகழ்த்தும் வாழ்வெனும் பேருருவத்திற்கு நிகராக நிற்க முடியுமென்று நாம் அறிந்தோம். ஆகவே இதை நம் முதன்மை பெரும் செல்வமென யுகங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். வாழ்வின் ஒழுங்கின்மையின், இலக்கின்மையின், வடிவின்மையின் அராஜகத்திற்கு எதிரான ஒன்று இலக்கியம் என்பதனால் ஒழுங்கு, வடிவம், நோக்கம் ஆகியவை என்றும் இலக்கியத்தின் இயல்புகளாக இருந்து வந்துள்ளன. பெருங்காவியங்கள் மொத்த வாழ்க்கையையுமே ஒழுங்கும் நோக்கமும் வடிவும் கொண்டவையாக ஆக்கும் துடிப்பில் இருந்து உருவானவை. ஆகவே அவை வாழ்வளவுக்கே பெரியவை. சொல்லிச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் நாம் பொருள் அளிக்கிறோம். பொருள்களை அளித்து நோக்கங்களை அமைக்கிறோம். பொருளும் நோக்கமும் பொருந்தி அமையும் வடிவத்தை எழுதியும் பேசியும் பாடியும் பொருளாய்ந்தும் மெல்ல மெல்ல சமைத்துக்கொண்டிருக்கிறோம். இலக்கியத்தின் அடிப்படையான இந்த நோக்கத்திலிருந்து எந்நிலையிலும் அது விலக முடியாதென்றே நான் எண்ணுகிறேன். வாழ்விற்கு பொருளை சமைத்தளிப்பதே இலக்கியத்தின் பிறவி நோக்கம். ஒரு வீச்சில் இதுவரையிலான மானுட இலக்கியத்தை பார்த்தால் என்னென்ன வகையாக அது வாழ்க்கைக்கு பொருள் அளித்திருக்கிறது என்பதை அதன் வெவ்வேறு காலகட்டங்களை அழகியலை வரையறை செய்யும் கூறு என்று தோன்றுகிறது. வீரயுகம் என்று ஒன்றை வரையறுத்தோமெனில் வீரமே மானுட வாழ்வின் பொருள் என்றும், வாழ்வு இங்கு நிகழ்வதின் நோக்கம் என்றும் அது வரையறுத்திருப்பதைக் காணலாம். மகாவீரம் என்று மெய்ஞான பயணத்தை அது குறிப்பிடுகிறது. பின்னர் அறம் தேர்வதும், அறம் நிலை கொள்வதும் இலக்கியத்தின் நோக்கம் என்று ஆயிற்று. இறை ஒன்றை அறிதலும், அகம் கொள்ளுதலும் பின்னர் இலக்கியத்தின் நோக்கமும் பொருளும் என வடிவம் கொண்டது. மானுடப்பெரும் லட்சியங்களை அறிவதும் ஆக்கிக்கொள்வதுமாக நவீன காலச்செவ்வியல் தன்னை முன் வைத்தது. அப்பெரும் கனவுகளுக்கு நிகராகவும் மாற்றாகவும் தனி மனித அகம் எனும் ஒன்றை முன்வைத்தது நவீனத்துவ இலக்கியம். இவ்வாறு பொருள் புனைதல், நோக்கம் கண்டடைதல் என்றே இலக்கியம் இதுகாறும் நிகழ்ந்து வந்துள்ளது. பின் நவீனத்துவ காலகட்டத்தில் அந்நோக்கத்தை ஐயப்படுதல், அந்தப்பொருளை மறுத்தல், அவ்வடிவத்தை சிதறடித்தல் ஆகியவை இலக்கியத்தின் இயல்புகளில் ஒன்றாக வடிவமைத்தனர். மையங்களை அழித்தல் என்று அதற்கு பெயர் சூட்டினர்.  பின்நவீனத்துவத்தின் நோக்கமென்பது நிலை கொண்டுவிட்ட பெரும் கட்டுமானங்களின் அடித்தளத்தை நொறுக்குவது தான். பெருங்கதையாடல்களின் மறுப்பென்பது அதன் அடிப்படை இயல்புகளில் ஒன்று. தமிழில் இவ்விரு கோணங்களிலுமே பின்நவீனத்துவம் அறிமுகமாயிற்று. பின்நவீனத்துவத்தின் பிறிதொரு முதன்மைக்கூறாக இருந்த (Sublime) அல்லது உன்னதம் இங்கு  எவ்வகையிலும் பின் நவீனத்துவத்தால் பொருட்படுத்தப்படவோ பேசப்படவோ இல்லை. அதற்கான காரணங்களை தனியாக ஆராய வேண்டும். இங்கு மதம் அரசியல் ஆகியவற்றினூடாக  பெருங்கதையாடல் ஒன்று நிகழ்ந்து, அதனூடாக ஆதிக்க அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மட்டுமே ஒரு பொருட்படுத்தத்தக்க விஷ்யமாக இங்கு வந்தபோது பின் நவீனத்துவம் உணர்ந்திருக்கலாம். அதை தலைகீழாக்குவதும் கட்டுடைப்பதுமே தன் நோக்கம் என்று அது கொண்டிருக்கலாம். உன்னதம் அல்லது Sublime இங்கு ஆன்மிகத்திலும் செவ்வியல் இலக்கியத்திலும் கலைகளிலும் ஏற்கனவே நிகழ்ந்திருப்பதை பிறிதொருவகையில் நிகழ்த்திக்கொள்ள தேவையில்லை என்பதற்கான காரணமாக அது எண்ணிக்கொண்டிருக்கலாம். எவ்வகையிலேனும் இங்கு பின் நவீனத்துவம் வந்தபோது அது ஒரு நிலைகுலைவை உருவாக்கும் நோக்கம் மட்டுமே கொண்டிருந்தது. கலகம் என்றே தன்னை முன் வைத்தது. பின்நவீனத்துவம் தமிழகத்தில் இரண்டு தளங்களில் அறிமுகமாகியது ஒன்று அறிவுத்துறையில் இலக்கியக் கோட்பாடுகளாக. ஒருவகையில் அமைப்புவாதத்தை தமிழில் அறிமுகம் செய்த எஸ்.வி.ராஜதுரை, தமிழவன்  ஆகிய இரண்டு முன்னோடிகளும் தமிழில் அமைப்புவாதம் வழியாகப் பின் நவீனத்துவம் உள் நுழைவதற்கான முதல் திறப்பை நிகழ்த்திய முன்னோடிகள் எனலாம். அவர்கள் இங்கிருந்த நவீனத்துவ, முற்போக்கு இலக்கிய  முகாம்களுடன் நிகழ்த்திய மோதலும் உரையாடலும் ஒரு சிந்தனை மாற்றத்தை நிகழ்த்தின. தொடர்ந்து பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு இலக்கிய கருதுகோள்களாக ரமேஷ் பிரேம், நாகார்ஜுனன், க.பூர்ணசந்திரன், நோயல் இருதயராஜ், ராஜ் கௌதமன் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டன. அவை கல்வித்துறைகளில் ஓரளவுக்கு செல்வாக்கைச் செலுத்தின. குறிப்பாக கல்வித்துறை சார்ந்த மொழியியல் ,நாட்டாரியல், சமூகவியல் பாடத்திட்டங்களில் அவை சிறிய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இப்போது காண முடிகிறது. இக்கோட்பாட்டாளர்கள் பெரும்பாலும் சிற்றிதழ்களில் தங்கள் கருத்தை முன் வைத்தனர். தீவிரமான, முழுமையான மறுப்பாக இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டமை சிற்றிதழ் சூழலில் ஒரு சலனத்தை உருவாக்கியது. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பெரும்படைப்பாளிகளை ஒற்றை வரியில் நிராகரித்தபடி இக்கருத்துகள் பேசப்பட்டமையால் இவற்றுக்கு எதிரான எதிர்வினைகளும் உருவாயின. இந்த விவாதங்களின் வழியாக பின் நவீனத்துவத்தை நோக்கிய சிந்தனைத்தள நகர்வு ஒன்று இயல்வதாகியது. ஆனால் இன்று ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கையில் இவர்களின் பங்களிப்பு மிகக்குறைவானதென்றே தோன்றுகிறது. இவர்கள் தங்களுடைய சிந்தனைகளை ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தையோ உலக இலக்கியத்தையோ கருத்தில் கொண்டு விரிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கவில்லை. தமிழ் இந்திய பண்பாட்டுச் சூழலின் பிரச்னைகளை எதிர்கொண்டு அவற்றுக்குப் புதிய பார்வைக்கோணங்களை உருவாக்கவும் இல்லை. ஒற்றை வரியில் சொல்வதென்றால், சாமானிய தமிழ் வாசகன் ஒருவன் தமிழ் இலக்கியங்களை ஏற்கனவே வாசித்து உருவாக்கிக்கொண்ட கருத்துகளுக்கும் புரிதல்களுக்கும் அப்பால் ஒரு சிறு தனிப்புரிதலைக்கூட, ஒரு சிறிய திறப்பைக் கூட இவர்களால் உருவாக்க இயலவில்லை. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மரபார்ந்த பண்பாட்டு ஆய்வாளர்கள் துல்லியமான தரவுகளுடன் உருவாக்கிய பார்வைகளுக்கு அப்பால் புதிய எதையுமே இவர்களால் சொல்ல முடியவில்லை, எளிய சில கேலிகளைத் தவிர. ஆகவே பின் நவீனத்துவத்தை நோக்கிய ஒரு பார்வை திருப்புதலுக்கு இவர்கள் காரணமாயினர் என்பதற்கு அப்பால் இவர்களுக்கான சிந்தனை சார்ந்த பங்களிப்பென்பது ஒட்டுமொத்தமாக குறிப்பிடும்படி இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஆனால் பின் நவீனத்துவக் கூறுகள் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு வகையில் தங்கள் செல்வாக்கை செலுத்தின. அச்செல்வாக்கு இக்கோட்பாடுகளினூடாக நிகழ்ந்தது அல்ல. மாறாக பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேலைநாட்டுப் புனைவிலக்கியங்கள் இங்கு வாசிக்கக் கிடைத்து அவற்றிலிருந்து உருவான அழகியல் தாக்கத்தினால் அத்தகைய பின் நவீனத்துவ படைப்புகள் இங்கு உருவாக வழி அமைந்தது. தமிழில் நேரடியாக செல்வாக்கை செலுத்திய பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேற்கத்திய புனைவுகள் எனச் சில உண்டு. கப்ரியேல் கார்சியா மார்க்யூசின் ’தனிமையின் நூறு ஆண்டுகள்’ உம்பர்ட்டோ ஈக்கோவின் ’ரோஜாவின் பெயர்’ மற்றும் மிலோரட் பாவிக்கின் ’கசார்களின் அகராதி’ போன்றவை உதாரணம். இப்படைப்புகளின் வடிவத்தைப் பற்றி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் விதந்து பேசிக்கொண்டதை நினைவுகூர்கிறேன். அவ்வாறு தமிழிலக்கியத்தின் வடிவமும் உருமாற்றமும் அடைந்தாக வேண்டுமென்ற எண்ணம் உருவாகி அது அன்று பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த நவீனத்துவ நாவலில் இருந்து பிறிதொருவகை நாவலை நோக்கி எழுத்தாளர்கள் நகர்வதற்கான அடிப்படை தூண்டுதலாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரை இம்மூன்று நாவல்களையும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நான் பயின்றிருந்த போதிலும் முதல் இரண்டு நாவல்களும் என்னில் தீவிரமான ஒரு பாதிப்பை செலுத்தின. கசார்களின் அகராதி வெறும் அறிவுப்பயிற்சி, ஆழமற்றது என்ற எண்ணமே உருவானது இன்றும் அவ்வெண்ணமே நீடிக்கிறது. அத்தகைய அறிவுப்பயிற்சி என்பது எழுத்தெனும் அடிப்படையான அகத்தேடலுக்கு எதிரான ஒன்றென்ற எண்ணமும் எனக்கு வலுவாக உண்டு. வரலாற்றில் மெய்யாகவே உள்ள இடைவெளிகளை நிரப்பிக்கொண்டு எழும் கற்பனை என ரோஜாவின் பெயர் நாவலைச் சொல்லலாம். வரலாற்றை உதறிவிட்டு எழும் கற்பனை என தனிமையின் நூறு ஆண்டுகளைச் சொல்லலாம். இரண்டுமே முன்னோடியான கலைப்படைப்புக்கள். இவ்வாறாக தமிழில் பின்நவீனத்துவ புனைவிலக்கியத்தில் உருத்திரண்டு வந்தது. அவ்வாறு வருவதற்கு எந்த வகையிலும் தமிழில் இங்கு பேசப்பட்ட பின்நவீனத்துவ கோட்பாடுகள் உதவவில்லை என்பது மட்டுமல்ல, அவை புனைவிலக்கியத்தின் பாய்ச்சலுக்கு எதிராகவே இருந்தன. இங்கிருந்த பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் பின்நவீனத்துவத்தின் புனைவிலக்கிய வெளிப்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தாங்கள் மேலைக்கோட்பாளர்களிடமிருந்து கற்று இங்கே திருப்பிச் சொன்ன கருத்துகளை அப்படியே தாங்களும் ஏற்று திருப்பி சொல்லும் எழுத்தாளர்களே பின்நவீனத்துவப் படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்பினர். உண்மையில் அது தன்னளவில் பின்நவீனத்துவத்துக்கு எதிரான ஒரு நம்பிக்கை. பின்நவீனத்துவம் என்பது சர்வதேச தன்மையை ஏற்றுக்கொள்வதல்ல. வட்டாரத்தன்மையையே முன்நிறுத்தக் கூடியது. ஒவ்வொரு அலகிலும் முற்றிலும் தனித்தன்மையோடு வெளிப்படும் ஒன்றே இலக்கியம் என்று வாதிடுவது. ஆகவே மேலைப் பின்நவீனத்துவத்தை இங்கு திரும்ப நிகழ்த்த வேண்டுமென்று எண்ணிய இங்குள்ள பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் இங்குள்ள புனைவிலக்கியத்தில் அது நிகழ்ந்தபோது அதை அடையாளம் கண்டுகொள்ளவோ ஏற்கவோ இயலவில்லை. மட்டுமல்ல, அது பின்நவீனத்துவமே அல்ல என்றும், பின்நவீனத்துவத்திற்கென்று இவ்வண்ணம் இலக்கணங்கள் உண்டென்றும், அந்நெறி இங்கு நூல்களில் பேணப்படவில்லை என்றும், சொல்லி புதிய இலக்கியங்களுக்கு எதிராக மிகப்பெரிய தடையை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்களுடைய ஏளனங்களையும் எதிர்ப்புகளையும் வழக்கம்போல இலக்கியம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அவர்களும் காலப்போக்கில் தங்கள் குரல்கள் மதிப்பிழக்க வெறும் பெயர்களாக பின்நகர்ந்து விட்டிருக்கின்றனர். அப்படைப்புகள் வரலாற்றில் தன்னை நிறுவிக்கொண்டிருக்கின்றன. தமிழில் பின்நவீனத்துவம் நிகழ்ந்தபோது இரண்டு வகையில் அதன் வெளிப்பாடு அமைந்தது. ஒன்று பின்நவீனத்துவத்தின் வடிவம் சார்ந்த மீறல்கள் அல்லது கலகங்கள் நேரடியாகவே நிகழும் புனைவுகள்.  இவை பின்நவீனத்துவம் எனும் இலக்கிய அலையால் உலகமெங்கும் உருவாக்கப்பட்ட சிதைவுற்ற சிதறடிக்கப்பட்ட தன்னைத்தானே மறுபுனைவு செய்து கொள்கிற தன்னைத்தானே மறுக்கிற இலக்கிய வடிவங்களை உருவாக்கின. அவை முழுக்க முழுக்க வடிவச் சோதனைகள். அத்தகைய மேலையிலக்கிய வடிவங்களை தமிழ்ச் சூழலில் செயற்கையாக திரும்ப உருவாக்கும் முயற்சிகள் தமிழில் எப்போதும் உண்டு என்றாலும் அவை பின்நவீனத்துவச் சூழலிலேயே அதிகம் நிகழ்ந்தன.  அதற்கு புகழ் பெற்ற உதாரணம் என்று எம்.ஜி.சுரேஷை சொல்லவேண்டும். தன்னுடைய நாவல்களுக்கு வெவ்வேறு பெயர்களைப்போட்டு, அந்த வடிவத்துக்கான உதாரணமென்றே அவற்றை அறிவித்துக்கொண்டு ,அவர் தன் படைப்புகளை எழுதினார். அவை அந்த வடிவத்திற்கு எந்தவகையிலும் நியாயம் செய்யவில்லை என்பதுடன் எவையுமே புனைவாக உருவாகவும் இல்லை. இன்று அவற்றை எவர் பொருட்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. படைப்புகள் வடிவங்களை அடைவதென்பது அப்படைப்பு உருவாக்க நினைக்கும் விளைவை ஒட்டியது. அந்த விளைவை இலக்காக்காமல்  வடிவத்தை  எழுத முயல்வேன் என்பது மிக எளிய மாதிரி வடிவங்களை உருவாக்குவதாகவே அமையும். மலைகளுக்கான மாதிரி வடிவங்களை உள்ளங்கையில் நிற்குமளவுக்கு செய்வது போல அம்முயற்சி என்று சொல்லலாம். இன்னொரு பக்கம் மேலைப்படைப்புகளின் வடிவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றினூடாக தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மெய்யியலையும் எவ்வகையிலேனும் மறுஆக்கமோ விசாரணையோ செய்யமுடியுமா என்று முயன்ற படைப்பாளிகளைக் குறிப்பிடவேண்டும். அவர்களில் முதன்மையானவர் இருவர் ரமேஷ் பிரேதன் மற்றும் பா.வெங்கடேசன். அவர்களின் படைப்புகளுக்கு அவர்கள் கையாண்ட வடிவம் புதுமையையும் செறிவையும் அளிக்கிறது. அவ்வடிவத்தினூடாக அவர்கள் தமிழக அரசியலையும் வாழ்வையும் பண்பாட்டையும் ஆயும்போது சென்றடையும் சில புதிய கோணங்களும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால் அவை வடிவமாகவே முன்னிற்பவை. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் அப்பாற்பட்ட இன்னொரு வகை பின்நவீனத்துவ எழுத்து என்பது எந்த வகையிலும் பின்நவீனத்துவ கருதுகோளாலோ பின்நவீனத்துவ வடிவங்களாலோ ஈர்க்கப்படாதவர்கள், தங்களை அறியாமலேயே பின்நவீனத்துவ வண்ணங்களை தங்கள் புனைவுகளில் அடைந்தவர்கள், தன்னியல்பாக உருவாக்கியது. அவர்களைப் பொறுத்தவரை எந்த இலக்கியக் கொள்கையும் இலக்கியத்தை வழிநடத்துவதற்கு தகுதி கொண்டது அல்ல.  கொள்கையின் விரிவாக்கமாகவோ,  நிரூபணமாகவோ இலக்கியப்படைப்புகளை எழுதுவது செயற்கையானது. இலக்கிய வடிவம் என்பது ஒரு புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாக உருவாகி வரவேண்டியதே ஒழிய வடிவத்தை அடையும்பொருட்டு இலக்கியம் எழுதப்படலாகாது. வடிவச் சோதனைகளில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை. ஆனால் அவர்கள் புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாகவே பின்நவீனத்துவ அம்சம் அவற்றில் வந்தமைகிறது. அந்த பின்நவீனத்துவ அம்சம் என்பது உண்மையில் இங்குள்ள வாழ்க்கையில், இங்குள்ள சிந்தனைப்போக்குகளில், இங்குள்ள கலை இலக்கிய சூழலில், பின்நவீனத்துவ அம்சம் குடியேறியிருப்பதனால் அங்கிருந்து அவர்களுக்குத் தன்னியல்பாக வந்ததாகவே உள்ளது. இந்த இரண்டாவது வகைமையைச் சேர்ந்தவர் இரா முருகன். (மேலும்)     https://www.jeyamohan.in/209048/
    • என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁
    • உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு December 18, 2024 1:20 pm குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும். 2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரி விலக்கு வரம்பை ரூகப 100,000 முதல் 150,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்துள்ளது. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மீளாய்வு தொடர்பாக ஐ.எம்.எப். உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வருமான வரி வரம்பை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. புதிய வரி திருத்தங்களின் பிரகாரம் தனிநபர் வருமானமாக  ரூ. 500,000 முதல் ஒரு மில்லியனை பெறுபவர் வரியின் முதல் கட்டத்தில் உள்ளடகப்பட்டுவதுடன், அவர் 6 வீத வரி விகிதத்திற்கு உட்படுவார். 150000 ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் முழுமையாக வரி விலக்குக்கு உட்படுவர். 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவருக்கு 71 வீதம் விரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ரூ.250,000 வரை வருமானம் பெறுபவருக்கு 61 வீதமும்,  300,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 47 வீதமும்,  350,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு  25.5 வீதமும்  அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு அதிகமான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரியும் காணப்பட்டது. தற்போது, குறைவான வரி பெறுவோருக்கு குறைவான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறவிடும் முறை உருவாகியுள்ளது. தடுத்து வைக்கும் வரி 5 வீதத்திலிருந்து 10 வீதமாக அதிகரிக்கப்படும். சேவைகள் ஏற்றுமதிக்கான வரியை 30 வீதத்திலிருந்து 15 வீதமாக  குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டள்ளது. வாகன சந்தையும் அதை சார்ந்த தொழில்துறையும் மிகவும் பெரியது. நீண்டகாலம் இதனை மூடி வைத்திருக்க முடியாது. இதுவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் மறுபரிசீலமை செய்யப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்கும் வகையில் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கிக் கணக்கை திறக்க முடியாது 67ஆயிரம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கை திறப்பதற்கான அனுமதியை வழங்க மத்திய வழங்கியுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வருட நிலுவை தொகையுடன் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும். இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு 6ஆயிரம் ரூபா வவுச்சர் ஒன்றை பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதல் குறித்த வவுச்சர்கள் வழங்கப்படும். அதேபோன்று அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது குறித்த வவுச்சர்களை பெற்றுக்கொள்ள தகுதியுடைய மாணவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.     https://oruvan.com/income-tax-reduction-presidential-action-plan/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.