Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 DEC, 2024 | 03:31 PM
image
 

நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், சரியான முறையில் கணக்காய்வு விடயங்களை முகாமை செய்யும்போது ஐய வினாக்களைத் தவிர்க்கலாம் எனவும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை தற்துணிவுடன் எடுப்பதனால் சில இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் சுனில் ஜெயசேகர நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கணக்காய்வாளர் அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

01__4_.jpg

01__2_.jpg

01__3_.jpg

https://www.virakesari.lk/article/201574

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழுக்கூட்டம் அடிபாடுகள் இல்லாமல் முடிவடைந்ததா? அருச்சுனாவையும் எல்லோ கூப்பிட்டிருக்க வேண்டும். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களை நான் ஏதாவது கேட்டேனா? நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது. கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.
    • உங்கள் இருவரினது கருத்துக்களும் தவறான அர்த்தத்தில்  புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஊகிக்கிறேன். 
    • நான் ஒரு காலத்தில் கிரீன் கட்சியின் ஆதரவாளனாகவும் வாக்காளனாகவும் இருந்துள்ளேன். ஆனால் என்று போர் மூர்க்கம் கொண்டார்களோ அதன் பின் அவர்களை கிஞ்சித்தும் பார்ப்பதில்லை. வெறும் அரசியலுக்காக  வெத்து வேட்டுக்களை விதைத்தவர்கள். போரில்லா உலகம் வேண்டும் என்ற கட்சியினர் இன்று உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதே கட்சியினர்தான் ஒருகாலத்தில் சவூதி அரேபியாவுடனான ஜேர்மனியின் ஆயுத விற்பனையை எதிர்த்தவர்கள்.அது மட்டுமல்லாமல் அது சம்பந்தமான அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வைத்தவர்கள். ஈராக் போரை எதிர்த்தவர்கள்.லிபியா போரை எதிர்த்தவர்கள் இன்று முக்கிய பதவிக்கு வந்தவுடன் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் அவசியம் என்கின்றனர்.  கெட்டவர்கள்.😡 ஆனால் எனக்கு வேறு கட்சி தேர்வுகள்  உண்டு 1) Die Linke 2) Bündnis Sahra Wagenknecht இவர்கள் மேற்குலகின் வெளி அரசியலை முற்றாக எதிர்ப்பவர்கள்.    
    • அரசியலும் எந்திரவியல் எனப்படும் விஞ்ஞானமும் ஒன்றல்ல. அரசியல் என்பது மக்கள் சக்தி/மக்கள் எண்ணம். விஞ்ஞானம்/பௌதீகவியல் ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும், இலங்கையிலும் ஒன்று தான். வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.