Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

19 DEC, 2024 | 04:13 PM

image

(எம்.மனோசித்ரா)

இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயத்தை நீண்ட கால இராஜதந்திர போக்குடனேயே அணுகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு  வியாழக்கிழமை (19) இடம்பெற்றது. இதன் போது, ஆய்வுக்கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட தூதுக்குழுவின் கரிசணை குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆய்வுக் கப்பல்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இராஜதந்திர ரீதிலேயே நகர்வுகளை முன்னெடுக்கின்றோம். இவ்வாரம் சீனாவின் மருத்துவ கப்பலொன்று இலங்கை வரவுள்ளது. அக்கப்பல் எமது சுகாதார துறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே விஜயம் செய்யவுள்ளது. அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

ஆனால் ஆய்வுக் கப்பல்கள் வருகை தரும் போது, அவை எந்த நாட்டு கப்பல்களானாலும் அது குறித்து நாம் ஆழமாக ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்போம். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனுடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தீர்மானங்களை எடுப்போம்.

நீண்ட கால இராஜதந்திர நோக்குடனேயே நாம் செயற்படுகின்றோம். ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் படிப்படியாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இது குறித்து அறிவித்திருக்கின்றார்.

ஆய்வுக்கப்பல்கள் வருவதற்கான நோக்கம் குறித்து தெளிவாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/201662

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு நாடுகளுக்கும் ஆய்வு செய்ய வேறை இடம் கிடைக்கவில்லையா? நெடுக எங்களோடை சுறண்டுப்படுகிறீர்கள். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.