Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி போராட்டம்

adminDecember 22, 2024
IMG-20241222-WA0008-1170x658.jpg

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது , கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.  இதன்போது எமது வீதி எமக்கானது புதிய அரசே புது வீதி அமைத்து தா?,  ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

20241222_091133-800x450.jpgIMG-20241222-WA0008-800x450.jpgIMG-20241222-WA0009-800x450.jpgIMG-20241222-WA0010-800x450.jpg

 

https://globaltamilnews.net/2024/209509/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது. AB21 என்ற வீதியிலக்கமிடப்பட்ட போக்குவரத்துப் பாதையானது யாழ்ப்பாணம் பண்ணைச் சந்தியில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை ஊடாக பொன்னாலைச் சந்தியை அடைந்து திருவடிநிலை➡️ மாதகல்➡️ கீரிமலை➡️ காங்கேசன்துறை➡️ மயிலிட்டி➡️ பலாலி➡️ தொண்டைமானாறு➡️ வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை முனையை அடைகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நீண்ட AB தர வீதி இதுவென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம்

val-1024x572.jpg

யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.

இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர்.

https://thinakkural.lk/article/314000



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.