Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்"
 
 
25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஆர்வமுள்ள கலைஞரான ராஜன் மற்றும் ஒரு பாசமிக்க செவிலியரான சாந்தி ஆகிய இரண்டு இளம் உள்ளங்கள் மிகவும் எதிர்பாராத சூழ்நிலையில் அங்கு சந்தித்தனர்.
 
மலை நாட்டை சேர்ந்தவர் சாந்தி. அவர் வவுனியாவில் யுத்தம் மௌனிக்கப் பட்டதை அடுத்து, காயமடைந்தவர்களைக் குணப்படுத்தவும், துக்கப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர, அங்கு அரசு சாரா அமைப்பு ஒன்றினால் தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு மருத்துவமனையில் பணியாற்ற முதல் முதல் வவுனியாவுக்கு நுவரெலியாவில் இருந்து அன்று தான் வந்தார். தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் அவளுக்கு இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது அவளின் மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது என்பதே உண்மை. நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல அரசு சாரா அமைப்பின் சார்பில் ராஜன் என்ற இளைஞன் வந்திருந்தான். ராஜன் ஒரு ஆர்வமுள்ள கலைஞன் ஆவான். அவன் தன்னைச் சுற்றியுள்ள வலியையும் துன்பத்தையும் வெளிப்படுத்த தனது படம் வரையும் ஆற்றலையும் கவிதைகள் வடிக்கும் திறமையையும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தினான். அவனது ஓவியங்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சித்தரித்து, விரக்தி, நம்பிக்கை மற்றும் காதல் போன்ற உணர்ச்சிகளைக் எடுத்துக் காட்டியதுடன், அவ்வற்றுக்கு ஏற்ற கவிதை வரிகள் மேலும் பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்தன.
இடிபாடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில், வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கிய சாந்தியை ராஜன் வரவேற்றான். முதல் முதல் ராஜனின் பார்வை சாந்தியின் பார்வையை சந்தித்தது.
 
"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல"
 
ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை. அது தான் அங்கு நடந்தது. இருவரும் ஒரு சில நிமிடம் பேச மறந்துவிட்டார்கள். பொதுவாக காதல் உச்சரிக்க, உணர சுகமானது தான், ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது. இவர்கள் எப்படியோ?
 
வரவேற்று அழைத்துச் செல்ல ராஜன் தயாராக இருந்தான். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் அல்லது ஆர்மி நின்று கொண்டிருந்தனர். யுத்தம் முடிவுற்ற பின்பும், ஏராளமானோர் கொல்லப்பட்டும் சிறை பிடிக்கப்பட்ட பின்பும், குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜனையும் சாந்தியையும் நிறுத்தி சிங்களத்திலும் அரைகுறை தமிழிலும் விசாரித்தனர். ராஜனின் அடையாளம் முன்பே தெரிந்தது போல இருந்தது. அதுதான், யார் சாந்தி, ஏன், எங்கே அழைத்து கொண்டு போறாய் போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்தனர். ராஜனும் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட அனுமதியும் பெற்றான். ஆனால் அவனுக்கு உள்ள பிரச்சனை, சாந்தியை சந்தித்தது முதல், எப்படி இனி அமைதியாக உறங்குவதே?
 
"துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி,
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்,"
 
மழை பொழயும் காலத்தில் மின்னல் போல் ஒருத்தி தோன்றித் தன் ஒளி - உருவத்தை எனக்குக் காட்டி என் நெஞ்சு செல்லும் வழியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். அது முதல் எனக்கு உறக்கம் வரவில்லை என்ற நிலை தான் அவனுக்கு!
 
அதன் பின், ராஜனின் மோட்டார் சைக்கிள், சாந்தியை பின்பக்கம் ஏற்றிக் கொண்டு வவுனியாவுக் ஊடாக ஏ-9 வீதியில் விரையத் துவங்கியது. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் சமாந்தரமாக உடன் பயணித்து கொண்டு இருந்தது. குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு பாதுகாப்பு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்து இருந்தது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடந்தன. ஒவ்வொரு குடிலுக்குள்ளும் குறைந்தது இரண்டு இராணுவ வீரர்களாவது இருந்தனர். சாந்திக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. என்றாலும், குண்டுவீச்சுகளாலும் ஷெல்களாலும் உடைந்து பள்ளமும் குழியுமாக உள்ள வீதியால் மோட்டார் சைக்கிள் போகும் பொழுது ஏற்படும் குழுக்களும், அதனால் ராஜனின் முதுகுடன் நெருங்கி ஒட்டி உராஞ்சி போவதும் அவளுக்கு இன்னும் ஒரு புது உணர்வுகளையும் சொல்லிக் கொண்டே இருந்தது. அவனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளோட கை ராஜனை வளைச்சு இறுக்கி இரண்டு பேருக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் போக, அந்த சுகத்தை, ஆனந்தத்தை அனுபவிச்சிகிட்டே அவனும் போனான். அவர்களுக்கு இடையே ஒரு சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி கொந்தளிப்பு இருந்த போதிலும், அன்பின் நுட்பமான தீப்பொறி பற்றவைக்கப்பட்டது. போரின் இருளால் கூட அணைக்க முடியாத சுடராக கொழுந்து விட்டு எரியத் தொடங்கின.
 
போரால் சிதைந்த நிலப்பரப்பின் நிழலில் அவர்கள் ஒன்றாகக் கழித்தபோது, ராஜனும் சாந்தியும் தங்கள் சுற்றுப்புறத்தின் கடுமையான யதார்த்தங்களைக் கடந்து தங்களுக்குள் ஒரு நிலையான காதலைக் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடுகளின் எதிரொலிகள் மற்றும் காயமடைந்தவர்களின் அழுகைகளுக்குப் பதிலாக அமைதி வரும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைப் தங்கள் தங்கள் வழியில் , நோக்கில் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அந்த தேடலில் ஒரு ஆறுதல் கண்டனர்.
 
போர் ஓய்வு அடைந்தாலும் இன்னும் கைதுகளும், காணாமல் போவதும், மக்களின் காணிகள் திருப்பி கொடுக்காமல் அரசு வைத்திருப்பதும், காணிகள் இன்னும் பல காரணங்களுக்கு பறித்தெடுப்பதும் தீவிரமடைந்து கொண்டு இருந்தது. இந்த கொந்தளிப்புக்கும் பதற்ற சூழ்நிலைக்கும் இடையிலும் அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டு இருந்தது. அங்கே அமைதி மற்றும் நீதிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் மௌன எதிர்ப்பின் வடிவமாக ராஜனின் ஓவியங்கள் அமைந்தன. ஒரு செவிலியராக தனது கடமைக்கும் ராஜன் மீதான காதலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சாந்தி, தன் வாழ்க்கையின் இரு அம்சங்களையும் எனினும் சமப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
 
அவர்களின் போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும், அவர்களின் அன்பின் நெகிழ்ச்சிக்கும் வவுனியா மௌன சாட்சியாக மாறியது. அவர்களின் காதல் கதை நம்பிக்கையின் அடையாளமாக மாறியது, கடினமான சூழ்நிலைகளில் கூட தாங்கும் அன்பின் சக்திக்கு அது ஒரு சான்றாக மாறியது.
யுத்தம் இறுதியில் மே 2009 முடிவுக்கு வந்து இருந்தாலும் பல வடுகளை வவுனியாவில் விட்டுச்சென்றது என்பதை அவள் கடமை புரியும் மருத்துவமனையில் இருந்து சாந்திக்கு தெரியவந்தது. தங்கள் வாழ்க்கையையும் தங்கள் நகரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மத்தியில், அவர்கள் அன்பு, அமைதி மற்றும் தங்கள் நிகழ் கால உறுதிமொழிகள் நிறைந்த எதிர்காலத்தின் படத்தை இதயத்தில் வரைந்தனர்.
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
413953658_10224456078612284_3533035957101427788_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=sqfKOYevgN8Q7kNvgFEKm0c&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AyKbwObMC0CkGCcdnj9lG1v&oh=00_AYCB0aBmn1SGX89Y8uvfR4F64HdNANiZ-vB8craqp6GiuA&oe=6784985E  413954711_10224456078052270_7740468211914817572_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Cd8-qjkL1-kQ7kNvgGXT55V&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AyKbwObMC0CkGCcdnj9lG1v&oh=00_AYAuuQzhO9j2OLlvFRtLzEi_JUPnJVSq8p5sPn0GRwJUbQ&oe=67849E0E
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.