Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் பேட்டியை பிரசுரித்தமைக்காக டிபிஎஸ் கைதுசெய்யப்பட்டவேளை இந்து ராம் அவருக்காக ஜேஆருடன் பேசினார்- நூல் வெளியீட்டு நிகழ்வில் சிரேஸ்ட பத்திரிகையாளர் தனபாலசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் விடுதலைப்புலிகளின்  மாத்தையாவை பேட்டி கண்டு வெளியிட்டமைக்காக கைதுசெய்யப்பட்டவேளை, அவருக்காக ஜே.ஆர். ஜெயவர்த்தன, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் நினைவுபடுத்தினார்.

அத்துடன் டி.பி.எஸ். ஜெயராஜின் எழுத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக அவர் எதை எழுதினாலும் போடுவார்கள்; அந்தளவுக்கு நம்பகத்தன்மை மிக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி குறித்து டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், அவற்றை “அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

இந்த நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை உரையாற்றிய தனபாலசிங்கம் மேலும் தெரிவித்ததாவது.

டிபிஎஸ் ஜெயராஜ் தமிழர் விடுதலை போராட்டத்தின்  அபிமானியாக திகழ்ந்தவர்.

இலங்கையில் தற்போது இரண்டே இரண்டு பத்திரிகைகளிற்குதான் எழுதுகின்றார் டெய்லிமிரர் பினான்சியல் டைம்ஸ்.கூடுதலாக அரசியல்தான் எழுதுவார்.ஆனால்டிபிஎஸ் ஜெயராஜின் எழுத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக  அவர் சினிமாவில் நாகேஸ் பற்றி எழுதினால் கூட நாகேஸ் யார் என தெரியாத ஆசிரியர் கூட அதனை முழு பக்கத்திலே வெளியிடுவார்.

ஆங்கிலத்திலே இந்திய திரைப்பட நடினர்கள் பற்றி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அண்மையில் வந்தது அதுபற்றி எழுதுவார் சிவாஜி கணேசன் பற்றி எழுதுவார் எம்ஜிஆர் பற்றி எழுதுவார்.

பழைய இசையமைப்பாளர்கள் பற்றி எழுதுவார்.அவரை போன்று அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் சினிமாத்துறை கலைத்துறை இவ்வளவு ஆழமாக விடயங்களை அறிந்து வைத்திருப்பதை நான் இதுவரை காணவில்லை.

அவருடைய எழுத்துக்களிற்கு ஆங்கில பத்திரிகை உலகில் பெரும் வரவேற்புள்ளது எதை எழுதினாலும்போட்டுவிடுவார்கள் என நான் நினைக்கின்றேன்.

அண்மையில் வீரகேசரியிலே இ நாங்கள் பிறப்பதற்கு முன்னர் 46 தொடக்கம் யாழ்ப்பாண செய்தியாளராகயிருந்தவர் செல்லத்துரை என்பவர்.அவருடைய நூற்றாண்டு வந்தது.

அவருடைய நூற்றாண்டு வந்தபோது தில்லைநாதன் என்ற வடமராச்சி நிருபர் வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினார்.

ஜெயராஜிடம் நான் கேட்டேன் செல்லத்துரையை பற்றி ஆங்கிலத்தில் எழுதினால் என்ன என்று .

 அடுத்த நாளே அவர் அதனை எழுதினார்.

செல்லத்துரையை யார் என்று தெரியாதவர் தான் டெய்லி மிரர் ஆசிரியராக உள்ளார் ஆனால் ஜெயராஜ் எழுதியதால் ஒரு பிரசுரித்தார்கள்.

அவர் எதை எழுதினாலும் போடுவார்கள் ஏன் என்றால் அவ்வளவிற்கு நம்பகதன்மை.

ஆங்கில பத்திரிகை உலகிலே நம்பகத்தன்மை பெற்றுக்கொண்டார்.

அவரது திறமை மற்றும் ஒரு விடயத்தை அவர் ஆராய்கின்ற பாங்கு எல்லாமே வித்தியாசமானது.

அவர் ஒரு குருவிசேர்த்த மாதிரி - அவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார் என்றால் எங்களுடன் ஒரு மணித்தியாலம் இரண்டுமணித்தியாலம் கதைப்பார் என்னுடன்தான் அவர் கதைக்கின்றார் என நான் நினைப்பதுண்டு ஆனால் இலங்கையில்உள்ள 25 பத்திரிகையாளர்களுடன் கதைத்திருப்பார்.

.துல்லியமாக தகவல்களை சேகரித்த பின்னர்தான் கட்டுரை எழுதுவார்.

நாங்கள் 1200 சொற்களுக்கு மேலே எழுதுவதற்கு பத்திரிகை ஆசிரியர்கள்அனுமதிக்கமாட்டார்கள்.அவர் 3500 சொல் எழுதினால் கூட அது முழுமையாக பிரசுரிக்கப்படும் அதுதான் அவரின் திறமை

அந்த  மாதிரி ஒரு பத்திரிகையாளர் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் இருப்பதால்அவருடைய கருத்துக்கள்தமிழ் வாசகர்களை அடையவேண்டும் என நான் விரும்பினேன்.

இதன் காரணமாக நான் அவரை கேட்டேன் அண்மையிலே இலங்கையில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானது

அனுரகுமார திசநாயக்க குறித்து டிபிஎஸ் ஜெயராஜ்  ஆறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவருடைய வாழ்க்கை அவரது அரசியல் பிரவேசம்அரசியலில் எப்படி முன்னேறினார் அரசியலில் எப்படி வந்தார் என்பது பற்றி.

நாடாளுமன்ற  தேர்தலில் வடக்குகிழக்கில் தமிழ் கட்சிகளிற்கு ஏற்பட்ட பின்னடைவு தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி ஆகியவற்றை பின்னணியாக கொண்டு மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அந்த மூன்று கட்டுரைகளும் இந்த புத்தகத்திலே இருக்கின்றது.

அனுரகுமாரதிசநாயக்கவை பாராட்டி எழுதவில்லை,அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளரும் இல்லை ஆனால் இடதுசாரி சிந்தனையாளர்களுடன் நெருக்கமானவர்.

சில நண்பர்கள் கேட்டார் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்துவிட்டு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்- ஜெயராஜ் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து எழுதக்கூடியவரா என ஒருவர் கேட்டார்.

நான் சொன்னேன் அவர் மார்க்சிசத்தை பற்றி தெரிந்திருப்பார் பலதும்பத்தும் வாசிக்கின்றார்.ஆனால் அவர் ஒரு மார்க்ஸிசவாதியில்லை,ஆனால் மாக்ஸிசவாதிகளை பற்றி எழுதியிருக்கின்றார்.

அவர் அனுரகுமாரதிசநாயக்கவை  பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் அவரது வளர்ச்சியை எழுதியிருக்கின்றார்.

அவர் தமிழ்தேசியவாத அரசியலை அண்மைக்காலத்தில் எழுதுவது பலருக்கு பிடிப்பதில்லை.

 தன்னை மதியாபரணம்  சுமந்திரனின் மச்சான் என எல்லாரும் சொல்கின்றார்கள் என காரணம் சொல்வார் .அதனால்தான் இவர் அவருக்கு சார்பாக எழுதுவதாக எல்லாம் சொல்வார்கள்.

எங்களிடம் இவர் அவரின் ஆள் என  முத்திரை குத்துகின்ற பழக்கம் உள்ளதுதானே.

அவர் எனக்கு சொல்வார் நான் 50 வருடங்களாக அரசியல் கட்டுரை எழுதுகின்றேன்  சுமந்திரன் அரசியலுக்கு வந்து 15 வருடங்களே ஆகின்றது என்னை ஏன் சுமந்திரனுடன் இணைத்து வைத்து பேசுகின்றார்கள்.

இவர் அவருடைய ஆள் என கதைத்தே பழகிப்போய்விட்டது, எழுத்தை பற்றி கதைப்பதில்லை,அதன் தரத்தை பற்றி பார்ப்பதில்லை.அதுமாதிரியான ஒரு கலாச்சாரத்திற்குள் தமிழ் சமூகம் வளர்ந்துவிட்டது அதற்கு நாங்கள்ஒன்றும் செய்ய முடியாது.

1987 - 88 இல் இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராக பணியாற்றினார்.புரோன்ட்லைனிற்கும் அவர் செய்தியாளர்.

இந்திய இராணுவத்துடன் விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்கிய பின்னர் வன்னியில் மாத்தையாவை பேட்டி கண்டு ஐலண்டில் வெளியிட்டார்.

முழுப்பக்க பேட்டி. யுத்தம் தொடங்கிய காலம் என்பதால் உடனே அவரை கைதுசெய்தனர்.இரகசிய பொலிஸார் ஐந்தாறு நாட்கள் அவரை நான்காம் மாடியில் வைத்திருந்தார்கள்.

இதனை அறிந்த இந்து நாளிதழின் ஆசிரியர் என் ராம்  அப்போது அமைச்சராகயிருந்த காமினிதிசநாயக்கவை  தொடர்புகொண்டு  டிபிஎஸ் ஜெயராஜின் கைது குறித்து பேசினார்.

அவர்கள் கூட்டாளிகள்

இதற்கு காமினிதிசநாயக்க உங்கள் பத்திரிகையில் வராத விடயத்திற்காக ஏன் பேசுகின்றீர்கள் உங்கள் பத்திரிகையில் இந்த பேட்டி வரவில்லை தானே என்றார்.

ராம் இவரை விடுவிக்கவேண்டும் என அக்கறை கொண்டவர் ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் கதைப்பதற்கு முன்னர்

ராம் உடனடியாக அந்த பேட்டியை இந்து நாளிதழில் பிரசுரித்துவிட்டு இலங்கை வந்து அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த ஜேஆர் ஜெயவர்த்தனவை சந்தித்தார்.

இந்து நாளிதழ் வேறு ஒரு பத்திரிகையில் வந்த பேட்டியை பிரசுரித்தது அதுவே முதல்தடவை.

ஆனால் அவர் ஜெயராஜிற்காக அதனை பிரசுரித்தார்.

பின்னர் இலங்கை வந்து ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் கதைத்து ஜெயராஜை வெளியில் எடுத்தார்.

ஜேஆருக்கு ஜெயராஜ் ஒரு யாழ்ப்பாணத்தவர் என்பது தெரியாது.

இந்து ராமுடனான சந்திப்பின்போது ஜேஆர் டிபிஎஸ் ஏன் வடக்கு விடயங்களை எழுதுகின்றார் இயக்கங்களை வைத்திருக்கின்றார் அது தேவையில்லை என சொல்லுங்கள் என ராமிற்கு ஜேஆர்  சொல்லியுள்ளார்.

இந்த மாதிரி நடக்கவேண்டாம் கொழும்பு அரசியலுடன் நிற்க சொல்லுங்கள் என ஜேஆர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ராம் சொன்னாராம் இல்லை அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என அதன் பின்னரே ஜேஆருக்கு ஜெயராஜ் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது தெரியும்.

இன்றும் கூட பலர் கேட்டார்கள் அவர் எந்த ஊர் ஆள் என்று. அவரை பலர் குருநாகல் கொழும்பிலே வளர்ந்தவர்.

அவர் யாழ்ப்பாணத்தில் வளர்ந்திருக்கின்றார் எங்கட ஊர்தான் ஆனால் எனக்கு கொழும்பு வந்து வீரகேசரியில் பழகிதான் தெரியும்.

ஏன் நான் ராமின் கதையை சொல்கின்றேன் என்றால் அந்தளவிற்கு மரியாதையிருந்தது.

அவர் பத்திரிகை துறைக்கு முக்கியமானவராகயிருந்தார் நீலம் திருச்செல்வம் தான் அவருக்கு ஹவார்ட் பல்கலைகழகத்திற்குரிய பெலோசிப்பை எடுத்துக்கொடுத்தார் அதனுடன் அவர் போய்விட்டார் நான் அவருக்கு சொன்னேன் நீலன் தமிழர்களிற்கு நன்மை செய்திருக்கின்றாரோ தெரியாது ஆனால் தீமை செய்திருக்கின்றார் நல்லதொரு பத்திரிகையாளனை ஹவார்ட்டிற்கு அனுப்பிஎங்களிற்கு நல்ல பத்திரிகையாளனை இல்லாமல் செய்துவிட்டார்.

ஜெயராஜ் ஒரு அரசியலில் ஒரு  காண்டாமிருகம்.

விடுதலைப்புலிகளின் பேட்டியை பிரசுரித்தமைக்காக டிபிஎஸ் கைதுசெய்யப்பட்டவேளை இந்து ராம் அவருக்காக ஜேஆருடன் பேசினார்- நூல் வெளியீட்டு நிகழ்வில் சிரேஸ்ட பத்திரிகையாளர் தனபாலசிங்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் நூலின் தமிழாக்கம் தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு

டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் “இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க” என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

இதன் போது தலைமை உரையை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் நிகழ்த்தியதோடு நூல் விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் நிகழ்த்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வெளியிட மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் அவர்கள் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்தும் நிகழ்வில் சட்டத்தரணி மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் மற்றும் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் ஆகியோரும் சிறப்புரைகளை வழங்கியிருந்தனர்.

DSC3508-1024x685.jpg

DSC3513-1024x685.jpg

DSC3519-1024x685.jpg

DSC3530-1024x685.jpg

DSC3536-1024x685.jpg

DSC3540-1024x685.jpg

DSC3545-1024x685.jpg

DSC3546-1024x685.jpg

DSC3551-1024x685.jpg

DSC3553-1024x685.jpg

DSC3557-1024x685.jpg

DSC3567-1024x685.jpg

DSC3576-1024x685.jpg

DSC3589-1024x685.jpg

DSC3590-1024x685.jpg

DSC3593-1024x685.jpg

https://thinakkural.lk/article/315875

https://yarl.com/forum3/topic/300672-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.