Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, சர்வதேச கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மேத்யூ ஹென்றி

  • பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்

  • 10 மார்ச் 2025

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதனையைக் குறைத்துள்ளது.

துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

இந்த தொடரில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆடிய போட்டிகள் ஒரு கண்காட்சி போல இருந்தன. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற்றன.

ஒரே இடத்தில் ஆடிய, இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்திய வீரர்களின் பெயர் பொறித்த ஆடை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றன.

ஹர்திக் பாண்டியா துபையில் இருந்த போது "குங்-ஃபூ பாண்ட்-யா!" என்று காதைப் பிளக்கும் கூச்சலுடன் களம் கண்டார். இதே போன்று லாகூரில் ஓர் அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்குமா?

துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

இது தெளிவுபடுத்தப்பட வேண்டும், இங்கே இதற்கு எளிதான பதில்கள் இல்லை.

இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, சர்வதேச கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு கிடைத்த சாதகம்

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யப்போவதில்லை என்று இந்தியா அறிவித்தது. அப்போது முதலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியா இல்லாமல் போட்டியை நடத்துவதா? ஐ.சி.சி. வருமானத்தில் இந்திய சந்தை கணிசமான பகுதியை கொண்டுள்ளது.

29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள பாகிஸ்தானிடமிருந்து கடைசி நிமிடத்தில் அதனைப் பறிப்பதா? அதுவும் சாத்தியம் இல்லை.

இதன் விளைவாக இந்தியா ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து ஒரே நகரத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடியது. இந்திய அணிக்கு கிடைத்த இந்த சாதகங்கள் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

நியூசிலாந்து அணி 7,000 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ஓர் இந்திய வீரர் அதிகபட்சம் பயணிக்க வேண்டிய தூரம் வெகு சொற்பமே. அதாவது நடந்தே கடக்க வேண்டிய தூரம் மட்டுமே.

ஒரே மைதானத்தில் விளையாடியது "நிச்சயமாக" தங்களுக்கு உதவியது என்று அரையிறுதிக்குப் பிறகு முகமது ஷமி கூறும் வரை, இந்தியா அதனை மறுத்தே வந்தது.

இந்தியாவுக்கு சாதகமான சூழல் உள்ளதாக கூறுபவர்கள் இன்னும் "வளர வேண்டும்" என்றே இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதற்கு முன்பு வரை கூறி வந்தார்.

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஆதரிக்கப் போவதாக கூறும் வரை மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தனர்.

இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, சர்வதேச கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்

வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுங்கள், இந்தியா வைத்திருக்கும் அதிகாரம் தெரியும். இதுதான் சர்வதேச கிரிக்கெட் செல்லும் பாதை.

2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் கடைசி நிமிடத்தில் அரையிறுதி ஆடுகளம் மாற்றப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது.

எட்டு மாதங்களுக்கு முன்பு, கயானாவில் நடந்த டி20 அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. ரோஹித் சர்மா மட்டுமே புறப்படுவதற்கு முன்பு தனது அணியின் போட்டிகள் எங்கு விளையாடப்படும் என்பதை அறிந்திருந்தார்.

இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி நேரலையை கண்டு களிக்க ஏற்றவாறு காலை 10:30 மணிக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை இந்தியாவின் கடைசி லீக் போட்டி ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடப்பட்டது. அது இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகமாக உள்ள நேரம். இதனால் தென்னாப்பிரிக்கா துபைக்கு பறந்து வர வேண்டியிருந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பாகிஸ்தானுக்குத் மீண்டும் திரும்ப வேண்டிய கேலிக்கூத்தான சூழ்நிலை ஏற்பட்டது.

ஒரு போட்டி நடத்துவதால், அந்த போட்டியை நடத்தும் நாட்டுக்கு சாதகமான விசயங்கள் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் உங்கள் எதிராளிகள் நடத்தும் ஒரு தொடரிலும் அதேபோன்ற நன்மைகளை நீங்கள் பெறுவது முற்றிலும் மாறுபட்டது.

நிச்சயமாக, இது எதுவும் இந்திய வீரர்களின் தவறு அல்ல.

இந்த வாரம் இறுதிப் போட்டிக்கு முந்தைய கேப்டன்களின் நேர்காணலுக்கு துணை கேப்டன் சுப்மன் கில்லை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திய ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் 50 ஓவர் விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள்.

நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கான ரன்னை எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் வெகு தொலைவில் இல்லை. வாய்ப்பு வழங்கப்பட்டால் கில்லும் அந்த இடத்ற்கு வரக்கூடும்.

இந்த போட்டி எங்கு விளையாடப்பட்டிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்ற அளவுக்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது.

இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, சர்வதேச கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐசிசி போட்டிகள் சலிப்பு தருகின்றனவா ?

பணம் கொழிக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு எதிர்வினையாக ஐசிசி ஆண்கள் போட்டிகள் கருதப்படுகின்றன. வருகிற 2031-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் டிராபி, டி20 அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் என்கிற அளவுக்கு ஐசிசி போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், இந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுவதாலும், ஒரே மாதிரியான வடிவத்தைப் பின்பற்றுவதாலும், சலிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை.

இங்கிலாந்து அணி தொடரில் இருந்து மோசமாக வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற நாடுகளில்?

இந்த போட்டியைப் பற்றி குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வந்திருக்கும் தகவல்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த போட்டியின் ஏற்பாடு குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு 57 நாட்களுக்கு முன்புதான் அதன் அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது.

கயானா அரையிறுதியை எந்த ஆங்கில ஊடகங்களாலும் பார்க்க முடியவில்லை. கடைசி நேரத்தில் விமான பயணங்களை முடிவு செய்ய இயலவில்லை, விமானங்கள் குறைவாக இருந்தன. பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க அதிகாரிகளால் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கப்பட்ட நாடுகளில் கயானாவும் ஒன்றாகும். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன.

அடுத்தடுத்த போட்டிகளிலும் குழப்பங்கள் தொடரும்

அடுத்த இரண்டு போட்டிகளில் - இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2026 -ல் நடைபெறும் ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விஷயங்கள் எளிதாக இருக்காது.

இரண்டுமே இந்தியாவில் நடைபெறும். டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுடன் இலங்கையும் கூட்டாக நடத்துகிறது. அதாவது பாகிஸ்தான் தகுதி பெற்றால் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும்.

இந்தியாவுக்கு இருந்த அதே நன்மைகள் பாகிஸ்தானுக்கு கிடைக்கலாம். ஆனால், இரு இடங்கள் இறுதிப் போட்டிக்காக தேவைப்படுவது போன்ற நிச்சயமற்ற தன்மைகள் எதுவும் அந்த தொடரிலும் மாற போவதில்லை.

இதன் அர்த்தம் நம்பிக்கை போய்விட்டது என்பதல்ல.

சர்வதேச கிரிக்கெட்டிற்கான அச்சுறுத்தல் என்ன?

இரண்டு வாஷ் அவுட்கள் மற்றும் பல ஒருதலைப்பட்ச ஆட்டங்கள் இருந்த போதிலும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் வலுவாக உள்ளது என்பதை சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நிரூபித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸின் சதம் எப்போதும் நிலைத்து நிற்கும். ரவீந்திரா விளையாட்டின் அடுத்த நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்சாய் விரும்பக்கூடிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தரம் அல்ல, மாறாக அக்கறையின்மைதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gepllrgp5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கே அதிக பலனா? நியூசிலாந்து ஊடகங்கள் சொல்வது என்ன?

மிட்செல் சாண்ட்னர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சாம்பியன்ஸ் டிராபி 2025இன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு நியூசிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஊடகங்களில் அது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.

நியூசிலாந்தின் முன்னணி நாளிதழான நியூசிலாந்து ஹெரால்டு, "1.438 பில்லியன் மக்கள் தொகையையும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட இந்தியா, மும்பையைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தை தோற்கடித்தது" என்று குறிப்பிட்டது.

இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, "இந்த வெற்றியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருந்தது, மேலும் பல விஷயங்களும் அதற்குச் சாதகமாக அமைந்தன.

பாகிஸ்தான் போட்டியை நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது. அதேபோல், இந்திய அணி துபை மைதானத்திற்குப் பழகிவிட்டது. பயணங்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது.

போட்டி எங்கு நடைபெற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்போது, அதற்கேற்ப 15 வீரர்களைக் கொண்ட ஓர் அணியை உருவாக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், "ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் 11 இந்திய வீரர்களில், நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட மொத்தம் ஆறு பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை, 50 ஓவர்களில் 38 ஓவர்கள் அதன் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டன. மறுபுறம், நியூசிலாந்து அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஒருவர் சாண்ட்னர், மற்றவர் மிட்செல் பார்ஸ்வெல்," என்று நியூசிலாந்து ஹெரால்டு தனது செய்தியில் கூறியுள்ளது.

அதோடு, "க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர ஆகியோர் இருந்தாலும், அவர்கள் முழுநேர சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல. உதாரணமாக, இந்தியாவின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மறுபுறம், நியூசிலாந்தின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் பிலிப்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விக்கெட் கீப்பராக தொடங்கினார்," என்று நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் ஆதிக்கம் பற்றிய விவாதம்

போட்டியின் சூழல், இந்தியாவுக்கு சாதகமாகவும், நியூசிலாந்துக்கு எதிராகவும் இருந்தது என்றாலும், நியூசிலாந்து அணி எளிதில் தோல்வியடைந்தது என்று நியூசிலாந்து ஹெரால்டு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.

நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறுகையில், "எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் எப்போதும் சில சவால்கள் இருக்கும், அவற்றில் இருந்து நீங்கள் வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

நான் எதைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. போட்டி முழுவதும் நாங்கள் முழு பலத்துடன் எதிரணி அணிக்கு சவாலாக இருந்திருக்கிறோம்," என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

"நிலவியல் அரசியல் யதார்த்தங்கள், அக்கறையின்மை மற்றும் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் விறுவிறுப்பற்ற போட்டிச் சூழல் ஆகியவை சாம்பியன்ஸ் டிராபி போட்டி, ஐ.சி.சி திட்டமிட்டபடி நடக்காமல் போவதற்குக் காரணமாக அமைந்தன.

சாம்பியன் டிராபி ஐ.சி.சி.க்கு நிதி திரட்டும் ஒரு வழியாக மாறியது. ஆனால் டி20இன் மகத்தான வெற்றிக்கு மத்தியில், ஒருநாள் போட்டியின் தன்மை குறித்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது" என்று ரேடியோ நியூசிலாந்து தனது வலைதளத்தில் எழுதியுள்ளது.

"எந்தவொரு போட்டியின் வெற்றிக்கும் இந்தியா ஒரு நிதி இயந்திரம் போன்றது. 1996க்கு பிறகு, எந்தவொரு ஐ.சி.சி போட்டியையும் நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது, இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து சந்தேகத்துக்குரிய சூழல் நிலவியது" என்று ரேடியோ நியூசிலாந்து பதிவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, "இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் இன்னும் முடிவுக்கு வராததால், பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுகின்றன. அதுவும் இப்போது மூன்றாவது நாட்டில்" என்றும் ரேடியோ நியூசிலாந்து குறிப்பிட்டிருந்தது.

விருது பெற்ற கிரிக்கெட் எழுத்தாளர் நிக்கோலஸ் ப்ரூக்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்துத் தான் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

"என்னைப் பொறுத்தவரை, இந்திய அணி சிறப்பானது. எந்தச் சூழ்நிலையிலும் முன்னேறும் திறன் கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி அதன் திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவதன் மூலமாகப் பலன் பெற்றதாக மற்ற விஷயங்கள் பேசப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.

இந்தியா மீதான பாராட்டும் விமர்சனமும்

சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது.

ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறியதாலும், விராட் கோலி இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனதாலும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி இன்னும் பெரிதாக்கப்படுகிறது என்று நியூசிலாந்து செய்தி வலைதளமான ஸ்டஃப் குறிப்பிட்டுள்ளது.

"கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா 24 போட்டிகளில் 23 போட்டிகளில் வென்றுள்ளது. இதில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை அடங்கும். ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி குறித்து, போட்டியை நடத்தும் நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

எந்தவொரு தொடரையும் நடத்தும் நாடு, அந்தத் தொடரில் பலனடைகிறது. கடந்த நான்கு ஒருநாள் உலகக் கோப்பைகளில், போட்டியை நடத்திய நாடு மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எந்தவொரு பெரிய விளையாட்டுப் போட்டியிலும், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு கிடைத்த பலன்களை, போட்டி நடத்தாத நாடு ஒருபோதும் பெறுவதில்லை," என்று ஸ்டஃப் தெரிவித்துள்ளது.

மேலும் "2021ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி அனைத்து 15 போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அந்த நேரத்தில், இந்தியா வேறு எந்த நாட்டிலும் போட்டிகளை விளையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.

ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது அணியை பாகிஸ்தானில் விளையாட அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மீதமுள்ள ஏழு நாடுகள் பாகிஸ்தானில் இருந்தபோது, ஐ.சி.சி இந்தியாவுக்கான அனைத்துப் போட்டிகளையும் துபையில் ஏற்பாடு செய்தது" என்று ஸ்டஃப் இணையதளம் எழுதியுள்ளது.

அதோடு, "இறுதிப் போட்டிக்கு முன்பு, முகமது ஷமி, ஆடுகளத்தின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியும், எனவே எங்களுக்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கிறது என்று கூறியிருந்தார். நியூசிலாந்து தனது போட்டிகளை பாகிஸ்தானின் மூன்று நகரங்களில் விளையாடியது, அதே நேரத்தில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது," என்று ஸ்டஃப் குறிப்பிட்டது.

சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும் இந்தியாவுக்கே பலன் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன

கென்யாவின் நைரோபியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக நியூசிலாந்தின் செய்தி வலைதளமான தி போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதன் பிறகு, நியூசிலாந்து அணி வெள்ளை பந்து இறுதிப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தியா தனது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்த நாளிலிருந்து, பல வகையான கேள்விகள் எழத் தொடங்கின. இந்திய அணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அதுபோக இந்திய அணிக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருந்தன.

"ஐ.சி.சி பிற அணிகளிடம், பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், இந்திய அணி துபையில் முகாமிட்டுத் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதைப் போன்ற உதவியைப் பெற்றது. மறுபுறம், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்து துபைக்கு மாறி மாறிப் பயணித்தது" என்றும் ஸ்டஃப் இணையதளம் குறிப்பிட்டது.

நியூசிலாந்தின் செய்தி இணையதளமான தி போஸ்ட், "இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா பெற்ற வசதிகள் எந்தவொரு உலகளாவிய விளையாட்டிலும் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காது," என்று தெரிவித்தது.

இவைதவிர, நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து ஒரு பெரிய போட்டியைத் தவறவிடுவது இது முதல் முறை அல்ல என்றும் அந்தச் செய்தி இணையதளம் எழுதியுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோதும், இறுதிப் போட்டியின்போது, வெற்றி அவர்களின் கைகளைவிட்டு நழுவுவது போலத் தோன்றியதை தி போஸ்ட் நினைவுகூர்ந்தது.

ஆனால் அப்போது கிறிஸ் கெய்ன்ஸ் 102 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறையும் அதே போன்ற ஒரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்றும் தி போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce8vqze416yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.