Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 MAR, 2025 | 02:56 PM

image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது  குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜேவிபியினர் நாடாளவிய ரீதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அக்காலப்பகுதியில் மிக முக்கியமான பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பொருளாதார ரீதியில் முக்கியமான பல கட்டமைப்புகள் காணப்பட்டன.

இந்த பகுதிகளை பாதுகாப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்தினார்கள்.

பாதுகாப்பு படையினரை உள்வாங்குவதற்காக கைவிடப்பட்ட கட்டிடங்கள், இலங்கை உரஉற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கைவிடப்பட்ட வீடுகளை பாதுகாப்பு படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் பல ஊழியர்கள் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்த பயங்கரமான காலப்பகுதியில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. அதன் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார்.

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண என்னை தொடர்புகொண்டு எவரும் வசிக்காத நிலையில் உள்ள வீடுகளை பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் அவர்களின் பாதுகாப்பிற்காக  வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த வீடுகளின் நிர்வாகி களனி பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி நளின் தெல்கொடவிடம் அந்த வீடுகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்தது.

1994 இன் பின்னர் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்க பந்தலந்த பகுதியில் காணப்பட்ட சித்திரவதை முகாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆணைக்குழுவை நியமித்தவேளை, பல தனிநபர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர். நானும் சாட்சியாக அழைக்கப்பட்டேன். அவ்வேளை நான் எதிர்கட்சிதலைவராகயிருந்தேன்.

அரசியல் நோக்கங்களிற்காகவே பட்டலந்த ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது, எனினும் ஆனால் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை.

வீடுகளை வழங்கும் பணியை பொலிஸ்மா அதிபர் ஊடாகவே முன்னெடுத்திருக்கவேண்டும் ஆனால், நான் அதனை வழங்கியமை தொடர்பிலேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/209363

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் - முன்னாள் மனித உரிமை ஆணையாளர்

16 MAR, 2025 | 05:16 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமையை' உள்ளடக்க வேண்டும் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவான சாட்சிகள் கோரப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரசாங்கம் பட்டலந்த விசாரணை அறிக்கையின் மூல பிரதியை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது. 

இந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால்குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமை' உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே உத்தேச புதிய அரசியமைப்பு உருவாக்கத்தின் போது மக்கள் 'உயிர் வாழும்' உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

'பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கு உப குழு ஒன்றை நியமிப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகைள முன்னெடுப்பதற்கு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் விவாதத்தையும், மே மாதம் இரண்டாம் நாள் விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/209385

  • கருத்துக்கள உறவுகள்

484333198_1062767242554914_3807287662161

484298657_1062760235888948_3672128263134

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.