Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

படக்குறிப்பு,கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 ஏப்ரல் 2025, 07:13 GMT

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கினார். அதனை அடுத்து நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பாம்பன் பாலத்தின் வரலாறு

இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேய அரசு நூறாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது.

ரயில் பாலத்திற்கு கீழே கப்பல் கடந்து செல்ல வசதியாக தூக்குப் பாலம் கட்டுவது என்றும், தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1911இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கப்பட்டன.

இரண்டே ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்து, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24 அன்று முதன்முதலாக ரயில் இயக்கப்பட்டது.

இதனால் சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலும் பயணிகளால் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடிந்தது. இந்த பாம்பன் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலம் சிகாகோவின் ஸெர்ஷர் ரோலிங் லிப்ட் பிரிட்ஜ் (Scherzer Rolling lift Bridge) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தின் தோர்னபி-ஆன்-டீஸின் ஹெட் ரைட்சன் ரூ கோ லிமிடெட் (Head Wrightson & Co Ltd of Thornaby -on –Tees) மூலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் ஸ்பெயினைச் சேர்ந்த பொறியாளர் ஸெர்ஷர் வடிவமைத்து செயல்படுத்தியதால் ஸெர்ஷர் பாலம் என பெயரிடப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் (41 அடி) உயரத்தில் அமைந்துள்ளது இப்பாலம். 2.05 கி மீ நீளமுள்ள இந்தப் பாலம் 143 தூண்களை கொண்டது. பாலத்தில், கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் மைய பகுதியில் 289 அடி நீள தூக்கு பாலம் அமைந்துள்ளது. தூக்கு பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களை பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன.

(இந்தியாவில் கட்டப்பட்ட வித்தியாசமான பாலங்கள் குறித்த The Engineer என்ற புத்தகத்தில் இருந்து இந்த விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த பாலங்களை கட்டிய பொறியாளர்களின் பேட்டிகளுடன் அந்த புத்தகத்தில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன)

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் பயணித்த அனுபவத்தை பாம்பனை சேர்ந்த 86 வயதான சிங்கம் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "என்னுடைய ஒன்பதாவது வயதில் நான் முதன் முதலில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலில் பயணம் செய்தேன். பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் செல்வதற்கு கடல் வழியாக அரை மணி நேரம் வரை ஆகும். ரயில் பாலத்தின் மீது செல்லும் போது மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்படும். நான் பயணிக்கும் போது பாம்பனில் இருந்து ராமநாதபுரம் வரை ஒரு ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டது.

பாலத்தில் கடலுக்கு மேல் ரயிலில் முதலில் செல்லும் போது ஒரு அச்ச உணர்வு எனக்குள் இருந்தது. ஆனாலும் ரயிலின் அந்த சிக்குபுக்கு சிக்குபுக்கு சத்தம் மற்றும் குலுங்கல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு பல முறை ரயில் பாலத்தில் சென்றுள்ளேன். எங்கள் பாம்பன் பகுதிக்கு அடையாளமே இந்த ரயில் தூக்கு பாலம் தான்," என்றார் அவர்.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,ஸ்பெயினைச் சேர்ந்த பொறியாளர் ஸெர்ஷர் வடிவமைத்து செயல்படுத்தியதால் ஸெர்ஷர் பாலம் என பெயரிடப்பட்டது

1964 புயலில் தப்பிய தூண்கள்

1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை தாக்கிய புயலின் போது பாம்பன் ரயில் பாலத்தின் 124 ஸ்பான்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஷெர்சர் ஸ்பானும் 19 கான்கிரீட் கர்டர்கள் (தூண்கள்) மட்டுமே தப்பின. அப்போது செயற்பொறியாளராக இருந்த ஸ்ரீதரன் தலைமையில் புனரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. கடலிலிருந்து கர்டர்கள் மீட்டெடுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் 67 நாட்களில் முடிக்கப்பட்டன.

தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு புயல் காலகட்டத்தில் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பை நேரடியாக பார்த்த 70 வயது முதியவர் அம்பிகாபதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் குடும்பத்துடன் தனுஷ்கோடியில் வசித்து வந்தேன். தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு இரவு வீசிய புயல் காரணமாக எங்கள் நகரமே பேரழிவை சந்தித்தது. அங்கிருந்து தப்பித்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம்.

அதன் பின்னர் மண்டபம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் ரயில் நிலையத்திற்கு வந்தோம். அப்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாம்பன் மண்டபம் இடையே சாலை பாலம் இல்லாததால் நாங்கள் கட்டு மரத்தை பயன்படுத்தி சுமார் இரண்டு மணி நேரம் பயணித்து மண்டபம் சென்றடைந்தோம். மூன்று மாத காலத்திற்குப் பிறகு அந்த வழியே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 1974 ஆம் ஆண்டு பாம்பன் அருகே புயல் வீசியது. பாம்பன் ரயில் பாலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை," என்றார்.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை தாக்கிய புயலின் போது பாம்பன் ரயில் பாலத்தின் 124 ஸ்பான்கள் அடித்துச் செல்லப்பட்டன

மீட்டர் கேஜ் பாதை பிராட் கேஜ் பாதையாக மாற்றம்

பாம்பன் ரயில் பாலத்தின் 56-வது தூணில் அனிமோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி காற்றின் வேகத்தை பதிவு செய்யும். மணிக்கு 58 கிமீ வேகத்தை காற்று தாண்டும் போதெல்லாம், பாலத்தின் மீது ரயில்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பாம்பன் பாலம் கட்டப்பட்ட போது அதன் மீது குறுகிய அகலம் கொண்ட (மீட்டர் கேஜ்) ரயில் பாதை இருந்து வந்தது. ரயில்வே பொறியாளர்கள், சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து, விரிவான ஆய்வை மேற்கொண்டு, புதிய பாலம் கட்டுவதற்கு பதில், தற்போது உள்ள பாலத்தை அகலப்பாதை தரநிலைகளின்படி மாற்ற பரிந்துரைத்தனர்.

அதன்படி, பாம்பன் ரயில் பாலத்தில் ரூ. 24 கோடி செலவில் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 47 கர்டர்கள் (தூண்கள்) புதிதாக மாற்றப்பட்டன. மேலும் 98 கர்டர்கள் அகலப்பாதை தர நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு மானாமதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைப் பிரிவு, ஆகஸ்ட் 12, 2007 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

1914 முதல் 1988 வரை, ரயில்வே பாலத்தையொட்டி சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேஸ்வரம் தீவிற்கு ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,1914 முதல் 1988 வரை, ரயில்வே பாலத்தையொட்டி சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேஸ்வரம் தீவிற்கு ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது

பாம்பன் ரயில் பாலத்தில் கடைசி பயணம்

நூற்றாண்டு கால சேவைக்குப் பிறகு, சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு ரயில் போக்குவரத்தின் போது பாம்பன் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுவதை கண்டறிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.

பாம்பன் ரயில் பாலத்தில் கடைசியாக சென்ற சேது விரைவு ரயிலில் பயணித்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெரோம். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "சேது விரைவு ரயில் கடைசியாக இயக்கப்பட்ட போது இரவு 8 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு நான் சென்னை சென்றேன். அப்போது ரயில் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கடந்து சென்றது. அப்பாலத்தை ரயில் கடந்து சென்ற போது அதிர்வு அதிகமாக இருந்தால் சென்சார்களில் இருந்து ஒலி எழுப்பியதாக ரயில்வே ஊழியர்கள் பேசிக் கொண்டனர்." என்று கூறினார்.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக அனைத்து ரயில் சேவைகளும் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது

உப்பு காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க நவீன வர்ணப்பூச்சு

பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்கு 2019 ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோதி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.545 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின.

புதிய ரயில் பாலம் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

அதிக துருப்பிடிக்கும் சூழலை கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருப்பிடிக்காமல் இருக்க உதவும் வர்ணங்கள் பல அடுக்குகளாக பூசப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் 200 மைக்ரான் துத்தநாக கலவை, அடுத்த அடுக்கில் 25 மைக்ரான் ஜெல்லி போன்ற எபோக்ஸி பூச்சு, கடைசி மேல் அடுக்கில் சிலிக்கான் ஆக்சிஜன் கலந்த சிந்தடிக் பாலிமர் பூச்சு செய்யப்பட்டது.

"இவை பால அமைப்புகளை கடல் காற்றில் இருந்து துருப்பிடிக்காமல் 35 ஆண்டுகள் வரை பாதுகாக்கும்," என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,அதிக துருப்பிடிக்கும் சூழலை கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

புதிய பாலத்தின் கீழே கப்பலுக்கு எவ்வாறு வழி கிடைக்கும்?

இந்தியாவிலேயே முதன்முறையாக, பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்து தூக்கு பாலம் இங்கே கட்டப்பட்டுள்ளது. பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் இரும்பாலானது, 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது.

ஆனால் புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்தில் பயன்படக் கூடிய அலுமினிய உலோகக் கலவை (Aluminium alloy) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 650 டன் ஆகும். இந்த செங்குத்து தூக்கு பாலத்தின் உயரம் 33 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும்.

மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இவற்றை இயக்க இயலும். இதன் மூலம் 5.3 நிமிடத்தில் பாலத்தை மேலே தூக்கி திறந்து விட முடியும்.

கப்பல் கடந்து செல்வதற்கு வசதியாக பாலத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தலாம். இது சாலை பால உயரத்திற்கு இணையானது. பாலத்தின் இருபுறமும் உள்ள கோபுரங்களில் ஹைட்ராலிக் லிப்ட்டை இயக்கக்கூடிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு கணினி மூலம் 650 டன் எடை கொண்ட செங்குத்து தூக்கு பாலம் மேலே தூக்கி கீழே இறங்கி இயக்கப்படுகிறது.

செங்குத்து தூக்கு பாலம் சென்சார்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பல் பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்லும் போது மட்டுமே இந்த செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்படும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகில் இரண்டு மாடி கட்டடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறை கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்க முடியும்

28 மாதங்களுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை

மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரையில் 70 கி.மீ வேகத்திலும், இடையே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ வேகத்திலும் ரயிலை இயக்கலாம். அதே சமயம், பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயில் இயக்க கூடாது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ஆம் தேதி ராம நவமி நாளன்று மோதி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த செந்தில். "ராமேஸ்வரம் மிக முக்கிய சுற்றுலா தலம் என்பதால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளூர் பொது வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் நிலையில், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வரும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது.

அதேபோல் மீனவர்கள் தங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் சரக்கு போக்குவரத்திற்காக ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பெரும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது 28 மாதங்களுக்குப் பிறகு பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்ககூடும்," என்றார்.

பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்

பட மூலாதாரம்,THE ENGINEER

படக்குறிப்பு,மீனவர்கள் தங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் சரக்கு போக்குவரத்திற்காக ரயிலை பயன்படுத்தி வந்தனர்.

பழைய தூக்குப் பாலம் அகற்றப்படுமா?

பழைய பாம்பன் பாலம் நூற்றாண்டு காலப் பழமையானது என்பதுடன், தற்போது அதன் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் கப்பல்கள், பெரிய படகுகளுக்காக புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும் பழைய பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது.

இதனால் 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங், "பாம்பன் பழைய இரும்பு தூக்கு பாலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் தூக்கு பாலத்தை பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஐ.ஐ.டி. சென்னை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வின் முடிவில் பாம்பன் பழைய தூக்கு பாலத்தை என்ன செய்யலாம் என்பது குறித்து தெற்கு ரயில்வே முடிவு செய்யும்," என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3wxey00z93o

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-88.jpg?resize=750%2C375&ssl=

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம் இன்று திறப்பு!

ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலமானது இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று மாலை இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழகம் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பார்.

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பலமான இது 550 இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புராணங்களில் வேரூன்றிய இந்தப் பாலம், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தனுஷ்கோடியில் இருந்து ராம சேது கட்டுமானத்தைத் தொடங்கியதை ராமாயணம் விவரிக்கையில், ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

ராமேஸ்வரத்தை இந்திய பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம் 2.08 கி.மீ நீளமும், கடல் மட்டத்திலிருந்து 17 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதுடன், 143 தூண்களை கொண்டு அமைந்துள்ளது.

இதனால் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பெரிய கப்பல்கள் சீராகச் செல்ல முடியும்.

https://athavannews.com/2025/1427653

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி

Published By: VISHNU 06 APR, 2025 | 08:26 PM

image

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-04-06_at_18.09.10_ad

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது.

WhatsApp_Image_2025-04-06_at_18.09.12_ac

கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-04-06_at_18.09.08_3a

பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும் புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்

புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன.

இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.

இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.

துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும்.

ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.

புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.

புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.

துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.

உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர்.

35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும்  பூசப்படவில்லை.

https://www.virakesari.lk/article/211342

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி கப்பலுக்கு கம்ப்யூட்டரும் பாலமும் சேர்ந்து வழிவிடும்; New Pamban Bridge-ல் என்ன சிறப்பு?

ராமேஸ்வரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பாலமும் இதுதான்.

நூறாண்டுகளை கடந்த இந்த பாலம் பலவீனமடைந்ததாக கூறி அதன் அருகிலேயே தற்போது புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தில் உள்ள சிறப்புகள் என்ன?

#Pamban #PambanBridge #Ramanadhapuram

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.