Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான், இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான் - நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

19 MAY, 2025 | 08:20 AM

image

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள்.

இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்.

இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது, நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாக பார்த்திராத போதிலும் நான் அவரை பற்றி எழுதினேன்.

தந்தையும் தாயும்  எவ்வாறு சிந்திப்பார்கள் சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன். கைதுசெய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என எழுதினேன்.

ஆனால் இன்று பாலசந்திரன் எங்கிருக்கின்றார். பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரினதும் உடலின் இடது பக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

பாலசந்திரன் இன்றும்  வாழ்கின்றான் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான்.

இனப்படுகொலையின் காலடிச்சுவடுகள் என்ற இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கதையையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்.

https://www.virakesari.lk/article/215115

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம்" என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் - சீமான்

19 MAY, 2025 | 04:01 PM

image

மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் 'தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம்' கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில்  மே 18 நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மனோரஞ்சன், பயபாரி எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சீமான் பேசும்போது "வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழின மக்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதி மதங்களால் பிளவுபட்டு தன்னின பகையால் மோதி ரத்தம் சிந்தி வீழ்ந்ததால் அரசியல் வலிமையற்றவர்களாக நிற்கிறோம். சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை பாதுகாப்பாக வாழ வைக்க போராடித்தான் ஆக வேண்டும்.

தமிழன் என்று சொல்லும்போதே திமிரும் தைரியமும் வர வேண்டும். குனிந்து கும்பிடு போட்டு வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டால் உன்னை தூக்கி சுடுகாட்டில் போடுவார்கள். நாம் தமிழர் கட்சி மட்டுமே 'தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க' என்ற முழக்கங்களை முன்வைத்து அடிமைப்பட்ட தமிழ் தேசிய மக்களின் உரிமை மீட்சிக்கு போராடும் மக்கள் ராணுவம்.

மானம் அறம் வீரம் என வாழ்ந்த மறவர் கூட்டம் நாம். கடல் கடந்து நிலப்பரப்பை வென்று உலகத்தின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவிய ராஜராஜ சோழன் வாரிசுகள் நாம். யாரையும் அடிமைப்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. அப்படிப்பட்ட எங்களை சிங்களவன் அடிமைப்படுத்த நினைத்தால் விடுவதற்கு நாங்கள் பூனையோ எலியோ அல்ல... புலிகள்.

GrQDr6yW8AA4k7l.jpg

மூவேந்தர் வாரிசுகளான நாம் முள்ளிவாய்க்காலில் முடங்கிய நாள் இன்று. பச்சிளம் குழந்தைகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்து மடிந்த நாள். ஈக்களும் எறும்புகளுக்கும் இரக்கம் காட்டியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உலகத்தை தழுவி பாடியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள்.

என் மண்ணின் மக்கள் மரணித்தபோது உலகில் ஒருவன் கூட அழவில்லை. இதுதான் வரலாற்றில் பெரும் துயரம். எங்களுக்காகவும் பேசுங்களேன் என்று ஈழத்து குரல்கள் ஒலித்தன. உயிரைக் காப்பாற்ற பதுங்கிய பதுங்குழிகளே புதை குழிகளாக மாறின. ரத்தமும் கண்ணீரும் சுமந்து பிரசவித்த தாய் தன் வயிற்றுக்குள் பிள்ளைகளை வாங்கிக் கொண்ட அவலம் நிகழ்ந்தது.

13 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழர்கள் ஏன் சுதந்திரமாக வாழக்கூடாது? ஒரு இனம் தனக்கென ஒரு நாட்டை அடையும்போது தான் முழுமையான விடுதலை அடையும். உலகில் எல்லா மொழிகளும் மனிதன் பேசிய மொழி. ஆனால் தமிழ் இறைவன் பேசிய மொழி. சிவன் முருகன் மாயோன் ஆகியோர் என் மூதாதையர்கள்.

கடவுளை கடன் கொடுத்த இனத்தின் மக்கள் நாங்கள். உலக அறிஞர்களால் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். தனித்து இயங்கக்கூடிய செம்மொழி. இந்த மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன்.

தமிழ் பேரினத்தின் வரலாறாகவே வாழ்ந்தான். அவன் வெடித்த முதல் தோட்டா உலகத்தையே அதிர வைத்தது. 200 ஆண்டுகளுக்கு பிறகு என் இனம் எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால் உலகப் போரால் அந்த கனவு நசுக்கப்பட்டது. 

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொன்னது இந்த ஆட்சியாளர்கள் தான். இனத்தை கொன்று குவித்தவர்களுக்கே வரிசையில் நின்று வாக்கு செலுத்தி அடிமையாக வாழ்கிறோம். போரை நடத்தியது காங்கிரஸ். அவர்களுடன் நின்றவர்கள் திமுக. போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்தவர்கள் அதிமுக. 2ஜி அலைக்கற்றைக்காக பாராளுமன்றத்தை முடக்கிய பாஜக. தமிழினத்தின் எதிரிகள் இவர்கள் நான்கு பேரும்.

https://www.virakesari.lk/article/215153

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.