Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்

  • பதவி, பிபிசிக்காக

  • 9 ஜூன் 2025, 02:37 GMT

சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

"இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும்.

ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி உருவாக்கப்பட்டது?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது

மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும்.

இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம்.

"கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது.

இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

"சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது.

இந்த விதைகளால் என்ன பயன்?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி

விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை.

இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை"

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.