Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி

51 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019)

ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும்.

இந்த 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.

தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்,

எம்.எஸ். தோனி - இந்தியா

கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா

ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா

மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா

டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து

வீராங்கனைகள்:

சனா மிர்- பாகிஸ்தான்

சாரா டெய்லர்- இங்கிலாந்து.

இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, "ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள்

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ்

இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது.

2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர்.

2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி.

இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, "தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு." என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c249j903qjjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன், அம்லா, தோனி, ஸ்மித், வெட்டோரி, சானா மிர், சாரா டெய்லர்

11 JUN, 2025 | 05:50 PM

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி உட்பட புதிதாக எழுவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

icc_hall_of_fame__1___1_.png

லண்டனில் உள்ள அபே ரோட் அரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வின்போது இந்த ஏழு பேரும் இப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த ஏழு பேரில் இருவர் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள். அத்துடன் இரண்டு முன்னாள் வீராங்கனைகளும் அடங்குகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லா, இந்தியாவின் மஹேந்த்ர சிங் தோனி, தென் ஆபிரிக்காவின் க்றேம் ஸ்மித், நியூஸிலாந்தின் டெனியல் வெட்டோரி, பாகிஸ்தானின் சானா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகிய ஏழு பேரே புகழ்பூத்த வீரர்கள் பட்டியலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏழு புதிய உறுப்பினர்களையும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா வைபவரீதியாக வரவேற்றார்.

புகழ்பூத்த வீரர்கள்

மெத்யூ ஹேடன் (அவுஸ்ரேலியா)

103 டெஸட்கள், 8625 ஓட்டங்கள், சராசரி 50.73

161 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 6133 ஓட்டங்கள், சராசரி 43.80

9 சர்வதேச ரி20 போட்டிகள், 308 ஓட்டங்கள், சராசரி 51.33

1 photo mathew hayden

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்த அதிரடி ஆட்டக்காரரான மெத்யூ ஹேடன், ஐசிசியின் புகழ்பூத்த வீரர்களுக்கான பிரத்தியேக பட்டியலில் இணைகிறார்.

30 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள மெத்யூ ஹேடன், ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராவார்.

50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட மெத்யூ ஹேடன், 2007 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் அத்தியாத்தில் 3 சதங்களைக் குவித்ததுடன் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரானார்.

2003இலும் 2007இலும் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிகளில் மெத்யூ ஹேடன் இடம்பெற்றார். தற்போது அவர் நேர்முக வர்ணனையாளராக செயற்படுகிறார்.

ஹஷிம் அம்லா (தென் ஆபிரிக்கா)

124 டெஸ்ட்கள், 9282 ஓட்டங்கள், சராசரி 46.64

181 ஒருநாள் போட்டிகள், 8113 ஓட்டங்கள், சராசரி 49.46

2_hashim_amla.jpg

44 ரி20 போட்டிகள், 1277 ஓட்டங்கள், சராசரி 33.60

நிதானமும் பொறுமையும் கொண்ட ஒரு சிறந்த முன்வரிசை வீரர் ஹஷிம் அம்லா ஆவார். தென் ஆபிரிக்காவின் நிலையான மற்றும் உறுதியான வீரராகத் திகழ்ந்த அம்லா, ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைவதற்கு மிகவும் பொறுத்தமானவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆம்லாவின் ஒட்டுமொத்த சாதனை மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் சிறப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலைகளிலும் ஓட்டங்களை மிக இலகுவாக குவித்து அனைவரையும் பிரமிக்கவைத்தவர்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான அம்லா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000, 5000, 7000 ஓட்டங்களை மிகவேகமாக பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கு உரித்தானவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்களையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் குவித்து தனது ஆற்றல் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 311 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக முச்சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

3_ms_dhoni.jpg

90 டெஸ்ட்கள், 4876 ஓட்டங்கள், சராசரி 38.08, 256 பிடிகள், 38 ஸ்டம்ப்கள்

350 ஒருநாள் போட்டிகள், 10775 ஓட்டங்கள், சராசரி 50.57, 321 பிடிகள், 123 ஸ்டம்ப்கள்

91 ரி20 போட்டிகள், 1617 ஓட்டங்கள், சராசரி 37.60, 57 பிடிகள், 54 ஸ்டம்ப்கள்

எம்.எஸ். தோனி தனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பம்சங்களை உருவாக்கியுள்ளார்.

3_ms_dhaoni_with_2011_world_cup_and_man_

அத்துடன் ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற வீரர் தோனி ஆவார்.

2011இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி ஓட்டங்களை அடித்தபோது, தனது முத்திரை ஹெலிகாப்டர் அடிகளில் ஒன்றை அவர் உருவாக்கியது அவரது வாழக்கையில் மறக்கமுடியாத தருணம் ஆகும்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த, துடிப்பான விக்கெட் காப்பாளாராக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேவேளை, கடைசி ஓவர்களில் வெற்றி இலக்கை விரட்டிக் கடக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பிரபல்யம் பெற்றார். இரசிகர்களாலும் பெரிதும் கவரப்பட்டார்.

2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அற்புதமான அணித் தலைவர் தோனி ஆவார். இந்த மூன்று கிண்ணங்களை வென்றெடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே இப்போதும் கொண்டுள்ளார்.

க்றேம் ஸ்மித் (தென் ஆபிரிக்கா)

117 டெஸ்ட் போட்டிகள், 9265 ஓட்டங்கள், சராசரி 48.25

197 ஒருநாள் போட்டிகள், 6989 ஓட்டங்கள், சராசரி 37.98, 18 விக்கெட்கள்.

4_graeme_smith.jpg

33 ரி20 போட்டிகள், 982 ஓட்டங்கள், சராசரி 31.67

மிகச் சிறந்த ஆரம்ப வீரராகவும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஒரு சிறந்த அணித் தலைவராகவும் அனைவராலும் போற்றப்பட்டவர் க்றேம் ஸ்மித்.

கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடுமையான மற்றும் ஈடினையற்ற ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் உயர்ந்து நின்றார். இளம் வயதில் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவராக வரவேண்டும் என்ற அவரது கனவு வீண்போகவில்லை.

புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில் மிகுந்த பெருமை அடைவதாக ஸ்மித் கூறினார்.

டெனியல் வெட்டோரி (நியூஸிலாந்து)

113 டெஸ்ட் போட்டிகள், 4531 ஓட்டங்கள், சராசரி 30.00, 362 விக்கெட்கள்

295 ஒருநாள் போட்டிகள், 2253 ஓட்டங்கள், சராசரி 17.33, 305 விக்கெட்கள்

34 டி20 போட்டிகள் - 12.81 சராசரியுடன் 205 ரன்கள், 38 விக்கெட்கள்

5_daniel_vettori.jpg

ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மத்திய மற்றும் பின்வரிசையில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் டெனியல் வெட்டோரி பிரகாசித்தார்.

ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்படதன் மூலம் பெருமை அடைவதாக அவர் கூறினார்.

வெட்டோரி ஒரு சிறந்த சகலதுறை வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களைக் குவித்து 300 விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவராக வெட்டோரி திகழ்கிறார்.

அவர் 'பிளக் கேப்ஸ்' அணிக்கு ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். ஸ்டீவன் ப்ளெமிங் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நியூஸிலாந்து அணியின் தலைவர் பதவியை வெட்டோரி பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணியை வழிநடத்தி இருந்தார்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக வெட்டோரி செயற்படுகிறார்.

சானா மிர் (பாகிஸ்தான்)

120 ஒருநாள் போட்டிகள், 1630 ஓட்டங்கள், சராசரி 17.91, 151 விக்கெட்கள்

106 ரி20 போட்டிகள், 802 ஓட்டங்கள், சராசரி 14.07, 89 விக்கெட்கள்

6_sana_mir.jpg

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட முதலாவது பாகிஸ்தான் வீராங்கைனை என்ற பெருமையை சானா மிர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள மிர், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் தனது சிறந்த சமூகப் பணிக்காகப் பெயர் பெற்றவர்.

சாரா டெய்லர் (இங்கிலாந்து)

10 டெஸ்ட் போட்டிகள், 300 ஓட்டங்கள், சராசரி 18.75, 18 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்,

126 ஒருநாள் போட்டிகள், 4056 ஓட்டங்கள், சராசரி 38.26, 87 பிடிகள், 51 ஸ்டம்ப்கள்

90 டி20 போட்டிகள், 2177 ஓட்டங்கள், சராசரி 29.02, 23 பிடிகள், 51 ஸ்டம்ப்கள்

7_sarah_taylor.jpg

அண்மைய காலங்களில் மிகவும் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், இங்கிலாந்தின் நட்சத்திர வீக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமாவார்.

14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மின்னல் வேக விக்கெட் காப்பாளர் என்ற பெயர் பெற்றவர். விக்கெட் காப்பாளராக அவர் மொத்தமாக 103 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.

அத்துடன் அவர் ஒரு திறமையான முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார்.

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் 2009இல் இங்கிலாந்து சுவீகரித்தபோது அவ் வெற்றிகளில் சாரா டெய்லர் பெரும் பங்காற்றியிருந்தார்.

எட்டு வருடங்கள் கழித்து 2017இல் நடைபெற்ற உலக்க கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாரா டெய்லர், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 45 ஓட்டங்களைப் பெற்று தனது சொந்த நாட்டில் இங்கிலாந்து சம்பியனாவதை உறுதிசெய்திருந்தார்.

https://www.virakesari.lk/article/217200

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.