Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

15 JUN, 2025 | 12:49 PM

image

இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர்.

"விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

டைபூன் விமானத்துடன் இணைந்து இயக்கப்படும் F-35B லைட்னிங், குறுகியதூரம் சென்று செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும்.

இது துல்லியமான தரைத் தாக்குதல்கள், மின்னணுப் போர், கண்காணிப்பு மற்றும் வான்வழிப் போர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது.

https://www.virakesari.lk/article/217509

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் - இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள்

F-35B போர் விமானம், பொறியாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • இம்ரான் குரேஷி

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார் சாலையில் நின்றுபோயிருக்கும் F-35B போர் விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஹேங்கருக்கு மாற்றப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பொறியாளர்கள் குழு திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு விமானத்தின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 14ஆம் தேதி HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக, ராயல் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்தப் போர் விமானம் திரும்ப முடியவில்லை.

பிபிசி ஹிந்தியின் கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "தரையில் இருக்கும் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதனால்தான், விமானம் கப்பலுக்கு திரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

"HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் பொறியாளர்கள் விமானத்தை மதிப்பீடு செய்தனர். அதன் பிறகு, பிரிட்டனை தளமாகக் கொண்ட பொறியியல் குழுவின் உதவி தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விமானத்தை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தற்போது எங்களால் கூற முடியாது."

மேலும், "சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு வந்த பிறகு, விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, பழுது பார்ப்பதற்காக விமானம் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

F-35B போர் விமானங்கள்

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு, விதிகளின்படி F-35B போர் விமானங்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்

பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு, போர் விமானத்தைப் பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹேங்கருக்கு போர் விமானம் கொண்டு செல்லப்படும்.

"பழுது பார்ப்பு பணிகளுக்கான இடம் தேடப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருகை தரும் பொறியியல் குழுவிற்கு விமான நிலையத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்" என்று விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.

"இந்தப் போர் விமானம் தொடர்பாக இந்திய விமானப் படை, இந்திய கடற்படை மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என அனைத்து அமைப்புகளின் இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கொடுத்த, ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

"இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு, போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியது, தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவை பிரிட்டன் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான உறவை நிரூபிக்கின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய விதிகளின்படி, விமான நிலையத்தில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு கொண்டு வரப்பட்டாலோ, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விமானத்தின் அளவு மற்றும் விமான நிலையத்தின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே விமானத்திற்கான பார்க்கிங் மற்றும் ஹேங்கர் பயன்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

உதாரணமாக, மும்பை அல்லது பெங்களூருவில் உள்ள ஒரு ஹேங்கரில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்க்கப்பட்டாலோ நிர்ணயிக்கப்படும் கட்டணம், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையத்தைவிட அதிகமாக இருக்கும்.

தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் இடத்திற்கான விதிகள் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன.

மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள ராயல் கடற்படையின் முதன்மைக் கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், தனது நீண்ட நேர பயணங்களில் ஒன்றுக்காக ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டது.

கடலில் இருந்து ஜெட் விமானங்களைத் துரிதமாக இயக்கவும், உலகின் மறுபக்கத்தில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிட்டனின் திறனை நிரூபிக்கும் பயிற்சிகளில் பங்கேற்கவும் விமானம் தாங்கி கப்பல் போர்ட்ஸ்மாவுத்தில் இருந்து புறப்பட்டது.

மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளுக்கு போர்க்கப்பல்களை வழிநடத்தும் இந்த விமானம் தாங்கிக் கப்பலில், 24 நவீன F-35B ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் உள்ளன.

சுமார் 65 ஆயிரம் டன் எடையுள்ள இந்தப் போர்க் கப்பலில் 1,600 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

F-35B விமானம் என்றால் என்ன?

ராயல் விமானப்படை வலைதளத்தின்படி, F-35B என்பது பல பணிகளைச் செய்யும் திறன் கொண்ட விமானம். இது வான், தரை மற்றும் மின்னணு போரிலும் ஈடுபடும் திறன் கொண்டது.

இந்த விமானம் மின்னணு போர், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, வானில் இருந்து தரை மற்றும் வான் முதல் வான் வழிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது.

மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய மேம்பட்ட சென்சார்கள் F-35Bஇல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சென்சார்களை பயன்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை பைலட் ஒரு பாதுகாப்பான தரவு இணைப்பு வழியாகப் பிற தளங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98w55g3n39o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுகிறதா? என்ன நிலவரம்?

இந்த எஃப்-35B போர்விமானம் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • கீதா பாண்டே

  • பிபிசி நியூஸ், டெல்லி

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் சிக்கிக்கொண்ட விமானம், பிரிட்டன் ராயல் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலுக்கு திரும்ப முடியாத சூழலில் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

அங்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை.

விமானம் தரையிறங்கிய பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலின் பொறியாளர்கள் குழு வந்து அதை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இதுவரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்ய முடியவில்லை.

"விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு பழுதுநீக்கல் வசதிக்கு விமானத்தை நகர்த்த முன்வைக்கப்பட்ட திட்டத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்புக் கருவிகளுடன் பிரிட்டன் பொறியாளர்கள் குழு வந்தவுடன் விமானம் ஹேங்கருக்கு (விமானத்தை நிறுத்தி வைக்கும் இடம்) கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மற்ற விமானங்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்," என பிரிட்டன் தூதரகம் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது.

"பழுதுநீக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த பின்னர் விமானம் தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு விமானக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சனிக்கிழமை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போர் விமானத்தை பிரிட்டனின் ராயல் விமானப் படையைs சேர்ந்த ஆறு அதிகாரிகள் 24 மணிநேரமும் பாதுகாத்து வருகின்றனர்.

மும்பையில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பாதுகாப்பு, உத்தி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சமீர் பாட்டீல், ராயல் கடற்படைக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். "அதில் ஒன்று, விமானத்தைப் பழுதுநீக்கி பறக்கச் செய்வது. இல்லையென்றால், சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் போன்ற அதைவிடப் பெரிய சரக்கு விமானத்தைப் பயன்படுத்தி அதைக் கொண்டு செல்லலாம்."

போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. விமானத்தைப் பாதுகாத்து, மீண்டும் அதன் பணிகளைத் தொடங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என திங்கள் கிழமையன்று எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பென் ஒபீஸ் ஜெக்டி அரசிடம் கேள்வி எழுப்பியதாக, யுகே டிஃபென்ஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

"விமானத்தை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன, அதற்கு இன்னமும் எத்தனை காலம் எடுக்கும் மற்றும் ஹேங்கரில் விமானம் இருக்கும்போதும் பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்போதும் விமானத்தின் ரகசிய தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு எப்படி உறுதி செய்யும்?" என அவர் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

விமானம் தொடர்ந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரிட்டனின் ஆயுதப் படைகள் அமைச்சர் லூக் பொலார்ட் உறுதி செய்தார்.

"எஃப் 35பி போர் விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியாதபோது, முதல்தர ஆதரவளித்த நமது இந்திய நண்பர்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.

அதோடு, "ராயல் விமானப்படையின் வீரர்கள் விமானத்துடன் எப்போதும் இருக்கிறார்கள் என்பதால் போர் விமானத்தின் பாதுகாப்பு சிறந்த கரங்களில் இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் போல், போர்விமானத்திற்கு திரும்பச் செல்வது கடினமாக இருப்பதாக கேரளா மாநில சுற்றுலாத்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம்,KERALA TOURISM

படக்குறிப்பு, கேரளாவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் போலவே, போர் விமானத்திற்கும் அங்கிருந்து திரும்பச் செல்வது கடினமாக இருப்பதாக கேரளா மாநில சுற்றுலாத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

லாக்ஹீட் மார்டீனால் தயாரிக்கப்படும் எஃப் 35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (மறைந்து செயல்படும் ஆற்றல் கொண்ட) போர் விமானங்களாகும். இவற்றின் குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கத் தொடங்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகின்றன.

எனவே, ஓடுதளத்தில் "எஃப் 35பி தனிமையில்" நிறுத்தி வைக்கப்பட்டு கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் மீம்களாக பரவி வருகின்றன.

போர் விமானம் மிகவும் மலிவு விலையான 4 மில்லியன் டாலருக்கு இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக நகைச்சுவையாக ஒரு பதிவு வைரலானது.

"ஆட்டோமேடிக் பார்க்கிங், புத்தம் புதிய டயர்கள், புதிய பேட்டரி மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை அழிக்க ஆட்டோமேடிக் துப்பாக்கி" போன்ற அம்சங்கள் இருப்பதாக அதில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதிய காலம் இருந்துவிட்டதால் அந்த போர் விமானத்திற்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மற்றொருவர் இந்தியா வாடகை வசூலிக்க வேண்டும் எனவும், கோஹினூர் வைரம் பொருத்தமான கட்டணமாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

F-35B போர் விமானம் (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, F-35B போர் விமானம் (சித்தரிப்புப் படம்)

புதன்கிழமை கேரள அரசின் சுற்றுலா துறையும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வேடிக்கைப் பதிவுகளில் பங்கெடுத்தது. விமானத்தின் புகைப்படத்துடன், "கேரளா, நீங்கள் வெளியேறவே விரும்பாத இடம்" என சுற்றுலா துறை பதிவிட்டது.

அந்தப் பதிவில் தென்னை மரங்களின் பின்னணியில் எஃப் 35பி போர் விமானம் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

அதன் இயற்கையான அழகுக்காக சுற்றுலா விளம்பரக் கையேடுகளில் "கடவுளின் தேசம்" என விவரிக்கப்படும் மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகளைப் போலவே, இந்தப் போர் விமானமும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை எனக் கூறும் வகையிலான வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் ஓவ்வொரு நாளும் , எஃப் 35பி மற்றும் ராயல் கடற்படையின் பிம்பத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்கிறார் பாட்டீல். "நகைச்சுவை துணுக்குகள், மீம்கள், வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் போன்றவை பிரிட்டன் ராயல் கடற்படையின் நற்பெயரைப் பாதிக்கின்றன. எவ்வளவு காலம் போர் விமானம் சிக்கிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தவறான தகவல்கள் பரவும்."

முதலில் நினைத்ததைவிட தொழில்நுட்ப பிரச்னைகள் மேலும் மோசமானவையாகத் தெரிவதாக அவர் கூறுகிறார். ஆனால் பெரும்பாலான ராணுவங்கள் "மிகவும் மோசமான சூழ்நிலைகளுக்கு" தயார்படுத்திக் கொள்வதாகவும், போர் விமானம் வெளிநாட்டு மண்ணில் சிக்கிக்கொள்வது அத்தகைய ஒரு சூழ்நிலை எனவும் அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரும்பாலான ராணுவங்கள் ஒரு நிலையான செயல்பாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார்கள். அப்படியிருக்க, ராயல் கடற்படையிடம் அப்படிப்பட்ட திட்டம் இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

அதோடு, இதைப் பற்றிய தோற்றம் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறும் அவர், "இதைப் போன்ற ஒரு சம்பவம் எதிரி மண்ணில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இத்தனை நேரம் எடுத்துக் கொள்வார்களா? ஒரு தொழில்முறை கடற்படைக்கு இது மிக மோசமான மக்கள் தொடர்பாக இருக்கிறது" என்றார்.

- திருவனந்தபுரத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து அளித்தவர் அஷரஃப் பத்தனா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj9vzv10zdzo

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியுள்ள பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்படத் தயார் - என்ன நடந்தது?

F-35B விமானம்

படக்குறிப்பு,அவசரநிலையைத் தொடர்ந்து F-35B விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கட்டுரை தகவல்

  • கீதா பாண்டே

  • அஷ்ரஃப் படன்ன

  • பிபிசி செய்திகள்

  • திருவனந்தபுரம், கேரளா

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் செவ்வாய்க்கிழமையன்று புறப்பட உள்ளது.

F-35பி எனும் அந்த போர் விமானம், "இன்று ஹேங்கரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும். பிறகு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் தெரிவித்த விமான நிலைய செய்தித் தொடர்பாளர், அதுகுறித்து, "எங்களிடம் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இல்லை"என்று கூறினார்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கித் தவிக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஜெட் விமானம்

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது.

அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.

தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

திங்கட்கிழமை காலை அதனை ஹேங்கரில் இருந்து வெளியே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, அது புறப்படும் சரியான நேரம் "இன்னும் தெரிவிக்கப்படவில்லை, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும், அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உபகரணங்களை திருப்பி கொண்டு செல்லும் விமானம் எப்போது வரும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது.

திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன.

"கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர்.

மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியிருந்த பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்பட்டது - என்ன நடந்தது?

F-35B விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • கீதா பாண்டே, அஷ்ரஃப் படன்னா

  • பிபிசி செய்திகள்

  • திருவனந்தபுரம், கேரளா

  • 21 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஜெட் விமானம்

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது.

அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.

தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

செவ்வாய்க் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ள அந்த விமானத்திற்கு, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது.

திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன.

"கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர்.

மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.