Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 100 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

சில நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டது. 8 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் யாழ்ப்பாண இராச்சியம் செழித்தது. இந்தக் காலம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால மன்னர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் இந்தப் பெயர் பயன்பாட்டுக்கு வந்தது.

இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் விரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான். அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார். இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன.

குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் [a Roman, a Greek, two Chinese, four Italians, a Moor from Tangier, a Portuguese soldier-historian, two Dutchmen , a German, a French Count, a Dutch admiral and five Britons.] ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம். .

இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும்,ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். [Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Srilanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations]. மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன்.

முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார்.

அத்தியாயம் 37: ஜேத தீசனுடைய மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் இருபத்தேழு வருட காலம் ஆட்சி செய்தான். அவனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து சங்கமித்தா தேரர் இங்கு வந்தார். "மகா விகாரை பிக்குகள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இவ்வாறு கூறி சங்கமித்தா தேரர், அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டான். இதன் விளைவாக, அரசன் ‘மகா விகாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும் அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப்படும்’ என்று கட்டளை பிறப்பித்தான். மகா விகாரையில் வசித்த பிக்குகளுக்கு இதனால் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அவர்கள் அதை விட்டுவிட்டு மலை நாட்டுக்கும் உருகுணைவுக்கும் [Malaya and Rohana] சென்று விட்டனர்.

இதனால் மகாவிகாரை ஒன்பது ஆண்டுகள் பாழடைந்தது. உரிமையாளர் இல்லாத அனைத்து நிலங்களும் ராஜாவுக்குச் சொந்தமானது என்றும் தேரர் மன்னரை நம்ப வைத்தார். பின்னர், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், இதே போன்ற அரச நில ஆணை இயற்றப்பட்டது, இது, அரசாங்கத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகங்களை, சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்ற உதவியது [Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese.].

மன்னன் மற்றும் தேரர் சங்கமித்தவுக்கு நெருக்கமான சோனா [Sona] என்ற அமைச்சர் இருந்தார். சோனாவும் பல பிக்குகளும் லோகபாசாதா கட்டிடத்தை [Lohapasada building] இடித்து, இடிக்கப்பட்ட பொருட்களை அபயகிரி விகாரைக்கு எடுத்துச் சென்று அபயகிரி விகாரையில் புதிய கட்டிடங்களை அமைத்தனர். என்றாலும் மகாவிகாரை இடிப்பை ஏற்காத மற்றொரு மந்திரி மேகவர்ண அபயனும் [Meghavannabhaya] அங்கு இருந்தார்.

Part: 100 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’.

In Silapathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai, verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The English abstract of the above verses are given below:

‘When he heard the cruel deed of the king of the Pandyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandyan laid down his life. For it is the departing soul of the King, that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny.

‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’.’

The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with above quoted Mahavamsa verse 38 – 133.

Chapter 37: After Jetthatissa’s death, his younger brother Mahasena came to power, and ruled for twenty-seven years. Thera Samghamitta came from the further coast to consecrate him. This Thera was able to convince the new king Mahasena that the Mahavihara Bhikkhus do not teach the true Vinaya. The king, in consequence, issued an order proscribing anyone from giving food to the bhikkhus in the Mahavihara. The bhikkhus of the Mahavihara left for Malaya and Rohana. The Mahavihara thus became desolate for nine years. The thera also convinced the king that all the ownerless land belong to the king. Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese. There was a minister, Sona, close to the king and the Thera Samghamitta. Sona and many bhikkhus destroyed the Lohapasada building, and took the demolished materials to the Abhayagiri-Vihara to put up new buildings in Abhayagiri-Vihara. There was another minister Meghavannabhaya who did not approve the demolition of the Mahavihara.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 101 தொடரும் / Will follow

துளி/DROP: 2028 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100

https://www.facebook.com/groups/978753388866632/posts/33743366815311866/?

  • Replies 130
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 101

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 101 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

மேகவர்ண அபயன் ஒரு கிளர்ச்சியாளராக மாறி, மலைநாட்டுக்குச் [Malaya] சென்று ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கினார். பின், அவன் மன்னனுடன் சண்டையிடத் திரும்பி வந்து ஒரு முகாமை அமைத்தான். மன்னன் மகாசேனனும் சண்டையிடத் தயாராக வந்தான். இருப்பினும் இருவரும் சமரசம் ஆனார்கள், மேகவர்ண அபயன் மகாவிகாரை இடிப்பை ஏற்கவில்லை என்று மன்னனிடம் கூறினான்.

மகாவிகாரையை மீண்டும் கட்டுவதாக மன்னன் உறுதியளித்தான். மன்னனின் மனைவிகளில் ஒருவர் தேரர் சங்கமித்தா மற்றும் சோனாவை ஒரு தொழிலாளியின் உதவியுடன் கொன்றாள். மகாவிகாரை மீண்டும் கட்டப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிக்குகள் அங்கு குடியேறினர். பின்னர் மன்னர் பிராமணக் கடவுளின் கோயில்களை அழித்தார். முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது.

எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இராச குமாரியையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும்.

சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ?

உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் இலங்கை வரலாற்றுப் பதிவுகளின் அல்லது நாளாகமம்களின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது

Part: 101 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

He became a rebel and went to Malaya to raise a rebel army. He returned to fight the king and pitched a camp. The king Mahasena too came ready to fight. Both however became reconciled, and Meghavannabhaya told the king that he did not approve the demolition of the Mahavihara. The king promised to rebuild the Mahavihara. One of the king’s wives killed the Thera Samghamitta and Sona with the help of a labourer. Mahavihara was rebuilt and bhikkhus came to dwell there after nine years. The king then destroyed the brahmanical temples of god. The foot note 5 on verse 45 says, quote” According to the Tika the Gokanna Vihara is situated on the coast of the Eastern Sea, the two others Viharas in Rohana. The Tika then adds ……. everywhere in the island of Lanka he established the doctrine of Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth”. He destroyed the temples in Trincomalee, in the Brahamanical village Kalanda (the present day Kanthalai). The king Mahasena destroyed temples of Lord Siva in the middle of the fourth century A.D. The Colas were not at all a powerful kingdom at this time, probably not even a small vassalage. The historians of Tamil Nadu used to say this period as the dark period in the history of Tamil Nadu. Cola and Pandya kingdoms were won over by Kalapers who were not Tamils. They ruled approximately from 300 A. D. to 600 A. D. They favoured Buddhism and Jainism. The Pali language was predominant over Tamil and Sanskrit.

Buddhism lost its following among the Sinhalese, perhaps due to hard times. They remained Buddhists, but might not have spare money or time to spend on ecclesiastical matter. People in the process forgot about the Dipavamsa and the Mahavamsa. Very few copies of these remained, but forgotten, in very few monasteries. The British Colonial officer in Ceylon, George Turnour, happened to receive a copy of the Mahavamsa from a monk. He translated and published it in 1837. Turnour thus brought the Mahavamsa to the attention of the European scholars. Turnour considered the Mahavamsa his baby and considered it a genuine history of Lanka. Many Europeans followed Turnour.

While the British Colonial officers in India Princep, Cunningam etc brought the hidden or the deliberately forgotten Buddhism, the India’s gift to the world, and the forgotten Buddhist Emperor Asoka, to the entire world.

We do not have any issue with the pious Buddhist people believing in it for their religious purpose. We only reject the historical legitimacy of it as advanced by the politicians for their political advancement at the cost of Tamils. North Indian Hindus genuinely believe that Hanuman and his monkey brigade built the Adams Bridge connecting Rameswaram and Talai-Mannar. They also seriously believe that Rama won the war over Rawana. They could, therefore, say Lanka belong to them by conquest. Would Sinhalese concede their request? They believe that Rama returned home after his victory over Rawana and ruled for eleven thousand years. Assuming that the war between Rama and Rawana took place before the Buddha, then the war must have taken place about fourteen to fifteen thousand years ago. Rameswaram and Talai-Mannar was connected by land at that time, and there was no need for a bridge. The last ice age ended about seven to ten thousand years ago, and melting of the accumulated snow to mountain heights raised the sea level to separate India and Ceylon.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 102 தொடரும் / Will follow

பகுதி Part: 101 

https://www.facebook.com/groups/978753388866632/posts/33759906486991232/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 102

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 102 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்

பி. குணசேகரனால் [B. Gunasekara] சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு இலங்கை அரசு அச்சகத்தால் வெளியிடப்பட்டது. முன்னுரையில், இது மகாவம்சத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இராசாவலிய தீபவம்சத்தை விட ஏன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தீபவம்சம் மற்ற நாளாகமம்கள் போல் புத்தசமயத்தை முன்னிலை படுத்தினாலும், தமிழருக்கு எதிராக இனத்துவசம் பெரிதாக இல்லை. அதே நேரம் இராசாவலிய, அதில் முன்னிலையில் நிற்கிறது! மேலும் முன்னுரையின்படி, மூல ஆசிரியர் யார் என்றோ? மற்றும் தொகுக்கப்பட்ட தேதி எதுவென்றோ தெரியவில்லை. எழுத்து பாணியின் அடிப்படையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கலாம் என்றும், மொழிபெயர்ப்பாளரின்படி ஆசிரியர்(கள்) சிங்கள இலக்கணத்தில் சரளமாக இல்லை என்றும் ஊகிக்க முடியும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் [Wimaladharma Surya 2] எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மிக சமீபத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதன் ஓலை கையெழுத்துப் பிரதிகள் அதிகம் இருக்கவில்லை. அதிலும் கிடைத்த அனைத்து ஓலை கையெழுத்துப் பிரதிகளிலும், இரண்டு மட்டுமே நல்ல தரமானதாக இருந்தது. மேலும் அவை இரண்டும் தனியார் மூலங்களிலிருந்து [private sources], அதாவது தனியாரிடம் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த வரலாறு விஜயன் முதல் இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையிலான மன்னர்களின் ஆட்சிக் காலங்களை உள்ளடக்கியது என்றாலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் உள்ள விஜயன் முதல் மகாசேனா வரையிலான ஆட்சிக் காலங்களுக்கு மட்டுமே நமது கவனத்தை இங்கு மட்டுப்படுத்தவுள்ளோம்.

நாம் மேலே கூறியவாறு கவனத்தில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் சோரநாகனும் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] ஆட்சி செய்தான் என்றாலும், அவனைப்பற்றிய விவரங்ககள் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஓரளவு நல்ல கையெழுத்துப் பிரதிகளிலும் வேறுபடுகின்றன என கூறப்பட்டிருப்பது [Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator.], அவ்வாற்றின் உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதுடன், மேலும் மொழிபெயர்ப்பாளரின் கூற்றுப்படி, இராசவலிய என்பது சிங்கள மன்னர்களின் வரலாற்று விவரம் இதுவென மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது [It says on front page of the translation that: The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings]. விஜயனும் அவரது துணைவியும் இந்தியாவிலிருந்து வந்தனர். அவர்கள் தங்கள் தங்கள் மொழிகளைப் பேசியிருப்பார்கள். அதேபோல அடுத்த மன்னன் பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவரது துணைவியும் கூட இந்தியாவிலிருந்து தான் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கால கட்டத்தில் சிங்களம் என்ற மொழி சொற்பவளவாவது ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் தமிழ் பூரணமாக வளர்ந்த சங்க இலக்கியங்களுடன் இருக்கிறது, அப்படியே பாளி, சமஸ்கிருத மொழிகளும் ஆகும். சிங்கள மொழி திடீரென வளர்ந்திருக்க முடியுமா? [Could the Sinhalese language have developed on the fly?] இந்தக் கேள்வி சிங்கள மொழியை இழிவுபடுத்துவதற்காக அல்ல, ஆனால், ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல ஆண்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இந்தக் கேள்வி மொழி அல்லது மக்களைப் பற்றியது அல்ல, ஆனால் தீர்க்கதரிசனங்கள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல்கள், அசல் மக்களை உயிரினங்களைப் போன்ற பேய்களாக இழிவுபடுத்துதல், முறைகேடான திருமணங்கள் மற்றும் பொருத்தமற்ற பிறப்புக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையை எழுதியவர்கள் பற்றியது மட்டுமே!.

என்றாலும் வளர்ச்சி அடையாத, ஆரம்பகால சிங்களம் என கருதப்படும், கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி கல்வெட்டுக்குள் கண்டு பிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அதில் காணப்படும் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தை, எஸ். பரணவிதான போன்ற அறிஞர்கள் "பருமக" என்பது ஆரம்பகால இலங்கை சமூகத்தில் ஆளும் உயரடுக்கினருடன் [ruling elites] தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரியப் பட்டமாக அடையாளம் கண்டு, அதாவது தலைவரைக் ["chief" or "leader"] குறிக்கும் Sanskrit "Pramukha" (प्रमुख) and Pali "Pamukha" தொடர்புபடுத்தி, எனவே அதை, ஆரம்பகால பிராமியில் எழுதப்பட்ட, பழைய சிங்களம் என முடிவு எடுத்தனர். ஆனால் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், இதன் முடிவு வேறாக அமையலாம்?

உதாரணமாக, இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம், தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார்கள். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும், பண்டைய காலத்தில், ஆரம்பகால இந்தோ-ஆரியர்கள் (கிமு 1500 வாக்கில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்) முதன்மையாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்தவர்களாக இருந்தனர், நிலம் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பண்டைய சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300) கடல்சார் வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசுகளை விவரிப்பதுடன், தமிழ் மாலுமிகள் ரோம், எகிப்து, கிரீஸ், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் [Tamil seafarers traded with Rome, Egypt, Greece, China, and Southeast Asia.] வர்த்தகம் செய்தது பண்டைய வரலாற்று சான்றுகள் ஆகும். மேலும் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள், அவர்களின் நீண்ட தூர கடல் பயணங்களை உறுதிப்படுத்துகின்றன. எனவே, 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன்", யார் என்று வரலாற்று சான்றுகளுடன் பார்த்தால், கட்டாயம் அவன் ஒரு தமிழனே! ஆனால், பரணவிதான இந்த மொழியை ஒரு பிராகிருத பேச்சுவழக்காக வகைப்படுத்தி, இது பின்னர் உள்ளூர் மாற்றங்கள் மற்றும் திராவிட தாக்கங்கள் மூலம் சிங்கள மொழியாக பரிணமித்தது என முடிவுக்கு வந்து, எனவே இது ஆரம்பகால , வளர்ச்சியடையாத சிங்கள மொழியின் ஒரு கூறாக முடிவெடுத்தார் என்பதே உண்மை. அவ்வளவு தான்! [Paranavitana classified the language of early Sri Lankan inscriptions as a Prakrit dialect, which later evolved into Sinhala through local changes and Dravidian influences. However, there are some key points that need clarification to avoid misinterpretation.] சிங்களத்தின் முன்னோடி என்று அவர் கூறியது, அவை சிங்களத்தின் வேர்களைக் காட்டுகின்றன என்ற கருத்தில் மட்டுமே, ஆனால் மொழியை அல்ல. [A predecessor of Sinhala, meaning they show the roots of Sinhala but not the language itself.] இவ்வாறு, அவர் அவற்றை சிங்கள மொழியியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார், ஆனால் இன்று நாம் புரிந்துகொள்கிறபடி சிங்களம் அல்ல என்பதே உண்மை என்று எண்ணுகிறேன்.

Part: 102 / APPENDIX – "Summary of Rajavaliya"

The Ceylon Government Printer first published the translation of the Rajavaliya from Sinhalese to English by B. Gunasekara in 1900. It is claimed in the preface that it ranked next to Mahavamsa in importance. Why the Rajavaliya has greater importance than the Dipavamsa is not stated. Author and the date of compilation are not known as per the preface. It could be inferred that, based on the style of writing, there may more than one author, and the author(s) are not fluent in the Sinhalese grammar as per the translator. List of sovereigns from Vijaya to Wimaladharma Surya 2 is given in this, until the end of 17th century. The author or authors must then be historically of very recent origin. There were not many Ola manuscripts of this existed and only two are considered of good quality of all the Ola manuscripts that were available, and both came from private sources. Though this chronicle is covering the reigns of kings from Vijaya to Wimaladharma Surya 2, we will limit our focus to the reigns form Vijaya to Mahasena: the same period as in both the Dipavamsa and the Mahavamsa. Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator. It says on front page of the translation that, The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings. Vijaya and his consort came from India and they would have spoken their languages, and therefore Vijaya could not be called a Sinhalese king. The next king Panduvasudev and his consort came from India. Could the Sinhalese language have developed on the fly? This query is not to denigrate the Sinhala language, and I am not qualified to comment on that. Development of a language is a continuous process taking years. The query is not about the language or the people, but about those who wrote the story involving prophesies, miraculous happenings, extraordinary coincidences, denigrating the original inhabitants as demons like creatures, many incestuous marriages, and inappropriate birth stories.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 103 தொடரும் / Will follow

பகுதி Part: 102

https://www.facebook.com/groups/978753388866632/posts/33774745782173969/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 103 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்

'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தைக் குறிக்கும் இந்தக் கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், பண்டைய இலங்கையில் பேசப்படும் ஒரு தனித்துவமான பிராகிருத பேச்சு வழக்கைக் குறிக்கின்றன என்று பரணவிதான கூறினார். [He stated that these inscriptions were written in Brahmi script but represented a distinct Prakrit dialect spoken in ancient Sri Lanka.] இந்த எழுத்துமுறை சிங்கள மொழிக்கு மட்டும் தனித்துவமானது அல்ல - அது அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அதே பிராமி எழுத்துமுறையாகும். பின்னர், இந்த எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக பரிணமித்தது, ஆனால் அது மிகவும் பின்னர் (கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டு வாக்கில்) நடந்தது. எனவே, இவை இலங்கையில் உள்ள ஆரம்பகால கல்வெட்டுகள் என்றாலும், மேலே கூறிய காரணங்களால், அவை இன்னும் சிங்கள எழுத்துக்களில் எழுதப்படவில்லை - பிராமியில் மட்டுமே என்பதே வரலாற்று உண்மை ஆகும்!. அதாவது அவையை சிங்கள கல்வெட்டுக்கள் என்று எந்த அடிப்படையிலும் கூற முடியாது?

இன்னும் ஒன்றையும் நான் கட்டாயம் சொல்லவேண்டும். அதாவது தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது.

கி.பி முதல் மில்லினியத்தில் சிங்கள இன அடையாளம் இன்னும் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. [These all suggests that the Sinhala ethnic identity was still forming during the first millennium CE.] எனவே, ஒற்றை "சிங்கள" அடையாளத்திற்குப் பதிலாக, ஆரம்பகால இலங்கையில் பல்வேறு இந்தோ-ஆரிய மற்றும் திராவிடக் குழுக்கள் இணைந்து வாழ்ந்திருக்கலாம்? [Instead of a single "Sinhala" identity, there may have been various Indo-Aryan and Dravidian groups coexisting in early Sri Lanka.]

இராசவலியவில் முதல் பதின்மூன்று பக்கங்கள் இலங்கையின் மனித வரலாற்றுக்கு நேரடி தொடர்பு இல்லாததால், அவையை நாம் புறக்கணிக்கலாம். இது பக்கம் 14 இல் இருந்து இலங்கையைப் பற்றியது ஆகும்.

சுத்தோதனா (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னரான இவருக்கு அமிதோதனா [Amitodana] மற்றும் புஷ்போதனா [Pushpodana ] என்ற இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர் என இராசவலிய கூறும் அதே சமயத்தில், சுத்தோதனா மன்னருக்கு நான்கு இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர் என மகாவம்சம் கூறுகிறது. 2-20 இன் படி, சகோதரர்களின் பெயர்கள்: தோதோதனா, சக்கோதனா, சுக்கோதனா, அமிதோதனா மற்றும் இரு சகோரிகள், அ மி தா, பமிதா ஆகும். [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana. sisters - Amita and Pamita.]. தீபவம்சம் கூட, , 3 - 44 முதல் 46 வரை, அதே பெயர்களைக் கொடுக்கின்றன. அத்துடன் இராசவலியத்தில் உள்ள புஷ்போதனா மகாவம்சம் மற்றும் தீபவம்சம் இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் இராசவலியத்தில் தோதோதனா, சக்கோதனா மற்றும் சுக்கோதனா இல்லாதது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முரண்படுகிறது. பிற்கால புத்தரான சித்தார்த்தரின் மாமாக்கள் பற்றிய இந்த முரண்பாடுகளைக் இது கொண்டு இருப்பதால், கதையின் முழு அல்லது பகுதியும் ஒரு புனையப்பட்ட கதையாக இருக்க வேண்டும்?

இந்திய வரலாற்று ஆதாரங்கள் (அசோகரின் ஆணைகள், ஆரம்பகால பௌத்த சூத்திரங்கள் அல்லது ஜாதகக் கதைகள் போன்றவை / such as Ashokan edicts, early Buddhist sutras, or Jataka tales) சுத்தோதனரின் உடன்பிறப்புகள் பற்றியோ அல்லது அவர்களின் சந்ததியினர் ஒரு சிலர் இலங்கைக்கு குடிபெயர்ந்தது பற்றியோ அதாவது, புத்தரின் தம்பி, அமிதோதனாவின் [Amitodana] பேத்தி, கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, இலங்கைக்கு வந்து அரசன் பண்டுவாசுதேவாவை திருமணம் செய்ததைப் பற்றியோ, அல்லது அமிதோதனாவின் பேரன்களும், சகோதரியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து குடியேறியது பற்றியோ குறிப்பிடவில்லை. மேலும், ஆரம்பகால பௌத்த நூல்கள் புத்தரின் உடனடி குடும்பத்தை (பெற்றோர், மனைவி, மகன் மற்றும் உறவினர் ஆனந்தா) மையமாகக் கொண்டு உள்ளத்துடன், அவரின் தந்தையின் சகோதரங்கள் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்கள் பற்றியோ ஒன்றுமே விவாதிக்கவில்லை. உதாரணமாக, இந்த விவரங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், கட்டாயம் ஆரம்பகால இந்திய பௌத்த நூல்களில் இந்த விபரங்களை எதிர்பார்க்கலாம், ஏனென்றால் அவர்கள் பிறந்து வாழ்ந்தது இந்தியாவே, இலங்கை அல்ல. ஆனால் அவை ஒன்றுமே அங்கு இல்லை. எனவே, இலங்கை நூல்களில் மட்டுமே காணப்படும் விரிவான குடும்ப தொடர்புகள் ஆரம்பகால பௌத்த மரபின் ஒரு பகுதியாக இல்லாமல், பிற்கால சேர்த்தல்களாகத் தோன்றுகின்றன.

Part: 103 / APPENDIX – "Summary of Rajavaliya"

The first thirteen pages may be ignored as having no direct relevance to the human history of Lanka. It is about Lanka from the page 14 only. King Suddhodana had two younger brothers called Amitodana and Pushpodana (P14) whereas King Suddhodana had four younger brothers and two sisters as per the Mahavamsa, 2-20:- Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana are the younger brothers. The Dipavamsa, 3 – 44 to 46, also give the same names. Pushpodana in the Rajavaliya is not mentioned in both the Mahavamsa and the Dipavamsa. Similarly the absence of Dhotodana, Sakkodana and Sukkodana in the Rajavaliya is also in conflict with other two chronicles. The whole or part of the story must be an invented story to have these discrepancies about the uncles of Siddhartha, the later Buddha.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 104 தொடரும் / Will follow

துளி/DROP: 2034 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103

https://www.facebook.com/groups/978753388866632/posts/33792470820401465/?

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 104 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்

இலங்கையின் அரச பரம்பரையை மகிமைப்படுத்தவும், அதை பௌத்தத்துடன் இணைக்கவும் மகாவம்சம் (கி.பி. 5 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! அது மட்டும் அல்ல, அதுவே மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிப்பது [“ that this chapter is compiled for the serene joy and emotion of the pious”], அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். இதன் மூலம், மகாவம்சம் இலங்கை மன்னர்களை புத்தரின் இரத்த உறவினர்களாக சட்டப்பூர்வமாக்கியது. எனவே, புத்தரின் சொந்த உறவினர்கள் அங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், இலங்கை புத்த மதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்ற கூற்றையும் இது வலுப்படுத்தியது. எனவே, புத்தரின் குடும்பத்தைப் பற்றிய மகாவம்சத்தின் பதிப்பு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, புத்த மதத்தின் சரியான பாதுகாவலர் என்ற இலங்கையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக, கற்பனையாக எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலை ஆகிறது! . என்றாலும் இதனால், புத்தரின் நேரடி குடும்பம் இலங்கையில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது என்ற கருத்து வலுப்படுத்தப்படுகிறது. அது மட்டும் அல்ல, பின்னர், மற்றொரு, புத்தரின் தந்தையின் இளைய சகோதரரின் பேரன், திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி], இலங்கை இளவரசி சித்ராவை [அல்லது உன்மாதசித்திராவை] மணந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் புத்தருக்கும் இலங்கையின் அரச குடும்பத்திற்கும் இடையிலான வம்ச தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. இன்னும் ஒன்றையும் மறக்கவேண்டாம், புத்தரின் மூன்று முறை இலங்கை விஜயம்? கற்பனைகளுக்கு எல்லை உண்டோ ? என்ற கேள்விக்கு இவை சரியான பதில்கள் ஆகின்றன! எனவே, இந்த முழு கதைக்களமும் புத்தருக்கும் இலங்கை மன்னர்களுக்கும் இடையே ஒரு இரத்த வம்ச தொடர்பை நிறுவுவதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கை முடியாட்சியின் சட்டபூர்வமான தன்மையையும், புத்த மதத்தின் பாதுகாவலர் என்ற அதன் உரிமையையும் மேம்படுத்துவதே குறிக்கோளாக இங்கு இருக்கிறது எனலாம்?

வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, அதன் தலையை வங்க நாட்டு அரசனுக்கு கொடுத்தான். அதன் பின், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு புதிய இராச்சியத்தை உருவாக்கி, அந்த லாலா நாட்டுக்கு [Lala Desa / Lata region, Gujarat / Maharashtra area of India] அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து பதினாறு இரட்டையர்களைப் [32 மகன்களைப்] பெற்றெடுத்தான். விஜயன் எல்லாவற்றிலும் மூத்தவன். அவர் ஒரு வியாழக்கிழமை பிறந்தார். [ஏழு நாள் வாரம் பண்டைய கலாச்சாரங்களில் வேர்களைக் கொண்டுள்ளது, பாபிலோனிய வானியல் மற்றும் சந்திர சுழற்சிகளைக் கவனிப்பதன் மூலம் இதற்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன] ஆனால் இந்த வியாழக்கிழமை என்ற தகவல் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. அங்கே அதே நாட்டில், அதே நாளில் எழுநூறு ஆண்கள் பிறந்தனர் [Be it known that, on the day of Vijaya’s birth, 700 males were born in the same city]. விஜயனின் மோசமான நடத்தை காரணமாக, அவனின் தந்தையுமான மன்னர், இளவரசர் மீது கோபமடைந்தார்; மேலும், மூன்று உலகங்களுக்கும் ஆசிரியரான, நமது புத்தர் இறந்த ஏழாவது நாளில், இளவரசர் விஜயனும், அவனது பிறந்தநாளில் பிறந்த, விஜயனின் உதவியாளர்களான, எழுநூறு போர்வீரர்களும், ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, கடலில் அலைய விட்டனர்.

அவர்கள் தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota or Tammannava, Tambapanni-tota, தம்மன்னா-தோட்டா என்பது "தம்மன்னா / தம்பபன்னி துறைமுகம்" என்று பொருள்படும், இது விஜயன் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த கடலோரப் பகுதியைக் குறிக்கிறது] தரையிறங்கினர். இந்த இடம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில், இன்றைய மன்னார் அல்லது புத்தளத்தைச் சுற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், விஜயனும் அவனது தோழர்களும் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த அதே நாளில், அதாவது புத்தர் மரணித்த அதே நாளில், இலங்கையில் தரையிறங்கியதாக தீபவம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. என்றாலும் புத்தர் இறந்த பல நாட்களுக்குப் பிறகு இராசவலியவின் படி அவர்கள் இலங்கையில் தரையிறங்கியிருக்க வேண்டும். எனவே இது மற்ற இரண்டு நாளாகமங்களுடனும் முரண்படுகிறது. விஜயன் மோசமான நடத்தைகளைக் கொண்டு இருந்தாலும், அவன், மறுபிறப்பு இல்லாத ஒரு மரணம் அடைந்து, நேராக சொர்க்கம் சென்றான்? நம்பினால் நம்புங்கள்? சொர்க்கம் எங்கே நானும் தேடுகிறேன்?

மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகிய இரண்டு வரலாற்று நூல்களுக்கு மாறாக, இராசவலியவில் விஜயன் மற்றும் அவரது தோழர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இராசவலியவின் படி விஜயனும் அவரது தோழர்களும் தம்மண்ண-தோட்டாவிற்கு நேரடியாக வந்தனர். இருப்பினும், தீபவம்சத்தின்படி, அவர்கள் முதலில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள இன்றைய சூரத் என்று நம்பப்படும் சுபாராவை [Suppara, believed to be the present day Surat in Gujarat, India] அடைந்து, அங்கேயும் தவறாக நடந்து கொண்டு, தப்பி ஓடி, பின்னர் அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள இன்றைய பருச் என்று நம்பப்படும் பாருகாச்சாவை [Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra] அடைந்து, தங்கள் தீய நடத்தையை மீண்டும் செய்தனர். இருப்பினும், மகாவம்சத்தின்படி, அவர்கள் பருகாச்சாவில் தரையிறங்காமல் சுப்பராகாவிலிருந்து தம்பபன்னியை அடைந்தனர். பாருகாச்சா மற்றும் சுபாரா இரண்டும் இந்தியாவின் மேற்கு கடல் கரையில் உள்ள பண்டைய வர்த்தக கடல் துறைமுகங்கள் என்பதை இங்கே கவனிக்கலாம். இராசவலிய இராவணனின் போரைப் பற்றி குறிப்பிடுகிறது, ஆனால் மற்ற இரண்டு வரலாற்று நூல்களும் இராமன் - இராவணன் போரைப் [Rama-Ravana war] பற்றி குறிப்பிடவில்லை. தீபவம்சத்தில் கிரிதீபா [Giridipa] இராசவலியத்தில் யக்-கிரி [Yak-giri] என்று விவரிக்கப்பட்டுள்ளது. இராசவலியத்தின்படி புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார். முதல் வருகை அவர் நிர்வாணம் [Nirvana] அடைந்த ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு. இரண்டாவது வருகை அவர் நிர்வாணம் அடைந்த ஆறாவது ஆண்டில். ஆனால், நிர்வாணம் அடைந்த ஐந்தாவது ஆண்டில் இது நடந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மூன்றாவது வருகை நிர்வாணம் அடைந்த ஒன்பதாம் ஆண்டு நிறைவில் நடந்துள்ளது. ஆனால், தீபவம்சம், 2 - 52, இந்த வருகை எட்டாம் ஆண்டில் நடந்ததாக கூறுகிறது. ஆகவே இங்கும் நாளாகமம்களுக்கு [chronicles] இடையில் வேறுபாடு காண்கிறோம்?

Part: 104 / APPENDIX – "Summary of Rajavaliya"

The king of Wangu married the daughter of Kalingu king, and a daughter was born to them. The daughter when grown up united with a lion and gave birth to a twin, a son, Sinhaba, and a daughter, Sinhawalli. Sinhaba killed the father lion and presented the head of the killed lion to the king of Wangu country. Sinhaba created a new kingdom and married his sister, and she gave birth to sixteen twins. Vijaya was the eldest of all. He was born on a Thursday, and this information is not in the other two chronicles. There were born seven hundred males at the same time in the same country. Vijaya and his seven hundred warriors were forced to drift, on the seventh day after the death of the Buddha, in the sea because of their bad behavior, and they landed in Tammanna-tota. The Dipavamsa and the Mahavamsa say Vijaya and his companions landed in Lanka on the very same day the Buddha attained Mahaparinirvana, the death of the Buddha. They must have therefore landed in Lanka as per the Rajavaliya many days after the death of the Buddha. This is in conflict with the other two chronicles. Vijaya died with no possibility of rebirth; went to heaven.

There is no mention of the wives and the children of Vijaya and his companions in the Rajavaliya, contrary to the other two chronicles, the Mahavamsa and the Dipavamsa. Vijaya and the companions came direct to Tammanna-tota as per the Rajavaliya. However, as per the Dipavamsa, they first reached Suppara, believed to be the present day Surat in Gujarat, India, misbehaved there too, and made to flee. Then they reached Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra, and repeated their evil behavior. However, as per Mahavamsa, they reached Tambapanni from Supparaka without landing at Bharukaccha. It may be noted here that both Bharukaccha and Supparaka are ancient trading seaports on the western seaboard of India. The Rajavaliya mentions of the war of Ravenna, but the other two chronicles do not mention about Rama-Ravenna war. Giridipa in the Dipavamsa is described in the Rajavaliya as Yak-giri.

The Buddha visited Lanka, as per the Rajavaliya too, three times. First visit is on the completion of the nine months of his attaining Nirvana. The second visit is in the sixth year after he attained Nirvana. The Mahavamsa says it took place on the fifth year of Buddhahood. The third visit is on the completion of the ninth year after attaining Nirvana. The Dipavamsa, 2 – 52, says this visit took place in the eight year.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 105 தொடரும் / Will follow

துளி/DROP: 2036 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104

https://www.facebook.com/groups/978753388866632/posts/33810221221959758/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 105

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 105 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்

புத்தர் தனது மரணப் படுக்கையில், பக்கம் 17 இல், 'எனது மதம் ஐயாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு உயிர்ச்சக்தி கொண்டது' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. 1938 இல் மாநில சபை [State Council] விவாதம் ஒன்றில், அப்போது விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்க [D. S. Senanayake] இதை மேற்கோள் காட்டி, 'நாங்கள் ஒரே இரத்தம் ஒரே தேசம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். புத்தர் தனது மதம் ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார். அதாவது, மதத்தின் பாதுகாவலர்களாகிய நாமும் நீண்ட காலம் நீடிப்போம்' [’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ ] என்று கூறினார். எவராவது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று கூறினாலும், அப்படி கூறுபவர்கள் இயல்பிலேயே பௌத்தர் அல்ல என்பதே உண்மை. ஏனென்றால், புத்தர் இந்த வகையான தன்னலம் கொண்ட மனநிலையை ஒருபோதும் மன்னித்திருக்க மாட்டார். அவரது தத்துவம் உலகளாவியது [The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal.].

உள்ளூர் மனிதரல்லாத, ஆனால் பெண்ணான குவேனிக்கு [Kuveni, a local non-human lady] மூன்று மார்பகங்கள் இருந்தன, விஜயன் இலங்கையில் தரையிறங்கிய போது, அவனைக் கண்டதும், அவளுடைய நடு மார்பகம் மறைந்துவிட்டன. அப்போது அவள் உடனே தன் கணவர் வந்திருப்பதை அறிந்தாள். ஒரு நாய்க் குட்டியின் வடிவத்தில் வந்து விஜயனின் கால்களை முத்தமிட்டு வெளியேறினாள். எனவே, நாய்களை வீட்டு பிராணியாக வளர்க்கும் மனிதர்கள் அங்கு இருக்கலாம் என்று நினைத்து விஜயன் தனது தோழர்களை ஒவ்வொருவராக நாயைப் பின்தொடர அனுப்பினான். ஆனால், குவேனி அவர்கள் அனைவரையும் பிடித்து ஒரு குளத்தில் மறைத்து வைத்தாள். இதனால், விஜயன் அங்கு வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடித்து, அதனால், அவளைக் கொன்று விடுவதாக மிரட்டினான். ஆனால், விஜயன் அவளை மணந்து கொள்ள வேண்டும், அவளை மட்டுமே தனது ராணி - மனைவியாக [queen-consort / பட்டத்து ராணியாக] ஆக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அனைவரையும் விடுவிப்பதாக குவேனி சொன்னாள். எனவே, விஜயன் குவேனிக்கு, தனக்கு வேறு யாரும் ராணி - மனைவியாக இருக்க மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து திருமணம் செய்து கொண்டான். மேலும் திருமணத்திற்காக கூடியிருந்த தனது சொந்த மக்களைக் கொல்லவும் விஜயனுக்கு குவேனி கைமாறாக உதவினார். கொல்லப்பட்ட உள்ளூர்வாசிகளின் இரத்தம் வெள்ளமாக அங்கு ஓடியது!.

எல்லா வகையான தீய செயல்களையும் செய்த விஜயன், எப்படி தேவர்களின் நகரத்தில், ஒரு இடத்தைப் பிடித்தார்?

விஜயன் தனது வாக்குறுதியை மீறி, பாண்டிய மன்னனின் மகளை, அரசகுமாரியை, மணந்தான். அவனது எழுநூறு தோழர்களுக்கா, பாண்டிய இராச்சியத்தில் [Pandi kingdom] இருந்தே மணமகள்களையும் எடுப்பித்தான். இதனால் கோபம் கொண்ட குவேனி விஜயனைக் கொல்ல முயன்றாள். ஆனால் புத்தரின் கட்டளைப்படி, கடவுள்களின் மறைமுக உதவியுடன், குவேனி கல்லாக மாற்றப்பட்டாள். அப்படி என்றால், புத்தர் எப்படிப்பட்ட ஞானத்தைப் பெற்றார்? எனக்குப் புரியவில்லை? இருப்பினும், மகாவம்சம், 7-64 இன் படி குவேனி அவளுடைய சொந்த மக்களால் கொல்லப்பட்டாள் என்று பதியப்பட்டு உள்ளது. என்றாலும் குவேனியின் நிகழ்வுகள் தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. விஜயனுக்கு பாண்டிய மன்னனின் மகளிடமிருந்து சந்ததி கிடைக்கவில்லை. முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அவன் இறந்து, தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடத்தைப் பெற்றான். விஜயன் சொந்த நாட்டிலும், இடையில் தங்கிய நாடுகளிலும் எல்லா வகையான தீய செயல்களையும் செய்தான். தன் முதல் இலங்கை மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறியது மட்டும் அல்ல, தன் முதல் இலங்கை மனைவியையும் கல்லாக்கினான். இந்த புண்ணிய செயல்களுக்காக அவனுக்கு தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடம் வழங்கப்பட்டது! இதை யாராவது நம்பகமானதாகக் கருதுவார்களா? மக்கள், மந்திரி உபதிசனை [minister Upatissa] மன்னனாகத் தேர்ந்தெடுத்தனர். உபதிசனின் ஆட்சியின் காலம் எவ்வளவு காலம் என்று குறிப்பிடப்படவில்லை. அத்துடன், உபதிசனின் ஆட்சி மற்ற இரண்டு நாளாகமங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில் விஜயனின் சகோதரன் சுமித்தின் [Sumit] மகன் முப்பத்திரண்டு அமைச்சர்களுடன் இலங்கைக்கு வந்தான். மகாவம்சத்தின்படி இளைய மகன் வந்தான், அவர்கள் அழைப்பின் பேரில் வந்தார்களா அல்லது வேறு வழியில் வந்தார்களா என்பது தெளிவாகத் இங்கு தெரியவில்லை? ஆட்சி செய்த மன்னன் உபதிசன், சுமித்தின் மகனை, பண்டுவசுதேவன் [Panduvasudeva] என்ற பெயருடன் அரசனாக்கினான்.

புத்தரின் தந்தையான சுத்தோதனாக்கு (Suddhodana) இராசவலியத்தின் படி இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர்; புஷ்போதனா [Pushpodana] மற்றும் அமிதோதனா [Amitodana]. அமிதோதனா இளைய சகோதரர் ஆகும். அவருக்கு ஆறு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். இந்த இளவரசி தற்செயலாக முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களுடன் இலங்கைக்கு வந்தாள். அவள் மன்னர் பண்டுவாசுதேவனின் ராணி - மனைவியாக [queen-consort] ஆக்கப்பட்டாள். பண்டுவாசுதேவனுடன் வந்த முப்பத்திரண்டு அமைச்சர்கள், வழக்கம் போல், ராணியுடன் வந்த முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களை மணந்தனர். ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாக இது கூறப்படுகிறது. அதன் பின், ராணியின் ஆறு மூத்த சகோதரர்களும் இலங்கைக்கு வந்து இலங்கையில் நிரந்தரமாக தங்கினர். விஜயனின் குலத்துடன் புத்தரின் குலமும் ஒன்றிணைந்து இலங்கை மக்கள் தொகை பெருகியது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் உண்மைத் தன்மை ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. விஜயனின் எழுநூறு தோழர்களும் மேற்கண்ட முப்பத்திரண்டு அமைச்சர்களும் எந்த தடயமும் இல்லாமல் நாளாகமம்களின் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறார்கள். மகாவம்சம், 8-18 இன் படி அமிதோதனாவுக்கு பண்டு [Pandu] என்ற மகன் இருந்தான், மேலும் அவனுக்கு ஏழு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். எனவே இந்த இளவரசி அமிதோதனாவின் பேத்தி ஆகும். இருப்பினும், இராசவலியத்தில் உள்ள இளவரசி அமிதோதனாவின் மகள் ஆகும். இராசவலியத்தில் மகன் பண்டுவைக் காணவில்லை; அதாவது ஒரு தலைமுறையைக் காணவில்லை. மகாவம்சத்தின் படி, பண்டுவுக்கு ஏழு மகன்கள் இருந்தனர், அவர்களில் ஆறு பேர் 9-6 இன் படி இலங்கைக்கு வந்தனர், ஆனால் இராசவலியத்தின் படி, அமிதோதனாவுக்கு ஆறு மகன்கள் இருந்தனர், ஆறு பேரும் இலங்கைக்கு வந்தனர். மகன்களின் பெயர்களும் சரியாகப் பொருந்தவில்லை. இப்படி பல வேறுபாடுகள் அவைகளுக் கிடையில் காணப் படுகின்றன.

Part: 105 / APPENDIX – "Summary of Rajavaliya"

The Buddha is said to have made a statement on his deathbed, page 17, ‘My religion has such vitality that it will endure for the space of five thousand years’. D. S. Senanayake, then the Minister of Agriculture in the State Council quoted this in the State Council debate in 1938, saying, quote’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ unquote. Whoever claim that they are chosen people, they are un-Buddhist in nature. The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal.

Kuveni, a local non-human lady, had three breasts, and her middle breasts disappeared when Vijaya landed in Lanka. She knew then that her husband had arrived, and came in the form of a bitch dog and kissed Vijaya’s feet and left. Vijaya sent his companions, one by one, to follow the dog thinking that there could be humans keeping dog. Kuveni captured all of them and hid all in a pond. Vijaya came and found out what happened and threatened to kill her. She said that she would release all of them on conditions that ‘Vijaya should marry her and make her only his queen-consort’. Vijaya promised and married Kuveni saying that he would not have anyone else as his queen-consort. Kuveni also helped Vijaya to kill her own people who had assembled for a marriage. There was a deluge of blood of the killed local inhabitants.

Vijaya reneged on his promise, and married a daughter of Pandi king. Partners for his seven hundred companions too came from Pandi kingdom. Kuveni tried to kill Vijaya, but Kuveni was turned into a stone with the tacit help of the gods on the command of the Buddha. What kind of enlightenment he attained! Kuveni was killed by her own people as per the Mahavamsa, 7-64. Kuveni episode is not at all narrated in the Dipavamsa.

Vijaya had no offspring from the daughter of Pandi king, and died after the reign of thirty-eight years. He obtained a place in the city of the gods. Vijaya did all kind of evil things, left his wife and kids and broke his promise to the first wife. He was rewarded a place in the city of gods for these meritorious work! Would anyone consider this trustworthy? People elected the minister Upatissa as the king. The length of Upatissa’s rule is not given. Upatissa’s rule is not mentioned in the other two chronicles. In the meantime the son of the Vijaya’s brother Sumit came to Lanka with thirty-two ministers. The youngest son came as per the Mahavamsa, and it is not clarified whether they came on an invitation or otherwise. The reigning king made the newly arrived son of Sumit the king with the name Panduvasudeva.

Suddodana, the Buddha’s father, had two younger brothers as per Rajavaliya; Pushpodana and Amitodana. Amitodana is the younger brother, and he had six princes and one princess. This princess came to Lanka coincidentally with thirty-two female attendants. She was made the queen-consort of the King Panduvasudeva. The thirty-two ministers who came with Panduvasudeva were married to the thirty-two female attendants who came with the queen, as usual, a happy coincidence. The six elder brothers of the queen also came to Lanka and took abode in Lanka. It is to emphasize that Buddha’s clan populated Lanka along with that of Vijaya’s. Vijaya’s seven hundred companions and the above thirty-two ministers paled into oblivion without any trace.

Amitodana had a son Pandu, as per the Mahavamsa, 8-18, and he had seven princes and one princess. This princess is therefore the granddaughter of Amitodana. However, the princess in the Rajavaliya is the daughter of Amitodana. The son Pandu is missing in the Rajavaliya; a generation is missing. Pandu had seven sons, and six of them came to Lanka as per the Mahavamsa, 9-6, but as per Rajavaliya, Amitodana had six sons and all six came to Lanka. The names of the sons are also not tallying properly. The children or grand children of Amitodana must be got up things to have such a generational mismatch.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 106 தொடரும் / Will follow

பகுதி Part: 105

https://www.facebook.com/groups/978753388866632/posts/33828375633477650/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 106 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம்

பக்கம் 21 இன் படி, பண்டுவாசுதேவனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்; ஒரு மகன், அபயன் [Abhaya] மற்றும் ஒரு மகள், உமதுசீதா [Umatusita]. (இராசவலியத்தின் பண்டுவாசுதேவன் என்பது தீபவம்சத்தின் பண்டுவாசனுக்கும், மகாவம்சத்தின் பாண்டுவாசுதேவனுக்கும் சமம் / Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) இது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முற்றிலும் மாறுபட்டது. அங்கே, பண்டுவாசனுக்கு [அல்லது பண்டுவாசுதேவனுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர், தீபவம்சத்தின் 10 – 2 முதல் 4 வரை, அதேபோல, மகாவம்சத்தின் 9 - 1 வரை பார்க்கவும். பதினொரு குழந்தைகளின் பெயர்களையும் தீபவம்சம் தந்தாலும், மகாவம்சம் மூத்த மகன் மற்றும் மகளின் பெயர்களை மட்டுமே தருகிறது.

முன்பு மன்னன் விஜயன், குவேனிக்கு பொய் வாக்குறுதி அளித்தார் (அவர் சத்தியம் செய்து பொய் சொன்னார் பின் அந்த வாக்குறுதியை மீறினார்), இதன் விளைவாக, மன்னன் பண்டுவாசுதேவன் அதன் விளைவுகளை அனுபவித்து, அதனால், பண்டுவாசுதேவன் ஒரு தொந்தரவான கனவு கண்டான். அது அவனை மிகவும் பாதித்தது. அதனால், அவன் மயக்கமடைந்து எழுந்திருக்க முடியாமல் போய், அதன் பின், மீண்டும் எழுந்து வந்ததாக ஒரு நீண்ட கதை உள்ளது. இந்தக் கதை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்படவில்லை. அவன் சுயநினைவுக்கு வந்து பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு இறந்தான். மற்ற இரண்டு நாளாகமங்களின்படி பண்டுவாசுதேவன் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். பண்டுவாசுதேவனின் சகோதரி தனது தாய் மாமன்களில் ஒருவரின் மகனுடன் ஒன்றாக வாழ்ந்து, பண்டுகாபயன் [Pandukabhaya] என்ற மகனைப் பெற்றெடுத்தார். அவன் தனது ஒன்பது தாய் மாமன்களைக் கொன்று முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது மகனுக்கும், அவன் பண்டுகாபயன் என்றே பெயரிடப்பட்டு, அவன் பின் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் ஒரே ஒரு பண்டுகாபயன் மட்டுமே உள்ளான், மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவனது மகன் கணதிஸ்ஸ (Ganatissa) நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இந்த கணதீசன் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. அவனது மகன் மூத்ததீசன் [Mutatissa] அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் முன்போலவே, மூத்ததீசன் பதிவு செய்யப்படவில்லை. மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்பட்ட மன்னன் மூத்தசிவன் [king Mutasiva] இராசவலியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளார்; ஏனெனில் அந்தப் பெயர் தெளிவான சைவ தமிழ்ப் பெயராக இருப்பதாலோ என்று எண்ணத் தோன்றுகிறது?. விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படியும் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகள் ஆகும், அதே நேரத்தில் விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், இராசவலியாவில் இருநூற்று தொண்ணூற்று இரண்டு ஆண்டுகள் ஆகும்; ஐம்பத்தாறு ஆண்டுகள் வித்தியாசம். இப்படியானவையே, இந்த நாளாகமங்களின் நம்பகத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது எனலாம்.

பக்கம் 22 இல், முற்காலத்தில் தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் இல்லை; ஆனால் ராவணனின் நகரம் அங்கே நின்றது, அவனது துன்மார்க்கத்தால், அவனது கோட்டை, 25 அரண்மனைகள் மற்றும் 400,000 தெருக்கள் அனைத்தும் கடலால் மூழ்கடிக்கப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரி [காப் கொமரின் / cape comorin] அல்லது குமரி முனை கடலால் சூழப்பட்டது என்ற தமிழர்களின் நீண்டகால உணர்வை இராசவலிய வெளிப்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது [Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past]. தூத்துக்குடி [Thoothukudi அல்லது Tuticorin], குமரி முனையில் இருந்து ராமேஸ்வரம் வரை கடற்கரையோரமாக பாதி தூரத்தில் உள்ளது.

மூத்ததீஸ்ஸனின் மகன் தேவநம்பியதீசன் [Devenipetissa, son of Mutatissa], மூத்ததீஸ்ஸன் இறந்தபோது ஆட்சியை ஏற்றான். தேவநம்பியதீசன், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவின் மன்னன் [King Asoka of Jambudvipa] அசோகனின் நண்பன் என்று கூறப்படுகிறது. அசோகன், தேவநம்பியதீசன் மற்றும் நிக்ரோதா [Nigrodha] ஆகியோர் முந்தைய பிறவியில் சகோதரர்கள் என்று கூறுகிறது. மனித வரலாற்றில் முந்தைய பிறவி பற்றிய எதுவும் அபத்தமானது. இராசவலியவின் முந்தைய பிறவி பற்றிய கதை மகாவம்சத்தில் உள்ளதை விட சற்று வித்தியாசமானது. மிஹிந்து (Mihindu / இது மகிந்தாவைக் / Mahinda குறிக்கிறது.) இலங்கைக்கு பறந்து வந்தார். போதி மரக் கிளை தானாகவே துண்டிக்கப்பட்டு, தானாகவே பறந்து இலங்கைக்கு வந்தது. மற்ற இரண்டு நாளாகமங்களில் சங்கமித்தா மூலம் கப்பலில் கொண்டுவரப்பட்டது. தேவநம்பியதீசன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியத்தின்படி மிஹிந்து (மகிந்தா) பதினெட்டு வயதில் புத்த குருவாக பதவியளிக்கப் பட்டார். ஆனால் மற்ற இரண்டு நாளாகமங்களின்படி மகிந்தா இருபது வயதில் புத்த குருவாக தீட்சை அளிக்கப்படடார் . அப்பொழுது சங்கமித்தாவுக்கு பதினெட்டு வயது. எனவே அவள் வயது குறைந்தவள் என்று கருதப்பட்டதால் அவளுக்கு பிக்குணியாக தீட்சை அளிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

Part: 106 / APPENDIX – "Summary of Rajavaliya"

As per page 21, Panduvasudeva had two children; a son, Abhaya and a daughter, Umatusita. (Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) This is in sharp contrast with the other two chronicles. Panduvasa had ten sons and one daughter, 10 – 2 to 4, of the Dipavamsa and 9 - 1 of the Mahavamsa. The Dipavamsa gives all the names of the eleven children, but the Mahavamsa gives the names of only the eldest son and the daughter. There is a long story about Panduvasudeva passing into unconsciousness and recovery due to the broken promises to Kuveni by Vijaya. This is story is not found in the other two chronicles. He came to consciousness and later died after the rule of thirty-two years. Panduvasudeva ruled for thirty years as per the other two chronicles.

Panduvasudeva’s sister lived with a son of one of her maternal uncles and gave birth to a son, named Pandukabhaya. He killed his nine maternal uncles and ruled for thirty years. His son is also named Pandukabhaya and ruled seventy years. There is only one Pandukabhaya in the other two chronicles, and he ruled for seventy years. His son Ganatissa ruled for forty years. This Ganatissa is not recorded in the other two chronicles. His son Mutatissa reigned for sixty years. Mutatissa is also not recorded in the other two chronicles. The king Mutasiva in the other two chronicles is completely erased in the Rajavalia; must be because the name is a clear Tamil name. The length of reigns from Vijaya to the start of the Devanampiya Tissa is two hundred and thirty six years as per both the Dipavamsa and the Mahavamsa, where as the length of reigns from Vijaya to the start of Devenipetissa is two hundred and ninety two years; a difference of fifty six years. This is the trustworthiness of these chronicles.

It is stated in the page 22 that there was no sea between Tuttukudi and Lanka, the city of Ravana was with so many streets, palaces and fortress and all were overwhelmed by the sea because of the wickedness of Ravana. It is interesting to note that the Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past. Tuttukudi is about half way from Cape Comorin to Rameswaram along the coast. This aspect is addressed elsewhere.

Devenipetissa, son of Mutatissa, reigned when Mutatissa died. Devenipetissa is claimed to be friend of the King Asoka of Jambudvipa. Asoka, Devenipetissa and Nigrodha were brothers in the previous birth. Anything about previous birth in the human history is absurd. The story about their previous birth is somewhat different from that in the Mahavamsa. Mihindu (Mahinda) came to Lanka by flying. Bo tree branch severed on its own and came to Lanka flying, not by Samghamitta by ship as in the other two chronicles. Devenipetissa ruled for forty years. Mihindu (Mahinda) obtained ordination at eighteen years of age as per the Rajavaliya, but Mahinda’s ordination took place when he was twenty years of age as per the other two chronicles. Samghamitta was eighteen years of age and her ordination was postponed as she was considered underage.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 107 தொடரும் / Will follow

துளி/DROP: 2040 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106

https://www.facebook.com/groups/978753388866632/posts/33843210578660822/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.