Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN

15 AUG, 2025 | 01:11 PM

image

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32) இட் நாளை சனிக்கிழமை (16/08) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்தக் கப்பலின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்புத் துறைமுகம் செயற்படும்.

அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு அங்கமான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையினை வழிநடத்துகிறது.

“யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க மற்றும் இலங்கையின் பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன் பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் உருவாக்க பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.

யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும். 

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7 இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Image_03__4_.jpg

Image_02__12_.jpg

https://www.virakesari.lk/article/222609

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

16 AUG, 2025 | 03:05 PM

image

அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா (u s s santa barbara) இன்று சனிக்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் சின்னமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பல் காணப்படுகின்றது.

அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது.

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவை  சான்டா பாப்ரா கப்பல் எடுத்துக்காட்டுகிறது.

இது கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை ஊக்கமளிக்கின்றது.

இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

90.jpg

89.jpg

https://www.virakesari.lk/article/222688

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு ரோந்துக் கப்பலை இலங்கை்கு வழங்கவுள்ளோம் : சான்டா பாப்ரா போர் கப்பலின் வரவேற்பின்போது அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவிப்பு

Published By: PRIYATHARSHAN

16 AUG, 2025 | 03:43 PM

image

உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.

சான்டா பாப்ரா என்ற அமெரிக்க போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங்,

அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீடித்த நல்லுறவின் சக்திவாய்ந்த சின்னமாக விளங்கும் U.S.S. Santa Barbara கப்பல், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரும் இந்த தருணத்தில், நான் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன்.

கப்பலின் கட்டளைத் தளபதி ஆடம் ஓக்ஸ், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துயாகொந்தா, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் அவர்களது தொடர்ச்சியான தலைமைத்துவத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.

வேகம், சுறுசுறுப்பு மற்றும் மேம்பட்ட நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கடலோரப் போர் கப்பலான U.S.S. Santa Barbara-வின் வருகை வெறும் ஒரு துறைமுக வருகை மட்டுமல்ல. இது நமது நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவைப் பிரதிபலிக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார வளம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய பொதுவான இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல இணைந்து செயல்பட்டு வருகின்றன.

உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது.

கடல்சார் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகள் ஊக்கமளிக்கின்றன. Santa Barbara கப்பலின் குறிக்கோள் "நெகிழ்வு மற்றும் உறுதிப்பாடு" ("Resilient and Determined") என்பதாகும். அதேபோல், இலங்கை கடற்படைக்கும் அது பொருந்தும்.

2024-ல் Operation Prosperity Guardian-ன் ஒரு பகுதியாக அரேபிய கடற்பரப்பில் கடற்படை ஈடுபட்டதும், இந்த ஆண்டு Combined Maritime Force – Task Force 154 அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றதும், இப்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இலங்கை கடற்படை தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் இந்த முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. முன்னர் வழங்கப்பட்ட மூன்று அமெரிக்க கடலோரக் காவல் கப்பல்களான Samudura, Gajabahu மற்றும் Vijayabahu ஆகியவை இலங்கையின் கடற்பரப்பில் தீவிரமாக ரோந்து சென்று சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு, மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும்.

U.S.S. Santa Barbara கப்பலின் வருகை, நமது நல்லுறவின் வலிமையையும், சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த மதிப்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். மேலும், உலகின் இந்த முக்கியப் பகுதி ஸ்திரத்தன்மை மற்றும் வாய்ப்புகளின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வோம் என்றார்.

GydmzI_WEAAE1AC.jpeg

GydmzJIXkAA7gkf.jpeg

GydmzK0XMAAQY1F.jpeg

GydmzJDWAAAou9m.jpeg

https://www.virakesari.lk/article/222690

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்னும்… ஶ்ரீலங்காவிலா சுற்றித் திரிகிறார். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.