Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

large.uthikkumthisainookkiunnathapayanam

இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது.

இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது.

தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை.

கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன். அத்துடன் இதனை மீளவும் நூலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 1

large.pathuman.jpg.69bbbb810f3530bee8988

திரு. மாத்தயாவின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருமலை மாவட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். ஏற்கனவே அங்கே குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்த திருமலை மாவட்டக் குழுவினருடன் இணைந்து கொள்கின்றோம். கால்நடையாகப் பயணத்தைத் தொடர்கிறோம். எறும்புக்கூட்டம் மாதிரி நீண்ட வரிசையாய்ப்பயணம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என்றிருந்த வயற்காணிகள் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. செல்லும் பாதையெங்கும் மனித நடமாட்டமே இல்லை. பற்றைகள், முட்கள், சேறு எல்லாவற்றையும் தாண்டி வெகு வேகமாக ஆனால் விழிப்புடன் திருமலை மாவட்டக் குழுவினர் முன்னே செல்கிறார்கள். நாம் போய்ச்சேர வேண்டிய இடம் விரைவில் வந்துசேர்ந்து விடக்கூடாதா? என்ற எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறேன். வழயில் நாங்கள் கண்ட ஒரேயொரு உயிரினம் மாடுகள் தான். கேட்பார் மேய்ப்பார் யாருமின்றி கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. தமிழர்களுக்கில்லாத சுதந்திரம் இந்த மாடுகளுக்கு!

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவருமே இப்பகுதிகளைவிட்டு வெளியேறி விட்டனர். எங்கோ ஓரிரு ஆண்கள் மட்டும் தங்கள் மண்ணைப் பிரியமனமில்லாமல் குடும்பத்தினரை அனுப்பி விட்டு தாங்கள் மட்டும் அங்கேயே வசித் வருகின்றனர் எனக் கேள்விப்படுகிறோம். இராணுவ முகாம்களின் வெளிச்சம் மட்டும் மிகப் பிரகாசமாக உள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் தற்காலிகமாகப் பயணம் நிறுத்தப்படுகிறது. அந்த இடத்தில் நாங்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணம் தொடங்கும்போது எனக்காகத் தரப்பட்ட இரவு உணவைச் சாப்பிடக் கூடிய நிலையில் நான் இல்லை. உடனே தேவைப்படுவது தூக்கம். சுமார் மூன்று மணித்தியாலங்கள் அயர்ந்த தூக்கம்.

காலை 8.30 மணியளவில் எழுந்து வெளியே வருகிறேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அயலைப் பார்க்கின்றேன். கிராமமே வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கொருவர் இங்கொருவராக இருந்தவர்கள் போராளிகளுக்கான உணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பயணத்தைத்தொடர்வதற்குரிய ஆயத்தநிலையில் திருமலை மாவட்டக் குழுவினர் இருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் யாரும் தூங்கிய மாதிரி இல்லை. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் நாங்கள் கடந்து வந்த தூரத்தின் இருமடங்கு தூரத்தை இவர்கள் அந்த இரவில் நடந்துள்ளார்கள். எம்மை அழைத்துச் செல்வதற்காக இப்பகுதியில் நடந்து வந்து திரும்ப எங்களுடன் இங்கே நடந்து வந்துள்ளார்கள். அத்துடன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தூங்கவுமில்லை. அடுத்த காணிக்குள் சில நாய்கள் உலாவுகின்றன. நாயின் சொந்தக்காரர்கள் அகதிகளாகச் சென்றுவிட இந்த மண்ணின் பாதிப்பு நாய்களிலும் தெரிகிறது. சாப்பாடு இல்லாத இந்த நாய்கள் பாவம் என நினைத்துக் கொள்கிறேன். இரவுச் சாப்பாட்டுக்கென எனக்காகத் தரப்பட்ட பார்சல் நினைவுக்கு வரவே அதை நாய்களுக்குப் போடுவோம் என்றெண்ணி அந்த வீட்டின் உள்ளே வருகின்றேன்.

திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் வருகிறார். வழக்கமான உரையாடல். “இரவு நாங்கள் நடந்த தூரம் எவ்வளவு?” எனது கேள்வி. ஐந்து அடுத்து மூன்று அப்படியே... என்று கணக்குப்போட்டு மொத்தம் 20 மைல்கள் என்கிறார். வியப்பில் ஆழ்கின்றேன். நான் 20 மைல் நடந்து விட்டேன் என்றல்ல. திருமலை மாவட்டப் போராளிகள் 40 மைல்கள் நடந்திருக்கிறார்களே என்பதும், அத்துடன் இந்த இடைநேரத்திலும் தூங்காமல் அடுத்த பயணத்துக்குரிய தயார் நிலையில் இருக்கிறார்களே என்பதும்தான் எனது வியப்புக்குக் காரணம்.

பதுமனை விட்டு விலகிச் செல்கிறேன். தன்னைச் சூழ இருந்தவர்களிடம் மெதுவான குரலில் பதுமன் கேட்கிறார். “எல்லோரும் சாப்பிட்டாச்சா?” வழக்கமான இந்தக் கேள்வியைத் தொடர்ந்து மௌனம் நிலவுகிறது. மீண்டும் பதுமனே தொடர்கிறார். “எல்லோரும் சாப்பிடாதீங்க சோறு இல்லை” – வழமைக்கு மாறான வேண்டுகோள். சூழ இருந்தவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் வியக்கிறேன். ஏனெனில் இதுவரை நாளும் ஒரு சராசரிக் குடும்பஸ்தனாக இருந்தவன் நான். மூன்று நேரச் சாப்பாட்டில் எந்த நேரமும் பிந்தக் கூடாது எனக்கு. கொஞ்சம் பிந்தினாலும் மிகவும் சிரமப்படுவேன். அந்தக் காட்சிகள் நினைவுக்கு வந்தன; அத்துடன் இந்த மாதிரியான ஒரு இடத்தில் இரவுச் சாப்பாட்டைக் காலைச் சாப்பாடாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் நாய்களுக்குப் போட நினைத்த என்னை எண்ணி நான் குறுகிக் கொண்டேன். சாப்பாடு ஓரளவு குறைந்தால் பங்கிட்டுச் சாப்பிடச் சொல்லியிருப்பார் பதுமன். ஆட்களின் தொகையையும் சாப்பாட்டின் அளவையும் நினைத்துத்தான் இவ்வாறான வேண்டுகோளை தனது போராளிகளுக்கு விடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது திருமலை மாவட்டத்தின் யதார்த்த நிலையில்ன் கோரத்தைப் புரிந்து கொண்டேன்.

வெளியே திருமலை மாவட்டப் போராளிகள் மாமரத்தின்கீழ் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. குழுத் தலைவர்களின் அறிவுறுத்தல்களின் பின் அவர்கள் கலைகிறார்கள். ஒருவரோடொருவர் சிரித்துப்பேசியபடி மாங்காய்களைத் தடியால் எறிந்து விழுத்துகிறார்கள். ஏதோ சொட்டைத் தீனுக்காகத்தான் இதை வீழ்த்துகிறோம் என்ற பாவணையில் மாங்காய்களைப் பொறுக்கி கடிக்கிறார்கள். இந்தப் பிரயாண முடிவில் அவர்கள் சென்றடையும் முகாமில்தான் இனி வயிறாரச் சாப்பிட வேண்டும்.

பதுமன் வருகிறார். திருமலை மாவட்ட போராளிகளின் உணவு நிலைமைபற்றி அளவளாவுகிறேன். “இப்ப ஒருமாதிரி பிரச்சினை யில்லை. I. P. K. F. காலத்தில் தான் ஆகக்கஷ்டப்பட்டிட்டம். இவனெல்லாம் ஒரு தொடர்புமில்லாமல் காட்டுக்குள் பாலைப்பழத்தையும், விளாங்காயையும் சாப்பிட்டுக் கொண்டே சில காலம் இருந்திருக்கிறான். இவனோடை இருந்தவங்களெல்லாம் கடலில் வண்டி கவிழ்ந்து போனதில செத்துப் போனாங்கள்” என்று சொல்லி ஒரு பையனை அறிமுகப்படுத்துகிறார்.

மனித நடமாட்டமில்லாத பகுதியில் மீண்டும் பிரயாணம் தொடங்குகிறது. கையில் தூப்பாக்கியை ஏந்தியபடி தமது சொந்தமண்ணில் காலடிபதிக்கிறார்கள். 90க்கு மேற்பட்ட படை முகாம்கள் உள்ள இந்த மாவட்டத்தில் உள்ள தமிழனாகப் பிறந்த எவனதும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது, உயிர்வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது இந்த ஆயுதங்களே. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்ட இவர்களின் பின்னால் கூனிக்குறுகியபடி நானும்...

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 2

15.9.90 அன்று தற்காலிகமாக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அடுத்த இடத்தை நோக்கிச் சென்றோம். இந்தப்பிரயாணம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. இதில் ஒரு மணித்தியாலம் நடைப்பயணம். 

காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு பெரிய முகாமுக்குச் சென்றோம். அடர்ந்த கானகத்தினூடே ஒரு குட்டி நகரம் போல் அந்த முகாம் காட்சியளித்தது. புலிகளின் வைத்தியசாலை அரசியற் பிரிவின் தலைமைச் செயலகம் போன்றவை அங்கே அமைந் திருந்தன. அரசியற் பொறுப்பாளர் ரூபன் பெரும்பாலும் இங்குள்ள அலுவலகத்தில் தான் தங்கியிருப்பார். இவரது அலுவலகம் காட்டிலேயே அமைந்திருந்தாலும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் எவ்வாறு அரசியற் பிரிவின் செயலகம் அமைந்திருக்குமோ அதே போன்ற அமைப்புடன் விளங்கியது.

முகாமைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மாத்தயா அவர்கள் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு போராளிகளுடனும் உரையாடினார். க. பொ. த (சாதாரணம்) வகுப்பு வரை படித்துள்ள 21 வயதான போராளியொருவரை முதலில் சந்தித்தார். தம்பி உங்கள் ஊர் எது? ஆலங்கேணி. ஆலங்கேணியில் இப்ப எவரும் இல்லையே. அப்பா அம்மா எல்லோரும் எங்கே?  அகதியாகப் போய்விட்டனர். எங்கே போனார்கள்? எங்கையென்று தெரியாது. பெரும்பாலும் முல்லைத்தீவுப் பக்கமாகத்தான் போயிருப்பினம். போகும்போது அவர்களைச் சந்திக்க முடிந்ததா? ஓம். இந்த வழியால்தான் போனவை. அப்ப நான் சென்றில் நிண்டனான். என்ன சொன்னவை? “நீ தப்பி விட்டாய் என்று சொல்லி விட்டுப் போனவை”

எனக்கு யாழ்ப்பாண நிலைமைதான் உடனே நினைவுக்கு வந்தது. எத்தகைய போர் நிலைமை இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் இயக்கத்துக்குச் சென்றால் எப்படியாவது அவர்களை மீட்டெடுக்கப் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள்? அனைத்துப் பெற்றோரும் தமக்குப் பெண் பிள்ளைகள் உண்டு. இவர் ஒருவர்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று சொல்வார்கள். போராட்டத்தினால் விளைந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி எந்த நாட்டுக்காவது ‘அகதி’யாக அனுப்பப் பார்ப்பார்கள். ஆனால் கிழக்கிலோ தாம் அடைந்த அகதிநிலை பிள்ளைகளுக்கு வரக்கூடாது. இயக்கத்துக்குள் செல்வதனால் ஒருவன் தப்பிவிடுகிறான் என்ற மனோபாவம். வடக்கும் கிழக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அங்கே சூழ்நிலையின் கொடூரம் மக்களை உறுதியாக்குகிறது. தொண்ணூறுக்கு மேற்பட்ட முகாம்கள் உள்ள திருமலையில் இயக்கத்துக்குள் சென்றவன் தப்பிவிட்டான் என்று எண்ணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ மண்போனாலும் பரவாயில்லை. மகன் வந்தால் போதும் என்றநிலை.

மேலும் சிலரை மாத்தயா விசாரித்தார். பொதுவாக எல்லோரிட மிருந்தும் ஒரே பதில். வீட்டுக்காரர் எங்கே? தெரியாது. இப்ப எங்கே போயிருப்பினம் என்றுநினைக்கிறீங்கள்? தெரியாது. உயிரோட இருக்கினம் எண்டாவது தெரியுமோ? தெரியாது.

          குழுத் தலைவராக/இருக்கும் ஒருவரை அவர் விசாரித்தார். குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள். ஒரேயொரு சகோதரி. மூன்று ஆண்பிள்ளைகளுமே இயக்கத்தில்தான் உள்ளனர். தற்போதைய போரில் காயமடைந்து யாழ்ப் பாணம் வந்த அந்தப்போராளி திருமலைக்குச் செல்லும் வழியில் முல்லைத்தீவில் அகதிகளாக இருக்கும் தாய், தந்தை யரைச் சந்தித்தார். உணவு பரிமாறும் போது அந்தத் தாய் சகோதரியின் நிலைமையை மட்டும் அறிந்துவிடு என்று கேட்டுக் கொண்டார். தொழில் வாய்ப்பின் நிமித்தம் மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கே என்னபாடோ தெரியாது என்று கவலைப்பட்டார். சகோதரியின் நிலை என்ன என்பதை இனித்தான் அறிய என்று முயற்சிக்க வேண்டும் என்று அப்போராளி அவரிடம் தெரி வித்தார்.

"குடும்பமே சிதறிய நிலையிலும் இவர்கள் போராட்டத்திலிருந்து விலகும்படி பிள்ளைகளைக் கேட்கவில்லை. தங்களுக்கு உழைத்துத் தர யாருமே இல்லாத நிலையிலும் இந்தச் சுமைகளை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்திலோ சகோத ரிகளை கரைசேர்க்க வேண்டும். அண்ணன் திருமணம் செய்துவிட்டார். இனி குடும்பப் பொறுப்பு எனது தலையில் தான் என்று கூறி போராட்டத்திலிருந்து தளர்ந்து போகிறார்கள். பொதுவாக எந்தக்குடும்பத் தைப் பார்த்தாலும் மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் தாய் தந்தையர் ஓரிடம் பிள்ளைகள் வேறிடம் என்ற நிலைமைதான். இப்படி இருந்தும் இவர் களைப் பொறுத்தவரை போராட்டம் பற்றிய தெளிவும் உறுதியும் உள்ளது" என்று கூறினார் மாத்தயா.

எமது இருப்பிடத்திற்குத் திரும்பிவந்து எமக்காக வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்தோம். பாண், பணிஸ் போன்றவை இருந்தன. இவற்றை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்று விசாரித்தோம். நாம் சொந்தமாக பேக்கரி அமைத்து எமது தேவைக்கென பாண், பணிஸ் என்பவற்றைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றார் பதுமன். அப்போது ரூபன் “ஒவ்வொரு முகாமுக்கும் தேவை மரக்கறி வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்” என்றார். யாழ்ப்பாணத்தில் அரிதாகக் கிடைக்கும் மரக்கறிகளை அங்கே சாதாரணமாக காணமுடிந்தது.

              அடுத்து திருமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளரின் அலுவலகத்துக்குச் சென்றோம். மாவட்டத்தின் நிலைமைபற்றி விசாரித் தோம். மூதூர்ப் பகுதியில் மட்டும் ஆயிரத்து ஐம்பத்தேழு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றார். எவ்வளவு மக்கள் வெளியேறி யுள்ளார்கள் என்று கேட்டோம். கங்குவேலி 180 குடும்பம் 834 பேர், புளியடிச் சோலை 125 குடும்பம் 502 பேர், பாரதிபுரம் 25 குடும்பம் 90 பேர்... என்று ஒரு நீண்ட பட்டியலைக் காட்டி னார். அகதிகளாக வெளிமாவட்டங்களுக்குச் சென்ற வர்களின் பெயர் விபரம் போன்ற பட்டியலைக் கூடக் கண்டோம். காட்டின் மத்தியில் இருந்து கொண்டு இவ்வளவு தெளிவாக புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொள்கிறீர்களே! என்று வியந்தோம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்டெண்டாலும் எனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை எடுப்பவர் எல்லா விபரத்தையும் உடனே தெரியவேணும் தானே. அதுதான் எப்படி எண் டாலும் எஞ்சியிருப்பவர்கள் மூலம் இவ்விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறன்” என்றார். திருக் கோணமலை மாவட்டத்தில் யுத்தம் இவர் மீதான தாக்குதலுடன் தான் ஆரம்பமானது என்பது நினைவுக்கு வந்தது. அந்தத் தாக்குதலில் இவருடன் கூடச் சென்ற இருவர் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் இவரையும் துளைத்தன தற்போதும் முதுகில் குண்டு இருப் பதனால் இயல்பாக கடமைகளை ஆற்றமுடியாத நிலை. எனவே நாளைக்கு எனக்கு ஒண்டெண்டாலும் என்று தொடங்கி இவர்கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் என் கண்கள் பனித்தன. இதுதான் புலிகளின் பலம், இம்மாதிரி இயக்கத்தை கட்டி வளர்த்ததே புலிகளின் தனித் துவத்துக்குக் காரணம் என நினைத்துக் கொண்டேன்.

அகதிகள் முகாம்களின் நிலை எப்படியுள்ளது? என்று கேட்டேன். “திருமலையில் இருப்பவை அகதிமுகாம்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அவை தடுப்பு முகாம்கள்”என்று ஆரம்பித்து அவை பற்றி கூறத் தொடங்கினார் ரூபன்.     

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 3

திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து வெளியேறியோரில் கணிசமானோர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்று விட்டனர். இவர்களில் அநேகர் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். ஏற்கெனவே நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளின் போது இந்தியாவுக்குச் சென்றவர்கள் அங்கே ஏதாவதொருதொழில் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இம்முறை இந்த வசதிகள் எதுவும் இல்லை. அப்படி இருந்தும் இங்கிருந்து போனவர்கள் படகு கவிழ்ந்தும், கடற்படைசுட்டும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

திருமலை மாவட்டத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயம், கிண்ணியா ஜி.பி.எஸ் கிளப் பன்பேர்க், கந்தளாய் பரமேஸ்வரா வித்தியாலயம், இறால் குழி பாடசாலை, நிலாவெளி தேவாலயம், கோபாலபுரம் பாடசாலை, சாம்பல் தீவு தேவாலயம், பச்சைநூர் பாடசாலை, பச்சைநூர் தேவாலயம். 59 ஆம் கட்டை பாட சாலை, மூதூர் தியேட்டர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம், சம்பூர் பாட சாலை, கூனித்தீவு பாடசாலை, வெருகல் பாடசாலை, ஆகிய இடங்களில் அகதிகள் தங்கியுளளனர். இதைவிட வெருகல் பகுதி (மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி) கதிரவெளி பாடசாலை வாகரை ஆகிய இடங்களிலும் தங்கியுள்ளனர். இதில் தம்பலகாமம்  போன்ற பகுதிகளில் இருப்பவர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. இவர்கள் அங்கிருந்து எங்கும் தப்பமுடியாது. தேவையான போது இவர்கள் இழுத்தெடுத்துக் கொண்டு செல்லப்படுவர். எவரும் உயிருடன் திரும்புவது இல்லை என்றார் ரூபன்.

இவர்கள் பெயர் விபரங்கள் உண்டா? என்று கேட்டேன். இதோ பாருங்கள் என்று பதிவுப் புத்தகத்தை நீட்டினார்.

ஆனிமாதம் 2ஆம் திகதி (கோவிலடி-65 வயது), ஈஸ்வரன் (வர்ண மேடு - 31 வயது), கோணேச பிள்ளை (வர்ணமேடு-37வயது) ஐயாத்துரை (கள்ளிமேடு - 26 வயது). சுப்பிரமணியம் (கோவிலடி -29 வயது), குட்டி (மேற்குகொலனி-31 வயது)... இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே போனது. தம்பலகாமத்தை இராணுவமும் முஸ்லிம் காடையரும் எரியூட்டிய போது இவர்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்றார். இப்படியாக ஆடி மாதம். ஆவணி மாதம் என்று முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவரின் பெயரும் இருந்தன. (இத் தொடரை எழுதுகையில் கூட 23-10-90 அன்று கிளப்பின் பேர்க் அகதி முகாமிலிருந்து 23 தமிழ் பொதுமக்கள் கூவர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவல் முஸ்லிம் படையினராலும், சிறிலங்கா ராணுவத்தாலும் படுகொலை செய்யப்பட்டனர் என்று செய்தி வந்துள்ளது) என்று கேட்டேன். உயிர் வாழ்வதற்குப் போதுமான உணவு இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்றார் ரூபன் சமூகநல ஸ்தாபனங்கள் எதுவும் இவர்களுக்கு உதவி செய்யவில்லையா என்று  கேட்டேன்.  திருக்கோணமலை மாவட்டத்தில் சமூகநலஸ்தாபனங்களின் கண்ணில் தெரிவது சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும்தான். தமிழர்களை அவர்கள் அகதிகளாகவோ, ஏன் மனிதர்களாகவோ கருதுவது இல்லை என்றார். அவர். எதைக் கொண்டு இ படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாமில் இருந்து 42 பேரைக் கைது செய்த சம்பவம் மூதூர் உதவி அரசாங்க அதிபர், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முன்னிலையில்தான் நடைபெற்றது. தங்கள் பொறுப்பில் உள்ள முகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதேவேளை சிங்கள மக்களின் வயல்களுக்குத் தண்ணீர் தேவையென்பதற்காக இராணுவம் வரப்பயப்படும் இடங்களுக்கு இவர்கள் தண்ணீர் திறந்துவிட வருகிறார்கள். இதிலிருந்து யாருடைய நலனை இவர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். சிலவேளை தமது உயிரைப் பாதுகாக்க இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றார் ரூபன்.

அகதிமுகாம்களில் நடக்கும் சம்பவங்களை விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். இதை நான் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட மக்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்பதுதான் நல்லது. எனினும் ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன். 13-9-90 அன்று தமது மிதி வெடியின் சக்தியைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக பச்சைநூர் அகதிமுகாமில் இருந்த இருசிறுமிகளை தாம் புதைத்த மிதிவெடிகளுக்கு மேலால் நடந்து செல்லச் சொன்னார்கள் இராணுவத்தினர். இதனால் ஒன்பது வயதுச் சிறுமி காலையும், எட்டுவயதுச் சிறுமி கண்ணையும் இழந்துள்ளனர். வைத்திய பரிசோதனை செய்வதற்கு தடுப்பு முகாமில் இருந்த யூதர்களைப் பயன்படுத்தினான் ஹிட்லர். எமது நாட்டில் இராணுவ பரிசோதனைகளுக்கு தமிழர் களைப் பயன்படுத்துகிறார் என்றார் வேதனையுடன்.

அகதி முகாமிற்கு வெளியி லும் தமிழர்கள் உண்டா? என்று கேட்டேன். அகதி முகாமில் கைதுசெய்யப்படுவதும், பெண்கள் பாலியல் வன் முறைக்குட்படுத்தப்படுவதும், தொடர்வதால் முகாம்களுக்குச் செல்லப் பயப்பட்டு அனேகர் காடுகளில் வாழ்கிறார்கள். இதைவிட மலைமுந்த லில் 78 குடும்பம், பாட்டாளிபுரத்தில் 100 குடும்பம், வீரமாநகரில் 110 குடும்பம். அரிப்பில் 184 குடும்பம், நல்லூரில் 88 குடும்பம் எந்தவித உதவியும் இல்லாமல் இருக்கிறார்கள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சமூகநல ஸ்தாபனங் களின் பார்வை மறந்தும் கூட இவர்கள்மீது படுவது இல்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம் அகதிமுகாம் இருந்தால் தான் உதவி செய்வோம் என்பது தான். தங்கள் பொறுப்பில் உள்ள அகதிமுகாம்களில் கைது செய்தலையும் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதையும் கண்முன்னால் பார்த்தும் இப்படியான பதிலைச் சொல்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவை இயங்குகின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்றார். தலையைப் பிய்த்துக் கொண்டேன்.      

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 4

நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன்.

வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார்.

ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார்.

பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார்.

இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது.

திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன.

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 5

பொதுவாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதானால் எத்தனை மைல் நடக்க வேண டும் என்று சொல்லமாட்டார்கள். எத்தனை மணித்தியாலம் நடக்க வேண்டும் என்றே கூறுவார்கள். எட்டு மணித்தியால நடை, பத்து மணித்தியால நடை என்பார்கள். இந்தப் பிரயாண ஆரம்பத்தில் "இந்தப் பிரயாணம் தான் கொஞ்சம் கஷ்டம். பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டால் அதிகாலை 4.00 மணிக்கு எங்களுடைய நடையில் (திருமலை மாவட்டப் போராளிகளின்) போய்ச்சேரலாம். உங்களுடைய நடைக்கு அதிகாலை 5.30 மணிசெல்லும் என நினைக்கின்றேன் என்றார் பதுமன். இடையில் எங்குமே தங்கமுடியாது. இந்தப் பயணத்தின்பின் நீங்கள் பொது மக்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும் என்றார். 14-9-90 அன்று திருமலையில் கால் வைத்த நாம் 23-9-90 அன்றுதான் பொதுமக்களைக் கண்ணால் காணப்போகின்றோம். (ஏற்கனவே நான் குறிப்பிட்ட வாழைத்தண்டில் இருந்த காய்களை மக்கள் விழுந்தடித்துப் பொறுக்கி முண்டி விழுங்கிய சம்பவம் 25-9-90 பிரயாணத்தின் போது நடந்தது)

இதுவரை நாம் சந்தித்த முகாம்களில் இருந்தவர்கள் பொது மக்களைக் காணமுடியாது? அவர்களுடைய உலகம் இந்தக் காடுகளும், போராளிகளும் தான். நான் ஒருநாள் ஒரு போராளியைச் சந்தித்து இதுபற்றி உரையாடியபோது, தற்போதைய போரைவிட ஒரு நெருக்கடி யானநிலை இந்திய இராணுவத்துடனான போரில் இருந்தது என்று குறிப்பிட்டார். தனக்கு இரு மருமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர் களின் நினைவு தன்னை அடிக்கடி வாட்டும் என்றும் குறிப்பிட்டார். தான் அப்போது குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இருந்த பகுதியை அண்டிய காடுகளில் இருந்ததால் காலையில் எட்டு மணியளவில் உயரமான மரங்களில் ஏறி நின்று பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தை களைக் கண்டு ஆனந்திப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் குழந்தைகளைக் காணு ம் போது தனது மருமக்களைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறினார். “மென்மையான மனது கொண்டவர்களே போராளிகளாகின் றார்கள். அவர்களால்தான் தமது இனத்திற்கெதிரான அடக்குமுறை களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதைச் சகித்துக்கொள்ளும் மனம் உடையவர்களே போராட்டத்துக்கு வெளியில் இருப்பவர்கள்” என்று ஒருமுறை போராளி சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) கூறியது நினைவுக்கு வந்தது.

எமது பயணத்தில் இன்னோர் அம்சம் ஓர் இடத்திலிருந்து எம்மை அழைத்துச் செல்லும் போராளிகள் நாம் சென்று அடையப்போகும் முகாமைச் சேர்ந்தவர்களை இடையில் சந்தித்து எம்மை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். திரு. பதுமனும் அவரது மெய்ப்பாதுகாவலர் சிலரும் மட்டுமே எம்முடன் திருமலை மாவட்ட எல்லைவரை வருவார்கள். ஏனெனில் ஒவ்வொரு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பகுதிக் காடுகளைப் பற்றித் தெரியும். இடையில் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களால் மட்டுமே சரியான பாதையில் எம்மைக் கொண்டு போய்ச்சேர்க்க முடி யும்.

இன்றைய பிரயாணம் எட்டு இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டிய பிரயாணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு முகாமைப் பகலில் கடந்துவிட்டோம். இந்தப் பிரயாணத்தில் யாராவது கதைக்கவோ, இருமவோ முடியாது. முகாம்களுக்கு மிக அருகிலேயே எமது பிரயாணம் தொடர்வதால் சப்பாத்து ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி எம்மைப் பொறுப்பெடுக்கப் போகும் குழுவும் தனது பிரயாணத்தைத் தொடங்கியிருந்தது. பயணத்தின் இடையில் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுப் பபிற்சிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவானதும் முகாம்களின் வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. மிக அருகருகே இருந்த இந்த இராணுவ முகாம் ஏழும் ஒரே இரவில் கடக்க வேண்டியவை இந்த ஏழு முகாமில் எந்த முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எமது பாதையில் படுத்திருந்து தாக்கினாலும் சண்டை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. முழுவதும் வயல்கள். இரவு வந்ததும் ஒருவாறு நான்கு முகாம்களைக் கடந்து விட்டோம். ஐந்தாவது முகாமை நோக்கி நேராக நடக்கவேண்டும். முகாமுக்கு நூறு யார் தூரத்திலேயே எமது பாதை மாற்றப்பட்டது. அந்த இடத்தில் எம்மைப் பொறுப்பேற்க அடுத்த குழு தயாராக இருந்தது.

புதிய குழுவுடன் இணைந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம். ஆறாவது முகாமை அண்மித்ததும் அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் இரவில் அவ்வாறு இடையிடையே சுடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதன்பின் தான் சிரமம்தெரிந்தது. முழுக்க சேறுகள் நிறைந்த பாதை. அப்போதுதான் நாம் ஒரு பொது மகனைக் கண்டு கொண்டோம். அப்பாடா!

இப் பொதுமகன் எமக்கு வழிகாட்ட வந்தவர், இப் பகுதியை அங்குலம் அங்குலமாகத் தெரிந்துகொண்டவர். பெரும்பகுதி முழங்கால் அளவு சேறு, துப்பாக்கிகளையும், முதுகில் தொங்கும் சுமையான பைகளையும் சுமந்துகொண்டு போராளிகள் படும்பாடு பெரும்பாடுதான். பொத்துப்பொத்தென்று விழுவார்கள் உடல் முழுவதும் சேறு பிரளும். சேற்றை எண்ணிச்சப்பாத்தைக் கழற்றினால் பின்பு வரும் வயல்களில் உள்ள தொட்டால் சுருங்கி கால்களை விறாண்டும். திருப்பி சப்பாத்தைப் போட முடியாது. அடுத்த சில நிமிடங்களில் சேறைச் சந்திக்க வேண்டியிருக்கும். வழிகாட்டியாக இருப்பவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று இங்கே முள்ளுக்கம்பி உண்டு, இங்கே பள்ளம் உண்டு என்று இரகசியமாகக் கூறுவார். முதுகில் சுமை. நடைக் கஷ்டம். நடக்கும்போதே இப்போராளிகள் தூங்குவதும் உண்டு. தூக்க நடை நடப்பவர்கள் வயல் வரம்புகளில் இடறி விழுவார்கள். வரிசையாகச் செல்லும் போது சிலர் நின்ற நிலையிலேயே தூங்குவார்கள். பின்னால் வருபவர் முதுகில் தட்டி முன்னே போ என்று சமிக்ஞை செய்யவேண்டும். இந்தப் பகுதியில் நடக்கும்போது (எமக்கு அடுத்த பயணத்தில்) ஒருவர் தூக்கத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். ஒருவாறு எட்டு முகாம்களையும் கடந்து விட்டோம். ஆனால் போக வேண்டிய இடம் இன்னும் உண்டு. அதிகாலை 3.15 மணியளவில் சோர்ந்து படுத்து விட்டோம். அப்பாடா என்ன சுகம்! இப்போதும் சிலர் காவலில் நின்றார்கள்.

மீண்டும் காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் காலை 10.30 வரை நீடித்தது. இரவு மாத்தயா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த முட்டைமாவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து உள்ளங் கையில் கொட்டிச் சாப்பிட்டதைத்தவிர வேறுசாப்பாடே இல்லை. இனிக்கதைக்கலாம் என்றார் பதுமன். "என்ன பதுமன் இவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டோம். ‘உங்களுக்காகத்தான் இந்தப்பாதை. இல்லாவிட்டால் கழுத்தளவு தண்ணீர், சேறு, காடுகளுக்குள்ளால் தான் போகவேண்டும்!' என் றார்.

வழிவழியே ஆற்றங்கரைகள், காடுகளில் மக்கள் கூட்டம்கூட்டமாக இருப்பதைக் கண்டோம். இவர்கள் அகதி முகாமுக்கு போகவில்லையா? என்று வழிகாட்டியாக வந்த அந்தப் பொதுமகனைக் கேட் டோம். 'நான்கூட ஒருநாள் அகதிமுகாமில் இருந்துள்ளேன். ஆனால் முஸ்லிம் ஊர் காவல் படையினரின் தொல்லை டொறுக்கமுடிய வில்லை. அது தான் ஓடிவந்து விட்டேன் என்னைப்போல் வெளியேறியவர்கள்தான் இவர்கள்!' என்றார். ‘அகதி முகாம்களில் என்னதான் நடக்கிறது?" என்று கேட்டேன். எதையென்று சொல்ல...' என்றவாறே தொடர்ந்தார்.             

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 6

இராணுவ முகாமுடன் இணைந்ததாக அல்லது அருகில் இந்த அகதி முகாம்கள் இருப்பதால் எப்போதும் மரண பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. இராணுவத் தினரின் அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினரின் 'மூட்' எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வாழ்வு நிர்ணயிக்கப்படுகின்றது என்றார். 'எங்கேயாவது ஏதாவது பிரச்சினை நடந்தால் அகதிமுகாமுக்குள் வந்து அப்போது தாங்கள் தீர்மானிக்கும், அல்லது ஏற்கனவே அவர்களின் தீர்மானத்தில் உள்ளவர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். முன்னரெல்லாம் இவர்களை பூஸாவுக்கோ, வெலிக்கடைக்கோ கொண்டு செல்வார்கள். இப்போது கொண்டு செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றார். கதை இங்கேயே முடிந்து விடுகிறது என்றார். சிலவேளை பலர் ஊர்க்காவல் படையால் அல்லது இராணுவத்தால் தாக்கப்படுவார்கள். இதைத்தான் செய்கிறார்கள் என்றால் பெண்கள்மீது இவர்கள் இழைக்கும் கொடுமைதான் கடவுளுக்கே பொறுக்காது’ என்றார்.

முதன்முதல் சுங்கான் குழியைச் சேர்ந்த ஞானசேகரம் பகவதிப் பிள்ளை என்ற பெண்ணை முஸ்லிம் காவல் படையினர் கற்பழித்தார்கள். 2-8-90 இல் சீனன் குடாவில் சசி என்ற பெண்ணை சிங்கள ஊர்காவல் படை யினர் கற்பழித்தார்கள் என்றார். தொடர்ந்து ‘அகதி முகாமுக்குள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வருவார்கள். இந்த அகதிமுகாம்கள் மேலே கிடுகினால் வேயப்பட்டு படங்கினால் சுற்றிவர கட்டப்பட்டுமிருக்கும். படங்கை விலத்தி வருவார்கள் இவர்களைக் கண்டதும் பயத்தினால் பெண்கள் முகத்தைத் திருப்பி குப்புறப்படுப்பார்கள். டோர்ச் லைட்டை அடித்து முகத்தைக் காட்டு, முகத்தைக் காட்டு என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாங்கள் தீர்மானிக்கும் பெண்ணைக் கொண்டு போவார்கள். கொண்டு போகும் பெண்களை உயிருடன் விடுவதில்லை. சிலவேளை முகாமுக்குள்ளேயே வைத்தும் கற்பழிப்பார்கள். சுற்றிவர குழந்தைகள் இருக்கும். கதறக் கதற ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் போது அதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை எப்படிப் பாதிக்கப்படும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி அங்கு இருப்பது?’ என்று கேட்டார்.

          குடும்பங்களே சிதறிப்போய்விட்டன. பெரும்பாலான ஆண்கள் மனைவி பிள்ளைகளை விட்டு முல்லைத்தீவுக்கு போய் விட்டனர். புதுக்குடியிருப்பில் சிலர் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். வவுனியாவில் வாங்கி வந்து புதுக்குடியிருப்பிலோ யாழ்ப் பாணத்திலோ விற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு வரும் திருமலை மாவட்டப்போராளிகள் மூலமாகவும், திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் மூலமாகவும் தான் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; முகாமில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார். 'எந்த ஊர் மக்கள் புதுக்குடியிருப்பில் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். 'பெரும்பாலும் தம்பலகாமம் ஆட்கள்தான் அங்கே இருக் கிறார்கள்' என்றார். பெண்களைக் கொண்டு பேகும் போது தமிழீழம் தானே கேட்டீர்கள். எல்லாம் கிடைக்கும் வாருங்கள் என்று முஸ்லிம் ஊர்காவல் படையினர் கூறுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி என் பவருடைய 18 வயது மகள் 15-10-90 அன்று இவ்வாறு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கை சபையில் போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் பாக்கியராசா என்பவரின் மகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தோளில் போட்டுக் கொண்டு போனதாகவும், அவர் உயிருடன் திரும்பவில்லை எனவும் பின்னர் அறிந்தோம்.)

தங்களை அலங்காரம் செய்து கொள்ளும் இளம் வயதுப் பெண்பிள்ளைகளெல்லாம் தங்களை அசிங்கமாகக் காட்ட என்னென்ன மாதிரிக் கோலத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். தலை இழுக்காமல், முகத்தில் கரி பூசி... என்றெல்லாம் கூறினார். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சகோதரங்கள் உண்டு ஆனபடியால் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெண்பிள்ளைகளின் பெயரைக் கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். (ஆரம்பத்தில் நிலைமையை இயல்பாகக் கதைத்தவர் பெயர்களை நான் குறிப்புப்புத்தகத்தில் குறித்ததும் நிறுத்திக் கொண்டார்) 'எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு. எங்களுடைய சமூக அமைப்பு இன்னும் மாறவோ, காலத்துக் கேற்ற மாதிரி வளர்ச்சியடையவோ இல்லை - நீங்கள் இந் தத்தர்மசங்கடமான நிலையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்டார்.

சரி ஆண்களுக்கு நடந்ததைக் கூறுங்கள் என்றேன். 5.9.90 அன்று கந்தளாய் அகதி முகாமில் சித்திரவேல் கனகலிங்கம் என்பவர் இராணுவத் தால் தாக்கப்பட்டார். 9.9.90 அன்று தம்பலகாமம் அகதி முகாமைச் சேர்ந்த கந்தசாமி, ஐயாத்துரை ஆகியேர் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொலை செய்யப் பட்டு 98 கொலனி வயல் வெளியில் பிணமாகக் கிடந்தனர். 96 ஆம் கொலனியைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரும் அகதி முகாமிலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு வயது 57. மற்றும் முத்துக்குமா ரு (மேற்கு - கொலனி 42 வயது) ராசதுரை (முள்ளியடி - 45 வயது), பேபி ராசா (மேற்கு - கொலனி - 28 வயது). சந்திரசேகரம் (நடுப்பன் திடல் - 36 வயது), ராசதுரையின் மகள் (முள்ளி யடி 13 வயது), கோணநாய கம் (கள்ளிமேடு - 32 வய து). ஜயா (மேற்குக்கொலனி - 28 வயது), சகோதரர்களான மேற்குக் கொலனி வாசிகளான 30 வயதான பாலகிருஷ்ணன், 26 வயதான கோபால கிருஷ்ணன் இவர்களெல்லாம் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 9 ஆம் மாதத்தில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ஆட்கள் அவ்வளவு தான்! என்றார்.

கிண்ணியாப் பக்கம் நிலைமை என்னமாதிரி? என்று கேட்டேன். கிண்ணியா, சின்னக்கிண்ணியாவைச் சேர்ந்த 86 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கருதி பணயக் கைதிகள் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். எங்கே தடுத்துவைத்துள்ளனர்? என்றேன், கிண்ணியா நெற்களஞ்சியத்தில் தான் அந்தத் தடுப்புமுகாம் உண்டு. இவர்களைப்பற்றியும் கந்தளாயில் உள்ள அகதிகள் பற்றியும் அறிவது கொஞ்சம் கஷ்டம் என்றார்.

“சிங்களவரால் ஏதும் தொந்தரவில்லையா?” என்று கேட்டேன். தொந்தரவு இல்லையா? ஜோண் சில்வா என்று ஒருவன் இருக்கிறான்… என்றவாறே தொடர்ந்தார்.            

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 7


தம்பலகாமத்தில் ஜோண் சில்வா என்றொருவன் இருக்கிறான். தமிழர் மத்தியிலேயே இவனும் இருந்து வந்திருக்கிறான். பட்டிமேட்டில் உள்ள பிள்ளையார் கோயில் காணியில்தான் இவனது வீடு இருந்தது இவனுக்கு இரண்டு பெண்களும் ஆண்பிள்ளையும் உண்டு. இவனது மகனை றாலாமி' என அனைவரும் அழைப்பர். இவனது பெயர் விஜேதாஸ. என்ன காரணத்தினாலோ ஜே. வி. பி. யினர் றாலாமியைச் சுட்டு விட்டனர்.

          தம்பலகாமத்தில் நிறைய மாடுகள், எருமைகள் உண்டு. இங்கு பாலை வாங்கி அதைக் கொழும்புக்கு அனுப்பி வியாபாரம் செய்வதுதான் ஜோண் சில்வாவின் தொழில். அதனால் இவன் பெரிய பணக்காரனாகி விட்டான். அத்துடன் தம்பலகாமம் கோணேசர் கோயிலுக்குச் சொந்தமான காணியில் விவசாயம் செய்துவந்தான். ஆரம்பத்தில் இவனுக்கு குத்தகைக்கு வயலைக் கொடுத்து வந்த கோணேசர் கோயில் நிர்வாகம் பின்னர் குத்தகையை ஏலத்தில் விட ஆரம்பித்தது. ஏலத்தில் இவனுக்கு நிலம் நிலம் கிடைக்காமல் போயிற்று. பின்னர் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் போய் அத்துமீறியிருந்தான் அத்துமீறி இருக்கும் இவனை வெளியேற்ற தமிழரான உதவி அரசாங்க அதிபர் முயற்சித்தார். இவனுக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தது. அன்றிலிருந்து தம்பலகாமத்துக்கு சிங்களவரே உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறிய சிங்களவனைக் காப்பாற்ற உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு தொடர்ந்து சிங்களவரை அரசு நியமிக்கிறது என்றார்.

தம்பலகாமம் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் வயல் உள்ளது?' என்று கேட்டேன். 'ஆயிரம் ஏக்கர் வரையில் இருக்கும்' என்றார். தொடர்ந்து தம்பலகாமம் கோயில் வீதியில் அரசமரம் ஒன்று நின்றது. தற்போது அது வெட்டப்பட்டுவிட்டது. அரசமரம் அங்கே இருந்தபடியால் தம்பலகாமம் கோயிலுக்குச் சொந்தமான காணியின் அரைப்பங்கு சிங்களவர் வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி சிங்களவரை குடியேற்றும் முயற்சிகளில் ஜோண்சில்வா ஈடுபடுகிறான் என்றார். அது சாத்தியப்படக் கூடிய விஷயமா? என்று கேட் டேன். "ஏன் இன்று 13ஆம் கட்டை, ஜெயந்திபுர எல்லாம் சிங்களவர் குடியேறவில்லையா? குடியேறிய பின் சிங்களப் பெயரை வைத்தால் அதன் பின் அது சிங்களக் கிராமம்தானே! அதுதானே இங்குள்ள நடை முறை என்றார். அரசமரம் நின்ற இட மெல்லாம் சிங்கள இடமாம்; புதிய விளக்கம் (பின்னர்நான் சந்தித்த துரைநாயகம் என் பவரும் அரசமரத்தை வெட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். பாராளுமன்றத்தில் கூட சிறில் மத்யூ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். திரு. துரைநாயகம் ஒரு கட்டத்தில் "முளைக்கும் ஒவ்வொரு அரச மரத்தையும் வெட்டுவதன்மூலம் எதிர் காலத்தில் வெட்டுப்படவிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை வெட்டுகிறோம்' என்று விளக்கம் கொடுத்தார்.)

அதெப்படி”? என்று நான் கேட்டபோது 'அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்த விகாரை இருக்கவேண்டும். புத்தவிகாரை ன் மணி ஓசை கேட்கும் இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான நிலம் என்று சிறில் மத்யூ ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். சிறில் மத்யூ ஊட்டிய இன வாத விதைதான் இன்று தானே முளைக்கும் அரசமரத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான இடமென்று வாதிட வைக்கிறது' என்று விளக்கம் கொடுத்தார்.

சிங்கள ஊர்காவல்படையி னரைத் தூண்டி விடுவது ஜோண்சில்வாதான் என்றார். சிங்கள ஊர்காவல் படையால் இந்தமுறையும் தொந்தரவு உண்டா? என்று கேட்டோம் - தற்சமயம் மிகப்பிரச்சினையானவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினர் - முன் னர் சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை என்றிருந்து பின்னர் இந்திய இராணுவம் என்றிருந்து தற்பொழுது முஸ்லிம் ஊர்காவல்படை தமிழர் அழிப்பை பொறுப்பேற்றிருக்கிறது. எப்போதும் தமிழர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழின அழிப்பில் நடிகர்கள்தான் மாறியிருக்கிறார்களேயொழிய பாத்திரங்கள் மாற வில்லை என்றார் விரக்தியுடன்.

இந்திய இராணுவம் அப்படியென்ன வித்தியாசமாகச் எல்லா இடமும் செய்தது? தமிழரைச் சுட்டது போல இங்கேயும் சுட்டிருக்கும்!' என்றேன். தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த நவரட் ணம் என்பவரை உடம்பில் துணியால் சுற்றி ரின்னர் ஊற்றித் தீமூட்டியது. இப்படி வேறெங்காவது செய்துள்ளதா? என்று சினத்துடன் கேட்டார். கோவிக்க வேண் டாம். இதையொத்த சம்பவங்கள் பலதைச் செய்துள்ளது தான். ரின்னர் ஊற்றிக் கொளுத்தியது நான்இப்போது தான் அறிகிறேன். சரி நீங்கள் ஜோண்சில்வாவைப் பற்றிக் கூறுங்கள் என்றேன்.

'ஜோண்சில்வாவினால் ஊக்குவிக்கப்படும் சிங்கள ஊர்காவல்படை போன கலவரத்தில் புதுக்குடியிருப்பில் மட்டும் முப்பத்து மூன்று பேரைக் கொன்றது' என்றார். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். போன கலவரத்தில் கோயிலடியில் அகதிகளாக இருந்தவர்களிடம் இராணுவம் வந்து நீங்கள் பழைய தொழில்களைச் செய் யலாம். இனிப் பிரச்சினையில்லை என்றனர். அதை நம்பி, புதுக்குடியிருப்பில் உள்ள அரிசிமில் ஒன்றுக்கு வேலைக்குப் போன தமிழர்கள் 33 பேரை ஊர்காவல் படை கடத்திக்கொண்டு போய்ச் சுட்டது. அதுமட்டுமல்ல பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மில் உரிமையாளர் சபாரட்ணத்தின் கைவிரலில் மோதிரம் இருப்பதைக் கண்டு விரலையும் வெட்டிக் கொண்டு போனது என்றார்.

இம்முறையும் இப்படி ஏதும் திட்டமிருக்குமா? என்று கேட்டேன். பட்டிமேட்டில் உள்ள ஸ்ரீ சாரதா வித்தியாலயத்துக்கு வந்து அகதிப்பிள்ளை களைப் படிக்கச் சொல்கிறார்கள். அது இராணுவமுகாமுக்குக் கொஞ்சம் தொலைவிலுள்ளது. படிக்கப்போகும் பிள்ளைகளை அப்படியே அள் ளிக்கொண்டு போகும் திட்ட மிருக்கும் என்பதால் பிள்ளைகள் படிக்கப் போகவில்லை என்றார். ஏன் இராணுவ முகாமிலேயே பிடிக்கிறார்கள் தானே என்று கேட்டேன். இராணுவ முகாம் பக்கத்தில் உள்ள இடத்தில் என்றால் தாங்கள் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கும்; கொஞ்சம் தள்ளியென்றால் தங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஊர்காவல்படை தான் கொண்டு போயிருக்கலாம் என்று இராணுவத்தினர் தப்பிக்கப் பார்ப்பார்கள். இப்படித்தானே போன கலவரதில் மில்லில் இருந்து கொண்டு போய் முப்பத்து மூன்று பேரைக் கொன்றவர்கள் என்றார். தமிழின அழிப்பில் தான் எத்தனை வகை என்று எண்ணிக் கொண்டேன்.

அகதிமுகாம்களில் நடக்கும் விடயங்கள் பற்றி இதற்கு முடிவு காண சுயமாக ஏதாவது செய்தார்களா? என்று கேட்டேன். இதற்கு என்ன செய்ய முடியும். பொறுப்பான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே கையைவிரிக்கும் போது என்றார்.                                         

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 8


'முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவார்கள், மிகக்கடுமையான நோயாளிகளை திருக்கோணமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டியிருக்கும், “நாங்கள் எங்களுடைய வாகனத்தில் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். ஆனால் இடையில் இராணு வமோ, முஸ்லிம் ஊர்காவல் படையோ உங்களை எமது வாகனத்திலிருந்து இறக்கிக் கொண்டு போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குச் சம்மதமானால் வாகனத்தில் ஏறுங்கள்என்று கூறுவார்கள். யாராவது போகச் சம்மதிப்பார்களா? நடப்பது நடக்கட்டும் என்று இங்கே கிடந்து சாக வேண்டியதுதான்! என்றார்? வாகனங்களில் இருந்து இவ்வாறு யாராவது இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆலங்கேணியில் மூன்றுபேரும் ஜெயபுரவில் ஒன்பது பேரும் இவ்வாறு இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது சண்டை தொடங்கியவுடன் இ.போ.ச. பஸ்களில் இருந்து என்றார்.

          சரி செஞ்சிலுவைச் சங்கத்தை விடுங்கள். வேறு யார்யாரிடம் இந்த விடயங்கள் தொடர்பாகமுறையிட்டிருக்கிறீர்கள்: என்றேன். பச்சநூர் முகாமுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று அகதிகளைப் பார்வையிட வந்தது. அதில் மாவை சேனாதிராசாவும் வந்திருந்தார். அகதி முகாம் கொடுமைகளை அவரிடம் சொல்லி எமது பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடம் அகதிகள் கேட்டார்கள். "எங்களுக்கே பாதுகாப்பு இல்லை உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார் மாவை சேனாதிராசா. இதற்குப் பின் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? என்று வினாவினார்.

உயர் இராணுவ அதிகாரிகள் யாரிடமாவது இது சம்பந்தமாகக் கதைக்க வில்லையா? என்று கேட்டேன். இந்தப் பகுதியில் சுரேஸ் காசிம் என்ற முஸ்லிம் இராணுவ அதிகாரிதான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கிறான். அவனிடமும் மக்கள் கேட்டார்கள். பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களின் நிலைமை என்ன மாதிரி? என்று அதற்கு அவன் சொன்ன பதில்அகதி முகாம்களில் இருந்து பிடிபடுபவர்களைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை இதைப் போன்ற குறைபாடுகளைச் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்று சொல்கின்றான் என்றார் அவர். நானும் சுரேஸ் காசிமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்தான் என்றேன் நான்.

'போன கலவரத்தில் ஆலங்கேணியில் இருந்த ஒரு பெண் பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறான் சுரேஸ் காசிம். அந்தப் பிள்ளை இயக்கத்துக்கு நல்ல உதவி. வீட்டுக்குப் போய் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அந்தப் பிள்ளையின் தங்கச்சிதான் முன்னுக்குப்போனது. அக்காவுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு நான்தான் அவள் என்று சொன்னது. தலையிலிருந்து கால்வரை மூன்று மகஸீன் பொழிந்து தள்ளினான். ஆள் இரண்டாகப் போய்விட்டது என்றார்.  என்ன இயக்கப் பாஷையெல்லாம் பேசுகிறீர்கள்? என்று கேட்டேன். நாளாந்தம் இயக்கத்தோடுதான் பழகுகிறோம். திருக்கோணமலையைப் பொறுத்தவரை இயக்கமும் பொதுமக்களும் வேறு வேறல்ல. எல்லாப் பிரச்சினையும் எல்லோருக்கும் தான் என்றார் அவர். சரி மீண்டும் சந்திப்போம் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம்.

போகும் வழியில் பதுமனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 22-09-90 அன்று புதுக்காவே என்ற இடத்தில் சிங்கள ஊர் காவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் மூன்று ஊர் காவல் படையினர் கொல்லப்பட்டதாயும் இரண்டு சொட் கண்கள், எட்டுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாயும் அச்செய்தியில் விபரமாக எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது.

நாம் போய்ச் சேர்ந்த முகாமில் இருதினங்கள் தங்கினோம். பின்னர் 24-09-90 அன்று பிற்பகல் எமது பணயம் ஆரம்பமானது. இப்பயணத்தில் 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயக்கத்துடன் ஈடுபாடு கொண்ட ஒருவரைச் சந்தித்தோம்.

          அன்றிலிருந்து இவரும் எமது பயணத்தில் இணைந்து கொண்டார். இவரது பெயர் துரைநாயகம். நான்கு பிள்ளைகளின் தந்தை. சிறிலங்கா, இந்திய இராணுவங்களிடம் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திருமலை பற்றிய புள்ளி விபரங்கள் நிறையவே வைத்திருந்தார். எந்தச் சம்பவத்தைக் கேட்டாலும் திகதி வாரியாகக் கூறுவார். அவ்வளவு ஞாபகசக்தி படைத்தவர். பொதுமக்களை நாங்கள் சந்தித்த பின்னர்தான் திருமலையில் எவ்வளவு குடும்பஸ்தர்கள் முழுநேர உறுப்பினர்களாக பணியாற்றுகின்றார்கள் என்பதை உணர முடிந்த். இவர்களை வெறும் ஆதரவாளர்களாக கருதமுடியாது. ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு தமது கடமைகளில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். கலியாணம் மட்டும் முடிக்காமலிந்தால் உங்களைவிட நான் தீவிரமாயிருப்பேன் என்று வீரம் பேசும் யாழ்ப்பாணத்துக் கடும்பஸ்தர்கள் பலரை நினைத்துக் கொண்டேன்.

              இந்தப்பாதை அட்டைகள் முதலைகள் உள்ள பாதையென்றார் பதுமன். கறுப்பு நிறமான அட்டைகள் உடலில் பிடித்துக்கொள்ளும் அப்படியே எமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் இலேசில் பிடுங்கியெறிய முடியாது.

          பிடுங்கியதும் உடம்பிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கும். நிறுத்துவரு கஷ்டம் என்றார். முதலைகள் பற்றிக்கேட்டபோது கும்புறு பிட்டியைச் சேர்ந்த ராஜன் என்ற போராளி முதலைக்குப் பலியாகியுள்ளான். 85 ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார் அவர். பெரும்பாலும் விலங்குகளைத் தான் முதலை பிடிக்கும் என்றாலும் பெரிய முதலைகள் மனிதர்களை இழுத்துக் கொண்டு போகும் என்றார். "முதலைபிடித்து யாராவது தப்பியுள்ளார்களா?” என்று கேட்டேன், அப்போது துரை நாயகம் குறுக்கிட்டு "வள்ளி என்ற பெண்ணை முதலை பிடித்தது. பெரிய போராட்டமே நடத்தித்தான் அப் பெண்ணைக் காப்பாற்றமுடிந்தது இப்போதும் அந்தப்பெண் உயிருடன் இருக்கிறார். இப்போது அவரை முதலை வள்ளிஎன அழைப்பார்கள்" என்றார்- பொருத்தமான பெயர்- வேறு என்ன மிருகங்களால் தொல்லை எனக் கேட்டேன். பாம்பு, யானை, கரடி இவைதான் மிகக் கூடிய தொல்லை கொடுக்கக் கூடியன. மட்டக்களப்புத் தளபதி கருணாவைக்கூட கரடி ஒரு தடவை பிடித்ததுஎன்றார் பதுமன். மட்டக்களப்பில் உள்ள கரடியனாற்றைச் சேர்ந்த துமிலன் (விஜய குமார்) என்ற போராளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரவே திருமலையில் யாருக்காவது பாம்பு கடித்ததா என்று கேட்டேன், ‘‘சமீபத்தில் கூட காயமடைந்த ஒரு போராளியைக் கொண்டு வரும் போது இராணுவத்தினர் தாக்கினார்கள். இராணுவத்தினருடன் மோதிக் கொண்டு ஒரு பற்றைக்குள் போகும் போது ஒருவனுக்கு பாம்பு கடித்தது. இருக்கும் இடத்தில் பாம்பு. எதிரில் இராணுவம். போராளிகளின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்' என்றார். தொடர்ந்து இப்படி காயமடைந்தவர்களைக் கொண்டு வரும்போது மட்டும் பன்னிரண்டு போரா ளிகளை இழந்துள்ளோம்' என்றார்.

சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை, முஸ்லிம் ஊர்காவல்படை, அட்டை, பாம்பு, கரடி, யானை, காட்டிக் கொடுப்போர் இப்படி எத்தனை விலங்குகளுடன் தான் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என் நினைத்துக் கொண்டேன்.                                       

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 9

எமது இந்தப் பயணத்தின் இடையில் பொதுமக்கள் கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டார்கள். அனைவருக்கும் இவர் மாத்தயா என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. சில காலத்துக்கு முன்னர்தான். அப்பகுதிகள் எல்லாம் சுற்றிப் பார்த்து மக்களைச் சந்தித்திருந்தார் மாத்தயா. மக்கள் மாத்தயாவைப் பார்த்துச் சிரித்தும், கையசைத்தும் தமது நட்புணர்வை வெளிப்படுத்தினர். அப்போது பதுமன் இந்தச் சனங்கள் சரியான மெமறிச் சனம் அண்ணே. தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி நடந்தபோது நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்பாட்டுத் தொடங்கியவுடனேயே நிகழ்ச்சி முடிஞ்சிட்டுது எண்டு வீட்டுக்குப் போகத் தொடங்கி விட்டுகள் என்றார். மாத்தயா சிரித்துக்கொண்டார்.

போகும் வழியில் ஒரு இராணுவ முகாமிலிருந்து எம்மை நோக்கி டோர்ச் லைட் அடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் புரியாததாலோ, கொழுவினால் வீண்வம்பு என்று நினைத்தார்களோ ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. எம்மைப் பொறுப்பேற்க வந்திருந்த குழுவினர் இடையில் ஒரு ஜீப் போயுள்ளது இப்போது வரவேண்டாம் என்றனர். சிலவேளை திரும்பிப் போகலாமா என்றுகூட ஆராயப்பட்டது.

அப்போது மாத்தயா திரும்பிப் போவது என்பது சரி வராது. வழியில் ஆமி கிடந்தால் நல்ல அடி கொடுத்துவிட்டுப் போவோம் என்றார். அப்போது அவரது உறுதியின் வெளிப்பாட்டை உணர முடிந்தது. ஆனால் சென்றது செஞ்சிலுவைச் சங்க ஜீப் என்பது பின்பு தெரியவந்தது.

 திரு மாத்தயா அவர்களுக்கு சென்ற முறை எங்கெங்கு மாலை போட்டார்கள், தமது பகுதிகளுக்கு வராததற்காக எங்கெங்கு கோபித்துக் கொண்டார்கள். என்னென்ன மாதிரி வரவேற்பளிக்கப்பட்டது என்பதையெல்லாம் வழியெங்கும் போராளிகள் எனக்குக் காட்டினார்கள். 25.9.90 அன்று பி. ப 3.00 மணிக்கு திருமலை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள முகாமைச் சென்றடைந்தோம். போகும் வழியில் நின்ற மக்களிடம் மாதயா உரையாடினார். முந்தநாளே இங்கு உங்களை எதிர்பார்த்தோம் என்றார்கள் அந்த மக்கள். வானொலி தொலைக்காட்சிகளை விட என்னமாதிரிச் செய்தி பரவுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் ஒவ்வொரு முகாமிலும் போராளிகளுடனும் குழுத்தலைவர் களுடனும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் உரையாடுவதும் ஆலோசனை நடத்துவதுமாக இருந்தார். ஒரு முகாமில் போராளி களிடையே உரையாற்றும் போது இந்திய இராணுவத்துடனான மோதல் எமக்குப் பல படிப்பினைகளைத் தந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இன்றிப் போராடும் நாம் எமது சொந்த மூலவளங்களை உபயோகித்து புதுப்புது ஆயுதங்கள், பொறிவெடிகள் (ஜொனி போன்றவை) போன்றவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டோம். சூழ்நிலைதான் இக்கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்தியது. ஜொனியை நாம் கண்டுபிடித்ததால் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தும் காலிழந்தும் போயினர் அவர்களை இந்தியாவுக்கு ஓடவைத்ததில் ஜொனியின் பங்கு கணிசமானது. தற்போது இலங்கை இராணுவத்தினரும் ஜொனியினால் பாரிய அளவில் இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள். ஆகவே புதுப்புது ஆயுதங்கள் பொறி வெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொருவரும்  முயல வேண்டும்.

அத்துடன் போராட்டத்தில் காலையோ, கையையோ அல்லது வேறு எந்த அங்கத்தையோ இழந்தாலும் மனந் தளராதீர்கள். அதற்காக சயனைட் அருந்த நினைக்காதீர்கள். வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்க வேண்டும். ஒரு காலை இழந்த கிட்டு இன்று போராட்டத்தில் தன் பங்களிப்பை வழங்கவில்லையா? அதுபோல் கையையோ காலையோ இழந்தாலும் வேறொரு துறையில் உங்களால் சாதனை புரிய முடியும் என்று உரையாற்றினார்.

இன்னொரு முகாமில் சிறுவர்களே கூடுதலாக இருந்தார்கள். அந்த முகாமில் இந்திய இராணுவத்துடனான மோதலில் சிறுவர்களே பெரும் பங்கெடுத்தார்கள். எமது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும், ஏன் உலகமே இந்திய இராணுவத்துடன் மோதுவது புத்திசாலித்தனமல்ல என்று கூறியபோது புதிதாக இயக்கத்தில் சேர்ந்த சிறியவர்கள்தான் இந்திய இராணுவத்தை விரட்டியடித்து சாதனை புரிந்தவர்கள். ஆகவே உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

25-9-90 அன்று தங்கிய முகாமில் குழுத் தலைவர்களுடன் உரையாடும்போது மக்களின் பட்டினி நிலையைத்தான் மிகவும் கவனமாக ஆராய்ந்தார்கள். அப்போது திரு. மாத்தயா அவர்கள் போராளிகளான நீங்கள் உங்களுடைய சாப்பாட்டில் ஒரு நேரச் சாப்பாட்டை பொது மக்களுக்கு கொடுப்பது என்ற முடிவை எடுக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். 1978 ஆம் ஆண்டு மட் டக்களப்பில் சூறாவளியினால் சேதம் ஏற்பட்டபோது அங்குள்ள மக்கள் அகதிகளானார்கள். அப்போது எமது இயக்கத்தவர்கள் கூடி ஐயாயிரம் ரூபா கொடுப்போமா, பத்தாயிரம் கொடுப்போமா எப்படி உதவி செய்வோம் என்றெல்லாம் ஆராய்ந்தார்கள். அப்போது எமது தலைவர் நாம் எமது உணவில் ஒரு நேரச் சாப்பாட்டை அகதிகளுக்கென ஒதுக்குவோம் நாம் அகதிகளுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக் கியமல்ல. எப்படிக் கொடுக்கிறோம் என்பதே முக்கியமானது. எமது சாப்பாட்டின்- ஒரு பகுதியை நாம் உணர்வு பூர்வமாகக் கொடுக்கும் உதவி தான் எமக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கக் கூடியது என்று சொன்னார். அப்போது நாம் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள். எமது உணவுக் காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து நாம் கொடுத்தது சில நூற்றுக் கணக்கான ரூபாய்கள்தான். ஆனால் எமக்கு அது பெரிய திருப்தியைக் கொடுத்தது என்றார் மாத்தயா. 87 ஆம் ஆண்டுக்கு முதல் 36 இயக்கங்கள் இருந்தன. விடுகலைப் புலிகளால் மட்டும் இப்படி நிலைத்து நிற்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போது எனக்குப் புரிந்தது.

நாங்கள் இப்போது இருந்த இடத்திலிருத்து நாங்கள் புறப் பட்டமுகாமுக்கு ஒவ்வொருவரும் கால் நடையாக கால்மூடை அரிசி, சீனி என்பன சுமந்து சென்றார்கள். எமது பயணத்தில் இது போன்ற காட்சிகளை அடிக்கடி கண்டேன். பத்துமணித்தியாலம் பன்னிரண்டு மணித்தியாலம் என்று சுமக்கப்போகிறார்கள். இல்லாவிட்டால் அங்கிருப்பவர்களுக்குச் சாப்பாடு இல்லை. ஒரு முறை சிரித்திரன் ஆசிரியர் சிவா அவர்கள் தமது தலையங்கம் ஒன்றில் தன்மானம் மிக்க தமிழினம் சிலுவை சுமக்க நேரினும் சலுகை ஏந்தாப்பண் புடையது என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. யேசுபிரான் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சிலுவை சுமந்தார். இப்போராளிகள் நாள்தோறும் சுமக்கிறார்கள். இந்தத் தியாகங்களை சிறிலங்கா அரசு நினைப்பது போல் அழித்து விட முடியுமா? இது வெட்ட வெட்டத் தழைக்கும் என நினைத்துக் கொண்டேன்.                                                       

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 10


25.9.90 அன்று திரு. மாத்தயா அவர்களைப் பார்க்க கூடியிருந்த மக்களிடம் சென்று நிலைமையை உரையாடிப் பார்ப்போம் என நினைத் தேன். ஒரு சைக்கிளுடன் மரத்தடியில் நின்ற ஒருவரிடம் சென்றேன். உங்கள் ஊர் எது?” என்று கேட்டேன். தம்பலகாமம்என்றார். தம்பலகாமத்திற்கும் இந்த இடத்திற்கும் எக்கச்சக்கமான தூரமாயிற்றே ஏன் யாழ்ப்பாணப் பக்கம் போகாமல் இந்தப் பக்கமாக ஓடிவந்தீர்கள்? என்றுகேட்டேன். யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் ஆட்களை இரவில் மறைந்திருந்து தாக்குவதால் இந்தப் பக்கமாக வந்ததாக சொன்னார். தம்பலகாமத்தில் தான் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளனவே அங்கு நடந் தவற்றைக் கூறுங்கள். என்றேன்.

நீங்கள் என்னென்ன விடயங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டார். அகதிமுகாம் விடயங்கள், கிண்ணியாவில் தமிழர்களை தடுத்து வைத்திருத்தல், பஸ்ஸில் இருந்து ஆட்களை இறக்கியெடுத்தல், இந்திய இராணுவம் ரின்னர் ஊற்றிக் கொழுத்தியது என்று பட்டியல் போட்டுக் காட்டினேன்.

தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே  ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்என்று கூறினான் என்றார்.

முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார்.

தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன்.

தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார்.

தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன்.

அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன்.                                         

(தொடரும்)

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 11

13.11.1990

பதுமன் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் அந்தப் பொதுமகன் தெருவால் சென்ற மாட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதுகில் “க” என்ற குறியுடன் போகும் அந்த மாட்டில் அப்படி என்னதான் விசேடம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே “என்னமாட்டையே வெறித்துப் பார்க்கிறீர்கள்” என்றேன். 'மாட்டுக்குக் குறி சுட்டிருக்கிறது. இதேபோலத்தான் மனிதருக்கும் குறிசுட்டார்கள். பழைய ஞாபகம் வந்தது' என்றார். மனிதருக்கா? என்றேன். ஆம், இந்திய ராணுவம் இருக்கும்போது கள்ளிமேட்டில் எமது இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர் ஈ. பி. ஆர். எல். எப். இடம் பிடிபட்டபோது கையில் எல். ரி. ரி. ஈ என்று கம்பியால் காய்ச்சிக் குறி இழுத்தார்கள் என்றார். அப்படி சூடுவாங்கியவரின் பெயர் என்ன? என்றேன். பெயர் நவரட்ணம். குருகுல பூபாலசிங்கம் என்பவரின் மகன் என்றார். கள்ளிமேட்டில் ரின்னர் ஊற்றிக்கொழுத்தப்பட்டவரின் பெயரும் நவரட்ணம்தானே என்றேன். அவர்வேறு, இவர்வேறு. அவர் அவரது மைத்துனன் (மனைவியின் சகோதரன்) நவீனன் இயக்கத்தில் இருந்ததற்காகக் கொழுத்தப்பட்டவர் என்றார்.

தொடர்ந்து, யாருக்காக இப்படி வெறியாட்டம் ஆடினார்களோ, அவர்களே இன்று... என்று இழுத்தார். என்ன விடயம் என்றேன். ஈ பி. ஆர். எல். எப். இன் இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ் தம்பிராசா தவராஜா மனைவி சகுந்தலையையே இராணுவம் கடத்திக் கொண்டு போய்விட்டது. இனி தேடவேண்டிய அவசியம் இருக்காது. முன்பு நேவி கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லாதபடியால் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான் என்றார்.

“திருமலை நகருக்குள் வேறு என்ன நடந்தது?” என்றேன். சண்டை தொடங்கிய ஒரு வாரமளவில் தனியார் பஸ் வைத்திருக்கும் கணேஷ் என்பவர் தனது மனைவியின் ஊரான நிலாவெளியை விட்டுப் புறப்பட்டார். திருமலையில் அவருக்கு அறிமுகமாயிருந்த வெளிநாட்டவரான ஆறு வெள்ளையர்களுடன் தனது குடும்பத்தைச் சேர்ந்த பதின்னான்கு பேருடன் புறப்பட்டார். வெள்ளைக்காரருடன் புறப்படுவதால் தனக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கை தான் அவருக்கு இருந்தது. கணேஷ் அவரது மனைவி, அவருக்கு அறிமுகமான பன்னிரண்டு வயதுப் பெண்பிள்ளை ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் பாலு, மகேஸ்வரி ஹாட்பெயர் ஸ்ரோர்ஸ் முதலாளியின் மகன் ஆகியவர்கள் இந்தப் பஸ்ஸில் போனவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள்.

பஸ் ஹொறவப்பொத்தானை போனபோது அங்கு பொஸிசாரால் இடைமறிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓ .ஐ . சி யாக இருந்தவர் ஒரு சிங்களவர். அவருக்கும் கணேசுக்கும் பழக்கம் இருந்தது. ஆகையால் விசாணையில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் கொண்டு வந்த 35 இலட்சம் ரூபா காசும் நகையும் தான் பிரச்சினையாக இருந்தது என்றார். “ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு புறப்பட்டார்கள்"? என்றேன். பணம் வங்கியிலிடப்பட வேண்டியது. ஏழு நாட்களாக வங்கியில் பணம் வைப்பிளிடப்படாததால் தான் இவ்வளவு காசு சேரவேண்டி வந்தது. இந்தவிடயங்கள் எல்லாம் ஆவணங்களுடன் சரியாக நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஓ .ஐ . சி ஒரு கடிதம் கொடுத்திருந்தார் இவர்கள் பயணத்தைத் தொடர தடையில்லை என்று. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்ஸை இராணுவம் மறித்தது என்றார்.

அப்படியானால் வெளிநாட்டவர்கள் நிலைமை என்ன மாதிரி?'' என்றேன். "அவர்களை சிறிலங்காப் படையினர் வேறு பஸ்ஸில் கொழும்புக்கு அனுப்பி விட்டார்கள்” என்றார். பணத்தையும் நகையையும் கண்ட இராணுவத்தினர் பஸ்ஸை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் ஓலம் பெரிதாகக் கேட்டது. அப்போது வாகனங்களின் எஞ்சின் இயக்கப்பட்டு அவற்றின ஓசையால் அந்த ஓலம் மறைக்கப்பட்டது. அன்றிரவு அந்த முகாமில் தீ மூட்டப்பட்டு வெளிச்சம் எரிந்தது. இப்போது பஸ் சாலியபுர முகாமில் உள்ளது என்றார். பஸ்ஸின் இலக்கம் தெரியுமா? என்றேன். 29 ஸ்ரீ... இலக்கம் சரியாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சேவ்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய பஸ்தான் அது என்றார்.

பின்பு என்ன நடந்தது என்றேன். டொலர் முதலாளி ஒரு வழக்கறிஞருடன் இராணுவ முகாமுக்குச் சென்றார். ஆனால் ஜே. வி. பி. தான் பஸ்ஸை மறித்தது என்று கேள்விப்பட்டோம். எமக்கு இதைப்பற்றி முழு விபரமும் கிடைக்கவில்லை என்று அனுப்பி விட்டனர் என்றார். இந்த விபரம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? பஸ்ஸில் போன அனைவரும் தான் முடிந்து விட்டார்களே என்றேன். ஹொறவப்பொத்தாளையில் ரொட்ட வேவாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இருந்தார். அவரை மௌலவி என்று அழைப்போம். அவர் மூலம் தான் இந்தத் தகவல் வெளிவந்தது. அதற்குப் பிறகுதான் டொலர் முதலாளி இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தார் என்றார். தொடர்ந்து வாகனத்தில் பிரயாணம் செய்வது என்பது இனி நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்றார்.

(இதன் பின்னர் இ. போ. ச. பஸ்ஸில் வீரகேசரி நிருபர் வேலாயுதத்தின் மகள் லலிதா பணம், நகை போன்றவற்றுடன் திரு மலையிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டனர் என்றும், 92 ஆம் கட் டையில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், சிங்கள ஊர்காவல் படையினரும் அவர்களின் பணம், நகை போன்றவற்றைப் பறித்துவிட்டு அவர்களை வெட்டுவதற்காக இழுத்தபோது சிங்களவரான இ. போ. ச. சாரதி ஆட்களை விடாவிட்டால் பஸ்ஸை எடுக்கமாட்டேன் என்று மிரட்டியதாகவும் அதனால் லலிதாவும் குடும்பத்தினரும் தப்பினார்கள் என்றும் அறிந்தோம்.)

எப்படியாவது நடந்து போகமுடியாதா? என்று கேட்டேன். அப்போது பதுமன் குறுக்கிட்டு அது மிகவும் சிரமம். நாங்கள் நடத்துவந்த பாதையின் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்தானே. தனி ஆட்களென்றால் பரவாயில்லை. ஒருநாள் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்தது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது. குடும்பத் தலைவனுக்கு என்னை விட வயது குறைவுதான். எங்களை கண்டதும் ''அண்ணே எனது பிள்ளைக்கு ஏதாவது கொடுங்கள். நாங்கள் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. பசியால் குழந்தை கத்துகிறது. என்னால் இந்த நிலையைத் தாங்கமுடியாது என்று எனது காலில் விழுந்து அழுதான். அவர்களைப் பார்க்கவேதனையாக இருந்தது. முகாமில் நோயாளிகளுக்கென வைத்தி ருந்த பால்மாவை எடுத்துக் கரைத்து குழந்தைக்கு கொடுத்து விட்டு, அவர்களுக்கும் உணவும் மற்றும் யானவையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். அன்றைய காட்சியை நினைத்தால்... என்று கண்கலங்கினார் பதுமன். அப்போது “மட்டக்களப்புக்குச் செல்ல ஆயத்தம்”' என்றார்கள்.    

(தொடரும்)


Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 12


14-11-1990

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நாம் இருந்த இடத்திலிருந்து மிக அண்மையில் தான். மட்டக்களப்பையும் திருக்கோணமலையையும் பிரிக்கும் எல்லை ஓர் ஆறு. இது மகாவலி கங்கையின் கிளை நதி. இந்த ஆற்றில் முதலைகள் நிறைய உண்டு. ஓர் இ. போ. ச. சாரதியை இங்குள்ள முதலையொன்று இழுத்துச் சென்றதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். வருடா வருடம் யாராவது ஒருவர் முதலைக்குப்பலியாவது வழக்கம் என்று சொன்னார்கள். ஆற்றின் ஓர் எல்லையான திருகோணமலை மாவட்டப் பகுதிக்குள் புகழ் பெற்ற முருகன் ஆலயம் ஒன்று உண்டு. வெருகல கந்தசாமி கோயில் என்பது இதன்பெயர். இரு மாவட்டங்களின் எல்லையில் இருப்பதாலோ என்னவோ கிழக்கு மாகாணம் முழுவதும் இது புகழ்பெற்று விளங்குகின்றது.

ஆற்றைக் கடக்க உதவும் ‘பாதை’ ஒன்றின் உதவியுடன் நாம் திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்திற்குள் வந்தோம். இந்த ஆறு 30 யார் தூரம் தான் இருக்கும் என்றாலும் நடந்து போக முடியாது. ஆழமான ஆறு முதலைகளின் அபாயம் கூடுதல் என்பதால் பெரும்பாலும் எவரும் நீந்திக் கடக்க முயற்சிப்பதில்லை. அப்போது திரு. துரைநாயகம் இந்த இடத்தில் தான் 'முதலை வள்ளியை' முதலை பிடித்தது என்றார். எப்போது அந்தச் சம்பவம் நடந்தது என்றேன், பலவருடங்களாகி விட்டன. இந்த ஆலயத்தின் திருவிழாவின் போது தீக்குளிப்பதாக வள்ளி வேண்டிக்கொண்டாள். நேர்த் திக்கடனை என்ன காரணத்தாலோ அவளால் அதை நிறைவேற்ற முடியவில்லை. திருவிழாவுக்கு வந்த அவள் முகம் கழுவ ஆற்றில் இறங்கிய போதுதான் முதலைபிடித்தது. எல்லோரும் சேர்ந்து அவளைக் காப்பாற்றினோம். முதலை பிடித்ததால் சில காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்தக் காயத்துடனேயே வள்ளி தீக்குளித்தார் என்றார்.

அது சரி முதலை பிடித்தால் தப்ப என்ன செய்ய வேண்டும்? என்றேன். அதன் வயிற்றுப் பக்கம் தடவினால் விட்டுவிடும் என்றார். ஏன் வயிற்றுப் பக்கம் தடவ வேண்டும்? என்றேன். அது மென்மையான பகுதி. வயிற்றில் தடவினால் அது கூச்சத்தினால் விட்டுவிடும் என்றார். முதலையைக் கண்டவுடனேயே பயம் வந்துவிடும். இதெல்லாம் சாத்தியமா? என்றேன். முதலை ஆபத்தானதுதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமானதல்ல. ஆற்றுக்குள் முதலை இருப்பது ஒரு பொந்து போன்ற இடத்தில். ஆழமான அந்தப் பகுதியை பாளி என்பர். அந்தப் பாளிக்குள் போய் தடியால் தட்டி மீன் பிடிப்பவர்களும் உண்டு என்றார். ஏன் பாளிக்குள் முதலை கடிக்காதா? என்றேன். பாளிக்குள் கடிக்காது என்றார். பாளி ஓர் சமாதானப் பிராந்தியமோ? என்றேன். சிரித்தார். தொடர்ந்து பாளிக்குள் என்ன மீன் கூடுதலாக இருக்கும்? என்று கேட்டேன். விரால் தான் கூடுதலாக இருக்கும். மீன்பிடிப்பதற்கு இன்னொரு சுலபமான வழி உண்டு என்றார்.

          என்ன வழி? என்றேன். மீன் உள்ள பள்ளங்களில் ஒரு கொடியைப் போடவேண்டும் என்றார். என்ன கொடி? என்றேன். கருந்தெவுளங்கொடி என்பது அதன் பெயர். அந்தக் கொடியில் ஒரு துண்டைப் போட்டால் மீன்மயங்கி வரும், மீனைப் பிடித்து எடுக்கலாம் என்றார். இதற்கு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என்றேன். அதைப் பற்றித் தெரியாது. ஆனால் எமது அனுபவ உண்மை என்றார்.

இப்படிக் கூடுதலாக மீன் பிடிபட்டால் என்ன செய்வது? என்றேன். சூட்டுக் கருவாடு போடுவார்கள். வெயிலில் காய வைக்காமல் நெருப்பில் காய வைப்பது தான் இந்தக் கருவாடு செய்யும் முறை என்றார். தொடர்ந்து இந்த பல மாதிரி மீன் பிடிக்கும் போது சில முறைகள் உண்டு என்றார். அது என்ன? என்று கேட்டேன். கத்தியோ வேறு எந்த உலோகமோ கொண்டு போகக் கூடாது; துப்பக் கூடாது என்றார். துப்பினால் என்ன நடக்கும்? என்றேன். துப்பினாலோ உலோகங்களைக்கொண்டு சென்றாலோ சித்திக்காது - மீன்கள் ஓடி விடும் என்றார். இந்தப் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக் குக் கிடைக்கவில்லை.

ஆற்றங்கரைகளில் நின்ற மக்களுடன் மாத்தயா அளவளாவினார்? அனைவருமே திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து இந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைவரை வந்து குடிசை அமைத்து இருப்பவர்கள். சிலர் வெருகல் ஆலயமடத்தில் இருப்பவர்கள். தமக்கு உணவோ மருந்தோ கிடைப்பதில்லை எனவும் அடிக்கடி செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்து பதிந்து போகின்றார்கள். எந்த விதமான பிரயோசனமும் ஏற்படவில்லை என் னர். அன்று 26-9-90 சண்டை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. தமிழ் அகதிகள் என்றால் ஆமை வேகத்தில், ஆமை வேகம் என்பது கூடத் தவறு. நத்தை வேகத்தில் தான் காரியங்கள் நடைபெறுகின்றன. மக்களின் குறைகளை மாத்தயா கேட்டறிந்தார். அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாள ரிடம் இங்கு எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்றார். வாகரை, கதிர வெளி, வெருகல் எல்லா இடமும் சேர்த்து முப்பதினாயிரம் அகதிகள் என்றார் பிரதேசப் பொறுப்பாளர் எஸ்.பி. அங்கு ஒரு பத்து வயதுச்சிறுவன் சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உனது பெயர் என்ன? என்று கேட் டேன். அவன் "பிரபாகரன்" என்றான்.

மாத்தயா அவர்கள் பொது மக்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போது எனது பார்வையைச் சுழலவிட்டேன். ஓலையால் வேய்ந்த கடை ஒன்று; அன்று திறக்கப்படவில்லை. தட்டியால் மூடியிருந்தது. அந்தக் கடைக்கு முன்னே ஒரு சிறுமியும் இரண்டு குழந்தைகளும் நின்றார்கள். ஆகச் சிறிய குழந்தை ஆண் குழந்தை. அந்தச் சிறுமியிடம் போய் மருமகள் உங்களது பெயர் என்ன என்றேன். ராஜசுலோசனா என்றாள் சிறுமி. உங்களுக்கு எத்தனை வயது? என்றேன். பத்து வயது என்றார். ஏன் இன்று கடை திறக்கவில்லை? என்றேன். 'இனிக் கடை திறக்க முடியாது. அப்பாவை முஸ்லிம் ஆட்களும் ராணுவமும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்’ என்றாள். எங்கே பிடித்தார்கள்? என்றேன். வாழைச் சேனையில் என்றாள். மட்டக்களப்பு மண்ணில் கால் வைத்தவுடனேயே முதன்முதல் கிடைக்கும் செய்தி இதுதானா?                                        

(தொடரும்)

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.