Jump to content

ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை

Filed under: செய்திஆய்வு — thivakaran @ 4:32 pm

தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார்.

பல “ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன.

ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.

அவைகளைப் பற்றிய ஒரு பார்வை:

ஐ.நாவின் பிறப்பின் முன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்

ஸ்கொட்லாந்து

1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஸ்கொட்லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணையாளராக செயற்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள்

1800களின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப் புரட்சிக்கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன.

1810 மே 25 ஆம் நாள் ஸ்பெய்னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படையணிகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைத்தது. அதனில் இணைந்து கொள்ளுமாறு இதர ஸ்பெய்ன் கொலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.

அப்போதைய ஸ்பெய்ன் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.

1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண்டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.

1822 ஆம் ஆண்டு போர்த்துக்கலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.

1828 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா- பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் உருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரடகனம் செய்தது.

மத்திய அமெரிக்க நாடுகள்

ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் கோஸ்ரா ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுராஸ், நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து

1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஹோண்டுராஸ் மற்றும் கோஸ்ரா, ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.

இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு அக்கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.

எஸ்தோனியா

எஸ்தோனிய தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந்திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஸ்யப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ரஸ்ய இராணுவத்துக்கு எதிராக ஜேர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக்கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1918 ஆம் ஆண்டு பெப்ருவரி 24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனிய” தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர், சுதந்திரத்துக்கான போரை 2 ஆண்டுகாலம் எஸ்தோனியா நடத்தியது. 1920 ஆம் ஆண்டு ரஸ்யாவுக்கு எதிரான சுதந்திரத்துக்கான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990-களின் இறுதியில் சோவியத் ரஸ்யா உடைந்து நொறுங்கிய போது தனது சுதந்திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனிய வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம்தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம்பெற்றுள்ளது.

பின்லாந்து

எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாகப் அமைப்பும் ஜேர்மனியும் ஸ்காண்டிநேவிய நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தது.

கினியா பிசாவு

மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகேய காலனி நாடாக இருந்த கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர்தான். போர்த்துக்கேயர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுதக் குழு உருவானது.

அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.

1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் அந்நாட்டின் பெரும்பகுதி பகுதிகள் வந்தன.

அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24 ஆம் நாள் ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அந்நாடு வெளியிட்டது.

1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93-க்கு 7 என்ற வாக்குகளில் அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.

ஹெய்ட்டி

பிரெஞ்சு கொலனியின் கீழ் இருந்த ஹெய்ட்டியானது 1804 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது ஹெய்ட்டி

ஆனால் 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹெய்ட்டியை ஆக்கிரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.

அமெரிக்கா

1776 ஆம் ஆண்டு யூலை 4ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பிரகடனம்” என்பதாகும். இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கியவர்கள், தோமஸ் ஜெப்பர்சன், ஜோன் ஆதம்ஸ், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.

இந்தோனேசியா

இந்தோனேசியாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து டச்சு கிழக்கு இந்திய காலனியை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற அந்தக் காலத்தில் ஹிரோசிமா-நாகசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஜப்பான் சரணடைந்த இரண்டே நாட்களில் 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் தேசியவாதத் தலைவர் சுகர்னோ சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனப் பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இதே காலகட்டத்தில் நெதர்லாந்து மீளவும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இந்தோனேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்தது.

கொரியா

ஜப்பானிய கொலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் என்பது ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துக்கள் ஜப்பானால் சூறையாடப்பட்டன. 1900-களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரிஸ் அமைதி மாநாட்டில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாள் கொரியாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்த போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 1,500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7,500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லிதுவேனியா

ஜேர்மனிய துருப்புக்கள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990-களில் சோவியத் ஒன்ரியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.

பிரகடனத்துக்குப் பின்னர் கெரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்

1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் ஸ்பெய்னின் கொலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரடகனத்தை வெளியிட்டது.

ஆனால் பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும், ஸ்பெயினும் இதனை ஏற்க மறுத்தன.

1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்ரம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன.

பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப்பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியரசானது 1899 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்பெய்ன் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.

1899 ஆம் ஆண்டு அமெரிக்காவும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.

இந்த யுத்தத்தின் போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கெரில்லாப் போர் முறையை கடைப்பிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது. 1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைப்பிடித்து வருகின்றனர்.

ஐ.நா. பிறப்பின் பின்னர் வியட்நாம்

1887 இல் தென்கிழக்கு ஆசியாவில் இன்றைய வியட்நாம், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோசீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தோசீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதிக்கத்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தோசீன ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.

இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் நாள் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரெஞ்சுப் படையினருக்கும் வியட்நாமியர்களுக்கும் இடையே மோதல் உருவானது.

1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலைகொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.

1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

அதே ஆண்டுகளில் ரஸ்யாவின் ஸ்டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ரஸ்யா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.

கெரில்லாப் போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழிவகுத்தது.

இஸ்ரேல்

1947 ம் ஆண்டு பலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல், ஒருதலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப்பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, உருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ரஸ்யா, இஸ்ரேலை அங்கீகரித்ததது. அதன் பின்னர் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்தன.

பலஸ்தீனம்

1988 ஆம் ஆண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பலஸ்தீன தேசிய சபையானது பலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பலஸ்தீன பிரதேசமும் இருக்கவில்லை. பலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத்தில் பலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீகரித்தன. பலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குத் திமோர்

போர்த்துக்கலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28″ ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய- லெனிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீகரித்தது. அவுஸ்திரேலியா, போர்த்துக்கல், இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.

அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.

ஆனால் கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் நாள் கிழக்குத் திமோரில் ஐ.நா. மேற்பார்வையில், இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.

அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் பிரகடனங்கள்

சோமாலிலாந்த்

அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பையொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிற நாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.

இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென்பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.

1884 ஆம் ஆண்டில் சோமாலிலாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமாலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு கொலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலியின் ஆக்கிரமிப்பு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமாலியா நாடு உருவாக்கப்பட்டது.

இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களினது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்திடினர். இதனால் 1980-களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிரஸ், சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.

சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் யாப்பானது மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.

சோமாலிலாந்த் அரசியல் யாப்பின்படி, சோமாலிய மொழி உத்தியோகப்பூர்வ மொழியாகும். பாடசாலைகளிலும் மசூதிகளிலும் அரபி மொழி பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.

பெல்ஜியம், கானா, தென்னாபிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நோர்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசியல் உறவுகளைப் பேணி வருகிறது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.

அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்.

எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமாலிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரா தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.

சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தென் கமரூன்

கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 ஆம் நாள் தென்கமரூன் இணைக்கப்பட்டது. தென்கமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.

இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறியது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென்கமரூன் மாற்றமடைந்தது. மேலதிக சுயாட்சி கோரிக்கையை தென்கமரூன் பிரதேசத்தின் முன்வைத்து போராடினர். 1961 ஆம் ஆண்டு கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென்கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் நாள் தென்கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையைப் போன்ற விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமான யு.என்.பி.ஓவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

இதேபோல் செச்சன்யா, புண்ட்லாந்து, நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா, அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தங்களது தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.

தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்

அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினாவானது 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளாகப் பிரிந்தன.

1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தெற்கு கரோலினா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.

இருப்பினும் 1860 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக்கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.

குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் “ரொடீசியா” பிரகடனம்

- பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.

சீசில் ரொட் மேலதிகமாக வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் ஏற்பட்டது.

ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட், தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாகவும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. இரண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.

1923 ஆம் ஆண்டு ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்கு உட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசியாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.

1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.

1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய கொலனித்துவ சுயாட்சி அரசாங்கம்

மற்றும்

பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா

மற்றும்

நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.

தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம், ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வகுடி கறுப்பின மக்களுக்காகப் போரடின. அப்போது ஜிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங்களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம், அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.

1960-களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித்தானிய கொலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.

1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழிருந்த வடக்கு ரொடீசியாவான ஜாம்பியா விடுதலை பெற்றது. நியாஸலாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது.

இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானியாவிடம் தெற்கு ரொடீசியாவுக்கான விடுதலையைக் கோரினார். ஆனால் பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப்பின பெரும்பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்றபோதுதான் சுதந்திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.

இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதமராக அறிவித்தார். ரொடீசியாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல் முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கெரில்லா யுத்தங்களைத் தொடங்கின.

தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங்கீகரிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு நோர்வேயில் இருந்த தனது மகனின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடீசியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்ட ஸ்மித்துக்கு நோர்வே அரசாங்கம் அனுமதி அளிக்கவும் மறுத்தது. ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சியில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர்கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகாபே வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா, மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.

கடங்கா

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதாகும். கொங்கோ அரசாங்கமாகனது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேலதிக சுதந்திரத்துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு கொங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப்பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்குதல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.

மினெர்வா

1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்தப் பணத்தையும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரடகனம் குறித்து அண்டை நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டொங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், டொங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாகவும் வர்த்தமானி அறிவித்தலை டொங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ரஸ் 1960 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைப்பீரியர்கள் 80 விழுக்காட்டினரும் துருக்கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.

1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரியஸ், 13 அரசியல் யாப்பு திருத்தங்களை பரிந்துரைத்தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ரஸ் அரசாங்கத்துக்கும் சைப்பீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீள நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத்தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக்கியப் படை உள்நுழைந்தது. 37 விழுக்காட்டு பிரதேசத்தை துருக்கி ஆக்கிரமிக்க இலட்சக்கணக்கான கிரீக் சைப்பீரியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் வடக்கு சைப்ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங்கீகரித்தது. சைப்ரஸ் நாட்டை குறிப்பிடுகையில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.

நாகலாந்து

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகலாந்துக்கு பிரித்தானியார்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அதுவரை எதுவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில் கூட நாகாலாந்து இணைக்கப்படவில்லை.

1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் நாள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான காந்தியை நாகா குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் நாள் நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் யாப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்திய அரசியல் யாப்பை ஏற்க மறுத்த நாகலாந்துக்கு இந்திய ஒன்றியத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது.

இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் நாகாலந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள், இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு விடயம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனிநாட்டு அரசாங்கமும் இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1960-களில் நாகாலந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொண்டது. நாகாலாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றியத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இணைந்து கொண்டது.

தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை அறிவிக்கப் போகிறார் பிரபாகரன் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அலறுவது அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கிறது.

http://tamilulagam.wordpress.com/2007/11/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் யாப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது

இந்த காலகட்டத்தில்தான் காந்தி தாத்தா வாழ்ந்தார்,சுதந்திரத்தை பற்றி நங்கு அறிந்தும் இருப்பார்.அரசியலிலும் அதி, அதி ,அதி,அதி, அதி செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தும் இந்த நாகலாந்து மக்களின் சுதந்திரத்தை கண்டுகொள்ளவில்லையெ.

இணப்புக்கு நன்றிகள் நுனாவிலான்

Posted

புத்தனிடம் ஒரு கேள்வி? அதாவது எவ்வளவோ வெற்றிகரமான உதாரணங்கள் உள்ள போது ஒரு சில தோல்விகரமான உதாரணங்களை நாங்கள்(தமிழீழ மக்கள்) பின்பற்ற வேண்டிய தேவையில்லை.படிப்பினைகளை மட்டும் நாங்கள் படித்து முன்னோக்கி செல்வது உசிதம் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.