Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

29 Sep, 2025 | 09:43 PM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

ART_02__1_.jpg

ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது.

பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப் பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும்.  அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில்  ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன. 

மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85 சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது.

எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2 சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2 சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8 சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன. 

முக்கிய பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை. 

அடுத்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், 2024இன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5சதவீத வளர்ச்சி கண்டது. விவசாயம் 3சதவீதமாகவும், தொழில் 10.8சதவீதமாகவும், மற்றும் சேவைகள் 2.6சதவீதமாகவும் வளர்ச்சியைக் கண்டன. கட்டுமானத் துறை, சுரங்கத் தொழில் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் தொழில்துறை உயர்வுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வர்த்தகத்தின் மூலம் சேவைகள் துறைகளும் வளர்ந்தன.

எனினும், 2025இன் இரண்டாம் காலாண்டில் மெத்த உள்நாட்டு உற்பத்தியானது, 4.9சதவீதமாகவே வளர்ந்துள்ளது, இது பொருளாதா மீட்சிக்கான விரிவாக்கத்தின் எட்டாவது தொடர்ச்சியான காலாண்டாகும். அதன்படி, விவசாயம் 2சதவீதம், தொழில்துறை 5.8சதவீதம், மற்றும் சேவைகள் 3.9சதவீதம் அதிகரித்தன. ஆடை, உலோகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி வளர்ந்தது.

ஒட்டுமொத்தமாக, 2024 இன் பிற்பகுதியில் 5.5சதவீதமாக இருந்த இருந்த வளர்ச்சி 2025 இன் நடுப்பகுதியில் 4.9சதவீதமாக சற்றுக் குறைவாக வெளிப்படுத்தப்பட்டாலும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விரிவடையும் சேவைகள் ஆகியவற்றால் தொடர்ந்து பலமாக இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டின் வருமாணத்தில், சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியன அந்நிய செலாவணிக்கான முக்கியமான மூலமாக காணப்படுகின்ற நிலையில் இந்தாண்டில் அவற்றின் முன்னேற்றம் காத்திரமாக உள்ளது.  2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 1.3 மில்லியனாக இருந்தது.

ஆனால் 2025 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துவிட்டது. இத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை மூன்று மில்லியன் பார்வையாளர்களாக நிர்ணயித்துள்ளமை முக்கிய விடயமாகும். 

விசேமாக, 2025 ஆகஸ்ட்டில் முதல் 13 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.1சதவீதமாக அதிகரித்திருந்தது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதோடு அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. 

அடுத்ததாக, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆடைத்துறை, தேயிலை, இறப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொத்த ஏற்றுமதி 10.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் ஆடைத்துறை இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பைக் கடந்துள்ளது. 

அதேபோன்று 2025 ஆகஸ்டில் ஏற்றுமதி வலிமையடைந்ததை அடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஆகிய இரு துறைகளையும் இணைத்து மொத்த ஏற்றுமதி 1,607.58 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது. 2024 ஆகஸ்ட்டை விட 2.57சதவீதம் அதிகமாகும். 

அடுத்ததாக, பணப்பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு விடயத்தினைப் பார்கிக்கின்றபோது,  ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையில் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மொத்தம் 4,288 மில்லியன் டொலர்களாகும். இது 2023 இல் இதே காலகட்டத்தில் 3,863 மில்லியன் டொலர்களில் இருந்தை விடவும் அதிகரிப்பாகும். 

இவ்வாறான நிலையில் 2025 ஜூலை வரையிலான தரவுகள் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் ஆண்டு இன்றுவரை 4,435.2 மில்லியன் டொலர்களைக் காட்டுகின்றன. மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2025 ஜூலையின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. 

அந்தவகையில், புதிய ஆட்சி நிர்வாகத்தின் முதலாண்டைப் பற்றி கருத்துவெளியிட்டள்ள பெஸ்ட் கப்பிற்றலின் தலைமையாராய்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான திமந்த மாத்யூ, ஸ்திரத்தன்மை அடையப்பட்டிருந்தாலும், முக்கிய சவால்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார்.

அத்துடன் சீர்திருத்தங்களின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஓரளவுக்கு அடையப்பட்டுள்ளது. முடிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு செயன்முறை தொடரப்பட்டு, அதன் மூலம் ஒருவித ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளது. கையிருப்பு இலக்குகள் போன்ற பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளும் அதிகநிலையான மட்டத்தில் நிலைபெற்றுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரவுசெலவுத் திட்டத்தின் செலவினப் பக்கத்தில் மூலதனச் செலவினத்தில் மந்தநிலை இருப்பதாகத் தெரிகிறது, என்றும் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து வெளியே வருவதால், வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு சில அரசாங்க ஆதரவு தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

ஆவரின் கூற்றுப்படி, மூலதனச் செலவினத்தின் மந்தநிலை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்றுக் குறைந்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும். அதனை உரியவாறு கையாள வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரச நிறுவனங்களில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்கப்பட  வேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையில் சில சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதை வெற்றிகரமாக அடைவது, நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அடுத்த ஆண்டுக்கான சவால், இந்த வேகத்தை மேலும் கட்டியெழுப்புவதாக உள்ளதோடு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது.  

ஆக மொத்தத்தில் அநுரவின் முதலாவது ஆண்டு பொருளாதார ரீதியாக முதலாவது படியை அடைந்திருந்தாலும் அது அழுத்தமாக பதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/226442

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.