Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

Nov 27, 2025 - 01:04 PM

சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார். 

தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, அந்தந்தப் பகுதிகளில் நிலவும் அபாய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை இனங்கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையாக உள்ளதால், இது குறித்து இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேலும் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது. 

இங்கு முக்கியமாக மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அனர்த்தம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் முறைமை குறித்தும் கவனம் செலுத்தினார். 

அத்துடன், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பெருந்தெருக்கள் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmih4bowl021zo29nr65krudr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை, ஜனாதிபதி அவசர சந்திப்பு - என்ன நிலவரம்?

குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

பட மூலாதாரம், KRISHANTHAN

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 27 நவம்பர் 2025, 11:28 GMT

    புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஐந்து பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

எந்தெந்த பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன?

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, லுணுகல, பஸ்ஸர, கந்தேகெட்டிய, ஊவா பரணகம, சோரணாதொட்டை, எல்ல ஆகிய பகுதிகளில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கடுவன பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த வீடுகள்

பட மூலாதாரம்,DINESH VADIVEL

மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம்

பட மூலாதாரம்,DINESH VADIVEL

சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள இப்பாகமுவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலபனை பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதேவேளையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி

பட மூலாதாரம்,KRISHANTHAN

மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள்

கொழும்பு - அவிசாவளை ரயில் மார்க்கத்தில் கற்கள் சரிந்து மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை - கல்கெட்டியாவ வீதியிலுள்ள பாலமொன்று வெள்ளத்தால் உடைந்துள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பகுதியிலுள்ள 40 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையால் நெடுங்கேணி மருத்துவமனை நீரில் மூழ்கியுள்ளது.

வவுனியாவின் தென் பகுதியிலுள்ள ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 6 பேர் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை

பட மூலாதாரம்,DINESH VADIVEL

பதுளை மாவட்டத்தின் வெலிமடை பகுதியில் மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அந்தந்த வீடுகளில் இருந்த அனைவரும் போலீஸாரினால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸரை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தின் மனம்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இலங்கை, கனமழை, வெள்ளம்

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

மலையகத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,

இதன்படி, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

பட மூலாதாரம்,DINESH VADIVEL

அதிகளவான மழை வீழ்ச்சி எங்கு பதிவானது?

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள்

பட மூலாதாரம்,DINESH VADIVEL

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றூகம பகுதியிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, றூகம பகுதியில் 300.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கையில் மழை பதிவான இடங்கள்

பட மூலாதாரம்,DMC SRI LANKA

தேர்வுகள் ஒத்திவைப்பு

இலங்கையின் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள பரீட்சைகளை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 27 முதல் 29 வரையிலான தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் பரீட்சைகள் வழமை போன்று நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல்

பட மூலாதாரம், PMD

படக்குறிப்பு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல்

ஜனாதிபதி அவசர சந்திப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கூட்டமொன்றை நடத்தினார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அவசரக்கால நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

அதோடு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் உடனடியாகத் தலையிடுமாறும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpvdn814lg8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.