Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

Nov 29, 2025 - 05:43 PM

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. 

ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. 

நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. 

மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. 

சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. 

அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். 


இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு - கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு..

வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு நாளாக செயலிழந்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நேற்றிலிருந்து இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன. 

தற்போதைய நிலைமை.. 

இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

வடக்கு - கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு.. | Telephone Calls Down Cyclone Ditwah Intensifies

மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த தொடர்பு சேவைகள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மீண்டும் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://tamilwin.com/article/telephone-calls-down-cyclone-ditwah-intensifies-1764424845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயலிழந்துள்ள தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் தடையின்றி பராமரிக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன்படி, விரைவில் தகவல் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத், TRCSL அதிகாரிகள் மற்றும் மொபைல் போன் சேவை வழங்குநர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

25-692c1a1bcdcc1.webp

நுகர்வோருக்கு சிறப்பு சலுகை 

(Mobitel) மொபிடெல்: 7677 என்ற எண்ணுக்கு 'YES' என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் 3 நாள் பேக்கேஜ் பெறலாம்.

கூடுதலாக, SLT-Mobitel லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதிகளையும், ஃபைபர், ஹோம் 4G LTE மற்றும் ADSL உள்ளிட்ட பிராட்பேண்ட் பயனர்களுக்கு வரம்பற்ற இணைய அணுகலையும் வழங்குகிறது.

(Hutch) ஹட்ச்: எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் சலுகை. #3111# ஐ டயல் செய்வதன் மூலம் சலுகை பெறலாம்.

செயலிழந்துள்ள தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding The Broken Telephone Lines

இதற்போது நுகர்வோருக்கு சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

(Dialog) டயலொக் மற்றும் எயார்டெல்: எந்த நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள், 250 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் இலவச சலுகை  #006# ஐ டயல் செய்வதன் மூலம் பெறலாம்.

https://tamilwin.com/article/announcement-regarding-the-broken-telephone-lines-1764496286

வடக்கு, கிழக்கு, தெற்கில் சில மாகாணங்களில் Dialog நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி இணைப்புகள் மட்டுமே செயலிழந்தது.

Mobitel, Hutch இரண்டும் இயங்கியது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்தொடர்பு சேவையை மீட்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை

08 Dec, 2025 | 07:35 PM

image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நிலத்தடியிலிருந்து வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விலகியிருப்பதோடு, தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க  ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த  சீரற்ற காலநிலையால்  வெள்ளம், நிலச்சரிவு என முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளது. அனர்த்த நிலமையால், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்களும்  பதிவாகியுள்ளன.

இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், அவற்றுக்கு எதிராக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில்,  பொதுமக்களுக்கு  இவ்விடயம் தொடர்பில்  தெரியப்படுத்துமாறு  டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகள் புனரமைக்கும் போது, நிலத்தடியிலிருந்த தொலைதொடர்பு கேபிள்களும் சேதமடைந்துள்ளதாக  அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை அறுத்து எடுத்துச் செல்லுதல், அல்லது  உடைமையாக வைத்திருத்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகும்.  இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல்  அறிந்திருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு  அறிவிப்பது அவசியம். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும் புனரமைக்கும் போது நிலத்தடியிலிருந்து தொலைதொடர்பு கேபிள்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அதை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்குமாறும்  பொதுமக்களிடம்  கோரிக்கை விடுக்கிறோம். இது பாதிக்கப்பட்ட தொடர்பு சேவைகளை விரைவாகவும்  மீட்டெடுக்க உதவும்.

https://www.virakesari.lk/article/232808

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.