Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

30 Nov, 2025 | 12:38 PM

image

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232018

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

Nov 30, 2025 - 01:38 PM

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

 இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell-412 மற்றும் MI-17 ஆகிய இரண்டு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmilfuau90276o29nnnccan8m

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பு - தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

30 Nov, 2025 | 12:43 PM

image

திருகோணமலை மாவட்டம் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று (30) அதிகாலை உடைப்பெடுத்ததால் வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன.

மகாவலி கங்கையின் நீர்வரத்து அப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் அங்கிருந்து அனர்த்தப் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/232031

மாவிலாற்றுப் பகுதியில்  மீட்பு நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின்  ஹெலிக்கொப்டர்கள் 

30 Nov, 2025 | 12:52 PM

image

மாவிலாற்றுப் பகுதியில் இலங்கை விமானப்படையானது ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மாவிலாறு  பகுதியில்  மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிக்கொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிக்கொப்டர்,  KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும்   MI-17 ரக ஹெலிக்கொப்டர் ஆகியன  மீட்பு மற்றும்  கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

41397533-49d3-4612-884d-527cb76cec39.jpg

https://www.virakesari.lk/article/232032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

30 Nov, 2025 | 03:27 PM

image

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்.

இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/232051

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அணை உடைந்துள்ளது மூதூர், வெருகல், சேருவில கடும் பாதிப்பு..!

30 Nov, 2025 | 04:42 PM

image

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது.  

மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை  ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர்,  வெருகல்,  சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மகாவலி ஆற்றில் அதிக நீர் ஓட்டம் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மாவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி ஒரே நீர்த்தேக்கமாகக் காணப்பட்டது.  

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் . பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் நீர்ப்பாசன இயக்குநர் நாயகம் கேட்டுக்கொள்கிறார்.

கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கங்கை பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது.

வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது.

கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன.

மூதூர் - இறால் குழி , நாவலடி பிரதேச மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர் இவர்கள் அந்- நஹார் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாபிநகர்,  வேதத்தீவு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மகாவலி கங்கை பெருக்கெடுப்பால் மாவிலாறு அணை உடைந்ததால் மூதூர்,  வெருகல்,  சேருவில மக்களின் வயல்கள்,  வீடுகள்,  கால் நடைகள் அழிவடைந்துள்ளன.

IMG-20251130-WA0089.jpg

IMG-20251130-WA0095__1_.jpg

IMG-20251130-WA0097.jpg

https://www.virakesari.lk/article/232062

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு

மாவிலாறு உடைப்பை தொடர்ந்து சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான அவசர கலந்துரையாடலின் போது ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தங்கவெளி கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்காலிக தங்குமிடம் 

இதற்கிடையில், நேற்று (29) இரவு மூதூர் மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் கிண்ணியா நகரம் தற்போது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு | Immediate Action Rescue 1000 People Mavil Aru

மேலும், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களில் இருப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவில்ஆறு குளக் கரை உடைப்பு சோமபுர, சிறிமங்கலபுர, கல்யாறு மற்றும் தெஹிவத்த பகுதிகளைப் பாதித்து வருகிறது, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை சேருநுவரவில் உள்ள நவோதயா பாடாசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் சேருவில ராஜமகா விஹாரையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட உள்ளனர்.  

https://tamilwin.com/article/immediate-action-rescue-1000-people-mavil-aru-1764502671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைந்தால் வரலாறு காணாத அழிவு ஏற்படும்

Published By: Vishnu

30 Nov, 2025 | 08:00 PM

image

திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாற்று அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இதனால் பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது. 

அதைவிட இராணுவ கவச வாகனங்களின் உதவியுடனும்; அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது சேருவில பகுதியில் இருந்தே பௌசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைக்குமாக இருந்தால் வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகள் உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் பாரியளவான அழிவை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக பாதிக்கப்படும் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேமபுர, லிங்கபுரம், ஆதியம்மன்கேணி உட்பட பல பகுதிகளும் அதை அண்மித்த மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி போன்ற கிராமங்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

குறித்த கிராம மக்கள் பெருமளவானவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவிலாறு முழுமையாக உடைப்பு எடுக்லாம் என்ற அச்சத்தில் அந்த இடைத்தங்கல் முகாம்களையும் இடம்மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் கங்குவேலி கிராம மக்களின் ஒரு பகுதியினர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பின்னர் தோப்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்குவேலியின் பின்புறமாக உள்ள மகாவலி அணைக்கட்டு நேற்று (29) இரவு உடைத்து இரவு ஊரூக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வீட்டுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது அதேபோன்று லிங்கபுரம் பகுதியிலும் ஆதியம்மன் கேணியின் பின்புறமாகவுள்ள மகாவலி அணைக்கட்டு சிறியளவில் உடைப்பெடுத்ததால் அங்கும் 3 அடிக்கு மேல் ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிவரை 17926 குடும்பங்களைச் சேர்ந்த 57858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16000 குடும்பங்களைச் சேர்ந்த 52416 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 1926 குடும்பங்களைச் சேர்ந்த 5442 பேர் 27 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 478 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மலைநாட்டில் உற்பத்தியாகின்ற மகாவலி கங்கையானது கிழக்கே குறிப்பாக வெருகல், மூதூர் ஆகிய பகுதிகளில் பல கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அந்தவகையில் வெருகலில் பகுதியில் இரு கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அதிக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலப்பகுதிகளில் மகாவலி கங்கையை மேவி பாய்கின்ற அல்லது உடைப்பு எடுக்கின்றபோது குறிப்பாக நாதனோடை அனைக்கட்டு உடைத்து வெருகல் பகுதி வெள்ளத்தில் மூழ்குவது வழமை. இது ஒவ்வொரு வருட இறுதியிலும் வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நாதனோடை அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் போடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தின் தாக்கம் கடந்த சில வருடங்கள் குறைவாக காணப்பட்டன.

இந்நிவையில் மகாவலி கங்கையின் கிளையினால் வெளியாகின்ற பெருமளவான நீரை மறித்து மாவிலாறு அணைக்கட்டு கட்டப்பட்டு அதன் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் உயரமுடையதாக காணப்படுகின்றது. மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவும் ஏணைய நீர்த்தேக்கங்கள் திறந்து விட்டதன் காரணமாகவும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்துள்ளது.

மேலதிக நீர் கடலுடன் கலப்பதன் மூலம் பாதிப்பு இல்லாத சூழல் உருவாகும் ஆனால் கடலுடன் கலப்பதற்கு குறித்த நீர் குறிப்பிட் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் நீரின் அளவு மிகவும் அதிகம் என்பதால் அணைக்கட்டை மேவி பரவ வேண்டி ஏற்படுவதோடு அணைக்கட்டையும் உடைக்கும் நிலையும் உருவாகிறது.

https://www.virakesari.lk/article/232084

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மீட்பு

01 Dec, 2025 | 10:46 AM

image

திருகோணமலை மாவட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309  பேரை  இலங்கை கடற்படையினர்  மீட்டுள்ளதுடன்  நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, திங்கட்கிழமை (01)  நிலவரப்படி,  மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர். 

மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில்  நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

9.jpeg

3.jpeg

1.jpeg

https://www.virakesari.lk/article/232116

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.