Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

Dec 8, 2025 - 08:16 AM

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். 

இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். 

நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும், பின்னர் அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், யாரேனும் இந்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் அறிவித்துள்ளார். 

பேராசிரியர் மியுர சந்திரதாச மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார். 

உதாரணமாக, அவர்களுக்கு விளையாடுவதற்கான சூழலை இயன்றவரை உருவாக்கிக் கொடுத்தல், நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். 

அத்துடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்தார். 

மேலும், எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான அனுபவங்களிற்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், மக்களின் ஒற்றுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சி காரணமாக இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுர சந்திரதாச இது குறித்து மேலும் கூறுகையில், 

"இம்முறை வெள்ள நிலைமை மற்றும் 'திட்வா' புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் எமது மனதிற்கு முதலில் தோன்றுவது, எமக்கு பெரியதொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்ற ஆழ்ந்த கவலையாகும். அத்துடன் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பமில்லாத நிலையும் ஏற்படலாம். இந்த அனர்த்த நிலை காரணமாக நீங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பின், உங்களுக்காக உதவுவதற்கு இலங்கையில் உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். எனவே, உங்கள் முயற்சியையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் கைவிட வேண்டாம். வீடு இழந்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும்.. உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்," என்று தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmiwjvxuw02hko29n502cj504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரிடரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் தேசிய மனநல வைத்திய பீடத்தினை நாடுங்கள்!

08 Dec, 2025 | 05:32 PM

image

( செ.சுபதர்ஷனி)

நாட்டில் ஏற்பட்ட  இயற்கைப் பேரிடரால் எவரேனும்  மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் உடனடியாக தேசிய மனநல  வைத்திய பீடத்தை (1926) தொடர்புக் கொள்ளுமாறு  களணி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியரும்  சிறுவர், யௌவன பருவ மனநலம் தொடர்பான விசேட  வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழு நாடும் இயற்கை அனர்த்தத்தால் பாரிய அழிவை சந்தித்துள்ளது. பலர் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். இவ்வாறான பேரிடர்கள் எமது மன நலத்தை கடுமையாக பாதிக்கும். பொதுமக்களிடையே மன உளைச்சல் அதிகரித்துள்ளதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது. 

மன உளைச்சல் நாளடைவில் தீவிர மன நல நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஆகையால் ஆரம்பத்திலேயே மன உளைச்சலுக்கான  காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு தீர்வினை கண்டு மனதை  ஆற்றுப்படுத்துவது அவசியம்.

தற்போது எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்திருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதிவாய்ந்த மனநல மருத்துவர் ஒருவரை அணுகி  உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது.

அத்தோடு மன நல வைத்திய பீடத்தைத் (1926) தொடர்புக்கொண்டு வைத்தியரை சந்திப்பதற்கு தேவையான வசதிகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும்.  சிறுவர்களின் மன நலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பின் முடிந்தவரை அவர்களை இயல்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது அவசியம்.

அதற்கேற்ப  சிறுவர்களை விளையாடுவதற்கு வாய்ப்பளிப்பதுடன், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்கும் மனம்விட்டு உரையாடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.

மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் கோபம், விரக்தி, தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். எமது நாடு பல சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான சம்பவங்களுக்கும் முகங்கொடுத்துள்ள போதும், மக்களின் ஒற்றுமை,  தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் எவ்வாறான சூழ்நிலையிலும் மீள நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது.

இம்முறை வெள்ள நிலைமை மற்றும் தித்வா புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இதுபோன்ற பேரிடருக்குப் பின்னர், எமக்கு மிகப் பெரிய துன்பம் நேர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலையடைவோம். இதனால் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பம் இல்லாத நிலை ஏற்படலாம்.

 இந்த அனர்த்த நிலைமை காரணமாக நீங்கள் கஷ்டங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியிருந்தால், உங்களுக்காக இலங்கையில் உள்ள அனைவரும் உதவ முன்வருகிறார்கள்.  ஆகையால் உங்கள் முயற்சி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கைவிட்டு விடாதீர்கள். வீட்டினை  இழந்தாலும், குடும்ப உறுப்பினர் இழந்தாலும் உங்கள் மனதில் உள்ள நம்பிக்கைகளை கைவிட வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/232806

1926 National Mental Health Helpline, 1926 Chatline & 075 555 1926 WhatsApp line

Providing the much needed psychological support to the Sri Lankan Public. A National Line under the Ministry of Health, Sri Lanka

images?q=tbn:ANd9GcSpv2OOsYn5e7LsYDm7YZN

images?q=tbn:ANd9GcSVonuxFXsUL5hiJtmUrlW

D4ywEmsXkAU-h_x.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.