Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள்.

உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே நேரத்தில் சராசரி மாணவனாக, இறுதியாண்டு மருத்துவ மாணவன், சாமுவேல் [Samuel] இருந்தான். அவன் ஒரு தீவீர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், சிறுவயதில் ஒழுங்காக தன் பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்று, ஒவ்வொரு டிசம்பரிலும் கரோல்களையும் [carols] பாடியுள்ளான். ஆனாலும் - அவன் சாதாரண வகுப்பிற்குப் பிறகு, சமயம் மற்றும் புராண நம்பிக்கையை, அப்படியே நம்பாமல், எதையும் ஆராந்து, கேள்விகேட்டு அதில் இருந்து உண்மைகளை பிரித்து எடுக்கக் கற்றுக்கொண்டான். அவன் மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் உண்மை ஆகியவற்றில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தான், அதனால், தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட, அல்லது புராணங்களாக எழுதப்பட்ட, அல்லது பழக்கங்களாக ஒட்டிக்கொண்ட அல்லது சமய நூல்களில் சொல்லப்பட்ட எதையும், அறிவுரீதியாக ஆராயாமல் ஏற்பதை தவிர்க்கத் தொடங்கினான்.

அதேவேளை, இரண்டாம் ஆண்டு கலை மாணவியான சாரா [Sarah] முற்றிலும் வித்தியாசமானவர். அவள், தனது நம்பிக்கைகளை ஒரு சால்வை போல சுமந்து சென்றாள் - மரபுரிமையாக தலைமுறையாக தொடர்வதால், எந்த கேள்வியும் கேட்காமல், ஒருவர் உயிர்வாழ சுவாசிப்பதைப் பின்பற்றுவது போல, இயற்கையாகவே, பகுப்பாய்வு இல்லாமல், அவள் மதத்தைப் பின்பற்றினாள். அவள் பெற்றோர் நம்பியதால் அவள் நம்பினாள். எல்லோரும் கொண்டாடியதால் அவள் கொண்டாடினாள். அவளுக்கு, நம்பிக்கை ஒரு விவாதம் அல்ல; அது சொந்தமானது.

ரோமன், ஐரோப்பிய மற்றும் திருச்சபை பற்றிய ஒரு வரலாற்று மாணவியான சாரா, கலாச்சார ஆய்வுகள் பற்றிய புத்தகத்தைத், யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை நூலகத்தில் அன்று தேடிக்கொண்டிருந்தாள். அந்தவேளை, சாமுவேல், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய உண்மைத் தன்மையை - தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டுகள், பண்டைய பயணிகளின் குறிப்புகள், பண்டைய இலக்கிய குறிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் - மூலம், ஒரு பொழுதுபோக்காக அலச அங்கு வந்தான். அவன் கொஞ்சம் வேகமாக வந்ததாலும், அவன் உயரமாக, அகன்ற மார்பு, திடமான தோள்கள் (தடந்தோள்), நீண்ட கைகள் மற்றும் உறுதியான உடல் கொண்டவனாக கம்பீரமான நடையுடன் வந்ததால், சாராவை திரும்பி அவனைப் பார்க்க வைத்தது.

சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை
மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே?

தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்? .... சாமுவேல் கொஞ்சம் தடுமாறினாலும், அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ஹாய், நான் சாமுவேல் இறுதியாண்டு மருத்துவபீட மாணவன் என்று, தன்னை அறிமுகப் படுத்தினான். அவளும் தான் இரண்டாம் ஆண்டு கலை மாணவி என்று, அவன் கண்ணை பார்த்தபடி கூறினாள்.

'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல'

அதனாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவர்கள் பேசாமல், பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். என்றாலும் சில நிமிடங்களுக்கு பின்,
அவர்களின் உரையாடல்கள் பணிவுடன் தொடங்கி, பின்னர் மெதுவாக ஆழமடைந்தன.

சாமுவேல் சாராவிடம் இதற்கு முன்பு அவள் அறியாத, அவளிடம் இதுவரை யாராலும் அல்லது அவளே தன்னிடம் கேட்கப்படாத கேள்விகளைக் கேட்டான். சாரா ஆதாரங்களுடன் அல்ல, ஆனால் உணர்ச்சியுடன் பதிலளித்தாள். ஆனாலும் இருவரும் அதை அச்சுறுத்தப்படுவதாக உணரவில்லை. அவர்களுக்கு இடையே மென்மையான எதோ ஒன்று வளர்ந்தது - வேறுபாட்டை மதிக்கும் ஒரு பாசம் - ஒரு அன்பு.

என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதல் அவர்களின் தயக்கத்தை வென்றது.

அவர்கள் பெரிதாக, ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக, தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, திருமணம் செய்து கொண்டனர்.

Brief of 'When the Candle Met the Question' / Part: 01

Jaffna University had its own rhythm in the late afternoons.

The medical faculty students walked fast, burdened with anatomy notes and sleepless nights. Across the road, the arts faculty moved slower—books under arms, thoughts drifting between literature, politics, and life itself.

Samuel belonged to the first group.


A final-year medical student, tall, quiet, known among his batch not for loud brilliance but for relentless questioning. He was born into a Christian family, attended church from childhood, sang carols every December, and yet—somewhere along the way—he had learned to separate faith from habit. He believed deeply in humanity, ethics, and truth, but he no longer accepted anything simply because it had been repeated for generations.

Sarah was different.

A second-year arts student, she carried her beliefs like a shawl—warm, unquestioned, inherited. She followed religion the way one follows breathing: naturally, without analysis. She believed because her parents believed. She celebrated because everyone celebrated. To her, faith was not a debate; it was belonging.

They met at the university library.

She was searching for a book on cultural studies. He was reading history—Roman, European, ecclesiastical.

Their conversations began politely, then slowly deepened. Samuel asked questions Sarah had never been asked before. Sarah answered with emotion, not evidence. Yet neither felt threatened. Something gentle grew between them—an affection that respected difference.

Two years later, love overcame hesitation. They married quietly, without drama.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 02 தொடரும் / Will follow

துளி/DROP: 1949 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01] / In English & Tamil

https://www.facebook.com/groups/978753388866632/posts/32947476411567581/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 / In English & Tamil

சாமுவேல் யாழ்ப்பாண போதனை மருத்துவ மனையிலும் சாரா வேம்படி மகளீர் கல்லூரியிலும் கடமையாற்றுவதால், திருமணமான பின், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கள் வாழ்வை தற்காலிகமாக அமைத்தார்கள்.

சாரா, திருமண தம்பதிகளாக, தங்களது முதல் கிறிஸ்துமஸ்ஸை பிரத்தியேகமாக கொண்டாட, வீட்டை கவனமாக அலங்கரித்தாள். ஜன்னல் அருகே ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் நின்றது. மெழுகுவர்த்திகள் மெதுவாக மின்னின. அவள் வீட்டு வேலைகள் செய்யும் போதும் கூட கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாள்.

ஆனால் சாமுவேல், இவைகளில் ஒன்றிலும் தனிக்கவனம் செலுத்தாமல், தானும் தன்பாடாக இருந்தான். அதைக்கவனித்த சாரா, "கிறிஸ்துமஸ் நெருங்குகிறது, 2026 பிறக்கப்போகுது, ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய்," என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"உன் ஆர்வத்தை, மகிழ்வை, செயலை பார்த்து, நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்," என்று அவன் பதிலளித்தான்.

"இது உலகை இரட்சிக்க பிறந்த இயேசுவின் பிறந்தநாள்," என்று அவள் இயல்பாகச் சொன்னாள்.

சாமுவேல் தயங்கி, பின்னர் மெதுவாகக் கேட்டான், "அவர் எப்போது பிறந்தார் என்று எப்படி உனக்குத் தெரியும்?"

சாரா சிரித்தாள். "டிசம்பர் 25. அது அனைவருக்கும் தெரியும். ஏன் குட்டி பிள்ளைக்கு கூட , வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்க" என்றாள்.

ஆனால், அப்பொழுது சாமுவேல் வாக்குவாதம் செய்யவில்லை. அவன் அமைதியாக சிரித்தான், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க உதவினான். அன்பு, பொறுமையுடன் தொடங்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். மற்றது, இது, திருமணத்தின் பின், அவளின், முதல் கிறிஸ்மஸ்.

வாரங்கள் கழித்து, ஒரு சாதாரண மாலையில், உப்பரிகையில் [பால்கனியில்] அமர்ந்து இருவரும் நிலா ஒளியில் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று மூன்றாம் பிறை வானில் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சாமுவேலுக்கு அப்பொழுது பாரதிதாசனின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.

துருக்கச் சிறுவன் ... "மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ !

கத்தோலிக்கச் சிறுவன்... "கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே கத்தோலிக்கச் சொத்து நீதான்!

இந்துச் சிறுவன்... எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ !

அவன் அந்த பாடல் வரிகளை பாடிக் காட்டிவிட்டு, சாராவிடம் கேட்டான்: மூன்று பேரும் மொழியைக் கேட்டால், யாருக்கு சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்?

சாரா, எந்த சிந்தனையும் செய்யாமல், எடுத்த உடனேயே, அது கத்தோலிக்கருக்கே என்றாள். சாமுவேல், அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, ... பாரதிதாசனின் அடுத்தவரியை பாடினான்.

சுயமரியாதைச் சிறுவன்... யாவரும் மனிதர் என்பது தெரிந்தால், நிலவும் பொதுவே என்பது தெரியும், அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே!

அவள் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள்.

சாமுவேலும் மௌனமாக ஒரு வரலாற்றுப் புத்தகத்தைத் திறந்தான். “சாரா,” அவன் மெதுவாகக் கூறினான், கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாகத் தெரியவில்லை என்றான்.

அவள் மேலே பார்த்தாள், பின் சாரா முகம் சுளித்தாள். “அப்படியானால் அதை ஏன் மாற்ற வேண்டும்?” அவள் சட்டென்று கேட்டாள்.

அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது என்றவன், "கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால் - “சாட்டர்னேலியா. யூல். பேகன் [Saturnalia. Yule. Pagan] கொண்டாட்டங்கள் - அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை."

சுருக்கமாக, “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மாற்ற, கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே உள்ள பண்டிகைகளை கிறிஸ்துவின் கதையுடன் இணைத்தனர்.” என்றான்.

அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அதை கவனித்த சாமுவேல், " சாரா நான் ஒன்றையும் பழிக்கவில்லை, இன்றைய இந்து சமயம் கூட, தென் இந்தியரை, தங்களுக்குள் உள்வாங்க, தங்களின் வேத சமயத்துக்குள், பண்டைய தமிழரின் சைவ சமயத்தை உள்வாங்கியது ஒரு வரலாறு. அதற்காக முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால் → விஷ்ணு ஆனான்! சிவன் → ருத்திரன் ஆனான்! கொற்றவை →பார்வதி / துர்க்கை ஆனாள்! அதற்குத் தக்க புராணங்களும் இயற்றப்பட்டன." என்றான்.

அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அவளின் வாயும் மனமும் உலக நாடுகளின் அன்பு இரட்சகரை துதித்துக்கொண்டு இருந்தது.

"உலக நாடுகளின் அன்பு இரட்சகர்
உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை
குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க
கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"

"வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட
மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து
அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"

"காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட
மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர்
பாலகன் மேலே விண்மீன் நிற்க
இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"

"ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து
கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி
உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"

Brief of 'When the Candle Met the Question' / Part: 02

The First Christmas

It was their first Christmas as a married couple, still living near Jaffna.

Sarah decorated the house carefully. A small Christmas tree stood near the window. Candles flickered softly. She sang hymns as she worked.

Samuel watched.

“You’re quiet,” she said, smiling.

“I’m thinking,” he replied.

“It’s Jesus’ birthday,” she said naturally.

Samuel hesitated, then asked gently,
“Do you know when he was born?”

Sarah laughed.
“December 25. Everyone knows that.”

Samuel did not argue that night. He only smiled and helped her light the candles.

Love, he knew, must begin with patience.

The Question Enters the House

Weeks later, on an ordinary evening, Samuel opened a history book.

“Sarah,” he said softly,
“did you know that Christmas was officially fixed on December 25 only 340 years after Jesus’ death?”

She looked up.

“Pope Julius I made that declaration,” he continued.
“Before that, Christians remembered Jesus’ birth on March 29, January 6, and even a date in June.”

Sarah frowned.
“Why change it then?”

“Because Europe already had midwinter festivals,” Samuel said.
“Saturnalia. Yule. Pagan celebrations.”

“To convert non-Christians,
Christian leaders merged existing festivals with Christ’s story.”

The room fell silent. Sarah was not angry. But something inside her shifted. Her mouth and mind were filled with praise for the beloved Savior of the world.

"Jesus, devoted redeemer of all nations,
has shone forth,
Let the whole family of the faithful
celebrate the stories
The shining star,
gleaming in the heavens,
makes him known at his birth and,
going before,
has led the Magi to his cradle
Falling down,
they adore the tiny baby hidden in rags,
as they bear witness to the true God
by bringing a mystical gift"

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 03 தொடரும் / Will follow

துளி/DROP: 1951 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02

https://www.facebook.com/groups/978753388866632/posts/32961478550167367/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 / In English & Tamil

அடுத்த வருடம் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கிறிஸ்துமஸ் சத்தமாக இருந்தது. பிரகாசமாக இருந்தது. மேலும் வணிக ரீதியாக இருந்தது. கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] நெருப்பிடம் [fireplace] அருகே தொங்கவிடப்பட்ட காலுரை [ஸ்டாக்கிங்ஸ் / Stockings] காணப்பட்டது.

குழந்தைகள் சாண்டா கிளாஸ் [Santa Claus] புகைபோக்கியில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர். அடுத்த நாள் குழந்தைகள் எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தனர்.

அன்று இரவு, சாரா கேட்டாள், “சாண்டா [Santa Claus] பரிசுகளை கொண்டு வந்ததாக நீங்கள் எப்போதாவது நம்பினீர்களா?”

சாமுவேல் சிரித்தான். “நான் குழந்தையாக இருந்தபோது, ஆம். ஆனால் நான் ஏன் என்று ஒருபோதும் கேட்டதில்லை.” அவன் கொஞ்சம் இடைநிறுத்தினான். அதன் பின், “நாங்கள் மரபுகளில் பிறந்தவர்கள். நாங்கள் அவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறோம். பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்புவதை ஏன் நம்புகிறார்கள் என்று கேட்பவர்கள் மிகக் குறைவு.”

அப்பொழுது, தனது சாதாரண வகுப்பில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்த தனது பள்ளி ஆசிரியரை சாரா நினைவு கூர்ந்தார், ஏன் என்றால், அவர் கிரகணங்களின் போது உண்ணாவிரதம் இருந்தார். அதேவேளை, சாரா, அவனின் பதிலை சங்கடமாக உணர்ந்து, ஒரு பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அவளும் அப்படியே, ஒன்றும் ஏன் என்று கேட்பதில்லை.

அது சரி சாரா, கொஞ்சம் என்னைப் பார் என்றவன் நாம், "நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்றான்.

மூன்றாவது கிறிஸ்துமஸ் அமைதியாக வந்தது. இந்த முறை, பைபிளைத் திறந்தது சாரா தான்.

அவள் லூக்கா, அத்தியாயம் 2 ஐ [Luke 2 / The Birth of Jesus] சத்தமாக, "அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று வாசித்து விட்டு, அவள் சாமுவேலைப் பார்த்து, “குளிர்காலத்தில் மேய்ப்பர்கள் அதைச் செய்வார்களா?” என்று கேட்டாள்.

“இல்லை,” என்று சாமுவேல் மெதுவாக பதிலளித்தான். பின், “பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். ” என்றான்.

அவன் அவளுக்கு மற்ற வசனங்களைக் எடுத்துக் காட்டினான்:

சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.]

வாசித்து முடிய அவன் அவளுக்கு சொன்னான்: “பைபிளே குளிர்காலம் கடுமையாக இருந்தது என்று காட்டுகிறது, எனவே இயேசு டிசம்பரில் பிறந்திருக்க முடியாது.” என்றான். சாரா கொஞ்சம் தயக்கத்துடன் மெதுவாக பைபிளை மூடினாள். கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது - கோபத்தால் அல்ல, விசுவாசம் எடுத்தவுடன் உடைவதில்லை என்பதால். “அப்படியானால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன?” என்று அவள் கேட்டாள்.

சாமுவேல் அவள் கையைப் பிடித்தான்.

“ஒரு தேதி இல்லை,”
“ஒரு மரம் இல்லை.
சாண்டா அல்ல.”

“இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கதை - வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் கலந்தது.”

“ஆனால் இயேசு?” என்று அவள் கேட்டாள்.

“அவருடைய செய்தி நிலைத்திருக்கிறது,” என்று சாமுவேல் பதிலளித்தான். “உண்மை. இரக்கம். நீதி. மனிதநேயம்.” அவர்கள் அமைதியாக சாளரத்தின் ஊடாக அயலவர்கள் கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர்.

ஆண்டுகள் கடந்தன. அவர்களின் வீட்டில் இன்னும் மெழுகுவர்த்திகள் இருந்தன - ஆனால் குறைவான அலங்காரங்களுடன். அவர்களின் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் கதை இல்லை. ஆனால் நேர்மை இருந்தது.

ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அவர்கள் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்றனர்.

சாரா இன்னும் பிரார்த்தனை செய்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்பிக்கையை விட ஆழமான உண்மைகளைக் கற்றுக்கொண்டார்கள்.

ஒரு கிறிஸ்துமஸ் மாலையில், சாரா மெதுவாகச் சொன்னாள், "நான் இன்னும் நம்புகிறேன்." சாமுவேல் சிரித்தான். "நான் இன்னும் கேள்விகள் கேட்கிறேன்." அவள் அவன் மீது சாய்ந்தாள். "ஒருவேளை அது போதும்." என்றாள். சாமுவேல் தலையசைத்தான். ஏனென்றால் அவர்கள் அமைதியான உண்மையைக் கற்றுக்கொண்டார்கள்:

நம்பிக்கை கேள்விகளுக்கு அஞ்சுவதில்லை.
அன்பு உண்மைக்கு அஞ்சுவதில்லை.
மாயையிலிருந்து விடுபட்ட கிறிஸ்துமஸ்,
பலவீனமாகாது—ஆனால் மனிதனாக மாறுகிறது.

Brief of 'When the Candle Met the Question' / Part: 03

England and the Second Christmas

They moved to England the following year.

Christmas there was louder. Brighter. More commercial.

Stockings hung by the fireplace.
Children waited for Santa Claus to come down the chimney.

One night, Sarah asked,
“Did you ever believe Santa brought gifts?”

Samuel smiled.
“When I was a child, yes.
But I never asked why.”

He paused.

“We are born into traditions.
We accept them without questioning.
Even as adults, very few people ask why they believe what they believe.”

Sarah remembered her schoolteacher—who taught solar and lunar eclipses scientifically—yet fasted during eclipses.

She felt uneasy.

The Bible Opens

The third Christmas arrived quietly.

This time, it was Sarah who opened the Bible.

Luke, Chapter 2.

She read aloud about the shepherds guarding their flocks at night.

She looked at Samuel.
“Would shepherds do that in winter?”

“No,” Samuel replied gently.
“Historically, flocks were brought in before October 15 to protect them from cold and rain.”

He showed her other verses:

Song of Solomon 2:11 — “The winter is past.”
Ezra 10:9,13 — People trembling in heavy winter rain, unable to stand outside.

“The Bible itself shows winter was harsh,” he said.
“So Jesus could not have been born in December.”

Sarah closed the Bible slowly.

Tears filled her eyes—not of anger, but of loss.

Faith Does Not Break

“Then what is Christmas?” she asked.

Samuel took her hand.

“Not a date,” he said.
“Not a tree.
"Not Santa.”

“It is a story that grew over centuries—mixed with history, politics, and culture.”

“But Jesus?” she asked.

“His message remains,” Samuel replied.
“Truth. Compassion. Justice. Humanity.”

They sat silently.

A Different Celebration

Years passed.

Their home still had candles—but fewer decorations.
There was no Santa story for their children.
But there was honesty.

Every Christmas, they visited hospitals, orphanages, and old-age homes.

Sarah still prayed.
Samuel still questioned.

But neither tried to convert the other.

They had learned something deeper than belief.

Ending

One Christmas evening, Sarah said softly,

“I still believe.”

Samuel smiled.
“And I still ask questions.”

She leaned against him.

“Maybe that is enough.”

Samuel nodded.

Because they had learned the quiet truth:

Faith does not fear questions.
Love does not fear truth.
And Christmas, stripped of illusion,
becomes not weaker—but human.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

முற்றிற்று / Ended

துளி/DROP: 1954 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03

https://www.facebook.com/groups/978753388866632/posts/32987342684247620/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.