Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

Published By: Digital Desk 3

11 Jan, 2026 | 05:16 PM

image

100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். 

இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. 

தித்வாவுக்குப் பின்னர் மீள் கட்டமைப்புக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்கத்தை இது குறிக்கிறது. 

2025 டிசம்பர் 22 மற்றும்  -23 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர்  எஸ். ஜெய்சங்கர் வருகையின் போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.jpg

1.jpg

5.jpg

4.jpg

7.jpg

3.jpg

2.jpg

https://www.virakesari.lk/article/235773

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி: 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு!

Jan 31, 2026 - 06:39 PM

இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி: 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு!

“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.  

இந்த பாலங்கள் இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cml2bw9ag04oio29nqbawxxmu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன 10 பெய்லி பாலத்தொகுதிகள் 

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 06:36 PM

image

'தித்வா' சூறாவளியினால் வீதிப்போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து, அதனை சீரமைக்கும் நோக்கில் இந்தியா வழங்கிவரும் உதவிகளின் நீட்சியாக, அடுத்தகட்டமாக அனுப்பிவைக்கப்பட்ட 10 பெய்லி பாலத்தொகுதிகள் இன்று வியாழக்கிழமை (5) கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தன.

அவை இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுக மற்றும் விமானசேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

7Q8A0995.jpg

7Q8A1016.jpg

7Q8A0933_1.jpg

7Q8A0910.jpg

7Q8A0963.jpg

7Q8A0921.jpg

https://www.virakesari.lk/article/237935

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலாபத்தில் 240 அடி நீள பெய்லி பாலம் திறப்பு: டித்வா புயலுக்குப் பிறகு இந்தியாவின் மீள்நிர்மாண உதவி

19 Mar, 2026 | 05:35 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

டித்வா புயலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து தொடர்புகளை மீளமைக்கும் நோக்கில், சிலாபம் – தொடுவாவை வீதியில் அமைக்கப்பட்ட 240 அடி நீளமான பெய்லி பாலம் புதன்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

கரையோரக் கிராமங்களான இரணைவில மற்றும் தொடுவாவை ஆகியவற்றை இணைக்கும் இந்த முக்கிய பாலம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ஜிஹான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த புதிய பாலம் சிலாபம் வழியாக புத்தளம் மற்றும் கொழும்புக்கு இடையிலான கரையோரப் போக்குவரத்து இணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகளின் வாழ்வாதாரத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமைகிறது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் பிராந்திய பொருளாதாரச் செயல்பாடுகள் மீளச் செயல்படத் தொடங்கியுள்ளன.

இது டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் மீள்நிர்மாண உதவியின் கீழ் இலங்கையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலங்களில் அதிக நீளமும் அகலமும் கொண்டதாகும். 240 அடி நீளமும் 13 அடி அகலமும் கொண்ட இந்த பாலம், இடைத்தூண் ஆதரவுடன் இரட்டை வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு உதவி பொதியின் ஒரு பகுதியாகும்.

குறிப்பாக, 30 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியின் கீழ் பெய்லி மற்றும் நிரந்தர பாலங்களை அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை மீள உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பாலம், இந்திய இராணுவ பொறியியல் அணியின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.

டித்வா புயலால் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான உட்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. கடந்த மாதங்களில், இந்திய இராணுவ பொறியியல் பிரிவு 40க்கும் மேற்பட்ட பாலங்களின் சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், வீதிகள், கால்வாய்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு வழங்கிய நான்கு பெய்லி பாலங்களில் இரண்டு கிளிநொச்சி மாவட்டத்திலும், மற்ற இரண்டு கண்டி – இராகலை வீதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடினமான நிலப்பரப்புகளில் போக்குவரத்தை மீளமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இந்நிலையில், வரும் வாரங்களில் மேலும் சுமார் 15 பெய்லி பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் போக்குவரத்து தொடர்புகள் முழுமையாக மீளமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-03-19_at_17.18.19.jp

WhatsApp_Image_2026-03-19_at_17.18.18__2

WhatsApp_Image_2026-03-19_at_17.18.18__1

WhatsApp_Image_2026-03-19_at_17.18.17.jp

WhatsApp_Image_2026-03-19_at_17.18.18.jp

WhatsApp_Image_2026-03-19_at_17.18.16.jp

WhatsApp_Image_2026-03-19_at_17.18.16__1

https://www.virakesari.lk/article/241395

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.