Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்?

ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்.

31 நிமிடங்களுக்கு முன்னர்

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார்.

ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் பேசுகையில், "அந்த கட்டுரையில் நரவனே, தன்னுடைய நினைவுக்குறிப்பான அப்புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஐந்து வரிகளை மட்டும் வாசிக்க நான் விரும்புகிறேன்." என தெரிவித்தார்.

வெளியாகாத புத்தகம் ஒன்றின் பகுதிகளை எப்படி வாசிக்கலாம் எனக்கூறி பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆளும்கட்சியினரை பார்த்து ராகுல் காந்தி, "பயங்கரவாத்கத்தை எதிர்த்து சண்டையிடுவதாக அவர்கள் (ஆளுங்கட்சியினர்) கூறுகின்றனர், ஆனால் ஒருவர் கூறிய மேற்கோள் குறித்து அஞ்சுகின்றனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவர்களை பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை வாசிக்க அனுமதிக்கட்டும்." என்றார்.

ஊடக செய்திகளின்படி, ராகுல் காந்தி குறிப்பிட்ட அப்புத்தகம் 2024ம் ஆண்டு விற்பனைக்கு தயாராக இருந்தது. ஆனால், அப்புத்தகம் குறித்து இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான செய்தியில், அப்புத்தகம் மீதான விசாரணை முடியும் வரை அதன் பகுதிகளையோ அல்லது மின்னணு பிரதிகளையோ யாருக்கும் வழங்கக் கூடாது என அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் சில மட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகவும், அப்போதிருந்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஜெனரல் நரவனே ராணுவத் தளபதியானார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஜெனரல் நரவனே ராணுவத் தளபதியானார்.

யார் இந்த மனோஜ் முகுந்த் நரவனே?

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பணியாற்றினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டம் மற்றும் கல்வான்பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா பத்தற்றத்தை எதிர்கொண்ட காலகட்டத்தில் அவர் இந்திய ராணுவத்தை வழிநடத்தினார்.

புனேவின் கியான் பிரபோதினி பள்ளியில் மனோஜ் நரவனே ஆரம்ப கல்வி பெற்றார். அதன்பின் இந்திய ராணுவத்தில் அதிகாரியானார்.

போர்க்களத்தைத் தாண்டி கல்வி மீதும் அவருக்கு நாட்டம் இருந்தது. அவர் இந்தோரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக இயல் பிரிவில் எம்.ஃபில் பட்டம் பெற்றார்.

அவருடைய தந்தை முகுந்த் நரவனே விமானப் படை அதிகாரியாக இருந்தவர். மனோஜ் நரவனேவின் மனைவி ஓர் ஆசிரியர். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

2020ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் ஜெனரல் நரவனேவின் ராணுவப் பணியில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில், "2020ம் ஆண்டு ஜூன் மாதம் ரோந்துப் புள்ளி 14-ல் (Patrolling Point) பதற்றம் உச்சகட்டத்தை அடைந்ததாக, அதிகாரபூர்வ ராணுவ பதிவுகள் மற்றும் ராணுவம் வழங்கிய முந்தைய தகவல்கள் கூறுகின்றன. மோதல் தடுப்பு மண்டலத்திலிருந்து (buffer zone) தங்கள் கூடாரங்களை நீக்குவதற்கு சீன ராணுவம் மறுத்தது. கர்னல் சந்தோஷ் பாபுவால் வழிநடத்தப்பட்ட இந்திய துருப்புகள், சீன ராணுவத்தை தடுத்து நிறுத்த நகர்ந்தபோது, வன்முறை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரல் நரவனே இந்தியாவின் உத்தியில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இந்திய ராணுவம் தற்காத்துக்கொள்ளும் கொள்கையை மட்டுமே கடைபிடித்தது (defensive policy), ஆனால் நரவனே அச்சுறுத்தல் சமயங்களில் எதிரிகளை தாக்கும் கொள்கையை கடைபிடிக்குமாறு (offensive defence) செய்தார்.

அந்த செய்தியில், "நரவனே கைலாஷ் மலைத்தொடரில் இந்திய டாங்கிகளை நிறுத்துமாறு செய்தார், இது சீன ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது. 2020ம் ஆண்டு ஜூன் 16 இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்ததால், அந்நாள் தன்னுடைய பணியில் 'சோகமான நாள்' என நரவனே விவரித்தார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2023ம் ஆண்டில் வெளியான புத்தகத்தின் பகுதிகள்

ஜெனரல் நரவனே ஆட்சிக் காலத்தில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெனரல் நரவனே ஆட்சிக் காலத்தில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின்படி, "2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலை இப்புத்தகம் விவரிக்கிறது. அதில், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் அக்னிபத் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான உரையாடலும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடிஐ செய்தி முகமை அப்புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டதாக அச்செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட் 31 அன்று மாலை நடந்த சம்பவங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இந்த சம்பவம் குறித்த கட்டுரை கேரவன் இதழில் வெளியாகியுள்ளது.

அப்புத்தகத்தின் சில பகுதிகள் குறித்து கேரவன் இதழில் வெளியான பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாசிக்க நினைத்தார்.

அதன்பின், ஆகஸ்ட் 31 மாலை என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ள கேரவன் கட்டுரையின் பக்கங்களை காங்கிரஸ் கட்சி தன் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தது.

நரவனேவின் சாதனைகள்

ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார்.

லண்டன் ஸ்பீக்கர்ஸ் பியூரோ அமைப்பின்படி (முன்னணி பேச்சாளர் முகமை), நரவனேவின் பணி காலத்தில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முயற்சியின் கீழ், பல முக்கிய ஆயுத கொள்முதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது, இந்திய ராணுவம் ஆயுதங்களை சொந்தமாக தயாரிக்கவும் வெளிநாட்டு ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் ஊக்கமளித்தது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்கள் பயிற்சி பெற அனுமதித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் நரவனே, இது ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய படியாக கருதப்படுகிறது.

ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். இலங்கையில் ஆபரேஷன் பவான் நடவடிக்கையின்போது அங்கு நிறுத்தப்பட்ட இந்திய அமைதிப்படையின் ஒரு உறுப்பினராகவும் ஜெனரல் நரவனே இருந்தார். மேலும் மியான்மர் தூதரகத்திலும் மூன்றாண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார்.

நரவனே பலமுறை தன் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் படைப்பிரிவை வழிநடத்தியதற்காக சேனா பதக்கம், நாகாலாந்தில் அசாம் ரைஃபிள் (வடக்கு) பிரிவின் ஐஜியாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம், அதிநவீன தாக்குதல் படைப்பிரிவான ஸ்டிரைக் கார்ப்ஸை (Strike Corps) வழிநடத்தியதற்காக அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் ராணுவப் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக பணியாற்றியதற்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgkj6nj310o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.