சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை.
சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும்.
நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.
By
நியாயம் ·