Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!

Published By: Digital Desk 1

09 Feb, 2026 | 03:38 PM

image

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (09) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும், மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர், குறித்த இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

https://www.virakesari.lk/article/238231

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் - அகழ்வுப் பணிகள் மார்ச்சில்!

Published By: Vishnu

09 Feb, 2026 | 07:02 PM

image

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வுபணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றையதினம் சென்று பார்வையிட்டனர்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/238256

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.