Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

Feb 18, 2026 - 03:43 PM

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlrvh2eh0004356n6qsq4di6

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை விட அதிகம் கற்றுவிட்டார், உழைக்கின்றார் என புருசுவுக்கு தன் பொண்டாட்டி மீது பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும் மனைவியை போத்தலால் குத்திய கணவன்

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 04:56 PM

image

குடும்ப தகராறினால் தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து, மனைவியை மதுபான போத்தலால் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார்.

நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடும்ப தகராறினால் கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுடன் தாக்குதலுக்கு இலக்கான பெண் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆசிரியரான குறித்த பெண்,மேலதிக வருவாயை பெறும் நோக்குடன் வீட்டின் முன்பாக சிறிய வியாபர நிலையம் ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன், மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் போத்தல் உடைந்ததும், உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

காயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற அப்பெண்ணின் கணவனை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாய் மீது தந்தை தாக்குதலை நடத்துவதை தடுக்கும் முகமாக அவர்களது சிறுவயது மகன் தந்தையை தடுக்கும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்த நிலையில், அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/238975

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயம் said:

தன்னை விட அதிகம் கற்றுவிட்டார், உழைக்கின்றார் என புருசுவுக்கு தன் பொண்டாட்டி மீது பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையோ?

இந்தக் காணொளியை ஒரு முறை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. பெண் என்றும் பார்க்காமல்… பைத்தியம் பிடித்தவன் போல் எல்லா இடமும் அடிக்கின்றான். அந்த நேரம் ஒரு 10 வயதுள்ள சிறுவன் வந்து, அவனை அடிக்க விடாமல் தன்னுடைய பலம் கொண்ட அளவிற்கு கட்டிப் பிடித்து அப்பா, அப்பா… என்று கத்துவது போல் உள்ளது.

மிக கொடுமையான காணொளி அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை ஒரு முறை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. பெண் என்றும் பார்க்காமல்… பைத்தியம் பிடித்தவன் போல் எல்லா இடமும் அடிக்கின்றான். அந்த நேரம் ஒரு 10 வயதுள்ள சிறுவன் வந்து, அவனை அடிக்க விடாமல் தன்னுடைய பலம் கொண்ட அளவிற்கு கட்டிப் பிடித்து அப்பா, அப்பா… என்று கத்துவது போல் உள்ளது.

மிக கொடுமையான காணொளி அது.

அண்ணை,

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன், மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் போத்தல் உடைந்ததும், உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

அண்ணை,

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன், மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் போத்தல் உடைந்ததும், உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அந்தக் குடிகாரன் அடித்த அடியில்… அந்தப் பெண் இறந்து இருந்தால், அந்தச் சிறுவனுக்கு ஆதரவு இல்லாமல் போய் இருக்கும். இந்தச் சம்பவம்… அந்தச் சிறுவனுக்கு வாழ் நாள் முழுக்க மன உழைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.