Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

Published By: Digital Desk 1

21 Feb, 2026 | 04:19 PM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.

நாம் யுத்தம் செய்தது தமிழ் மக்களுடன் அல்ல, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுடனேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். புலம்பெயர் அமைப்புகளும் ஜே.வி.பி அரசாங்கமும் கூறுவது போல மஹிந்த ராஜபக்ஷ இரத்த தாகம் கொண்டவர் அல்ல என்பதை பொன்சேகா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர்.

அதேபோல், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை 'ராஜபக்ஷ நிக்காய' (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது. பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும். மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்" என அவர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/239238

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

10 hours ago, கிருபன் said:

"சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவர்." ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.

சரத் பொன்சேகா கூறியது இருக்கட்டும், அவர் மாற்றி மாற்றி பேசுவதாக கூறுகிறார் நாமல், அதை நாமும் அறிவோம், நாளைக்கு வேறொன்று கூறுவார். ஏனெனில் களத்தில் போரை வழி நடத்தியவர் தானே என்று கூறுகிறார், மற்றவர்கள் கோட், சூட்டோடு குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து போர் செய்தவர்கள் என்று கூறுகிறார். அவரும் போரோடும் அது சார்ந்த குற்றங்களோடும் தொடர்பு பட்டவர். தன்னை பாதுகாக்க வேறொருவரை குற்றம் சாட்டுவது, கொலை செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது குற்றவாளிகளின் வழமை, அது இருக்கட்டும். இராணுவத்தினருக்காக நான் தூக்குக்கயிறை முத்தமிடுவேன் என்று வீரவசனம் பேசிய மஹிந்தவே, தான் தேர்தலில் தோல்வியுற்றால் என்னை மின்சாரக்கதிரையில் ஏற்றி விடுவார்கள் என பதறியது ஏன்? குற்றம் இழைக்காதவராக இருந்திருந்தால் அப்படிப்பட்ட பயம் எப்படி அவருக்கு வந்தது? போரின் நாயகன் நான் என விழா கொண்டாடியவர், இராணுவத்தினரை எப்படி குற்றம் சாட்ட முடியும்? இவர்களே இராணுவத்தினரை காட்டிக்கொடுத்துக்கொண்டு, போர்க்குற்ற விசாரணை என்றவுடன் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கின்றனர் என பதறித்துடிப்பது ஏன் என இவர் விளக்குவாரா நாமலும் சரத் பொன்சேகாவும்? அரகலயா போராட்டத்தில் இராணுவத்தினர் ராஜபக்ஸ குடும்பத்தினரை கைவிட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம். சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை, என்று குற்றம் சாட்டுபவர்கள் வெள்ளிக்கொடியுடன் வந்தவர்களை இராணுவமே சுட்டது என்றும், இராணுவத்திடம் சரணடைந்திருந்திருந்தால் இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்கள், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஒருபோதும் அனுமதியோம் என்றும் தாம் சொல்வது என்னவென்று தெரியாமல் புலம்புகிறார்கள்.

11 hours ago, கிருபன் said:

மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும்.

சரி, போரில் காயம் படும் பொதுமக்களுக்கு உதவ மக்களோடு இருந்த பொது அமைப்புகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன்? யார் குற்றம் செய்தார்கள் என்பதற்கு அவர்கள் சாட்சியாகவும் இருந்திருப்பார்கள். அங்கு தங்கியிருந்த மக்களின் தொகையை திட்டமிட்டு குறைத்துக்கூறியது ஏன்? சிறுவர் தங்கியிருந்த விடுதி செஞ்சோலையில் குண்டுகளை கொட்டியது யார், ஏன் செய்தார்கள்? மருத்துவம், உணவு, போக்குவரத்தை தடுத்தது ஏன்? காப்பாற்றப்படும் மக்களுக்கு தங்குமிட, உணவு, சுகாதார வசதி செய்து கொடுக்காது ஆடுமாடுகளைப்போல் அடைத்தது ஏன்? யாரும் மிஞ்சக்கூடாது என்று திட்டமிட்டு பொய்யுரைத்து சாதாரண மக்களை கொன்றது ராஜபக்ச குடும்பத்தினரும் பௌத்த இனவாதிகளுமே.

11 hours ago, கிருபன் said:

அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர்.

அப்படிப்பட்ட ஒருவரை ஏன் அரசியலிலிருந்து மக்கள் அடித்து விரட்டினர்?

11 hours ago, கிருபன் said:

அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை 'ராஜபக்ஷ நிக்காய' (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது

அப்படியல்ல, அந்தப்பிக்குகள் தங்களை தாங்களே அப்படிச்சொல்லிக்கொள்கிறார்கள் மட்டுமன்றி நீங்கள் விட்டுச் சென்ற இரத்தவெறியை தொடர்கிறார்கள்.

11 hours ago, கிருபன் said:

மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது.

மதத்தலைவர்களை கொலை செய்த இவர்களின் கலாச்சாரம் பற்றி இவர் பேசுவதில்லை.

11 hours ago, கிருபன் said:

பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும்.

தவறு, அதனாற்தான் நாட்டில் இத்தனை அழிவு, உங்களுக்கு பௌத்த மத போதனை தெரியாது. பௌத்தன்என்று சொல்லிக்கொண்டு அதை வைத்து வயிறு வளர்க்கிறீர்கள். நீங்கள் சுத்த பௌத்தனல்ல, அரசியலுக்காக பௌத்தத்தை பாவிக்கிறீர்கள்.பௌத்த மதத்தை காப்பாற்றுவதற்காக மற்றைய மதங்களை பலாத்தகாரமாக அழிக்கிறீர்கள், எல்லா மதங்களையும் சமமாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தவறாகவே கற்று, விளங்கி, வழிநடத்தப்பட்டு நாட்டை குட்டிச்சுவராக்குகிறீர்கள். இப்படிப்பட்ட மனம், செயற்பாடு கொண்ட மத தலைவர்கள், அரசியல் வாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் செய்த தவறுகள் பகிரங்கப்படுத்தப்பட்டு இவர்களால் மதம் களங்கப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். நாட்டில் சாந்தி, சமாதானம், சமத்துவம் கருணையை போதிக்க வேண்டியவர்கள், வன்முறையை தூண்டுவதும் நிஞாயப்படுத்துவதும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனையளிக்கப்படவேண்டும். அப்போதான் நாடு முன்னேற்றமடைய முடியும், அவரவர் மதத்தை அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக கைக்கொள்ள முடியும்.

11 hours ago, கிருபன் said:

இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்"

நம்பிற்றோம்! ஜானாதிபது கனவு எப்படி பேசுது? இதுக்குமேலும் மக்கள் இவர்களை ஆதரித்தால்; நாடு நிரந்தர இருண்ட யுகத்திற்குள் போகும், புத்தனாலும் நாட்டை காப்பாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

மதத் தலைவர்களை அவமதிப்பது

எல்லா காட்டுமிராண்டி அடாவடி வேலைகளையும் செய்துவிட்டு காவியை போர்த்து பதுங்கிக்கொள்வது, அரசியல் செய்வது, பின் அரசியல் பழிவாங்கல் என்று முறையிடுவது அசிங்கம்!

15 hours ago, கிருபன் said:

ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்"

பௌத்தனாக இருந்து கடமையை செய். பல்மதம், இனம் கொண்ட நாட்டில் ஜனாதிபதியாக கனவு காணாதே. இந்தியாவுக்கு போய் சைவ ஆலயங்களில் வழிபடுவது, இங்கு சைவ ஆலயங்களை இடிப்பது, பௌத்தம் பாதுகாப்பது சுத்த பச்சோந்தித்தனம். இவரது பெற்றோர் இந்தியாவுக்கு சென்றவேளை குருவாயூர் ஆலயத்தில் விசேட வழிபாடு நடத்தப்பட்டதாம், சைவர்கள் இந்தியாவில் பௌத்தர்களை கோயிலுக்குள் வழிபாட்டில் அனுமதிப்பார்கள், ஆனால் ஏனைய மதத்தவருக்கு அப்படியல்ல. ஷிரந்தி அந்தக்கோயிலில் வழிபாட்டில் கலந்து கொண்டதால் அவர் பௌத்தத்தை சாராதவர் என்றும் அந்தக்கோயிலை புனிதப்படுத்தும் செயல் நடைபெற்றதாக அண்மையில் தெரிந்து கொண்டேன். இவரோ தான் ஒரு பௌத்தன் என்று அறிக்கையிடுகிறார். இவர் தந்தை குடும்பமே சுத்த பௌத்தமில்லையாம், அரசியலுக்காக பௌத்தத்தை பயன்படுத்துகின்றனர், அதனால் அவர்களது தேவைக்கேற்ப மத கொள்கைகளை, போதனைகளை மாற்றுகின்றனர். இவர்களுக்கு படிப்பறிவுமில்லை, பகுத்தறிவுமில்லை, மத அறிவோ, கொள்கையோ இல்லை. மக்கள் இந்த ஏமாற்று நரிகளை புரிந்து கொள்ளாத வரை இவர்களையும் இவர்களின் பொய்களையும் அகற்ற முடியாது. அனுராவுக்கு இது ஒரு பெரும் சவால், இதை கடந்துவிட்டால் நாடு முன்னேறும், திரும்ப எழாதபடி அகற்றப்படவேண்டும். பௌத்தத்திற்கு முன்னுரிமை அளித்ததாலேயே இந்தப்பிரச்சனை, அது அகற்றப்படவேண்டும். நாட்டில் எல்லோரும் சமம் என்றால்; எல்லா மதத்திற்கும் சமஉரிமை அளிக்கப்படவேண்டும் பாதுகாக்கப்படவேண்டும். நாட்டின் அமைதியை சமாதானத்தை சீர்குலைக்கும் சட்டம் நீக்கப்படவேண்டும். பயங்கரவாதச்சட்டம் நீக்கப்படவேண்டுமென எவ்வளவு குரல் கொடுக்கப்படுகிறதோ அவ்வாறே பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதும் நீக்கப்படவேண்டும். அதை நீக்கினால் பயங்கரவாத சட்டத்திற்கு இடமேயில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சனை, இருக்கிறது அதை விட்டு மதமும் இனமுந்தான் அரசியல் பிரச்சனை என்று அலையுது ஒரு கூட்டம், அதற்கு பின்னால் இந்த சோம்பேறி மொட்டைக்கூட்டம். இங்கு உள்ள சிறுவர்களை பிரித்து நல்ல விடுதிகளில் சேர்த்து கல்வியறிவை ஊட்டுங்கள், தங்களுக்கு எது சிறந்தது என தெரிவு செய்ய முடியாத வயதில் அவர்களை வற்புறுத்தி அல்லது வறுமை காரணமாக இந்த மாதிரி கொலை கொள்ளைக்கூட்டத்தில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்காமல்.

அவர்களது சிறுவர் பராயத்திற்கு தகுதியில்லாத காவிப்பாரம், போதனை. அவர்கள் விரும்பாமலே அவர்கள்மேல் திணிக்கப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.