Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து

01 Mar, 2026 | 09:18 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

சட்டமும் மொழியும் ஒரு தேசத்தின் இரு கண்களைப் போன்றவை சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழா சட்டக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்றது.

தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு ‘மன்று 75’ எனும் துணிப்பொருளில் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்1950 ஆம் ஆண்டு மறைந்த பெருந்தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறு விதையாக விதைக்கப்பட்ட இந்தத் தமிழ் மன்றம் இன்று விழுதுகள் பரப்பிய ஆலமரமாக 75 ஆண்டுகளைக் கடந்து நிற்பது பெருமைக்குரியது.

சட்டம் என்பது வெறும் கருப்பு அங்கியும் தடிமனான புத்தகங்களும் மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் அரண். அந்த அரணுக்கு உயிர் கொடுப்பது நமது தமிழ் மொழி. தமிழ் இலக்கியங்கள் காலங்காலமாக நீதியை வலியுறுத்தி வந்துள்ளன.

குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரம் நீதியின் மேன்மையை உரக்கச் சொல்லியுள்ளது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய சட்ட மாணவர்கள் திகழ வேண்டும்.

ஒரு மாணவன் கலைகள் வழியாகத் தனது இதயத்தை மென்மையாக்கிக் கொள்ளும் போதே நாளை சமுதாயத்திற்கு உண்மையான நீதியை வழங்க முடியும். சட்டத்தின் சிக்கலான விடயங்களை எளிய தமிழில் பாமர மக்களுக்குப் புரிய வைக்கும் கடமை உங்களுக்கு உண்டு.

உங்கள் வாதத் திறமையை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பயன்படுத்துங்கள். அறிவும் ஆற்றலும் ஒருபுறம் இருக்க அறமும் ஈரமும் மறுபுறம் இணைய வேண்டும். அத்தகைய முழுமையான சட்டத்தரணிகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனகஈஸ்வரன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினரான சட்டக் கல்லூரி முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்வி ஸின்

வாழ்த்துச் செய்தியும் பகிரப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் சிறப்புரையினை நிகழ்த்தினார்.

57 ஆவது நீதி முரசு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்து அதன் நூல் மதிப்புரையினை மேலதிக அரசாங்க சட்டவாதியும் தமிழ் மன்றத்தின் பொருளாளருமான செல்வராகவன் வழங்கினார்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியதுடன் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதப் போட்டி சட்ட ஆய்வு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/239854

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.