Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

Mar 1, 2026 - 07:10 PM

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்காகத் தவிர, வேறு எந்தத் தேவைகளுக்கும் கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து, களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும், எரிபொருள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல்வேறு போலிப் பிரசாரங்களை வெளியிடும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் செயற்படுவார்கள் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா

01 Mar, 2026 | 05:51 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு மாதத்துக்கும் அதிகளவில் எரிபாெருட்கள் கைவசம் இருக்கின்றன. அதனால் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அதேநேரம் யாராவது எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக மக்கள் பதற்றமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் இருக்கிறார்கள். ஆனால் தேவையற்ற பதற்றத்துக்கு ஆளாக தேவையில்லை. ஏனெனில் எங்களிடம் ஒரு மாதத்துக்கும் அதிக எரிபொருள் கைவசம் இருக்கிறது.

பெற்றோலை பொறுத்தவரை தற்போது கைவசம் இருக்கும் தொகையுடன் தற்போது நாட்டை நெருங்கிவரும் பெற்றோல் கப்பலுடன் 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல் எம்மிடம் இருக்கிறது.

அதேபோன்று டீசல் 31 நாட்களுக்கும் சுப்பிரி டீசல் 72 நாட்களுக்கும் விமானங்களுக்கான டீசல் 47 நாட்களுக்கும் எங்களது கைவசம் இருக்கிறது. அதனால் மக்கள் பதற்றமடைய எந்த தேவையும் இல்லை.

அதேநேரம் இந்த மாதம் வரை நாங்கள் கொள்வனவு கட்டளை பிரப்பித்து, எங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருக்கும் எரிபொருள் கப்பல்கள் எதுவும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை.

அவை அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தே வருகின்றன.அதனால் தற்போதைக்கு எரிபொருள் நிறைவடையும் எந்த பிரச்சினையும் எங்களுக்கு எற்படப்போவதில்லை.

என்றாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நாங்கள் எரிபொருள் விநியோகிப்பதில்லை. என்றாலும் மக்கள் வழமைக்கு மாற்றமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தமையாமல் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தோம். இன்று பொயா விடுமுறை தினமாக இருந்தாலும் இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

அதனால் மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல தேவையில்லை. அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் முன்னர்போன்று போத்தல்களுக்கு எரிபொருளை கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

அதனால் போத்தல்களுக்கு எரிபொருள் எடுத்துச்செல்வதை நிறுத்துமாறு நாங்கள் உத்திரவிட்டிருக்கிறோம். அதற்காக பொலிஸாருக்கும் உத்தரவிட்டிருக்கிறோம். யாராவது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

எனவே மக்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது, சிலவேளை சிறைத்தண்டனைக்கும் உள்ளாகலாம். அதேநேரம் யாராவது போத்தல்களுக்கு எரிபொருள் எடுப்பதை கண்டால், அவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதாவது, போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கியது உறுதிப்படுப்பத்தப்பட்டால், அந்த நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை தடை செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுதொடர்பில் தேடிப்பார்க்க இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

எனவே யாராவது தேவையில்லாமல் எரிபொருள் சேகரித்து வைத்திருப்பதை கண்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். அனைவரும் சட்டத்துக்கு சமமானவர்கள்.

அதனால் யாராவது சட்டத்துக்கு மாற்றமாக எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால், அவர்களின் வீடுகளுக்கு சென்றாவது சேகரித்து வைத்திருக்கும் தொகைக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.