Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்

Published By: Vishnu

02 Mar, 2026 | 04:04 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்திய புதிய அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னிறுத்தி முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) எழுச்சியுடன் நடைபெற்றது. வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆர்வலர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது.South Asians & Diaspora

இந்த மாநாட்டில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு ஒன்பது பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. மக்கள் போராட்ட அனுபவத்தைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்திற்கான பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்புதல்Politics

2. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிடியில் இருந்து பொருளாதாரத்தை விடுவித்தல்

3. நவதாராளவாதத்திற்கு மாற்றாக சோசலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தல்

4. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துதல்

5. நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்ட சபைகளை நிறுவி மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துதல்Beaches & Islands

6. இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் இந்திய மேலாதிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்தல்

7. திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்

8. ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைதல்

9. முதலாளித்துவத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுதல் ஆகிய ஒன்பது கோரிக்கைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.South Asians & Diaspora

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான சேனாதீர குணதிலக்க புபுது ஜயகொட நிரோஷா குருகே ரவிந்து முதலகே குமார் குணரத்னம் சமீர கொஸ்வத்த ஹேமமாலி அபேரத்ன மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி சார்பில் எஸ்.கே. செந்திவேல் மற்றும் சோசலிச மக்கள் சம்மேளனம் சார்பில் கல்ப ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச ரீதியில் பல நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கினர். இத்தாலியின் பிரான்டே பொப்பலாரே அமைப்பின் சார்பில் அலேசியோ அரேனா அர்ஜென்டினாவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் லூசியானோ ரவனெட்டி பங்களாதேஷின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷோயப் பச்சாவார்ஜி பிரான்சின் புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியின் சுலைமான் ஸ்டானிஸ்லாஸ் நேபாளத்தின் விஞ்ஞான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகத் ரமாலி மற்றும் சர்வதேச சோசலிச லீக்கின் ஸ்டீவ் மேக்ஸ்வினி ஆகியோர் நேரடியாகவும் காணொளி மூலமும் உரையாற்றினர்.

கியூபா தூதுவர் பட்ரிசியா லசாரா பெகோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஜெர்மனியின் ஹான்ஸ் பீட்டர் அன்டன் ஸ்பெக்ட் நேபாளத்தின் வின்சென்சோ வசாலோ இத்தாலியின் நிக்கோலோ சகேட்டி யேமன் நாட்டின் மவுரிக் மிலியா இந்தியா சார்பில் சுபாஷ் தர்ஷ்குப்தா இங்கிலாந்தின் ரோஜர் சில்வர்மேன் மற்றும் துருக்கியின் அமினா ஆகியோர் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். மாநாட்டின் இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை - முன்னிலை சோசலிசக் கட்சி மாநாட்டில் குமார் குணரத்தினம் குற்றச்சாட்டு 

Published By: Vishnu

02 Mar, 2026 | 04:12 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி" எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் போதே குமார் குணரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். Beaches & Islands

அங்கு அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்;

இன்று இந்நாட்டை ஆட்சி செய்யும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை மிக மோசமான முறையில் மீறி வருகின்றது. வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு கட்சி இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதனை விடவும் பாரதூரமான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு எனும் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக நின்றவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நவ தாராளவாதக் கொள்கைகளை எவ்வித தயக்கமுமின்றி அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது மாத்திரமன்றி மோடி மற்றும் ட்ரம்ப் போன்றோரின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக முழு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வெறியில் மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றது. இஸ்ரேல் எனும் பொம்மை அரசை முன்னிறுத்தி காசா பகுதியில் பெரும் இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. வெனிசுலாவின் ஜனாதிபதி கடத்தப்பட்டமை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களைக் குறிவைத்துள்ளமை என அமெரிக்கப் பேரரசுவாதம் தனது மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டி நிற்கின்றது.Politics

மத்திய கிழக்கில் நடக்கும் போர்களுக்குப் பின்னால் அமெரிக்க மூலதனத்தின் தேவைகளே ஒளிந்துள்ளன. உலகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டி இலாபம் ஈட்டிய பெரு மூலதன உரிமையாளர்கள் இன்று அதிகார போதையில் உள்ளனர். அமெரிக்காவின் இந்த பேரரசுவாத அதிகார வெறிக்கு எதிராக எமக்குள்ள ஒரே மாற்று வழி சோசலிசம் மாத்திரமேயாகும். சர்வதேச ரீதியிலான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மூலமே இதனைத் தோற்கடிக்க முடியும். கியூபா இன்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. உலகில் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள கியூபா கொரோனா காலப்பகுதியில் பல நாடுகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியது. பேரரசுவாத இருளுக்கு மத்தியில் கியூபா இன்றும் சிவப்புக்கொடியை ஏந்தி மனிதாபிமானத்தை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று சிதைந்து போயுள்ளன. அந்தச் சிதைவுகளுக்குள் இனியும் மாற்றத்தைத் தேடுவது முட்டாள்தனமானது. ஜே.வி.பி அரசாங்கம் இன்று திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் தேவைக்காக இந்நாட்டின் நிலங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகின்றது.

எனவே முகங்களை மாற்றுவதால் அல்லது கட்சிகளை மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.