Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு – நரம்பியல் மாநாட்டில் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் நெகிழ்ச்சி

05 Mar, 2026 | 04:43 PM

image

அபிலாஷனி லெட்சுமன்

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் ராபர்ட்சன், உலக பக்கவாத அமைப்பின் தலைவரும், நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் ஜெயராஜ் பாண்டியன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர, சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட நரம்பியல் ஆலோசகருமான பேராசிரியர் ரஞ்சனி கமகே, நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ உட்பட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நரம்பியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, வைத்தியத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணர்களுக்குப் பின்வரும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன:

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகரவுக்கு உயரிய பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் நரம்பியல் நிபுணர்கள் மன்றத்தில் (Young Neurologists’ Forum) சிறந்த முறையில் ஆய்வுகளைச் சமர்ப்பித்த வைத்தியருக்கு விருது வழங்கப்பட்டது.

நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட சிறந்த ஆய்வாளர்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கப்பட்டன.

சிறுவர்களுக்கான வலிப்பு நோய் அறுவை சிகிச்சை குறித்து "சாத்தியங்களின் கலை" (The Art of the Possible) என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரைக்காக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஆலோசகர் சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டார்.

அதுமட்டுமன்றி இந் நிகழ்வில், இலங்கையின் நரம்பியல் துறை இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமான மூத்த நிபுணர்களின் சேவை இதன்போது விசேடமாக நினைவுகூரப்பட்டது.

இலங்கை நரம்பியல் துறையின் பிதாமகரான வைத்தியர் ஜே.பி. பீரிஸ் மற்றும் நாட்டின் முதல் பெண் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி கமகே ஆகியோரின் பங்களிப்புகள் மாநாட்டில் விசேடமாகப் போற்றப்பட்டன.

இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளமே இன்று நவீன நரம்பியல் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவடையக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் பக்கவாத (Stroke) சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்த உலக அளவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆற்றி வரும் சேவை பாராட்டப்பட்டது.

"வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் (Survival curves) அல்ல; அது தைரியம், அன்பு மற்றும் நோயாளியின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது பற்றியது. இதுவே ஒருங்கிணைந்த நரம்பியல் துறையின் உண்மையான வெற்றி" என இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நினைவு தப்பிய நிலையில் (Coma) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய் பிழைப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையிலும், வைத்தியக் குழுவின் தளராத முயற்சியால் 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் தனது தாயின் நினைவு நாளில் அந்த வைத்தியருக்கு இனிப்பு வழங்க வந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

வைத்தியக் கல்வியில் இளம் நரம்பியல் நிபுணர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இளம் வைத்தியர்களை வழிநடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், சிறந்த ஆய்வுக்காக வைத்தியர் ஷிராத் மதுரபெரும விருது பெற்றார்.

நரம்பியல் சிகிச்சை என்பது வைத்தியசாலை வார்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

வலிப்பு நோய் (Epilepsy), பக்கவாதம் (Stroke) மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்து நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து, நரம்பு மண்டலம் சார்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள சி.டி ஸ்கேன் (CT Scan) வசதிகளை மேம்படுத்தவும் இலங்கை வைத்தியச் சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக பெப்ரவரி 22ஆம் திகதி "உலக மூளைக்காய்ச்சல் தினமாக" (World Encephalitis Day) அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் மற்றும் மல்டிமீடியா துண்டுப் பிரசுரங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டன.

நாட்டின் வைத்தியத் துறை எதிர்கொள்ளும் மிகமுக்கியமான சவால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆளுமைகள் குறித்த முக்கிய தகவல்கள் முன்வைத்து, சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தனது உரையில் நாட்டின் தற்போதைய வைத்திய பற்றாக்குறை குறித்து கவலை வெளியிட்டார்.

ஏனைய வைத்திய துறைகளை விட நரம்பியல் துறையிலேயே மிக அதிகமான நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இளம் நரம்பியல் நிபுணர்களில் சுமார் 60 சதவீதமானோர் தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் அதிக பணிச்சுமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்துடன் (ABN) மீண்டும் பலமான கல்விசார் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச நிபுணர்களின் அனுபவங்களை இலங்கையில் உள்ள இளம் வைத்தியர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தனது வைத்தியப் பயணத்தில் நரம்பியல் துறையைத் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், மாணவர் பருவத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட அரிய வகை நரம்பியல் பாதிப்பை (Ramsay Hunt Syndrome) அவதானித்த தருணமே தனது வாழ்நாள் உந்துதலாக அமைந்தது என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் பல்நோக்கு கூட்டாண்மை மூலம் இலங்கையின் நரம்பியல் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுவதோடு, சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு வைத்தியக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான அழைப்பாகவும் இலங்கையின் நரம்பியல் துறையை உலகத் தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு மைல்கல்லாக அமையும்.

"வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை (Clinical Protocols) பின்பற்றுவது மட்டுமல்ல; அது தைரியம், அன்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றால் ஆனது" என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கும்.

இந்தத் தனித்துவமான நோயாளி அனுபவத்தின் ஊடாக, "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) என்பதன் முக்கியத்துவத்தை மாநாடு வலியுறுத்துவதாக காணப்படும்.

பல்துறை நிபுணர்களின் கூட்டு ஒத்துழைப்பு (Multidisciplinary Collaboration)

இளம் வைத்தியர்களுக்கான கல்வி மற்றும் வழிகாட்டல் (Academic Mentorship)

இவை அனைத்தும் ஒன்றிணையும் போது, வைத்திய அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதும், நோயாளிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை (Transformative Outcomes) உருவாக்க முடியும் என்பதும் இம்மாநாட்டின் பிரதான செய்தியாக காணப்படுகின்றது.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் கடந்த காலங்களில் அடைந்த கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இதன்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், மக்களின் விழிப்புணர்வு மற்றும் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சி ஆகியவற்றில் சங்கம் காட்டி வரும் அக்கறை பாராட்டப்பட்டுவதாக மேலும் தெரிவித்தார்.

(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)

_DSC2954.JPG

_DSC2958.JPG

_DSC2877.JPG

_DSC2869.JPG

_DSC2847.JPG

_DSC2914.JPG

_DSC2843.JPG

_DSC2847.JPG

_DSC2843.JPG

வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர்

05 Mar, 2026 | 01:43 PM

image

அபிலாஷனி லெட்சுமன்

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19வது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ABN) தலைவர் பேராசிரியர் நீல் ராபர்ட்சன், இலங்கைக்கும் தனக்குமான நீண்டகாலத் தனிப்பட்ட பிணைப்பைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

80களின் முற்பகுதியில் தனது மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் ஒரு மாணவனாக கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற காலத்தை அவர் நினைவுகூறவேண்டும்.

"கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் புகையிரதத்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தது, கண்டி ஏரிக்கரையில் தங்கியிருந்த போது வாரந்தோறும் வளர்ப்பு யானை ஒன்று வீட்டிற்கு வந்த நினைவுகள் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவில் கழித்த மதிய நேரங்கள் என இலங்கை எனக்கு என்றும் மறக்க முடியாத ஒரு நாடு".

இலங்கையின் நட்புணர்வு, ஆர்வம் மற்றும் கற்கும் திறன் ஆகியவை ஒரு இளைஞனாக தன் மீது நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கல்வி மற்றும் மருத்துவ ரீதியான நீண்டகால ஒத்துழைப்பு காணப்படுகின்றது.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரிட்டிஷ் மருத்துவக் குழுவினர் இந்த வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருவதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாம் இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

உலக அரங்கில் இலங்கை நரம்பியல் துறையின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது . ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்புகள் குறித்து எதிர்காலத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

பிரித்தானியாவின் கடும் குளிரான காலநிலையிலிருந்து தப்பி, இலங்கையின் அன்பான வரவேற்பிலும் இதமான காலநிலையிலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தமக்கும் ஏனைய பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக மேலும் தெரிவித்தார்.

"இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்

05 Mar, 2026 | 01:44 PM

image

அபிலாஷனி லெட்சுமன்

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட உலக பக்கவாத அமைப்பின் (WSO) தலைவர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், இலங்கைக்கும் தனக்குமான உறவு மற்றும் பக்கவாத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கைக்கு வரும்போதெல்லாம் எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. என்னிடம் பலர் இதுதான் உங்களது முதல் வருகையா எனக் கேட்கிறார்கள். ஆனால், எத்தனை முறை இங்கு வந்துள்ளேன் என்பதை எண்ணுவதே எனக்குக் கடினமாக உள்ளது.

அவுஸ்திரேலியாவை எனது இரண்டாவது வீடாகக் கருதினேன், ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நான் அங்குச் சென்றதை விட அதிகமுறை இலங்கைக்கு வந்துள்ளேன். இப்போது அவுஸ்திரேலியாவை விட இலங்கையே எனது இல்லமாகத் தோன்றுகிறது

மாநாட்டின் கருப்பொருளான "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) குறித்துப் பேசினால், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விதிமுறைகளைத் தாண்டி, நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானமும் அனுதாபமுமே (Empathy) மிக முக்கியமானது.

நரம்பியல் துறையானது தற்போது டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் துல்லியமான மருத்துவம் (Precision Medicine) ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது.

உலகளவில் பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் ஊனங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நிகழ்கின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிக இளம் வயதிலேயே மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இது குடும்பங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக அமைகிறது.

இலங்கை நரம்பியல் நிபுணர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சில முக்கிய திட்டங்களாக ஆறு நாடுகளில் முன்னெடுக்கப்படும் பக்கவாத சிகிச்சை திட்டங்களுக்கு உலக பக்கவாத அமைப்பு நிதியுதவி வழங்கி வருகிறது.

நரம்பியல் துறையில் அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், சுமார் 100 நிபுணர்களுக்கு இரண்டு ஆண்டுகால தீவிரப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பு, அவசர சிகிச்சை மற்றும் நீண்டகாலப் புனர்வாழ்வு (Rehabilitation) ஆகிய மூன்று நிலைகளிலும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கம்.

உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சேவைகளை இலங்கையில் வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கு (ASN) தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர

05 Mar, 2026 | 01:52 PM

image

அபிலாஷனி லெட்சுமன்

நரம்பியல் துறை பற்றிய உலகளாவிய குறிப்புகள் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய 'எட்வர்ட் ஸ்மித் பாபிரஸில்' (Edward Smith Papyrus) காணப்பட்டாலும், இலங்கையர்கள் பண்டைய காலத்திலிருந்தே இது குறித்த ஆழமான அறிவைக் கொண்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19-வது வருடாந்த மாநாட்டில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர இலங்கையின் நரம்பியல் துறை கடந்து வந்த வியக்கத்தக்க வரலாற்றுப் பாதை குறித்து விசேட உரை நிகழ்த்திய போதே இதனை தெரிவித்தார்.

மனித மூளையை "சிக்கல்களின் பேராலயம்" (Cathedral of Complexities) என வர்ணித்துத் தொடங்கிய அவரது உரை, இலங்கையர்களின் பண்டைய வைத்திய அறிவை உலகிற்குப் பறைசாற்றியது.

4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வைத்தியரான மன்னர் புத்ததாச, 'சாரார்த்த சங்கிரஹ' எனும் விரிவான மருத்துவ நூலைத் தொகுத்தார்.

6-ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆவணமான மகாவம்சத்தில், மன்னர் புத்ததாசவினால் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மூளை அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

9-ஆம் நூற்றாண்டில் மிகிந்தலையில் (Meen Kale) அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் இடிபாடுகள், அங்கு பக்கவாதம் (Paralysis) போன்ற நோய்களுக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. அங்கு கண்டறியப்பட்ட மருந்துத் தோணிகள் (Medicinal Troughs) இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

இலங்கையில் நவீன நரம்பியல் துறைக்கான உத்தியோகபூர்வமான ஆரம்பம் 1951-ம் ஆண்டு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

1951-ம் ஆண்டு இலங்கையின் முதல் நரம்பியல் நிபுணராக வைத்தியர் ஜோர்ஜ் செல்வராஜன் அட்னவெல் (Dr. George Selvarajan Atnavel) நியமிக்கப்பட்டார்.

கொழும்பு பொது வைத்தியசாலையின் 44-வது வார்டில் அவர் தனது பணிகளைத் தொடங்கினார். அக்காலத்தில் நரம்பியல் சோதனைகளுக்காக 'நீ ஹேமர்' (Knee hammer) மற்றும் 'ஒப்தல்மோஸ்கோப்' (Ophthalmoscope) போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அவர் கையாண்ட தனித்துவமான கை சமிக்ஞைகள் பற்றித் தாதியர்கள் இன்றும் நினைவு கூர்வதாக பேராசிரியர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

வைத்தியர் அட்னவெல் 1972-ல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, வைத்தியர் ஜகத் பி. ஜே. செகல் (Dr. Jagat P. J. Sehgal) நரம்பியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அவர் வார்டுகளைப் புனரமைத்து, நரம்பியல் துறைக்கான பிரத்தியேக கட்டமைப்பை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து வைத்தியர்  பி. டி. டி. செகல்  உள்ளிட்ட பல நிபுணர்கள் இத்துறையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றனர்.

பண்டைய மன்னர்களின் மருத்துவச் சாதனைகள் முதல் நவீன நிபுணர்களின் அர்ப்பணிப்பு வரை, இலங்கையின் நரம்பியல் துறை உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக வளர்ந்துள்ளதை பேராசிரியர் சராஜி விஜேசேகர தனது உரையில் உறுதிப்படுத்தினார்.

பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.