Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானுக்குள் அமெரிக்காவுக்கு பதில் இந்த படை களம் இறங்குமா?

வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன. ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஓர்லா குயெரின்

  • பிபிசி செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது.

வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன.

ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கெனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

"இஸ்லாமிய குடியரசு உருவான காலம் முதல், கடந்த 47 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் ஹனா யஸ்தான்பனா கூறினார்.

இந்தக் கட்சி தங்களிடம்தான் மிகப்பெரிய ஆயுதப் படை இருப்பதாகக் கூறுகிறது.

ஆனால், "ஒரு பெஷ்மெர்கா கூட இன்னும் நகரவில்லை" என்று அவர் கூறினார். 'பெஷ்மெர்கா'என்ற குர்திஷ் சொல்லுக்கு "மரணத்தை எதிர்கொள்பவர்கள்" என்று பொருள்.

ஆறு எதிர்ப்பு குழு

சமீபத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிய ஆறு எதிர்ப்பு குழுக்களும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக யஸ்தான்பனா கூறினார்.

"யாரும் தனியாக நகர மாட்டார்கள். எங்கள் சகோதரர்கள் நகரப் போகிறார்கள் என்றால் அது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

இந்த வாரம் போராளிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்கா அதற்கான வழியை வகுக்க வேண்டும்.

"வான் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் எங்களால் நகர முடியாது. மேலும் இரான் ஆட்சியின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தற்கொலைக்கு சமமானது. இந்த ஆட்சி மிகவும் கொடூரமானது, எங்களிடம் உள்ள மிகவும் மேம்பட்ட ஆயுதம் கலாஷ்னிகோவ் மட்டுமே," என்று குறிப்பிட்டார்.

குர்திஷ் போராளிகளைப் பாதுகாக்க அமெரிக்கா 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டும்' என்று அவர் விரும்புகிறார்.

"நாங்கள் இதை பலமுறை கேட்டுள்ளோம். 'இது எங்களுக்கு அவசரமாகத் தேவை' என்று மின்னஞ்சல் அனுப்பியவர் நான்தான்" என்று அவர் கூறினார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

ஆனால் இரானிய குர்திஷ் படைகளின் சாத்தியமான முன்னேற்றம் குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான இரானின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

இரண்டு வெவ்வேறு குழுக்கள் மீதான தாக்குதல்களின் பின்விளைவுகளை நாங்கள் கண்டோம், இதில் குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் தளம் ஒன்றைத் தாக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,வடக்கு இராக்கில் உள்ள இரானிய குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

குர்து மக்கள் யார்?

சில குழுக்கள் தங்கள் தளங்களை காலி செய்துவிட்டு, தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் படைகளை இடமாற்றம் செய்துள்ளன.

இரான் ஆட்சிக்கு எதிரான போரில் இணைவது ஒரு மிகப்பெரிய அபாயமாகும், மேலும் இதற்குப் பதிலாக டிரம்ப் எதை வழங்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கின் நான்காவது பெரிய இனக்குழுவான குர்து மக்கள், இரான், இராக், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர்.

அவர்கள் துன்புறுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

"மலைகளைத் தவிர நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை" என்பது குர்துகளின் பழமொழி.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்ப முடியுமா?

சிரியாவில் உள்ள பல குர்துகள் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளாக இருந்தவர்கள்.

சமீபத்தில் தங்களை விடுத்து சிரியாவில் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக டிரம்ப் செயல்பட்டபோது அவர்கள் கோபமடைந்தனர்.

ஆனால் சில மூத்த இரானிய குர்திஷ் தலைவர்கள் நடைமுறை ரீதியான பார்வையைக் கொண்டுள்ளனர்.

கேடிபிஐயின் முஸ்தபா மௌலுடி

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,முஸ்தபா மௌலூதி

நம்பிக்கை என்ன?

"அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரை எங்களது நம்பிக்கைகளுக்காக தொடங்கவில்லை, மாறாகத் தங்களுடைய சொந்த நலன்களுக்காகவே தொடங்கின" என்கிறார் இரானின் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் முஸ்தபா மௌலூதி.

"ஆனால் அவர்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளங்களைக் குறிவைக்கிறார்கள், இது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதோடு நாங்கள் உள்ளே நுழையவும் உதவும்," என்று குறிப்பிட்டார்.

67 வயதான அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதிலேயே கழித்துள்ளார்.

பாரம்பரிய குர்திஷ் உடையணிந்த அவர், தனது குடும்பத்தின் வேதனையான வரலாற்றை விவரித்தார்.

இவரது ஒரு உறவினர் 13 வயதில் இந்த இரான் ஆட்சியால் கொல்லப்பட்டார், மற்றொருவர் எதிர் தரப்புடன் ஒத்துழைத்ததாகக் கூறி 31 ஆண்டுகளாக இன்னும் சிறையில் இருக்கிறார்.

இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தனது குடும்பத்தில் 60 சதவீதத்தினர் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மௌலூதி தனது தாய் மண்ணுக்குத் திரும்பும் முதல் தருணங்களை ஏற்கனவே மனக்கண்ணில் வைத்துள்ளார்.

"நான் கிராமத்தை அடையும்போது, 'உங்களுக்காகவே நான் போராடினேன், நீங்கள் எனது மக்கள், இப்போது நான் இன்னும் அதிகமாகப் போராடுவேன்' என நான் உரத்த குரலில் சொல்வேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 21 அன்று வரும் குர்திஷ் புத்தாண்டு பண்டிகையான நோரூஸை கொண்டாடுவதற்குள் தான் அங்கு இருப்பேன் என்று அவர் நம்புகிறார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

"நாங்கள் இரானில் அரசியல் ரீதியாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு. மாற்றத்திற்கான இந்த வாய்ப்பை நாங்கள் வீணடிக்க விடமாட்டோம்," என்று இரானிய குர்திஸ்தான் கோமலா கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்லா மொஹ்தாடி கூறினார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,குர்திஷ் குழுக்கள் தங்கள் படைகள் சில இரானுக்குள் நுழைந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன.

எவ்வளவு துருப்புக்களைத் திரட்ட முடியும்?

குர்துகளால் எத்தனை துருப்புக்களைத் திரட்ட முடியும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

"ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் சேர்த்து இது சில ஆயிரங்களாக இருக்கலாம்," என்று குர்திஷ் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

"இரானில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதன் மூலம் வருங்காலத்திலும் தங்கள் பங்கு இருப்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். வரலாற்றின் பாடங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்."

அமெரிக்காவின் வாக்குறுதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது செயல்படுவதற்கான நேரம் என்று சில இரானிய குர்துகள் கூறுகின்றனர்.

"எங்கள் தாயகத்தைப் பார்க்கும் சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்" என்று இரானிய எல்லைக்கு அருகிலுள்ள சுலைமானியா நகரைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.

"நாங்கள் அதை [இரானை] கொலைகாரர்களின் இஸ்லாமிய ஆட்சி என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை அவ்வளவு வெறுக்கிறோம். அவர்கள் பலரைக் கொன்றுள்ளனர்."

இவை அனைத்தும் இராக்கை இக்கட்டான நிலையில் ஆழ்த்தியுள்ளன. அண்டை நாட்டுப் போருக்குள் தாங்களும் இழுக்கப்படுவோமோ என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

''பயங்கரவாதச் செயல்களைச் செய்ய, இராக் மண்ணிலிருந்து இரானிய எல்லைக்குள் ஊடுருவவோ அல்லது கடக்கவோ எந்தக் குழுக்களையும் அனுமதிக்க மாட்டோம்," என்று இராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குர்திஷ் படைகள் எல்லையைத் தாண்டினால், அது யஸ்தான்பனாவிற்கு இனிப்பும் கசப்பும் கலந்த தருணமாக இருக்கும்.

"எனது நிலத்திற்குத் திரும்புவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்," என்று கூறிய அவர் "எனது தாத்தா பாட்டிகளும் உறவினர்களும் இங்கே [வடக்கு இராக்கில்] இறந்துவிட்டார்கள். நான் மகிழ்ச்சியாக உணர வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்த நாளைப் பார்க்க உண்மையிலேயே தகுதியானவர்கள் இப்போது இல்லை" என்கிறார்.

கூடுதல் செய்திகள்: விட்ஸ்கே புரேமா, மேத்யூ கோடார்ட் மற்றும் பிஷார் ஷரீப்

இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குர்து குழுக்களின் ரகசிய மகளிர் ராணுவம் - இரானுக்கு எதிராக இந்த பெண்கள் ஆயுதம் ஏந்தியது ஏன்?

இரான், குர்திஷ் ஆயுதக்குழு, குர்திஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Valentina Sinis

கட்டுரை தகவல்

  • கவூன் காமூஷ்

  • பிபிசி உலக சேவை

  • 12 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்ந்து வரும் நிலையில், இராக்கை தளமாகக் கொண்ட ஆயுதமேந்திய இரானிய குர்திஷ் குழுக்கள் விரைவில் எல்லையைக் கடந்து இரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான போரில் ஈடுபடக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் ஒரு குர்திஷ் போராளி கொல்லப்பட்ட ஏவுகணைத் தாக்குதலும் அடங்கும். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 7 அன்று பேசுகையில் குர்திஷ்கள் இரானில் சண்டையிடுவதை விரும்பவில்லை என்று கூறினார்.

குர்திஷ் போராளிகளின் முழுவதும் பெண்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அணுகுவதற்கான அரிதான வாய்ப்பை பிபிசி பெற்றது.

இரானிய குர்திஷ் போராளிகளுக்கான தளமாக வடக்கு இராக்கில் செயல்படும் ஆழமான குகைகள் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைகளுக்குள் நுழைவதற்கு பல நாட்கள் காத்திருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

அவர்கள் ஒரு ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை இயக்குகிறார்கள் மற்றும் குர்திஸ்தானின் பாதி தன்னாட்சி பெற்ற பகுதியில் கண்காணிப்புக்கு உட்பட்ட ஒரு சுயசார்பு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஒரு பெண் புகைப்படக் கலைஞர் மட்டுமே வளாகத்துக்குள் நுழைந்து குர்திஷ்களுடன் பத்து நாட்கள் செலவிட அனுமதிக்கப்பட்டார்.

சமீபத்திய தசாப்தங்களில், இரானில் இருந்து பல குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் எல்லையைத் தாண்டி இராக்கின் மலைகளுக்குச் சென்றுள்ளன.

அவர்கள் இரானிய உளவுத்துறை, இராக்கில் உள்ள ஷியா பிரதிநிதிகள் மற்றும் துருக்கியப் படைகளிடமிருந்து தலைமறைவாக உள்ளனர்.

சமீபத்தில், வடக்கு இராக்கில் உள்ள முக்கிய இரானிய குர்திஷ் குழுக்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்திஷ் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு போரில் சேருமாறு கேட்டுக்கொண்டதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

மார்ச் 5 அன்று ராய்ட்டர்ஸுக்கு டிரம்ப் அளித்த தொலைபேசி நேர்காணலில், இரானில் குர்திஷ் தாக்குதலை ஆதரிப்பதாகக் கூறினார், "அவர்கள் அதைச் செய்ய விரும்பினால் அது அற்புதம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

இருப்பினும், அமெரிக்க அதிபர் சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இரானிய நிலப்பரப்பில் குர்திஷ் படைகள் வேண்டாம் என்று கூறினார்.

"போரை ஏற்கெனவே இருந்ததை விட சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்வதற்கு நடுவே, இரான் பல குர்திஷ் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியது, அதில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார்.

மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குர்திஷ் குழுக்களில் ஒன்று குர்திஸ்தானின் சுதந்திர வாழ்க்கைக் கட்சி (PJAK), அவர்கள் இரானில் மீண்டும் கால் பதிக்க பல ஆண்டுகளாகத் தயாராகி வருவதாகக் கூறுகிறார்கள்.

"நான் என் குடும்பத்துக்காகவும், நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்களுக்காகவும் போராடுகிறேன்," என்று 21 வயது பெண் போராளியான ஆரியன் கூறுகிறார்.

அவர் பிஜேஏகேவில் உள்ள பெண்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் உறுப்பினராக உள்ளார்.

ஒரு குர்து இனத்தவராக, ஆரியன் இரானில் அநீதி மற்றும் பாகுபாட்டை அனுபவித்ததாகவும், ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேஏகேவில் சேர்ந்தார்.

ரகசிய ராணுவ தளங்களில் என்ன நடக்கிறது?

இரான், குர்திஷ் ஆயுதக்குழு, குர்திஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Valentina Sinis

இந்த சுரங்கங்கள் உணவு, பணம் மற்றும் வெடிமருந்து கிடங்குகளுடன் கூடிய பாதுகாப்பான புகலிடங்களாகும்.

பிஜேஏகே தனது போராளிகளின் எண்ணிக்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது, ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரானுடனான போரை தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலும் பெண்களைக் கொண்ட சுமார் 60 போராளிகள் இந்த தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

போராளிகளுக்கு ராணுவப் பயிற்சிகள், சித்தாந்த அமர்வுகள், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்களை கையாளுதல் போன்ற பல்வேறு திறன்களைப் பயிற்சி செய்கிறார்கள்.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்ங்கள் அதிகரித்த சூழலில், எல்லையை நோக்கி அனுப்பப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

"இந்தப் போர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று" என்று 40 வயதான கெலாவெஜ் எவ்ரின் பிபிசியிடம் கூறினார்.

20 வயதில், எவ்ரின் இரானிய நகரமான உர்மியாவில் தனது புவியியல் படிப்பை கைவிட்டு, ஒரு காலாட்படை வீரராக பிஜேஏகேவில் சேர்ந்தார். பின்னர் அவர் ஒரு செய்தித் தொடர்பாளராக ஆனார்.

ரகசிய குகைகளில் ஒன்றிலிருந்து பேசிய எவ்ரின், தனது வாழ்நாளில் பாதியை இந்த மலைகளில் கழித்ததாகவும், தான் போராளியாக சென்றதிலிருந்து தனது குடும்பத்தைப் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

தற்போதைய தாக்குதல்களில் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி இறந்திருக்கலாம் என்றாலும், இரான் முழுவதும் 2022 இல் தொடங்கிய பெண்கள் தலைமையிலான தொடர் போராட்டங்கள் ஏற்கெனவே இஸ்லாமிய குடியரசை பலவீனப்படுத்தியிருப்பதாக அவர் கூறுகிறார்.

பெண்கள் தலையை மூடும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்றாததற்காக இரானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி என்ற குர்திஷ் பெண்ணின் மரணத்தால் ஏற்பட்ட அமைதியின்மையை அவர் குறிப்பிடுகிறார்.

இரான், குர்திஷ் ஆயுதக்குழு, குர்திஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Valentina Sinis

பெண்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

'பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்' என்ற பெயரில் இயக்கமாக பரிணமித்த போராட்டங்கள் மீது, இரானிய அதிகாரிகள் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டனர். ஆனால் அது சில புதிய பிஜேஏகே உறுப்பினர்களுக்கு ஒரு உத்வேகமாகவே அமைந்தது.

PJAK-வில் சேருவதற்கு முன்பு, 18 வயதான பிகென் வெகுஜன போராட்டங்களில் பங்கேற்றார் மற்றும் பள்ளியில் ஹிஜாப் அணிய மறுத்து, ஒரு சிவில் ஒத்துழையாமையில் ஈடுபட்டார்.

"பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை," என்று பிகென் ஒரு சக போராளியின் தலைமுடியை மெதுவாக பின்னிக் கொண்டே கூறுகிறார்.

"நாங்கள் வீட்டு வன்முறை மற்றும் சமூக கட்டுப்பாடுகளை அனுபவிக்க வேண்டும், அல்லது புரட்சி மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் பிகென்.

குர்திஷ் கிளர்ச்சிக் குழுக்கள் பெரும்பாலும் குழந்தைகளை படையில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிகென் கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தபோது ,இரானில் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். இங்குள்ள பல போராளிகள் தங்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்புதான் ஒரே வழி என்று கூறுகிறார்கள்.

"குர்திஷ் மக்களின் அடுத்த தலைமுறைக்கு சுதந்திரமான எதிர்காலத்தைப் பெறுவதற்கானதே எனது போராட்டம்," என்று 23 வயதில் கெரில்லா போராளியாக மாறிய பல் மருத்துவர் டெலால் கூறுகிறார்.

"குர்திஷ் மக்களுக்கு... கடந்த இருநூறு ஆண்டுகள் அடக்குமுறை மற்றும் வன்முறையால் அறியப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிஜேஏகே 2004 இல் உருவாக்கப்பட்டது மற்றும் துருக்கிய அரசுடன் நான்கு தசாப்த கால மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆயுதங்களை ஒப்படைத்த துருக்கியில் உள்ள ஒரு பிரிவினைவாத குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) இணைக்கப்பட்டது.

இந்த முடிவை மதிக்கிறோம் என்று பிஜேஏகே கூறியது, ஆனால் இரானிய குர்துகள், அந்நாட்டின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தொடருவார்கள்.

துருக்கி மற்றும் இரான் இரண்டும் பிஜேஏகேவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கின்றன.

துருக்கி பாதுகாப்பு அமைச்சகம், "பிஜேஏகே என்ற பயங்கரவாதக் குழுவின்" செயல்பாடுகளை கண்காணிப்பதாகக் கூறுகிறது, இது இனப் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது குற்றம் சாட்டுகிறது.

உள்நாட்டுப் போர் குறித்த அச்சம்

இரான், குர்திஷ் ஆயுதக்குழு, குர்திஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Valentina Sinis

குர்திஷ் போராளிகள் தங்களுக்கு முன்னால் உள்ள சவாலின் தன்மையை அறிந்திருக்கிறார்கள். ஒருவேளை இரானின் இஸ்லாமிய குடியரசின் நன்கு ஆயுதம் ஏந்திய படைகளுடன் நேரடி மோதலுக்கான வாய்ப்பு கூட இருக்கலாம்.

"ஒரு உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள மாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எவ்ரின் பிபிசியிடம் கூறுகிறார்.

"போரை ஆட்சியின் வீழ்ச்சியை நோக்கி வழிநடத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் போர் நம்மை நோக்கித் திசைதிருப்பப்பட்டு எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

"மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது, இரான் மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்காலத்திற்காக ஒரு முடிவை எடுக்க வேண்டும்." என்கிறார் எவ்ரின்.

இரானிய எதிர்க்கட்சி குழுக்கள் இந்தப் போரிலிருந்து இரான் பிராந்தியத்தில் ஜனநாயகத்தின் ஒரு உதாரணமாக வெளிவரும் என்று நம்புகின்றன, ஆனால் தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றால் அது மாறுபட்ட சுழற்சியாக இருக்கும் என்று அஞ்சுகின்றன.

இரானின் சுமார் 9 கோடி மக்கள்தொகையில் குர்துகள் 10% வரை உள்ளனர், மேலும் அவர்கள் பல தசாப்தங்களாக இஸ்லாமியக் குடியரசால் ஓரங்கட்டப்பட்டு துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தனர். அது முதலே இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் வாழும் இவர்கள் மீது, இரானிய அரசு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

குர்திஷ் குழுக்கள் அமைத்திருக்கும் புதிய கூட்டணியின் தலைவர்களிடம் பிபிசி பேசியதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சு குறித்து அவர்களிடம் கேட்டது, ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் படைகள் இதுவரை இரானின் எல்லையைத் தாண்டியுள்ளதாக வந்த செய்திகளை நிராகரித்தனர்.

இருப்பினும், இரானிய மண்ணில் ஏற்கனவே "குறிப்பிடத்தக்க" ஆயுதப் படைகள் இருப்பதாகவும், அவர்கள் செயல்பட சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் பிஜேஏகே கூறுகிறது.

"எங்கள் ராணுவ ஈடுபாடு அடுத்த சில நாட்களில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பொறுத்தது" என்று ஒரு தலைவர் பிபிசியிடம் கூறினார்.

அமெரிக்கா மீது சந்தேகம்

இரான், குர்திஷ் ஆயுதக்குழு, குர்திஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Valentina Sinis

மற்ற இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் கூறுகின்றன.

இரானிய குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (KDPI) தலைவர் முஸ்தபா ஹிஜ்ரி, "மாற்றத்திற்குட்பட்ட காலத்தில் இரானிய குர்திஸ்தானை நிர்வகிப்பது" தங்கள் பணி என்று கூறுகிறார், மேலும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய பழிவாங்கலில் இருந்து விலகி இருக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், சில குர்திஷ் போராளிகள் வரவிருக்கும் எந்தவொரு போரிலும் அமெரிக்க ஆதரவை நம்பியிருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர்.

இரானிய குர்திஷ் போராளிகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம் பேசுகையில், அமெரிக்க விமானப்படையின் உத்தரவாதமான ஆதரவு இல்லாவிட்டால், எதிர் குழுக்கள் தரையில் படைகளை நகர்த்தாது என்று கூறினார்.

இரானிய இராணுவம் வலுவாக உள்ளது என்றும், குர்திஷ் போராளிகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் "நொறுக்கும்" விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் நம்புகிறார்.

பெண்கள் பாதுகாப்புப் படைகளின் பெண் போராளிகளுக்கு, அவர்கள் விரும்பும் 'சுதந்திரம்' வருவதற்கு நீண்ட காலம் ஆகிறது.

டெலால் இப்போது பயிற்சி தளங்களை விட்டு வெளியேறி எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார். இரானின் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான போரில் குர்துகள் இணைந்தால், எந்தப் போரும் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிய வழி இல்லை.

வாலண்டினா சினிஸின் கூடுதல் செய்திகளுடன்

பெண் போராளிகள் தங்கள் உண்மையான பெயர்களைக் கொடுக்கவில்லை, பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவ அழைப்பு அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cge8v9yx4qdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.