Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும்.

கட்டுரை தகவல்

  • பிபிசி மானிட்டரிங் குழு

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானிய அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது.

இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இரானின் நீண்டகால சமச்சீரற்ற போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கக்கூடும்.

இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கூறுவது என்ன?

இரானிய அதிகாரிகள் நாடு ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது நீண்ட போருக்கு ஏற்ற வகையில் தயார்நிலையில் இரான் இருக்கிறது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது.

உச்ச தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி மார்ச் 2ஆம் தேதி இரானின் நீண்ட கால மோதலுக்கான தயார் நிலையை அறிவித்தார். அப்போது, "அமெரிக்காவை போலன்றி, இரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். அதோடு, பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் அவர் நிராகரித்தார்.

"ஆக்கிரமிப்புக்கு" இரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

"நாங்கள் நிச்சயமாக போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும்," என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கபிபாஃப் மார்ச் 8ஆம் தேதி கூறினார். இரான், இஸ்ரேலுடன் இருப்பை தக்க வைப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக், இரானால் "எதிரி எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு நீண்ட காலம் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை" தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

இரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதத்தை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தனது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மேம்பட்ட ஆயுதங்களில் சிலவற்றைப் போரின் பிந்தைய கட்டங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.

இரான் பயன்படுத்தும் உத்தி என்ன?

அட்ரிஷன் என்ற உத்தியை இரான் பயன்படுத்துவதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் விரைவாக வெற்றி பெறுவதற்குப் பதிலாகக் காலப்போக்கில் எதிரியை மெதுவாகப் பலவீனப்படுத்த முயல்வதாகும்.

இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல இலக்குகள் குறிவைக்கப்படுகின்றன.

முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன.

எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.

பெரும்பாலும், தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைவிட அதிக விலை கொண்டவை.

இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தி வாஷிங்டன் போஸ்டின் செய்தி கூறுகிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,U.S. Navy via Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

இரானிய அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய விகிதத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இரானிய தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக, இரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.

இந்த உத்தி, இரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இரான் - இராக் இடையிலான போருக்குப் பிறகு, இரான் சமச்சீரற்ற போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது.

ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும்.

பொருளாதார பாதிப்புகள் எவை?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,துபையில் தாக்குதலுக்குப் பிறகு எழுந்த புகை

ஒரு நீண்ட போர் இரானிலும் உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

அதில் முக்கியக் கவலை எரிசக்தி விநியோகம். உலகின் எண்ணெயில் பெரும்பகுதி பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு.

போர் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, இந்தக் குறுகிய பாதை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இது உலகளவில் மக்கள் மற்றும் தொழில்களுக்கான எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும்.

பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் மூடப்பட்ட வான்வெளியும் இந்தப் பகுதியில் வர்த்தகப் பாதைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

இரானுக்குள்ளும் பொருளாதார அழுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளால் அந்த நாடு ஏற்கெனவே பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் ராணுவத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதாலும், தேசிய நாணயம் நிலையற்றதாக இருப்பதாலும், வர்த்தகம் மற்றும் சேவைகள் சீர்குலைவதாலும் போர் ஏற்கெனவே நிலவும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது.

போர் நீண்டகாலம் தொடர்ந்தால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், நாட்டுக்குள் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறும் நிபுணர்கள், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

இரான் அரசாங்கம், குடிமக்களை போர் முயற்சிகளை ஆதரிக்க ஊக்குவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவுவது ஒரு தேசிய கடமை எனக் கூறி, அரசுக்கு பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது.

அரசியல் சிக்கல்கள்

போர் நீண்டகாலம் தொடர்வது, அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அபாயங்களைப் பெரிதாக அதிகரிக்கும்.

குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை கொண்டுள்ளன. இரான் இந்தப் பகுதியில் "ஆக்கிரமிப்பாளர்களின் சொத்துகள் மற்றும் தளங்கள்" என்று தான் அழைப்பதைக் குறிவைத்து வருகிறது. இதன் காரணமாகப் பல வளைகுடா நாடுகள், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்திய போராக மாறி கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சுகின்றன. இந்த நாடுகளில் சில ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளன.

அதே நேரத்தில், போர் பிராந்தியத்தில் அரசியல் உறவுகளை மாற்றக்கூடும். சில அண்டை நாடுகள் இரானின் எதிரிகளாக மாறக்கூடும்.

இரானை பொறுத்தவரை, போரைத் தொடர்வது என்பது அதன் ராணுவ திட்டங்களை அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பது மற்றும் உள்நாட்டில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்த முயல்வதாகும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுத்தவரை, சவால்கள் வேறுபட்டவை. அவர்கள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், அதே நேரத்தில் ஒரு நீண்ட போரின் நிதிச் சுமை, அரசியல் அழுத்தம், உலகளாவிய விளைவுகள் ஆகியவற்றையும் கையாள வேண்டும்.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20ly2pyv0do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.