Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-11-2.jpg?resize=750%2C375&ss

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெகசின்களை மீட்டுள்ளனர்.

படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொட்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைதான சந்தேக நபர்கள் டிகக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

https://athavannews.com/2026/1468144

  • கருத்துக்கள உறவுகள்

நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன

Mar 12, 2026 - 01:33 PM

நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.


கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.


அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. (  M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmmn5w90x000g356picapg6si

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது!

13 Mar, 2026 | 01:16 PM

image

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

WhatsApp_Image_2026-03-13_at_12.34.55__1

WhatsApp_Image_2026-03-13_at_12.34.56.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.34.57.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.34.57__1

WhatsApp_Image_2026-03-13_at_12.34.58.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.34.58__2

WhatsApp_Image_2026-03-13_at_12.34.59.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.34.59__1

WhatsApp_Image_2026-03-13_at_12.35.00.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.35.00__1

WhatsApp_Image_2026-03-13_at_12.35.01.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.35.01__1

WhatsApp_Image_2026-03-13_at_12.35.02.jp

WhatsApp_Image_2026-03-13_at_12.35.02__1

https://www.virakesari.lk/article/240869

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.