Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்

26 Mar, 2026 | 07:40 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

002.png

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் நேற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்இ இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது.

இதற்கமைய இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஸ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த  வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து 'அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை  கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/242022

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி - ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் சந்திப்பு

Mar 26, 2026 - 05:09 PM

ஜனாதிபதி - ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (26) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளார். 

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான எரிசக்தி துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

குறிப்பாக, எரிபொருள் விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. 

விமான நிலையத்தில் வரவேற்பு: இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன ஆகியோர் வரவேற்றனர். 

உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் சூழலில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக எரிசக்தி துறையில் மேம்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது.

https://adaderanatamil.lk/news/cmn7eb78n001r356ppx1bonpd

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணக்கம்

Apr 1, 2026 - 05:41 PM

எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அந்நாட்டின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரமன் மர்ஷாவின் இதனை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ச்சியாக வழங்கவும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தனது நாடு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர், இலங்கைக்குத் தற்போது தேவையான எரிபொருளை வழங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உடன்பட்டுள்ளார். 

அதற்கமைய, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேவையான எரிபொருள் கையிருப்புகளை விரைவாக விடுவிக்கும் செயல்முறையை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதற்காக ரஷ்ய நிறுவனங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளைத் செய்து தருவதாகவும் கூறினார். 

மேலும், இலங்கையின் எரிசக்தித் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியை வழங்கவும் தனது நாடு தயாராக இருப்பதை அவர் இங்கு வலியுறுத்தினார். 

இலங்கையின் அபிவிருத்திப் பாதை எதார்த்தமாவதைக் காண்பதே தனது நாட்டின் விருப்பம் என்றும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmng06dya000m356pedpu8lmj

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.