Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

Mar 27, 2026 - 11:55 PM

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. 

அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். 

பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்கள் 91.03 சதவிகிதமாகவும் உள்ளன. 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்கள் 75.14 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் 72.25 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 92.47 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 76.45 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 80.17 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பொலன்னறுவையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 86.55 சதவீதமும், புத்தளத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் 55.98 சதவீதமும் நீரின் கொள்ளளவு உள்ளது. 

திருகோணமலையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களில் 95.62 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 59.97 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

https://adaderanatamil.lk/news/cmn98es4v0007356po4c1a4vf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறட்சியான வானிலை ; கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்தது

Published By: Digital Desk 3

31 Mar, 2026 | 02:32 PM

image

நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதிக்கும் தற்போதைய வறட்சியான வானிலையினால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 21.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கத்தின் பொறியாளர் தெரிவித்தார்.

தற்போது மொத்த நீர் கொள்ளளவு 37,276 மில்லியன் கன மீற்றராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்குத் தேவையான நீர் திறப்பு, நீர் கட்டுப்பாட்டுச் செயலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

மேலும், தற்போது நிலவும் வறட்சியான வானிலையினால் நீர்த்தேக்கத்திற்கு மேலே அமைந்துள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/242398

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

Mar 31, 2026 - 10:10 PM

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது 75% என்ற அளவில் காணப்படுவதாக அத்திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கான நீரை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

"பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த போகத்திற்கான நீரை வழங்க முடியும். குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உவர் நீர் உட்புகும் அபாயம் காணப்படலாம். குறிப்பாக நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmneuc63q000g356pzu71l31z

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.