Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!

Published By: Digital Desk 1

31 Mar, 2026 | 09:42 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய மின்னணு கட்டமைப்பு, இன்று காலை 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/242364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொத்து சேகரித்த முறைமையை வெளிப்படுத்த வேண்டும் ; இல்லையேல் அது ஊழலின் பெறுபேறாக கருதப்படும் - இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு

31 Mar, 2026 | 06:54 PM

image

(இராஜதுரை ஹஷான்)

அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாம் சேகரித்த சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் அந்த சொத்துக்களை திரட்டிய விதத்தையும் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடியை பின்னணியாக கொண்டது என்றே கருதப்படும். சிறந்த முறையில் உழைத்து, சொத்து சேகரித்தவர்கள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கும் போது நெருக்கடிக்குள்ளாகவில்லை. முறைகேடான வகையில் செயற்பட்டவர்கள் மாத்திரமே நெருக்கடிக்குள்ளானார்கள் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தல் மின்னணு கட்டமைப்பை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளோம். 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆணைக்குழுவின் சேவையாளர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் போது பல பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அனைவரும் எதிர்கொண்டனர்.சட்டத்தை தெரியாமல் இருப்பது விடுவிப்புக்கான காரணமல்ல என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம். சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் கடந்த ஆண்டு சுமார் 3 இலட்சம் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்படும் போதும் ஒருதரப்பினர் அதையும் எதிர்க்கிறார்கள்.

சட்டத்தின் பிரகாரம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணக்கருக்கருக்களை ஒருசிலர் எதிர்க்கிறார்கள்.இவ்வாறான நிலையில் நாடு என்ற அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றமடைவது.

அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாம் சேகரித்த சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் அந்த சொத்துக்களை திரட்டிய விதத்தையும் நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அது இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடியை பின்னணியாக கொண்டது என்றே கருதப்படும்.

சிறந்த முறையில் உழைத்து, சொத்து சேகரித்தவர்கள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கும் போது நெருக்கடிக்குள்ளாகவில்லை. முறைகேடான வகையில் செயற்பட்டவர்கள் மாத்திரமே நெருக்கடிக்குள்ளானார்கள்.

இந்த ஆண்டு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை மின்னணு முறையில் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும். கடதாசி ஊடாக சமர்ப்பிப்பதை இனி ஏற்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/242431

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.