Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழனுக்காக இரங்கல் தெரிவித்தால் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று தமிழ்ப் பகைவர்கள் நினைப்பதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழனுக்காக இரங்கல் தெரிவித்தால் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று தமிழ்ப் பகைவர்கள் நினைப்பதா?

photo%2007.jpg

இனப் பகைவர்களை அடையாளம் காட்டி தமிழர் தலைவரின் இனமானப் பேருரை. ஒரு தமிழன் மறைந்ததற்காக இரங்கல் சொன்னால் அதற்காக தமிழர் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு அற்பத்தனம் தமிழ்ப் பகைவர்களால் உருவாக்கப்படலாமா? என்ற வேதனை மிகுந்த கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுப்பினார்.

சென்னை பெரியார் திடலில் 12-11-2007 அன்று நடைபெற்ற புதுவை கவிஞர் சிவம், அ. சிதம்பரநாதன் (செட்டியார்) நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அண்ணாமலைப் பல்கலையில் நடந்த சம்பவங்கள் செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரனார் அவர் களைப்பற்றி இங்கே அற்புதமாகச் சொன்னார் கள். அவர்கள் இன உணர்வுப் பேராசிரியராக இருந்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே ஒரு சம்பவத்தைச் சொன்னார்கள் அல்லவா? அதை நம்முடைய பேராசிரியர் ந. வேலுசாமி அவர்கள் மிக அருமையாக அதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சர். கே.வி. ரெட்டி அவர்கள் நீதிக்கட்சிக்கு உதவியாக இருந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது உணர்வுப் பூர்வமாக இருந்தவர். அவருடைய காலத்தில் 1940, 1942 -லே ஒரு ஆணை பிறப்பித்தார். இந்தச் செய்தி யைப்பற்றித் தான் இங்கு சொன்னார்கள்.

டாக்டர் சிதம்பர நாதனார் ஒரு மாணவராக மட்டும் அல்லது பேராசிரியராக மட்டும் விளங்கவில்லை. சமூகநீதிக் கொடியை அன் றைக்கே அந்த இடத்திலே ஏற்றிடத் தயாராக இருந்தார்கள். அதனால்தான் இன்றைக்கு நாம் அவரை நினைவூட்டுவதிலே இன்றைக்கும் சமூகநீதிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எதை அந்த நூற்றாண்டு விழா நாயகர்கள் நாயகர்கள் நினைத்தார்களோ அந்தப் போர் இன்னும் முடிவடைந்து விடவில்லை. அந்தப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இப்படி ஒரு நிலை இன்னும் நாம் வெற்றிக்களத்திலே நின்று கொண்டிருக்கின்றோம். ``அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவராக சேர்த்துக் கொள்ளப்படுவோரில் நூற்றுக்கு அய்ம்பது பேர் பார்ப்பனர்களாகவும், ஏனைய அய்ம்பது பேர் பிற ஜாதியினராக இருக்கவேண்டும். ஏனென்றால் இதற்கு முன் மாணவர்களில் எண்பது பேர் பார்ப்பனர்களாக இருந்தனர் என்ன கொடுமை பாருங்கள்!

நூற்றுக்கு எண்பது பேர் பார்ப்பனர்கள். அக்காலத்தில் ஏனையோர் அறிவியல் துறையில் நுழையா வண்ணம் அம்மாணவர்கள் ஆக்கிர மித்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்து வாதாடினார்கள். அப்பொழுது ஆட்சியாளர் குழுவில் உறுப்பினராகிய சிதம்பரம், நகர வழக்கறிஞர் ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக சட்டத்தின் அய்ந்தாவது பிரிவின்படி இந்த ஆணை தவறு என்று வழக்காடினார்.

அதாவது மாணவர்களை சேர்ப்பதில் ஜாதி அடிப்படை கிடையாது என்பது அவர் வாதம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கடந்த கால நடைமுறையே சான்றாகும்.

65 ஆண்டுக் கால வரலாறு

1942 ஆம் ஆண்டு நிலைமை என்று சொன்னால் இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்றது என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 65 ஆண்டுக் கால வரலாறு எப்படியிருக்கிறது? இந்த நூற்றாண்டு விழா நாயகர்கள் என்ன சாதித்திருக் கிறார்கள் என்று சொல்லும்பொழுது அந்த நீதிபதிக்கு உதவியாக சிதம்பரநாதன் அவர்கள் மற்றும் பொருளியல் துறை பேராசிரியராக இருந்த டாக்டர் பி.வி. நாராயணசாமி அவர்கள் கடந்த 1935, 40-இல் சீனிவாச சாஸ்திரி துணை வேந்தராக இருந்தபொழுது, சுமார் அய்ந் தாண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர் விகிதங் கள் அடங்கிய புள்ளி விவரங்களை சேகரித்தனர்.

தமிழன் பல்கலையில் கருநாகம் குடி புகுந்ததுபோல், அண்ணாமலைப் பல்கலைக் கழகமோ தமிழன் கட்டிய பல்கலைக் கழகம். கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததைப் போல அங்கு சீனிவாச சாஸ்திரிகளை உள்ளே வைத்ததினுடைய விளைவாக என்ன சூழ்நிலை ஏற்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழின உணர்வாளராகத் திகழ்ந்தவர்.

பிறகு மேலும் பொருத்தமான காரணங் களைத் திரட்டித் தந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய கே.வி. ரெட்டி அவர்களுக்கு நம்முடைய சிதம்பர நாதன் அவர்கள் மிகப் பெரியத் துணையாகத் திகழ்ந்தார்கள் என்று சொன்னால் இவர் வெறும் தமிழ்ப் பேராசிரிய ராக மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளராக அவர்கள் திகழ்ந்தார்கள். இதுபோல அவர்கள் நிறைய பணி செய்திருக்கிறார்கள்.

மலேசியாவிற்கு தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் அவரைத் தமிழர் விழாவிற்கு தமிழர் திருநாளுக்கு முதல் முறையாக அழைத்திருந் தார்கள். மலேசியாவிற்கும் இவர் குரல் கொடுத்தவர் அவர்கள் அங்கே சென்ற காலத்தில்தான் அதற்கு முன்னாலே சென்ற நீலகண்ட சாஸ்திரி சமஸ்கிருதம்தான் மலேசிய பல்கலைக் கழகத்தில் வரவேண்டும் என்று சொன்ன நிலையிலே அதனை மாற்றுவதற்கு இவர்தான் ஓங்கி குரல் கொடுத்து தமிழவேள் அவர்களுடைய சிந்தனையிலே மிகத் தெளிவாக வந்தார்கள். பணம் கிடையாது, நாங்கள் அதற்கு பணம் ஒதுக்கமுடியாது என்று சொன்னவுடனே அன் றைக்கே சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகை யினுடைய ஆசிரியர் சுயமரியாதை வீரராக இருந்த தந்தை பெரியாரின் தொண்டர் தமிழ வேள் கோ. சாரங்கபாணி அவர்கள் தன்னுடைய ஆற்றல் மிகு எழுத்துக்களைச் சொல்லி, ``தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லுகின்ற அந்த வரிகளிலே இருந்து ``தமிழ் எங்கள் உயிர் நிதி என்று ஒன்றை அவர்களே அறிவித்து நீங் கள் நிதி அனுப்புங்கள் என்று சொன்னார்கள்.

லட்சக்கணக்கான வெள்ளிகள் குவிந்தன.

பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வெள்ளிகள் அங்கே குவிந்தன. அதை வைத்து தமிழுக்கு ஒரு தனித்துறையை மலேசிய பல்கலைக் கழகத்திலே உருவாக்கினார்கள். அன்றைக்கு சிங்கப்பூரும், மலேசியாவும் ஒன்றாக இணைந்திருந்த காலம். அதற்கு அடித்தளமாக அதற்கு முன்னோடியாக இருந்து பணி செய்து அறிவுரை வழங்கிய பெருமை நம்முடைய சிதம்பரநாதனார் அவர்களைச் சாரும். சிதம்பரநாதனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களிலே எனக்கு மிகத் தோன்றாத் துணையாக இருந்திருக்கின்றார்.

எனவே அ. சிதம்பரநாதனார் அவர்களுக்குப் பாராட்டு, நினைவு கூருகிற நிகழ்ச்சி மட்டுமல்ல, நன்றி திருவிழாவிற்கு செய்யக்கூடிய ஒரு விழாவாகும்.

பெரிய நாயகி அம்மையார்

அவருடைய வாழ்விணையரான பெரிய நாயகி அம்மா அவர்கள் மிகுந்த பற்றோடு, பாசத்தோடு எங்களிடம் பழகியவர்கள். இங்கே அவ்வையார் அவர்கள்கூட சொன்னார்களே, திராவிட இனத்து மாணவர்கள் எஸ்.டி. சோம சுந்தரம் அவர்கள் ஆனாலும், நாவலர் அவர்கள் ஆனாலும், பேராசிரியர் அவர்கள் ஆனாலும், இளம் வழுதி அவர்கள் ஆனாலும், மதியழகன் அவர்கள் ஆனாலும், எல்லோரையுமே, எங்களைப் போன்றவர்களை எல்லாம் அவர்கள் ஒரு குடும்பத்துப் பிள்ளைகளைப் போல அரவணைத்து திராவிட உணர்வை அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.

`ஏ தாழ்ந்த தமிழகமே!

ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்களை அழைத்து பேசச் சொன்னபொழுது அவர்களுக்கு ஒரு தலைப்புக் கொடுத்தார்கள். அதுதான் புத்தகமாக பல பதிப்புகள் வந்திருக்கின்றன.

`ஏ` தாழ்ந்த தமிழகமே! என்ற தலைப்பிலே பேசினார்கள். அண்ணா அவர்களை இந்த மன்றத்தில் அழைத்துப் பேசுவதற்கு அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். நம்முடைய டாக்டர் ஏ.சி. செட்டியார் என்று அழைக்கப்படக் கூடிய டாக்டர் சிதம்பரநாதன் ஆவார்கள்.

சிதம்பரநாதனார் அவர்கள் பேசும்பொழுது ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள். புரட்சியின் உருவமாக அண்ணா அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்று வரவேற்பு ரையில், அறிமுக உரையிலே சொன்னார்.

`நானா புரட்சியின் உருவம்?

அடுத்து அண்ணா அவர்கள் பேசும் பொழுது சொன்னார். என்னைப் புரட்சியின் உருவம் என்று சொன்னார்கள். புரட்சியின் உருவம் இவ்வளவு குள்ளமாக இருக்காது. புரட்சியின் உருவம் என்று சொன்னால் இதோ இருக்கிறாரே, செந்தமிழ்க் காவலர் சிதம்பர நாதனார் இவருடைய தோற்றப் பொலிவு இவருடைய உயரம் எவ்வளவு அப்படித்தான் புரட்சியின் உருவம் இருக்கும் என்று சொல் லித்தான் அண்ணா அவர்கள் அந்த உரையைத் தொடங்கினார்கள். `ஏ தாழ்ந்த தமிழகமே என்ற அந்த நூலிலே இந்தப் பகுதியை படிக்கக் கூடிய வாய்ப்பை பெறுவீர்கள்.

எனக்கு எம்.ஏ., தேர்விலே சில சங்கடங்களை ஏற்படுத்தினார்கள் அன்றைக்குப் பல்கலைக் கழகத்தினுடைய டீன் என்ற முறையிலே எனக்காக உள்ளே வாதாடினார். ``வீரமணி நேர்மையாக உழைக்கக் கூடிய மாணவர். ஏன் அவருடைய தகுதியை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டும்? ஏன் அப்படிக் கருதுகிறீர் கள் என்று வாதாடிவிட்டு எனக்கு தகவல் கொடுத்தார் - வரச் சொல்லி.

உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதி. நான் தேர்வெல்லாம் எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றேன். என்னை அழைத்து அப்பொழுது சொன்னார். உங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. நீங்கள் அதற்காக அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எல்லாம் உங்களுக் காக உள்ளுக்குள்ளே வாதாடினோம் என்று அந்த அநீதியைப் பற்றிச் சொன்னார்கள். நான் சொன்னேன், நான் பெரியாருடைய தொண்டன்.

என் திறமையை மறைத்துவிட முடியாது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்ன செய்தாலும் என்னுடைய தகுதியை, என்னுடைய திறமையை அவர்கள் மறுத்துவிட முடியாது. அது உண்மை என்று சொன்னேன். ``நீங்கள் முதல் ரேங்க் வாங்கக்கூடியவராக வந்திருக்கின்றீர்கள். இன்னும் உங்களுக்கு சேரவேண்டிய சிறப்பு இருந்தது. உங்களுக்குச் சேர வேண்டிய அந்தச் சிறப்பை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றெல்லாம் அவர்கள் சொல்லி அவர்கள் என்னை ஆறுதல் படுத்தினார்கள். அது மட்டுமல்ல, அவர் இங்கே வந்த பிற்பாடும், மற்ற இடங்களுக்கு வந்த போதும் அவர்கள் சிறப்பாக இருந்தார்கள்.

இன்னும் ஒரு பெரிய மகிழ்ச்சி என்ன வென்று சொன்னால், சிதம்பரநாதனார் அவர் களின் புலமை மிகுந்த கணீர் குரல். ஆங்கிலத் திலும் சிறப்பாக உரையாற்றுவார் தமிழிலும் சிறப்பாக உரையாற்றுவார்.

நல் வாய்ப்பாக அவருடைய உரை என்னு டைய திருமணத்தில் - அது ஒலி நாடாவாக செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய உரையை குரலைக் கேட்க வேண்டுமானால், அந்தக் குரலை வைத்திருக்கக் கூடிய வாய்ப்பையும் நாம் பெற்றிருக்கின்றோம். அப்படிப்பட்ட சிதம்பர நாதனார் அவர்களுடைய சிறப்பு மேலோங்க வேண்டும். இன உணர்வாளர்களாக நம்முடைய புலவர்கள் ஆகவேண்டும் அதைத்தான் மறை மலை இலக்குவனார் அவர்கள் இங்கே சொன்னார்கள்.

கம்பனுக்காக எத்தனையோ வம்பர்கள் போய், எத்தனையோ பேர் இன்றைக்குத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இனத் துரோகத்தை நாம் புகழ்ந்துகொண்டே இருந்தோமானால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார் என்பதை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் நண்பர்களை எதிரிகளாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் கருதி, நாம் நம் இனத்தை வீழ்த்திக் கொண்டிருப்போம் என்று சொல்லுவதன் காரணமாகத்தான் இன்றைக்கு ஒரு சாதாரண தமிழன் மறைந்தால் இரங்கல் சொன்னால்கூட அதை வைத்து ஒரு ஆட்சியை வீழ்த்திவிடலாமா? என்ற ஒரு அற்பத்தனம் நம்முடைய நாட்டிலே, அதுவும் தமிழ் நாட் டிலே தமிழ்ப் பகைவர்களால் உருவாக்கப்படு கிறது என்று சொல்லும்பொழுது அதற்கு அடிப்படைக் காரணமென்ன? மேல் எழுந்த வாரியாக நீங்கள் பார்க்கக்கூடாது. எதற்கும் நோய் நாடி முதல் நாடவேண்டும். அந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு நமக்கு இன உணர்வை உண்டாக்குவதற்கு மிக அடித்தளமானது. இன்னொன்றையும் நம் முடைய பேராசிரியர் வேலுசாமி சொன்னார்.

முதல்வர் அந்த அமைச்சரை அழைத்தார். நாங்கள் ஆரம்பத்திலேயே அய்யா சிதம்பர நாதனார் அவர்களுடைய நூற்றாண்டு விழா வருவதற்கு முன்னாலே கூட சிதம்பரநாதனார் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று சொன்னபொழுது நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் அந்தத் துறை அமைச்சரை அழைத்து அஞ்சல் தலை அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிட வேண்டும் என்று அவர்கள் அன்புக் கட்டளையிட்டார்கள். அமைச்சர் ஆ. இராசா பேசினார். அதேபோல இப்பொழுது இருக்கக்கூடிய அமைச்சர் நமது இன உணர்வாளர், சிறந்த கொள்கை வீரருமாக இருக்கக்கூடிய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் என்னிடத்திலே தொலை பேசியிலே சொன்னார்கள்.

நீங்கள் அறிவித்துவிடுங்கள். நிச்சயமாக அவருடைய அஞ்சல்தலை வரப் போகிறது. நாங்கள் வெளியிடப் போகிறோம் என்று என்னிடத்திலே உறுதியாகச் சொல்லி, விழாவிலே நீங்கள் அறிவித்துவிடுங்கள். இதை நான் அதி காரப்பூர்வமாக உங்களிடத்திலே சொல்லுகின் றேன் என்று சொன்னார்கள். இதற்குக் காரண மாக அமைந்த முதலமைச்சர் கலைஞர் அவர் களுக்கும், மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் நமது மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத் தலைமுறைக்கு நம்முடைய வழிகாட்டிகள், நமக்கு முன் னோடிகளாக இருக்கக்கூடியவர்களை எல்லாம் சரியாகப் புரிந்து, அதை இன்றைய தலைமுறைக் கும் வருகின்ற இளைய தலைமுறைக்கும் வருங் காலத் தலைமுறைக்கும் எடுத்துச் சொன்னால் தான் உண்மையான வரலாறு அவர்களுடைய நெஞ்சிலே பதியும். அதற்காகத்தான் இந்தப் பணி என்று சொல்லி அதற்கு குறுகிய காலத்திலே ஒத்துழைத்து மிகச் சிறப்பாக வந்திருக்கின்ற உங்களுக்கு நன்றி, நன்றி.

புதுவையிலிருந்து ஒரு பேருந்திலேயே நம்முடைய தோழர்கள் வந்திருக்கிறார்கள். அது மேலும் மேலும் சிறப்பு. அவர்களுக்காவும் நன்றி தெரிவித்து, புதுவை - புரட்சி என்பதற்கெல்லாம் அடையாளமாக திகழ்ந்த மண். புரட்சிக் கவிஞரைத் தந்த மண் மட்டுமல்ல, புரட்சிக் கவிஞருடைய கருத்துக்களை, திராவிடர் இயக் கக் கருத்துகளை ஞாயிறு பதிப்பகத்தின் மூலமாக ஒளி ஞாயிறாக இன்னமும் வீசிக் கொண்டிருக்கின்றன. அறியாமை இருளை அவைகள்தான் போக்க வேண்டும். அதற்குத்தான் இந்த நூற்றாண்டு விழாக்கள். எனவே அப்படிப்பட்ட இந்த விழா நாயகர் களைப் பாராட்டி அவர்களுடைய பெருமையும் புகழும் நிலைக்க வேண்டும்.

இன உணர்வாளர்களாகத் திகழ வேண்டும் அதற்கு நாம் எல்லோரும் இன உணர்வாளர் களாகத் திகழ வேண்டும். வெறும் மொழி உணர் வாளர்களாக இருந்தால் மட்டும் போதாது. இன உணர்வாளர்களாகத் திகழ வேண்டும். இனப் பகைவர்களை அடையாளம் காணவேண்டும்.

ஒரு சூளுரையாக எடுத்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனப் பகைவர்களோடு சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இந்த உணர்வை ஒரு சூளுரையாக இந்த நூற்றாண்டு விழாவிலே எடுப்போம் என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.