Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு குண்டுவெடிப்புக்களும் தென்னிலங்கையின் பதற்றமும்

Featured Replies

கொழும்பு குண்டுவெடிப்புக்களும் தென்னிலங்கையின் பதற்றமும்

-எரிமலை-

கொழும்பிலே கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களும் அதனைத் தொடர்ந்து பரவிவரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதோடு அங்கு பரவிவரும் வதந்திகள் காரணமாக தென்னிலங்கையிலே மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறக் கூட அச்சமடைந்துள்ளதுடன் பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன பெருமளவிற்கு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அத்துடன் அண்மையில் கொழும்பில் விநியோகப்படும் குழாய்த் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது என்ற வதந்தி காரணமாக மக்கள் குழாய் நீரைக் குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கு உபயோகிப்பதற்கோ பயப்பட்டார்கள்.

தென்னிலங்கையில் அதிலும் குறிப்பாக கொழும்பு நகரையும் அதனைச்சூழவுள்ள பகுதிகளையும் முழுமையான பாதுகாப்பு நடைமுறை ஒழுங்கிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் இனிமேல் கொழும்பிலே குண்டுகள் எதுவும் வெடிக்கமாட்டாது என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குழுவினர் பல்வேறு அறிக்கைகளையும் பேட்டிகளையும் இதுவரை காலமும் வழங்கிக்கொண்டிருந்தார்கள். தற்போது இடம்பெற்ற தாக்குதல்கள் இவர்களின் பரப்புரைகள் அனைத்தையும் பொய்யாக்கியுள்ளது. மேலும் மிகவிரைவில் விடுதலைப் புலிகளினுடனான போரிலே தாங்கள் முழுமையான வெற்றியைப் பெற்றுவிடுவோம் என்று மகிந்த அரசு இதுவரை காலமும் செய்துவந்த பிரச்சாரங்களைத் தற்போது சிங்கள மக்கள் நம்பவோ அல்லது ஏற்கவோ தயாராக இல்லை.

இது இவ்வாறிருக்க தென்னிலங்கையிலே அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கிலே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி வீடுகளிலும் வீதிகளிலும் பயணம் செய்யும் ஊர்திகளிலும் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தென்னிலங்கையிலே உள்ள அனைத்து சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் இரவு உடைகளில் இருந்ததுடன் இளம் குடும்பப் பெண்கள் அவர்களின் கைக்குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டுப் பூசா போன்ற முகாம்களுக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்கள். அத்துடன் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீரோ உணவோ போதியளவிற்கு வழங்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் இயற்கைக் கடன்களை கழிப்பதற்குக் கூட சிங்களப் படையினர் அவகாசம் வழங்கவில்லை.

இவ்வாறு மோசமான மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரசு ஈடுபட்டதனைக் கண்டித்து அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் ஏனைய உள்ளுர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்ட போதிலும் சிறிலங்கா அரசு இதனைச் செவிசாய்த்ததா கவோ கரிசனையில் எடுத்ததாகவோ தெரியவில்லை.

தமிழ் மக்களைத் தென்னிலங்கையிலே மிகவும் மோசமாக மகிந்தவின் சிங்கள இனவாத அரசு நடத்தியமையானது தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனிநாடு தேவை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது தமிழீழத்தில் தான் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கௌரவ மாகவும் வாழ முடியும் என்பதைச் சிங்களப் பேரினவாத அரசானது தனது நடவடிக்கை கள் மூலம் மீண்டும் ஒரு தடவை உல கெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளது.

இதனைத்தான் கடந்த நவம்பர் 27 ஆம் நாள் தனது மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

~பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு- இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சி நாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.|

இந்த வருட மாவீரர் நாள் உரை தொடர்பாக நோர்வே உட்பட பல்வேறு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களையும் ஆராய்வுகளையும் தெரிவித்து வருகின்றார்கள். இந்த வருட மாவீரர் நாள் உரையானது கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாகவும் சர்வதேச சமூகம் மற்றும் நோர்வே அனு சரணையாளர்கள் தொடர்பாக வெளிப் படையாகக் கண்டித்துக் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அமைந்துள்ளது.

தற்போது சிறிலங்கா அரசானது தனது போர் நடவடிக்கைகளைத் தமிழர் தாயகப் பகுதியிலே தீவிரப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகளும் தற்போதைய களநிலவரங்களுக்கு ஏற்ற வகையில் புதிய புதிய போரியற் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதினை அவர்களின் அண்மைக்காலத் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது வன்னிப் பிராந்தியத்தின் மேற்குப் போர்முனையில் மன்னார் தம்பனைப் பகுதியில் இடம்பெறும் சமர்கள் பற்றிய தகவல்கள் பெரியளவிற்கு வெளிவராத போதிலும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டும் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள் என்ற செய்தி தென்பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட படையினரின் நான்கு சடலங்கள் களமுனைகளில் கண்டெடுக்கப்பட்டு அவற்றினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக தென்பகுதிக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளார்கள். அதேசமயம் வவுனியா தந்திரிமலை மற்றும் சின்னசிப்பிக்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு தாக்குதல் சம்பவங் களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப் பட்டதாகவும் இருவர் காயமடைந்தாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையிலே கொழும்பு நகரின் குண்டு வெடிப்புக்கள் மற்றும் பல்வேறு இது தொடர்பான வதந்திகள் காரணமாகவும் மற்றும் திஸ்ஸமாரகம, யால காட்டுப்பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாகவும் ஒட்டுமொத்தத்தில் தென்னிலங்கை படைத்துறையும் சிறிலங்கா அரச தலைவர்களும் குழம்பிப் போயுள்ளார்கள். கொழும்பு நகரப் பகுதியினைப் பாதுகாப்பதற்கும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்து வதற்கும் 18,000 இற்கும் அதிகமான படையினர் அங்கு கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளார்கள். இது தவிர தென்னிலங்கையின் யால மற்றும் திஸ்ஸமாரகம பகுதிகளைப் பாதுகாப்பதற்காக 5000 இற்கும் அதிகமான படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறாகத் தென்னிலங்கையின் பல்வேறு பாகங்களிலும் மற்றும் தமிழீழத் தாயகப் பிரதேசங்களிலும் சிறிலங்காப் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்ற சூழ்நிலையில் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையில் தெரிவிக்கப்பட்ட இக்கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

~எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது குறைத்தே மதிப்பீடு செய்கிறது. பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடை போட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த் திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம். புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் 'ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அதிவிரைவிற் விரைவிற் சந்தித்தே ஆகவேண்டி வரும்.

தற்போது சிங்களப்படைகளும் மகிந்த அரசும் எவ்வாறான பொறிக்குள் அகப்பட்டுள்ளன என்பதை நடைபெறும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. போரியல் அரங்கிலே தமிழர் தரப்பிற்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ள இத்தருணத்திலே களமுனைகளிலே புலிகளின் சிறிய வெற்றிகள் கூட தென்னிலங்கையிலே போரின் வெற்றிகளை வைத்தே சூதாட்டம் ஆடும் மகிந்த அரசினை பாரிய இக்கட்டுக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிடும். இதுவே மகிந்த அரசின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையலாம்.

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20071208.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.