Jump to content

சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்) - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

பதியப்பட்டது

சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)

வ.ஐ.ச.ஜெயபாலன்

(நாவல் எழுதும் முயற்சிக்கு முன்னோடியாக செக்குமாடு மற்றும் சேவல்கூவிய நாட்கள் குறுநாவல்களை எழுதினேன். கணயாழியில் வெளிவந்தது. என் நாவல் முயற்ச்சியில் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் )

ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக வளரக்கூடிய வாழ்வின் பதியங்கள்தான். எனினும் அவற்றை ஒரு சிறுகதையாக வளைத்துப் போடுவது எனக்கு இன்னமும் கைவரவில்லை. சொல்ல வந்த கதை நல்லபடி ஆரம்பித்து, சிறுகதையின் எல்லைகளைத் தாண்டிப் பெருகி எங்கெங்கோ சென்று, பின்னர் எழுதப் படுவது குறுநாவலா நாவலா என என்னையே குழம்ப வைத்துவிட்டுத் தேங்கிப் போய் விடும்.

கணனிக்குப் பழக்கப் படும்வரை இப்படி அறுவடையாகாத கதைகளின் காகிதக் கசங்கல்களால் அடிக்கடி எனது அறை நிறைந்துவிடும். எதிலும் எப்போதுமே இப்படி ஒரு அதிகப் பிரசங்கித்தனம். யோசித்துப் பார்க்கையில் அந்தச் சின்னம் சிறு வயதில் திரு. லாம் மாஸ்டர் “வாயாடி நம்பர் வண்” என்று எனக்கு வைத்த பட்டப் பெயர் மிகவும் பொருத்தமானது எனவே தோன்றுகிறது.

லாம் மாஸ்டர் மலையாளி. அப்போ தெல்லாம் இலங்கையில் பயிற்றப் பட்ட ஆசிரியர்களுக்குப் பற்றாக் குறை இருந்ததில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கு தென் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவளைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி விசேடமான

ஆசிரியர்கள் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய ஒரு தீவுக்கு அனுப்பப் படுவது வளமையில்லைதான். எனினும் எங்கள் நடு நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான நவரட்ணசிங்கம் மாஸ்டரின் அரசியல் செல்வாக்கால் ஆங்கிலம் கற்பிக்க திரு.லாம் மாஸ்டர்ரும் விஞானம் கற்பிக்க அவரது மனைவியான திருமதி.லாம் ரீச்சரும் நெடுந்தீவுக்கு வந்தார்கள்.

அவர்கள் வந்த நாள் எனக்கு நல்ல ஞாபகம். அன்று எங்கள் பாடசாலைக்கு முன் வீதியெல்லாம் மூன்று வண்ணக் கொடி கட்டப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சிக்காரர்கள் பலர், வண்ணக் கொடிகளோடு பாடசாலை முகப்பிலுள்ள இரும்புக் கேற்றுக்கு முன்பாகக் கூடி நின்று எங்களைப் பள்ளிக்கூடத்துக்குப் போக விடாமல் தடுத்தார்கள். எங்களுக்கெல்லாம் படம் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்கள் கிடைத்தது. விசாரித்த மாணவர்களுக்கு “புகைப் படத்தில் இருக்கிறது ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகம் அவர்கள்” என துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தவன் மேடைப் பேச்சுத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தான்.

பள்ளிக்கூட முற்றத்தில் நவரட்ணசிங்கம் மாஸ்டரின் தலை தெரிந்ததும் நாங்கள் பக்கத்து வளவுக்கு ஓடிப்போய் பனைமரங்களுக்குப் பின்னே ஒழிந்து கொண்டோம். கேட் வசல் வரை பிரம்பும் கையுமாக வந்த நவரட்ண சிங்கம் மாஸ்டர் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு வாசலில் கும்பலாக நின்றவர்களிற் சிலரை உள்ளே அழைதுக்கொண்டுபோனார். நெடுநேரமாக உள்ளே போனவர்கள் திரும்பி வராததால் வெளியில் நின்றவர்கள் பரப்படைந்தார்கள். ஆனால் உள்ளே போனவர்கள் திரும்பிவந்து சொன்ன புதினங்கள் எல்லோரையும் சிரிக்க வைத்தது. அவர்கள் சிரிப்பையும் மீறி நவரட்ணசிங்கம் மாஸ்டர் எங்களுக்குத் தேனீரும் பிஸ்கட்டும் தந்து `அரசியல் வேறு படிப்பு வேறு` என்கிற தனது தத்துவத்தையும் போதித்து அனுப்பினார் என்றார்கள்.

தமிழரசுக் கட்சிக் காரர்களைக் கணும் போதெல்லாம் “படிப்பு வேறு அரசியல் வேறு” என்று என்கிற அவரது தர்க்கம் ஆரம்பித்துவிடும். நவரட்ணசிங்கம் மாஸ்டருக்கு இரவில் தமிழரசுக் கட்சிக்காரது நினைப்பு வந்தால் விடிய விடிய தூக்கத்தில் படிப்புவேறு அரசியல் வேறு என்று பிதற்றுவார் என்கிற பகிடி ஊரில் பிரபலமாக இருந்ததது. இது உண்மையில் பிறரைக் கிண்டல் செய்வதிலும் பகிடி விடுகிறதிலும் பேர்போன எனது அப்பா ஒரு முறை சொன்ன பகிடிதான். அந்தக் கும்பலில் யாரோ அந்தப் பகிடியைச் சொல்லிச் சிரித்தபடி என்னைச் சுட்டிக் காட்டி எதோ பேசினார்கள். அதுபற்றி நான் பெருமைப் பட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.

“எல்லாம் முடிஞ்சுது” எனக் கத்திக்கொண்டு மூச்சிரைக்க ஓடோடி வந்த ஒருத்தர் பண்டாரநாயக்க பாராளு மன்றத்தில் சிங்கள மட்டும் சட்டத்தை நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். வானொலிச் செய்தியில் கேட்டாராம்.. சற்றைக்கெல்லாம் தனது சிவப்பு வர்ணச் சைக்கிளில் தந்தி கொடுப்பவர் வந்தார். மீண்டும் அந்தக் கும்பல் பரபரத்தது. சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து கொழும்பில் சத்தியாக்கிரகமிருந்த செல்வநாயகமும் ஏனைய தமிழ்த் தலைவர்களும் தாகப் பட்டதாக தந்தியைப் படித்தவர் உரத்துச் சொன்னார். “உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை.”

எல்லோரும் பண்டார நாயக்கவை தூற்றினார்கள். தெருவால் போன கிழவி ஒருத்தி செல்வநாயகம் தாக்கப் பட்ட சேதியைக் கேட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். “ஐயோ எங்கிட ராசாமேல கைவைச்ச பண்டாவும் அவனது வம்சமும் வேரும் வேரடி மண்ணுமில்லாமல் அழிந்து போகட்டும்” என அவள் மண்ணை அள்ளிக் கொட்டிச் சாபமிட்டாள். “இந்தக் கொடுமைகளை எதிர்த்து நாங்கள் போராடாவிட்டால் தமிழ் மட்டுமல்ல தமிழர்களும் அழிந்து போவார்கள்” என ஒருவன் நிமிடத்துக்கு ஒருதடவை கீறல் விழுந்த இசைத் தட்டுப் போலச் சொல்லிக் கொண்டிருந்தான்.னொரு பள்ளித் தோழன் அது உண்மைதான் என்றான். சுதந்திரன் பேப்பரிலேயே எழுதியிருக்கிறார்கள் என நானும் அதனை ஆமோதித்தேன். முன்பெல்லாம் பேப்பரில் வருவதெல்லாம் உண்மை என்றே எல்லோரும் நம்பினோம். சுதந்திரனோமெங்கள் பெற்றோர் ஆதரிக்கும் தமிழரசுக் கட்சிப் பத்திரிகையாக வேறு இருந்தது. அது பற்றி தலைவர்கள் பேசியதை நாங்கள் ஏற்கனவே தேர்தல் கூட்டங்களிலும் கேள்விப் பட்டிருந்தோம். போராடாவிடால் எங்களை, எங்கள் அப்பா அம்மாவை எல்லாம் அழித்து விடுவார்கள் என்கிற அச்சம் எங்கள் பிஞ்சுமனதில் ஆத்திரமாக மூண்டெரிய ஆரம்பித்தது. அதுவும் பள்ளிக்கூடத்தில் மேல்வகுப்பு மாணவர்கள் மேடையேற்றிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த பின்னர் நாமெல்லாம் சிவாஜி கனேசனைப் போல வீரவசனம் பேசிக் கொண்டு கற்பனைக் குதிரைகளில் எறிச் சிங்களப்

படைகளைத் துரத்திக் கொண்டு திரிந்தோம்.

அந்தப் பகிஸ்கரிப்புப் போராட்டம் முடிவடையும் தரணத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “அகிம்சைப் போராட்டம் பம்மாத்துப் போராட்டம். துப்பாக்கி தூக்கிப் போராடாமல் தமிழ் மக்களுக்கு விடிவில்லை” என்று வெளியூர்காரரான தாடிக்கார இளைஞன் ஒருவன் கோசமிட்டான். “இவன் அந்த அறப்படிச்ச விசரன் வவுனியா சுந்தரலிங்கத்தின்ட ஆள். எங்க கூட்டத்தைக் குழப்ப வந்திருக்கிறான்” என யாரோ கத்தினார்கள். “இல்லை இவன் கம்யூனிஸ்டாய் இருக்க வேணும். சீவ்ப் கிளாக்கர் செல்வரட்ணம் வீட்டில்தான் தங்கியிருக்கிறான்” என்று வேறு யாரோ சொன்னார்கள்.

வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் செல்வரட்ணம்தான் நெடுந்தீவில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கம்யூனிஸ்டுகளுக்குத் தலைவர் போல இருந்தார். தீவிர வாதி என்பதற்கு அடையாளமாக அவரும் தாடி வைத்திருந்தார். யாழ்ப்பாணம் நகரத்தில் கார் மெக்கானிக்குகளாகவும், பட்டறைத் தொழிலாளர்களாகவும், மூடை தூக்குபவர்களாகவும், கள் இறக்குபவராகவும் இருந்த ஒடுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களுட் பலர் கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக இருந்தார்கள். எங்காவது கம்யூனிஸ்டுகள்மேல் கைவைத்தால் பின்னர் யாழ்பாணம் நகருக்குப் போகும்போது உதைபட நேரிடும். அதனால் ஆட்பலமுள்ள உள்ள ஏனைய கசிக்காரர்களே அகிம்சை வாதிகளான தமிழரசுக் கட்சி வாலிபர்களுக்கு அஞ்சி அஞ்சி அரசியல் செய்த அந்த நாட்களில் ஊர் ஊருக்கு ஐந்தாறு பேரே இருந்தபோதும் கம்யூனிஸ்டுகள் பயப்படுவதில்லை. ஊர்ச்சுவரெங்கும் இரவிரவாக சிவப்பு மையினால் புரட்சி ஓங்க வைத்து விடுவார்கள்.

வன்முறைக் கட்சித் தாடிக்காரனின் அட்டகாசத்தைக் கண்டு அகிம்சை வாதியான தாடிக்காரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்த தீவிர வாதியான அந்த தாடிக்காரன் “அடேய் எங்கிட புனிதமான அகிம்சைப் போராட்டத்தையா எதிர்கிறாய்” என்றபடி வேலிக் கம்பை உருவிக்கொண்டு அந்த வன்முறைக் கட்சிக் காரனை அடிக்க ஓடினான். “யாழ்ப்பாணத்தில் சந்திக்கலாமா தோழர்” என்றபடி அந்தத் தாடிக்காரன் அசையாமல் நின்றான். தமிழரசுக் கட்சித் தாடிக்காரனுக்கு திடாரென தங்கள் கட்சியின் அகிம்சைத் தத்துவம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அவன் சற்று தரித்து “துரோகிகள்” என்றபடி பின்வாங்கினான். அங்கு கூடி இருந்த எல்லோரும் அந்த தாடிக்காரனை அங்கிருந்து போய்விடும்படி எச்சரித்தார்கள். “அகிம்சையால மகாத்மா காந்தி பிரிட்டிஸ் சாம்ராட்சியத்தையே தோற்கடித்திருக்கிறார் இலங்கை அரசு எந்த மூலைக்கு” என்பதே அங்கு பொதுக் கருத்தாக இருந்தது..

“துப்பாக்கிக் குழலில் இருந்துதான் ஆட்சி அதிகாரம் பிறக்கிறது” என்றும் “ஒரு நாள் வன்னிக் காடு சுடும்” என்றும் கத்தியபடி அந்த கம்யூனிட் கட்சித் தாடிக்காரன் மெல்ல நழுவினான். அவன் சற்றுத் தூரம் போகும் வரை சும்மா பார்த்துக் கொண்டு நின்ற தமிழரசுக் கட்சித் தாடிக்காரனோ “டேய் உன்னைப்போல துரோகிகள் தாடி தாடி வளர்கக் கூடாதடா” என தோழ்களைத் தட்டி முழங்கினான். அதன் பின்னர் பின்னர் கும்பலில் இருந்த பலரும் உரத்த குரலில் கட்சிப் பாடல்களைப் பாடினார்கள்.

“ஏற ஏறப் பார்க்கிறான்,

எம் நாட்டில் பண்டா குடி

ஏற ஏறப் பார்க்கிறான்.

வேப்ப மரத்தை வெட்டி

வெள்ளரசினை நாட்டி..”

இது போன்ற பிரபலமான சினிமாப் பாடல்களின் மெட்டில் அமைந்த கட்சிப் பாடல்கள் மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. நாமும் நவரட்ண சிங்கம் மாஸ்டருக்கு தெரியாதபடி மறைவில் நின்று கொண்டு “ஏற ஏறப் பார்க்கிறான்” என்கிற பாடலை பாடினோம்.

2

சிங்கள ஊரான மத்துகமவில் கடை வைத்திருக்கிற அப்பா அந்தவருடம் தேர்தல் சமயம்பார்த்து கடையைச் சித்தப்பாக்களிடம் ஒப்படைத்து விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வநதார். வளமையை விட இந்த தடவை அவர் நெடு நாட்களாகத்ரூரில் தங்கி இருந்தார். தமிழருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் மத்துகம கடையை கைவிட்டு விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வந்துவிடும்படி சித்தப்பாக்களிடம் அப்பா வலியுறுத்திக் கூறியிருந்தார். களுத்துறை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்க்காக காரில் ஏறும்போது 'பணம் போனால் பணம் வரும். உயிர் போனால் போனதுதான். ' என சித்தப்பாக்களைப் பார்த்துக் கூறியபடி கண்களைத்

துடைத்துக் கொண்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

அப்பாவின் கருத்துப்படி ஜினதாச மாமா மாதிரி புதுப் பணக்காரர்களான சிங்கள வர்த்தகர்களும் ஆங்கிலத்தில் ஏ, பீ, சீ, டி கூடத் தெரியாமால் ஆசிரியரான பெடியளும் இளம் பிக்குகளும்தான் அந்தநாட்களில் தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியும் தேர்தலில் பண்டாரநாயக்க கட்சியை வெற்றி பெற வைத்துவிடுவார்கள் என்று அப்பா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பண்டார நாயக்க வென்றால் சிங்களப் பகுதிகளில் தமிழருக்கு எதிரான இனக் கலவரம் வரலாம் என்கிற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. வேலை இல்லாத நேரங்களில் எமது கடைவாசலிலே

பீடி புகைத்தபடி குந்தியிருக்கிற முனியாண்டி மாமாவும் தேர்தல் முடிய கலவரம் வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். மூடை தூக்கும் தொழிளாளியான முனியாண்டி மாமா இந்திய தமிழர். மத்துகமவில் சண்டியன் முனியாண்டி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நிறைய சிங்கள நண்பர்கள் இருந்தார்கள்.

'சிங்கள்வன் அடிச்சா நீங்கள் யாழ்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் ஓடுவீங்க, நாங்கள் எங்க முதலாளி ஓடிறது. ரப்பர் காட்டுக்கிளநிண்டு சண்டை பிடிச்சுச் சாகவேண்டியதுதான். ' என்று முனியாண்டி மாமா சொல்வார். எதற்க்கும் அஞ்சாத சண்டியரான அவரே அப்படிச் சொல்வது எனக்கு அச்சத்தை ஊட்டியது.

'ஏன் நீங்களும் யாழ்ப்பாணம் வரவேண்டியதுதானே ' என்று சித்தப்பாக்கள் சொல்வார்கள்.

'அங்க வந்தா நீங்களும் எங்களை தோட்டக் காட்டான் பறையன் என்று தள்ளித்தான் வைப்பீங்க. வகுத்து வலியை நம்பினாலும் வடக்கத்தயானை நம்பேலாது என்பீங்க. தேத்தண்ணிக் கடைக்குப் போனாலும் வெளியில் நிண்டு கறள் பிடிச்ச மூக்குப்பேணியிலதான் தேத்தண்ணி குடிக்கவேணும். ' என்பார்.

'அதெல்லாம் அந்தக்காலம் முனியாண்டி ' என்று சித்தப்பாக்கள் சொல்வார்கள்.

'ஐயோ வேண்டாமப்பா யாழ்ப்பாணம் ' என பெரிய கும்பிடு போடுவான் முனியாண்டி.

இத்தகைய சூழலில்தான் மத்துகமவில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா நெடுந்தீவுக்கு வந்தார். அப்பாவின் நண்பர்களும் வாடிக்கையாளர்களுமான பல சிங்களவர்கள் கடைக்கு வந்து 'நாங்க இருக்கிரதுதானே ' என்று அப்பாவுக்குத் தைரியம் சொன்னார்கள். அப்பா அவர்கள் நல்ல சிங்களவர்கள் என்றார். அவங்க ஒன்றும் ஜினதாச மாதிரிப் புதுசா பணத்தைக் கண்ட சிங்களவரல்ல அவங்க பரம்பரைப் பணக்காரர், கிராமத்துச் சனங்கள் என்று அப்பா சொன்னார். இந்த புதுப் பணக்காரர்கள் என்கிற வார்த்தையை முன்னமே கேட்டிருக்கிறேன். ஊரில் ஒருமுறை கிழவி ஒருத்தி எதற்கோ கோபப் பட்டு அப்பாவை 'புதுப் பணக்காரன் ' என்று திட்டினாள். அது பற்றி அம்மாவிடம் கேட்டேன். அப்பாவும் சித்தப்பாக்களும் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லவென்றும் முதலில் அவர்கள் ஒரு இந்தியச் செட்டியாரின் கடையில் கூலிவேலை செய்ததாகவும் தன்னைக் கலியாணம் கட்டின பிறகுதான் அப்பாவுக்கும் சித்தப்பாக்களுக்கும் பணம் எல்லாம் வந்தது என்றும் அம்மா விளக்கம் சொன்னார்.

அதன்பின் நான் மத்துகமவுக்குத் திரும்பிப் போவதை வீட்டில் யாருமே விரும்பவில்லை. எனது கனவுகளின் நகரமாக இருந்த மத்துகம, தூரத்தில் மாலை வெய்யிலில் பொன்னாக ஒளிரும் அரசமரங்களின் பின்னணியில் அடிவானில் எழுதப் பட்ட கவிதைகள் போன்ற விகாரைகளோடும் குன்றுகளிடையில் எப்போதும் இனிய சிங்களக் கிராமியப் பாடல்களும் அல்லி தாமரைப் பூக்களின் கமழ்வுமாக நீழும் மரகத நெல் வயல்களோடும் பால் வடியும் ரப்பர் மரங்களின்கீழ் தங்கள் மாழாத சோகங்களை எல்லாம் புதைத்துவிட்டு பால் வாளிகளின் சுமை மறக்க இந்தியாவில் இருந்து சீதனமாகக் கொண்டு வந்த இனிய பாடல்களை ரீங்காரம் செய்யும் அழகிய பெண்களோடும் எனது அடி மனதுள் புதையுண்டுபோனது. வகுப்புத் தோழர்களையும் தோழியர்களையும் ஒரே நாளில் இழந்துபோனேன். வண்டு விழிகள் துரு துருக்கும் சின்னப் பெண்ணாண ஜெயமங்களத்தையும் 'எண்ட வாப்ப மிட்டாய் வித்தும் எனக்கெண்டால் மிட்டாய் சாப்பிடக் கிடைக்காது ' என ஏங்கும் ஏழை மிட்டாய் வியாபாரியின் மகனான முகைதீனையும் கொய்யாயோ, ரம்புட்டானோ, ஜம்புவோ, மங்குஸ்தானோ மலைக் காட்டுக்குள் எது பழுத்தாலும் அது பறிக்க என்னைத் தப்பாமல் அழைத்துச் செல்லும் ஜினதாச மாமாவின் மகனான ஜெயசூரியாவையும் மகன் டாகடராக வேண்டுமென்று கனவுகாணும் பெற்றோருக்கு ஒயாமல் அஞ்சியபடியே எங்களுடனும் திரியும் யாழ்ப்பானத்து அதிகாரி ஒருவரின் மகனான சீவரத்தினத்தையும் பிரிந்தது நெடுநாட்களாக என்னைக் கலவரப் படுத்தியது. அழகிய மலை மகளான ஜெயமங்களம் எனது சின்ன இதயத்துக்குள் இனம் புரியாத கனவுகளை விதைத்தவள். அவளது அப்பா ரப்பர் தோட்டமொன்றில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். திடாரென சில நாட்கள் அவள் வகுப்புகளுக்கு வரவில்லை. பள்ளிக்கூடம் மாறி விட்டாளோ என நான் கவலைப் பட்டுக்கொன்டிருந்தேன். அந்தச் சின்ன வயதிலேயே அவள் பூப்பெய்திவிட்டாள். 'ஜெய மங்களம் கொஞ்ச நாளைக்கு வகுப்புகளுக்கு வரமாட்டாள். பெட்டை வெடிச்சிட்டுது ' என ஆசிரியர்கள் கிசு கிசுத்ததை நாம் கேட்டோம். பூப்பெய்துவதைப் பற்றி முழுமையாகத் தெரியா விட்டாலும் அந்தச் செய்தி எனது சின்ன மனசுக்குள் இளமையெனும் கஞ்சா விதைகளாய் முழைத்துக் கிறங்க வைத்தது. ஊருக்கு வந்த பின்னும் அவளை மறக்க முடிய வில்லை. ஒரு தேவதையாக லாம் ரீச்சர் விஞான பாடம் நடத்த வகுப்புகுள் காலடி எடுத்து வைக்கும் வரை ஜெயமங்களத்தின் நினைவு என்னை வாட்டி எடுத்தது. சின்ன்ப் பையகள் பெண்கள் என்றால் ஏதோ அரைகுறை மனிதன் என்றுதான் பெரியவர்கள் எல்லோரும் நினைத்தார்கள். நாம் சிறு பராயத்து முழு மனிதர்கள், மனுசிகள் என்பதையும் எமக்கு மனசும் உணற்ச்சிகளின் ஊற்ரான உடலும் இருக்கிறது என்பதை அப்பாவோ அம்மாவோ அல்லது அவர்களை ஒத்த பெரிய மனிதர்களோ ஒருபோதும் புரிந்து கொண்டதில்லை. அம்மாகூட அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அவர்கள் எல்லோரும் ஒன்றில் மறதி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது தமது இளமை நாட்களின் உண்மைகள் பலவற்றை மறைக்கிற பொய்யர்களாகவோ இருந்தார்கள்.

மத்துகமவால் புறப்பட்டபோதே என்னை நெடுந்தீவில் படிக்க வைக்க அப்பா தீர்மானித்து விட்டார். அம்மா அதற்குச் சம்மதிக்கவில்லை. நெடுந்தீவில் ஆங்கிலமும் விஞ்ஞான படங்களும் கற்பிக்க ஆசிரியர் இல்லை என அவள் கூறினாள். நான் யாழ்ப்பாணத்தில் படித்து ஒரு எம்.ஏ படதாரியாகவேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம். ' பெரியவன் யாழ்பாணத்தில போடிங்கில் இருந்து படிக்கட்டும் ' என அம்மா ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்தாள். 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே ' என்கிற, எங்கள் வீட்டில் குடும்பச் சண்டையை மூட்டுவதற்க்காகவே பாரதியாரல் திட்டமிட்டு எழுதப் பட்ட அந்தக் கவிதையை அந்த நாட்களில் மீண்டும் அப்பா அச்சுறுத்தும் தொனியில் உச்சாடனம் செய்யதமை தங்கையும் என்னையும் அச்சுறுத்தியது.

எனக்கு அப்போதெல்லாம் தாய்நாடு என்பது பக்கத்தில் அப்பா இருந்தால் நெடுந்தீவாகவும், அம்மா இருந்தால் உடுவிலாகவும், தமிழரசுக் கட்சிக்காரர்கள் இருந்தால் ஈழத் தமிழ்நாடாகவும் பள்ளியில் பாடங்கள் நடக்கும்போது இலங்கைத் தீவாகவும் பல்வேறு பட்டுக் கொண்டிருந்தது.

எனக்கு வீட்டை விட்டு தனிய யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை என்கிறதை அப்பா அறிந்து வைத்திருந்தார். பிரச்சினைகளின்போது மிரட்டுவதற்க்கும் அடிப்பதற்கும் தவிர வேறு எதற்குமே என்னை அழைத்திருக்காத அப்பா முதன் முதலாக என்னை அழைத்துக் கருத்துக் கேட்டார். அப்பா திருந்திவிட்டார் என எனக்குப் பெருமையாக இருந்தது.

'உனக்கு அப்பா, அம்மா, தங்கச்சியோட வீட்டில இருந்து படிக்க விருப்பமா ? இல்ல யாழ்பாணம்போய் தட்டத் தனிய போடிங்கில இருந்து படிக்க விருப்பமா ? ' என்று அப்பா கேட்டார்.

அந்த விடுமுறைக் காலம் முடிந்ததும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளியில் என்னை ஏழாம் வகுப்பில் சேர்த்தார்கள். மூன்று மைல் தூரம் தள்ளியிருந்த அந்தப் பள்ளிக்குப் போவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அப்பா எனக்குப் புது பைசிக்கிள் வாங்கிவந்தார். எனக்கோ தலை கால் புரியாத மகிழ்ச்சி. அப்பா உண்மையாகவே திருந்திவிட்டார் என நம்பத் தொடங்கினேன். அப்பா கண்ணாடிப் பிறேம் போட்ட மூன்று படங்கள் வாங்கிவந்தார். அவை சுவாமிப் படங்கள் என நினைத்தேன். ஆனால் அவை சுவாமிப் படங்களல்ல. படத்தில் ஒல்லியாக நடு உச்சி வகுத்திருந்தவர் தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் என்பதைப் பார்த்த உடனேயே கண்டு பிடித்துவிட்டேன். அவர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறார். மீசையும் சிரிப்புமாக இருந்த குண்டு மனிதர் அண்ணாத்துரை என்பதும் தெரிந்தது. மத்துகமவில் கிருபாகரன் அண்ணா அவரது படம் போட்ட புத்தகங்களை எனக்குக் காட்டி யிருக்கிறார். இந்தியாவில் பிஏ படித்துவிட்டு வந்த சின்னத்தம்பி மாஸ்டார் வீட்டிலும் அன்னாதுரையின் படம் இருந்தது. எனக்கு தொப்பிக் காரரை மட்டும் தெரியவில்லை தயங்கித் தயங்கி அப்பாவிடம் கேட்டேன். 'நேதாஜி ' என்று சொன்னார். 'அவர் பெயரைக் கேட்டாலே வெள்ளைக்காரக்கு வயிற்றைக் கலக்கும் ' எனவும் சொன்னார். 'நீ பெரியவனாக வந்தபிறகு உன்ர பெயரைக் கேட்டு எங்களை அடிக்கிற சிங்களவன் நடுங்க வேண்டும் '

அந்த வருடம் ஊருக்கு வந்ததுமே அப்பா வீட்டில் அவசரம் அவசரமாகக் கக்கூஸ் கட்டினார். கேட்டால் தேர்தல் வருகிறதாகச் சொன்னார்கள். அப்போது தேர்தலுக்கும் கக்கூசுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கர கரவென அடித்தொண்டையால் கூட்டங்களில் பேசிய தலைவர்கள் தலைவிகள் எல்லாம் குதிரை வண்டியில் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டார்கள். ஊரில் எல்லோரும் அப்பாவை அண்ணன் என்றோ தம்பி என்றோ மாமன் மச்சான் என்றோ முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள். அல்லது ஐயா என்பார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் தேர்தல் கூட்டங்களில் பேச வந்தவர்களும் தலைவர்களும் மத்துகம நகரத்துச் சிங்களவர்களைப் போல முதலாளி முதலாளி என்று அப்பாவுடன் பேசியதும் மூத்திரம் பெய்வதற்குக்கூட அவர்கள் புதிதாகக் கட்டிய கக்கூசுக்குப் போய் வந்ததும் விநோதமாக இருந்தது.

சிவப்பு மஞ்சள் பச்சை அடுக்கிய மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி 'அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம், தூக்குமேடை பஞ்சுமெத்தை, துப்பாக்கிக் குண்டு விழையாட்டுப் பந்து. ' என்று கோசம் போட்டபடி ஊர்த் தெருக்களிலெல்லாம் போன ஊர்வலங்களை அந்த தேர்தல் முழுவதும் வேடிக்கை பார்த்தோம். ஊர்வலங்களின் முன்பாக சிலர் குதிரைகளில் போனார்கள். எல்லாம் நெடுந்தீவுக் குதிரைகள். எங்கள் வீட்டில் தமிழரசுக் கட்சிக் கொடிகள் இறைந்து கிடந்தது. பல மாலைப் பொழுதுகளில் விழையாடுவதற்குப் பதிலாக வகுப்புத் தோழர்களும் வேறு சின்னப் பையன்களுமாகச் சேர்ந்துக் கொண்டு மைதானத்தைச் சுற்றி சுற்றி ஊர்வலம் போனோம். ஊர்வலத்துக்கான மூவர்ணக் கொடிகளை வீட்டில் இருந்து கச்சிதமாகத் திருடிக் கொண்டு வருவது எனது பொறுப்பாக இருந்தது. ஊர்வலம் முடிய பெரியவர்கள் செய்வது போல நாமும் பொதுக் கூட்டம் வைத்தோம். மேடையில் பூவரசம் தடியை நாட்டி அதனையே ஒலிவாங்கியாகப் பாவித்து நாங்களும் முழங்கினோம். திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கூட்டத்தில் பேச வருகிற மசூர் மெளலானாவையும் இளஞ்செளியனையும் தவிர வேறு முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் அதுவரை எனது பள்ளித் தோழர்கள் பார்த்ததும் கிடையாது. முஸ்லிம்கள் மிட்டாய் விற்கிற ஏழை வியாபாரிகள் என்றும் மலையகத் தமிழர்கள் பீடி குடிப்பார்கள் என்றும் நான் அவர்களுக்குச் சொல்வேன். தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் பேசப் படுகிற

வசனங்கள் எங்களில் பலருக்கும் தலை கீழ்ப் பாடம். தமிழரசுக் கட்சி மேடைப் பேச்சாளர்களைப் போலவே அடித் தொண்டையால் 'உயிர் போனாலும் தமிழர்களின் தலை நகரான திருகோணமலையையும், மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பையும் சிங்களக் குடியேற்ற வாசிகளிடம் பறிகொடுக்க மாட்டோம். ' என்றும் 'முஸ்லிம்களும் நாங்களும் இணைபிரியாத சகோதரங்கள், சிங்களவர் எங்களைப் பிரித்தாள விடமாட்டோம் ' என்றும் 'மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழர்களின் குடி உரிமைகளைப் பறிக்காதே ' என்றும் தவறாமல் முழக்கமிடுவோம்.

ஒருமுறை வீடு வந்திருந்த தமிழ்த் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இனிமேல் தமிழர்கள் சிங்கள ஊர்களில் வியாபாரமோ தொழில்களோ செய்ய இயலாது என்று அப்பா அவர்களிடம் சொன்னார். நெடுந்தீவிலும் மன்னாரிலும் கடை திறக்கப் போவதாக அப்பா சொன்னது எனக்கு இரசிக்கவில்லை. நெடுந்தீவில் கடை வைத்தால் அப்பா ஊரோடு இருந்து விடுவார் என்று அச்சமாக இருந்தது. ஆனால் அப்பா மன்னார்க் கடையில் இருப்பார் நெடுந்தீவுக் கடையில் சின்னச் சித்தப்பாதான் இருப்பார் என்று அம்மா சொன்னாள்.

3.

எமது ஊருக்கு லாம் மாஸ்டரும் மனைவியும் வந்த அன்று மத்தியானம் வரை பாடசாலைப் பகிஸ்க்கரிப்பு தொடர்ந்தது. நண்பர்களும் நானும் வகுப்புகளுக்குப் போகாமல் வெளியிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவும் அம்மாவும் தமிழரசுக் கட்சி என்பதால் எனக்கு வீட்டில் திட்டு விழாது. எனினும் பாடசாலைக்குப் புதிசு. ஆசிரியர்கள் என்ன சொல்வார்கள் என்பது தெரியவில்லை. தலைமை ஆசிரியரான நவரட்ணசிங்கம் மாஸ்டருக்கு அரசியல் எல்லாம் பிடிக்காது. அவர் போட்டிருந்த கண்ணாடியால்

பின்பக்கம் நடக்கும் காட்சிகளைக்கூடப் பார்க்கமுடியும் என மாணவர்கள் நம்பினார்கள். எப்போதும் கண்ணாடியில் ஒரு கையும் பிரம்பில் மறு கையுமாகத் திரியும் அவர் எப்டியோ அரசாங்கத்தின் உதவிகளை எல்லாம் பெற்று பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருந்தார். மாணவர்களைச் சற்று சிரமப் படுத்தினாலும் பள்ளிக் கூட வளாகத்தை பாலைவனப் பசும் சோலையாக வைத்திருந்தார். எப்படியோ நமது பள்ளிக்கு சென்னையில் படித்த திறமையான உடற்பயிற்ச்சி ஆசிரியர் ஒருவரை தேடிக் கொண்டுவந்தார்.

அதைத் தொடர்ந்து கரபந்தாட்டத்தில் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளி யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தபோது ஊரில் எல்லோருமே பெருமைப் பட்டார்கள். வெளியூர்க் காரராக இருந்தும் நெடுந்தீவின் முன்னேற்றத்தில் நவரட்ணசிங்கம் மாஸ்டர் காட்டிய அக்கறை எல்லோராலும் பாராட்டப் பட்டது. அதனால் அவர் என்ன செய்தாலும் ஊரில் கண்டு கொள்வதில்லை. அவரைப் பற்றி மறைவாகக் கிசு கிசு பேசுகிறவர்கள்கூட அவர்மீது வன்மம் பராட்டி நான் கண்டதில்லை.

ஊரில் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாக இருந்தபோதும் தமிழரசுக் கட்சி அரசிலை ஏற்றுக்கொள்ளாத நவரத்தினசிங்கம் மாஸ்டர்மீது அவர்கள் அதீத மதிப்பு வைத்திருந்தார்கள். அகிம்சைப் போராட்டம் பற்றி பேசிவிட்டு கருத்து வேறுபட்டவர்களை எல்லாம் கழை எடுக்கப்பட வேண்டிய துரோகிகள் என்று திட்டுகிற தமிழரசுக் கட்சியின் தாடிக்காரப் பேச்சாளர்கள்கூட நவரட்ணசிங்கம் மாஸ்டரைத் திட்டுவது கிடையாது. இது எப்பவுமே எனக்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.

அன்று மத்திய இடைவேளை மணி அடித்த பின்னர்தான் தமிழரசுக் கட்சிக் காரர்கள் கலைந்து போனார்கள். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் தெருவில் விழையாடிக் கொண்டுமிருந்தோம். ஊரில் நல்லதண்ணீர் வளங்கும் கந்தையா லாரி ததும்பிச் சிந்தும் தண்ணீரும் பூம் பூம் சத்தமுமாகத் தெருவில் வந்துபோன ஒவ்வொருதடவையும் அதனை வழி மறித்தோம். அதன் சாரதியான லாறிக் கந்தையருக்கு ஒவ்வொரு தடவையும் துண்டுப் பிரசுரம் கொடுத்து 'தமிழரசுக் கட்சிக்கு ஜே ' என்று கோசம் போடுமாறு வற்புறுத்தினோம். அவரும் சிரித்தபடியே ஒவ்வொரு தடவையும் லாரியை நிறுத்தி தமிழரசுக் கட்சிக்கு ஜே எனக் கோசம் போட்டு விட்டு கைகளை அசைத்தபடியே நம்மைக் கடந்து போனார். தோழர்கள் தடுத்தும் கேளாமல் வழியில் வந்த தபால்காரரை வழிமறித்தபோது பிரச்சினையாகி விட்டது. தமிழரசுக் கட்சிக்கு ஜே என்று கோசம்போட அவர் மறுத்து விட்டார். நான் அரசாங்கம். என்னை மறித்தால் பொலிஸ் வரும் என அவர் மிரட்டியபோது உண்மையிலேயே பயந்து போனோம். அதன் பின்னர்தான் போவோர் வருவோரை வழிமறிப்பதைக் கைவிட்டு விட்டு தெரு மாடுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பினோம்.

தொம் தொம்மென பனம் பழம் விழுகிற சத்தத்தைக் கேட்டதும் முந்திக் கொண்டுபோய் அவற்றைத் தின்பதற்காக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மாடுகளை ஏமாற்றுவது வேடிக்கையாக இருந்தது. ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் எங்காவது எறிய வேண்டியதுதான் தாமதம் கல்விழுந்த திசைக்கு மாடுகள் ஓடிச் செல்லும். அவற்றுள் பெரிய மாட்டுக்கு பண்டார நாயக்க என பெயர் வைத்தேன். வேறொரு மாட்டுக்கு நான் வைத்தபெயர் ஜினதாச மாமா. கல் விழும் சத்தத்தைக் கேட்டு முந்தி அடித்து ஒடிவந்து ஏமாந்து

போகிற பெரிய மாட்டைப் பார்த்து நாமெல்லாம் பண்டாரநாயக்காவை ஏமாற்றிவிட்டோம் பண்டார நாயக்க தோற்றுப்போனார் என கோசமிட்டுக்

கும்மாளம் அடித்தோம்.

மதியம் சாலை மறியல் செய்த தமிழரசுக் காரர்கள் கலைந்து போனதும் என்ன செய்வதென்று தோழர்களுக்கும் எனக்கும் புரியவில்லை. சிறு தயக்கத்துக்குப் பிறகு நாமெல்லோரும் பளிக்கூடத்துக்குப் போனோம். அன்று மாலை வகுப்புகள் நடக்கவில்லை. காலையில் பின்பக்கத்து வேலி பாய்ந்து பள்ளிக்கு வந்துவிட்ட மாணவர்கள் 'உங்களுக்கு நல்ல பிரப்பம் பழம் கிடைக்கப் போகிறது ' என்று நம்மை மிரட்டினார்கள். இந்தியாவில் இருந்து புதிதாக இரண்டு ஆசிரியர்கள் வந்திருப் பதாகச் சொல்லி அவர்களைத் தாங்கள் பார்த்துவிட்டதாகவும் பெருமை அடித்துக் கொண்டார்கள். நல்ல வடிவான ரீச்சர் வந்திருக்கிறதாக வேறு சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டினார்கள்.

திடாரென மாணவர்களைப் பாடசாலை முன்றலுக்கு அழைக்கும் தாளத்தில் மணி அடித்த போது எனக்குப் பயமாக இருந்தது. வீட்டுக்கு ஓடி விடலாமா என்றுகூட எண்ணிணேன். மாணவர்கள் எல்லோரும் வாதுமை மரங்களும் பூங்கன்றுகளும் சூழ்ந்த பாடசாலை முன்றலில் கூடினார்கள். மேடையில் நவரட்ணசிங்கம் மாஸ்டர் கண்ணாடியைச் சரிசெய்தபடியே பிரம்போடு நின்றார். காலையில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மேடையில் வைத்துப் பகீரங்க பிரம்படி கிடைக்கப் போகிறது என எண்ணி நாங்கள் அச்சமடைந்தோம்.

'தூக்குமேடை பஞ்சு மெத்தை ' என யாரோ துணிச்சலான பெரிய வகுப்பு மாணவன் ஒருவன் உரத்துச் சொன்னது கேட்டது. அதைத் தொடர்ந்து மெல்லிய சிரிப்பலையும் அசட்டுத் துணிச்சலும் பரவியது. நவரட்ண சிங்கம் மாஸ்டர் அன்று எங்கள் யாருக்கும் அடிக்கவில்லை. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் கடுமையாகச் சொன்னார். காலை வகுப்புகளுக்கு வராதவர்கள் ஒன்று கூடல் முடிந்ததும் பாடசாலைப் பூந்தோட்டத்துக்கு தண்ணீர் உற்றிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற போது சற்று நிம்மதியாக இருந்தது. பின்னர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் விஞ்ஞானம் கற்பிக்கவும் இந்தியாவில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் வந்திருப்பதாகச் சொன்னார். லாம் மாஸ்டரும் அவரது மனைவியான லாம் ரீச்சரும் மேடைக்கு வந்தபோது எல்லொருமே பிரமித்துப் போனோம். திருமதி லாம் ரீச்சரின் அழகை வர்ணிக்க ஒரு வேழை மலையாளத்தில் வார்த்தைகள் இருக்கக்கூடும். காற்று வெளியில் தீபம்போல அவரது முகத்தில் அழகு அசைந்தது. அப்படி நீரோட்டம்போல எங்களை எல்லாம் அடித்துக் கொண்டுபோய் திக்குமுக்காட வைக்கிற அழகை மீண்டும் என் வாழ்நாளில் எதிர் கொண்டதில்லை. பின்னர் எனது வாலிபம் முழுக்கச் சந்தித்த தேவதைகளுக்கு எல்லாம் எங்காவது ஒரு அசப்பில் லாம் ரீச்சரின் சாயல் இருந்தது.

நவரட்ணசிங்கம் மாஸ்டர் புதிய ஆசிரியர்களை அறிமுகப் படுத்திய போது காலைச் சம்பவங்கள் பற்றியும் எதாவது பேசுவார் என மாணவர்கள் எல்லோருமே எதிர்பார்த்தோம். தனது பேச்சின் இடையில் காலையில் பாடசாலை முன்றலில் மறியல் செய்த தமிழரசுக் கட்டிசிக்காரரை நையாண்டி செய்தார். சுத்தத் தமிழர் சுத்தச் சிங்களவர்ரென்பதெல்லாம் அரசியல் வாதிகள் பேசுகிற சுத்தப் பொய் என்றார். இலங்கைத் தமிழர்களான நாம் பாதி மலையாளிகள் என்றவர் நமது பாடசாலைக்குப் புதிய ஆசிரியர்களாக வந்திருக்கிற லாம் தம்பதிகள் முழு மலையாளிகள் என்றார். நவரட்ணசிங்கம் மாஸ்டரின் தமிழர் பற்றிய கோட்பாட்டைச் சின்னத்தம்பி மாஸ்டர் இரசிக்க வில்லை என்பதை அடிக்கடி கோணிப் பிதுங்கிய அவரது உதடுகள் காட்டியது. அதன் பின்னர் காலையில் வகுப்புக்கு மட்டம் போட்ட தோழர்களோடு பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோது நவரட்ணசிங்கம் மாஸ்டர் என்னை மட்டும் அலுவலகத்துக்கு அழைத்தார். மனசு துணுக்குற்றுப்போய் அடிவிழப் போகிறது என்கிற அச்சத்தோடு ஒரு பூனைபோல மெதுவாகவே போனேன்.

'தந்திக்காரனை வேலை செய்யவிடாமல் தடுத்தாயா ? உன்னைப் பிடிக்க யாழ்பாணத்தில் இருந்து பொலிஸ் வரப்போகுது என்றார். ' என அவர் உரப்பிய போதே எனது கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது. பின்னர் மெதுவாக இதுதான் கடைசி எச்சரிக்கை என்ற படி என்னை அருகே அழைத்தார். 'இனி இப்படியெல்லாம் நடக்கதே ' என்றார். அவர் எனது கால்களைத் தடவியபடி அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டபோது இனம் புரியாத ஆச்சரியத்தில் துணுக்குற்றுப் போனேன்.

4

லாம் மாஸ்டரும் லாம் ரீச்சரும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளிக்கு வந்தபோது நானும்கூட புதிய மாணவன்தான். அம்மாவின் பிறந்த ஊரான உடுவிலில்தான் எனக்கும் தங்கைக்கும் ஏடு தொடங்கினார்கள். பாதங்களிலும் கற்சட்டை விழிம்புகளிலும் தங்கையின் பாவாடை ஓரங்களிலும் செம்மண் புழுதி கவிதை எழுதுகிற அந்த ஊரில்தான் பாலர் வகுப்பெல்லாம் படித்தேன். அடிக்கடி சண்டை போடுகிற அப்பாவினாலும் அம்மாவினாலும் மகிழ்ச்சியான அந்த பாலப் பருவ நாட்களை முற்றாக எங்களிடமிருந்து பறித்துவிட முடியவில்லை. இன்றும்கூட சிவப்பு மண், சிவப்புக் காற்று, சிவப்பு மழை வெள்ளம், சிவப்புச் சேறு என உடுவிலில் வாழ்ந்த சிவப்பு நாட்கள் அழியாத மனச் சுவர் ஓவியமாக என்னுள் உறைகிறது.

செக்கச் சிவந்த அந்த நாட்களில் 'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே ' என்கிற கவிதையை முழங்கியபடியே அப்பா அம்மாவை அடித்துத் துவைப்பார். 'வெளிக்கிடடி நெடுந்தீவுக்கு ' என்கிற அவரது கூச்சலில் வீடு கிழியும். 'எனக்குப் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் உடுவில்தான் ' என்றபடி அம்மா ஒலமிடுவாள். இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருந்து அழுவாள். திடாரென விழித்தெழுந்து கோபத்தோடு உறுதியாக 'எனது பிணம்தான் உடுவிலை விட்டு நெடுந்தீவுக்கு வரும் ' என அம்மா கூச்சலிடுவாள். அப்போதெல்லாம் அவளது முகம் உப்பி விழி சிவந்து பிதுங்கி அச்சம் தரும். அப்பா செத்துப் போகவேணும் என்று நானும் தங்கையும் வயிரவசாமிக்கு நேத்தி வைத்தபடி சத்தமில்லாமல் அழுவோம். அதைவிட வேறு மர்க்கம் தெரியாமல் நடுங்கிக் கிடப்போம். அந்த நாட்களில் இருந்தே தங்கையும் நானும் அப்பாவை வெறுக்கத் தொடங்கினோம். அதன்பின் எனது வாழ்வில் அவரைச் சில சமயங்கள் அப்பாவை வியந்திருக்கிறேன். வேறு சில தரணங்களில் நன்றியுடன் நினைந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதுமே அவரை நேசித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவரும் 'நான் முதுமை அடைந்ததும் திருப்பித் தந்தால் போதும் ' என்றபடி நமக்குக் கடன் தருகிற ஒரு கடை முதலாளிபோலவே எப்போதும் இருந்தார்.

உண்மையிலேயே அவர் கடை முதலாளிதான். மத்துகம என்கிற சிங்கள ஊரில் அவருக்கு புகையிலை, சுருட்டு மொத்த வியாபாரமும் சாய்ப்புச் சாமான்கள் சில்லறை வியாபாரமும் செய்கிற கடை இருந்தது. . 'சொப் ' என்கிற ஆங்கிலச் சொல்லைத்தான் சாய்ப்பு என தமிழில் சொல்கிறார்கள் என பெரிய சித்தப்பா ஒருமுறை சொன்னார்.

மத்துகம இரப்பர் தோட்டங்களால் ஆசீர் வதிக்கப் பட்ட அல்லது சபிக்கப் பட்ட ஊர். வானத்தை மறைக்கும் பசிய குன்றுகளின் பின்னணியில் பிலாச்சுளைகள் தேடித் தின்னும் மந்திகளின் காடுகளும் மீன்கள் துழும் துழுமென ஓயாமல் துள்ளி விழும் மரகத நெல் வயல்களும் நீர் நிலைகளில் காலையில் சிவப்பும் மாலையில் வெண்மையாகவும் பூத்துக் கமளும் கமழும் தாமரை அல்லி கொடிகளும் வீடுகளைச் சூழ்ந்த வாழைத் தோட்டங்களுமாக எழில் கொஞ்சும் அந்த அழகிய ஊர்களை நினைக்கிற போதெல்லாம் புகழ் பூத்த சிங்களக் கிராமியக் கவிஞர்கள் அதனை எப்படிப் பாடி யிருக்கிறார்கள் என்று அறிகிற ஆர்வம் மனசில் நிறையும். நானும் எனது சிங்கழத் தோழர்களும் பச்சை நீர்ச் செடிகளை ஒதுக்கி ஓடைகளில் மீன்குஞ்சுகளை பிடிக்க முயன்று தோற்றுப்பொவதில் மகிழ்வோம். 'கவனம் குழந்தைகளே மீன்களைக் கொல்லிப்

போடாதீர்கள் ' என்று சொன்னபடி மண்வெட்டிகளோடோ கறிப் பல்லாக்காய்களோடோ சிங்களக் கிராம வாசிகள் எங்களைக் கடந்து போவார்கள். எப்பொழுதுமே வயல்களில் வேலை செய்து, அல்லது ஓடைகளில், மலை அருவிகளில், கிணறுகளில் ஓயாமல் நீராடியும் மகிழ்வது என வாழும் சிங்களக் கிராமத்துத் தேவதைகள் தமரைப் பூக்களோடு வருவார்கள். வழியில் சந்தித்தால் கேளாமலே எனக்கு 'ஆயு போவன் ' என சிங்கள நல் வாழ்த்துக்கூறி ஒரு தாமரை மலராவது பரிசாகத் தருவார்கள். தொலைதூரத்தில் இருந்து வந்திருக்கும் தமிழ் சிறுவன் என்பதால் அவர்கள் என்மீது விசேட அன்பு காட்டினார்கள். ஒருமுறை நாங்கள் ஆமைக் குட்டி ஒன்றைப் பிடித்தோம். கைபட்டதுமே ஆமை கழுத்தையும் கால்களையும் உளே இழுத்து விடும். பின்னர் அதனைச் சேறில் எறிவதும் அது தலையையும் கால்களையும் வெளிப்படுத்தி ஓட முனைகிறபோது திரும்பப் பிடிப்பதுமாக விழையாடிக் கொண்டிருந்தோம். திடாரென நாலு புறங்களிலும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பார்த்தால் அந்த ஆமையை மீட்பதற்க்காக ஊர்ப் பெண்டுகள் 'ஐயோ பாவம் விட்டு விடுங்கள் விட்டுவிடுங்கள் ' என்றபடி பலர் எங்களை நோக்கி ஓடிவந்தார்கள். மத்துகம கிராமப் புறங்களில் நிமிர்ந்து பார்த்தால் வான் மறைய நிமிர்ந்த வரைகள் பச்சை. மலைக்காடுகளும் ரப்பர்த் தோடங்களும் பச்சை. தாமரை அல்லி இலைகள் போர்த்த ஏரிகளும் பச்சை. வயல் வெளிகள் பச்சை. வாழையும் மாவும் பலாவும் சூழ்ந்த வீட்டு வளவுகளும் பச்சை. மத்துகமவை நினைக்கும் போதெல்லாம் என் நினைவுகளில் அழியாத அந்த பச்சைக் காலத்துக்காக மனசு மீண்டும் ஏங்கும்.

அந்த நாட்களில் சிங்கள தேசிய வாதம் இனவாதமாகப் பலப்பட ஆரம்பித்திருந்தது. மத்துகம பிரதேசத்துச் சிங்கள கிராமங்களில் நான் எப்பவுமே கண்டிராத கோபக் காரச் சிங்களவர்கள் மத்துகம நகரத்தில் நாளும் பொழுதும் முழைத்துக் கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களின் இயல்புகளுக்கு மாறான எங்கிருந்தோ புதிதாக வந்து பெருகிய இந்த மனிதர்கள் என்னையும் அச்சுறுத்தினார்கள். சிங்கள ஆசிரியர்கள் சிலரே நெல் வயல்கள் சூழ்ந்த தங்கள் அழகிய கிராமங்களுக்கு மத்தியில் இருந்த குன்றுகளை வெள்ளையர்கள் பறித்து இரப்பர் தோட்டமாக்கி அங்கு இந்திய வம்சாவளித் தமிழர்களைத் தொழிலாளர்களாகக் குடி வைத்திருப்பதையும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தங்கள் ஊர்களில் பெரிய வர்தகர்களாக இருப்பதையும் எதிர்த்துப் வகுப்புகளில்கூடப் பேசினார்கள். தமிழருக்கு இந்தியா இருக்கு சிங்களவருக்கு இலங்கையை விட வேறு புகலிடம் இல்லை என்றார்கள்.

அப்பாவுக்கும் ஜினதாச மாமாவுக்கும் மோதல் ஆரம்பித்த பின்னரும்கூட ஜெயசூரியாவும் நானும் நன்பர்களாக இருந்தோம். எனினும் பள்ளிக்கூட மதிய உணவு இடைவேளைகளில் ஜெயசூரியாவும் அவனது சிங்கள நண்பர்களும் ஒரு தடிக்கு சோழ மன்னனன் எல்லாளன் என பெயர் சூட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று பின் நிலத்தில் போட்டு கால்களால் மிதிப்பாபார்கள். பதிலுக்கு அதே போன்ற ஒரு சடங்கை நானும் எனது தமிழ்த் தோழர்களும் செய்வோம். நாம் ஊர்வலமாக எடுத்துச் சென்று கால்களில் போட்டு மிதிக்கும் தடிக்கு துஸ்டகைமுனு என்ற சிங்கள அரசனின் பெயர் சூட்டி யிருந்தோம். சடங்குகள் போல தினசரி இடம்பெற்ற இந்த துஸ்ட கைமுனு எல்லாளன் யுத்தத்தின் பின்னர் நாங்கள் ஒன்றாகக் கூடி விழையாடினோம் என்பது சுவாரஸ்சியமான விடயமாகும். எல்லாளன் தர்ம நெறி தவறாதவன் என மகாவம்சத்தில் எழுதியிருக்கிறதாம். இடம்பெற்ற கடும் போரில் எல்லாளனைச் சதியாகவே துஸ்ட கைமுனு கொன்றானாம். அப்படித்தான் எனது தமிழ் ஆசிரியர்கள் சொல்லியிருந்தார்கள். சிங்கள ஆசிரியர்களது விளக்கமோ நேர் எதிராக இருந்தது. துஸ்ட கைமுனுவை சிங்கள இனத்தின் காவல் தெய்வமாகவே அவர்கள் கொண்டாடினார்கள்.

5

இலங்கையில் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்துக்கும் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களுக்கும் கரண கர்த்தா சிங்களவரான ஜினதாச மாமாதான் என அப்பா அடிக்கடி திட்டுவார். அந்த துண்டுப் பிரசுரத்தை ஜினதாச மாமாவுக்கு எழுதிக் கொடுத்தது குணவர்த்தன மாஸ்டர்தான் எனவும் அப்பா சொன்னார். குணவர்த்தன மாஸ்டார் புதிதாக எங்கள் பளிக்கு வந்த சிங்கள ஆசிரியர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் அப்பா கருதினார். இழைஞனான அவர் பார்க்க உயர் வகுப்பு மாணவனைப் போல இருப்பார். முன்னர் அடிக்கடி எங்கள் கடைக்குச் சாமான் வாங்க வருவார். ஜினதாச இஸ்ரோஸ் திறந்தபின் அவர் எங்கள் கடைக்கு வருவதில்லை. அவர் அடிக்கடி ஜினதாச மாமாவின் கடையில் சிங்களப் பேப்பர் படித்தபடி ஆவேசமாக எதாவது பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். எப்போதும் போலவே அவரைக் காணும்போதெல்லாம் நான் குட் மோனிங் சேர் சொல்வேன் . ஆனால் அவர் மாறிப்போயிருந்தார்.

தேனீர்க் கடையும் பேக்கரியும் வைத்திருந்த ஜினதாசமாமா சில மாதங்களுக்கு முன்னர்தான் எங்கள் கடைக்கு எதிரில் போட்டியாக சாப்புச் சாமான்கள் விற்க்கும் கடை ஆரம்பித்திருந்தார். கடை திறந்தபோது தெரு நீழ நீலக் கொடிகள் தோரணங்கள் எல்லாம் கட்டி கூட்டம் வைத்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் கடைக்கு முன் நீலக் கொடி தோறணங்கள் பறக்கவிட அப்பா அனுமதிக்கவில்லை. சண்டியரான முனியாண்டி மாமாவை ஏவிவிட்டு அதனைத் தடுத்துவிட்டார்.

ஊரில் தமிழர்கள் கூடும்போது 'அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் ' என்று கோசம் போடுவதுபோல ஜினதாச மாமாவின் கடைத் திறப்பு விழாவில் கூடியிருந்த சிங்களவர்கள் 'அப்பே ரட்ட, அப்பே ஆண்டுவ ' எனக் கோசம் போட்டார்கள். அதற்கு 'எங்கள் நாடு எங்கள் ஆட்சி ' என்று கருத்தாம். கிருபாகரன் அண்ணாதான் என்னிடம் கோபத்தோடு சொன்னார். 'தமிழர்களிடம் சிங்களவர்கள் வாலாட்ட முடியாது. தமிழ்நாடு கொதிச்சு எழும்பினால் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது ' என கிருபாகரன் அண்ணா சொன்னார். 'ஜினதாச மாமாவுக்கும் பண்டார நாயக்காவுக்கும் எதிராக அவர் ஒரு கட்டுரை எழுதி வைத்திருந்தார். அதனை அறிஞர் அண்ணாத் துரைக்கு அனுப்பப் போவதாகவும் 'என்ன நடக்கப் போகிறதென்று இருந்து பார் ' என்றும் சொன்னபோது அவர் மிகவும் உணர்ச்சி வசப் பட்டார்.

ஜினதாச மாமாவின் கடைத் திறப்புவிழா தேர்தல் கூட்டம் போல நடை பெற்றது. கடைத் திறப்புக்கு நிறையப் பொலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள். எங்கள் கடை வாசலில் நின்ற பொலிஸ்காரர்களோடு அப்பா பேசினார். அவர்களுக்கு சோடா கொடுக்கும்படி கடைச் சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார். ஜினதாச மாமாவின் கடையைத் திறந்துவைக்க பண்டாரநாயக்க ஊர்வலம்மாக வந்துகொண்டிருப்பதாக அப்பாவிடம் பொலிஸ்காரர்கள் சொன்னார்கள். அதுவரை ஜினதாசா அண்டப் புழுகன் அவன்ர கடைத் திறப்புக்கெல்லாம் பண்டரநாயக்க வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த அப்பா கொஞ்சம் கலவரமடைந்தார்.

முன்னர் எல்லாம் ஜினதாசமாமா எங்கள் அப்பாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான். எனக்குச் சின்ன வயதாய் இருக்கையில் அப்பாவோடு யாழ்ப்பாணம் எல்லாம் வந்து வீட்டிலும் தங்கிப் போயிருக்கிறார். அவர்தான் முதன்முதலாக எங்களுக்கு மங்குஸ்தான் பழம் கொண்டுவந்து தந்தவர். நெடுநாட்களுக்கு நானும் தங்கையும் மங்குஸ்தான் பழத்தை 'சிங்கள மாமா தந்த பழம் ' என்றுதான் குறிப்பிட்டோம். அம்மா மங்குஸ்தான் கோதுகளை எல்லாம் வயிற்று வலிக்கு நல்ல மருந்து என்று சொல்லிச் சேகரித்து வைத்திருந்தாள்.

சிங்களவர்கள் நன்றி கெட்ட சாதி என்று அப்பா சொல்லத் தொடங்கினார். ஜினதாச மாமா முன்னர் ஒன்றுக்கும் வழி இல்லாமல் தெருவில் அலைந்தாராம். அப்பா இரக்கப் பட்டு அவருக்கு வலியப் போய் உதவி செய்தாராம். அப்பா கடனாகக் கொடுத்த சுருட்டுப் பெட்டிகளை ஊர் ஊராகச் சைக்கிளில் கொண்டுதிரிந்து விற்றே ஜினதாச மாமா பணக்காரரானாராம். ஜினதாச மாமாவுக்கு பேக்கரியும் தேனீர்க் கடையும் வைக்க அப்பாதான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். இதை எல்லாம் அப்பா 'பாம்புக்குப் பாலை வார்த்து விட்டோமோ ' என்கிற கவலையோடு சொல்வார். ஜினதாச மாமா பற்றி அப்பா சொல்லாத சில விடயங்கள் பிறர்மூலம் எனது காதுகளில் விழுந்தது. மத்துகமவில் அப்பாவின் வியாபாரம் ஒங்கியதற்க்கு ஜனதாச மாமாவின் சண்டித்தனமும் அறவிட முடியாத கடன்களையும் வசூல் செய்து விடுகிற அவரது சாமர்தியமும் ஒரு முக்கிய காரணமென்றார்கள். அதனால் சிங்களவர்களுக்கு கடன் கொடுக்க அப்பா ஒருபோதும் தயங்கியதில்லையாம். அப்பாவும் ஜினதாசவும் நண்பர்களாக இருந்த காலத்தில் இருவரும் நிறைய பெண்வேட்டை ஆடி இருக்கிறார்கள் என கடைச் சிப்பந்திகள் இரகசியம் பேசிக் கொண்டிருந்ததை ஒருநாள் தற்செயலாகக் கேட்டேன்.

கடைத் திறப்பு விழா அன்று சின்னச் சித்தப்பா கோபமாக இருந்தார். 'ஜினதாச பேக்கரி வைக்க அண்ணர்தான் காசு கொடுத்தவர். பேக்கரியை அண்ணர்தான் திறந்தும் வைச்சவர். அந்த வேச மகன் கஸ்டப் பட்ட போதெல்லாம் இந்த பண்டாரநாயக்க வரவில்லை ' என சின்னச் சித்தப்பா பொரிந்து தள்ளினார். அதுவரை ஜினதாச மாமாவின் பேக்கரியில் இருந்துதான் எங்கள் கடைக்குத் தினசரி காலையும் மாலையும் தேனீரும் கேக்கும் வந்து கொண்டிருந்தது. அப்பா மத்துகமவில் இருந்தால் பெரும்பாலும் இரவு கடை மூடும் சமயங்களில் ஜினதாச மாமா ஊர் உலகப் புதினங்கள் பேசுவதற்க்காக கடைக்கு வந்துவிடுவார். இந்த ஒட்டும் உறவும் எங்கள் கடைக்கு முன் ஜினதாச ஸ்டோர் என்கிற அந்தப் புதிய கடை வருகிற வரைக்கும்தான் தொடர்ந்தது. பின்னர் ஜினதாசவும் அப்பா மாதிரி மத்துகமவில் பெரிய முதலாளியாகி விட்டிருந்தார். இப்படித்தான் நண்பர்கள் பிரிந்தார்கள். இது நடந்த சில மாதங்களின் பின்னர் இனி சிங்கள ஊர்களில் குடும்பத்தையோ பிள்ளைகளையோ வைத்திருக்க முடியாது என்று கூறி அப்பா என்னை நெடுந்தீவுக்கு அழைத்து வந்துவிட்டார். இரண்டு வருடங்களின் பின்னர் 1958ம் ஆண்டு இனக் கலவரத்தில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் வேட்டையாடப் பட்டபோது முற்கூட்டியே என்னை ஊருக்கு அழைத்து வந்துவிட்ட அப்பாவின் சமோசித புத்தியை ஊரே மெச்சியது. அந்தக் கலவரத்தில் சிங்களக் குண்டர்களால் எங்கள் கடை உடைக்கப் பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு சித்தப்பாக்களையும் அவர்களது சிங்கள நண்பர்கள் பின் வாசலால் காப்பாற்றி ரப்பர் வியாபாரியான ஒரு முஸ்லிம் நண்பரிடம் சேர்த்தார்களாம். பின்னர் அந்த முஸ்லிம் நண்பர் சித்தப்பாக்களை தனது லாறியில் ரப்பர் மூடைகளுக்கு மத்தியில் ஒழித்துவத்து கொழும்பிலுள்ள அகதிகள் முகாமுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். வழியில் அவர்கள் மறைந்திருந்த ரப்பர் லாறி சிங்களக் காடையர்களால் மறிக்கப் பட்டபோதும் விபரீதம் ஒன்றும் இடம்பெறவில்லை. முஸ்லிம்களின் லாறி என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு போக விட்டு

விட்டார்களாம்.

வானொலிச் செய்திகளையும் பயங்கரமான வதந்திகளையும் கேட்டு அப்பாவுக்கு கொஞ்சம் விசராக்கிவிட்டது. கலங்கிய கண்களுடன் யாழ்ப்பாணம் போனார். அங்கு அவர் வெறி பிடித்தவர்போல வாடகைக் காரில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் காங்கேசந்துறை துறைமுகம் என அலைந்தாராம். அகதியாகக் கப்பலில் வந்து சேர்ந்த சித்தப்பாக்கள் சொன்ன கதைகள் பயங்கரமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த களுத்துறைக் கோவில் ஐயரை உயிருடன் உருக்கிய தார்ப் பீப்பவுள் போட்டுக் கொன்றுவிட்டார்களாம். அதைக் கேட்டு சோகம் தாளாமல் நான் அழுதேன். அன்பும் கருணையும் உபசரிப்புமாக மத்துகம கிராமத்து வயல் வெளிகளில் நான் கண்ட சிங்கள மக்களது முகங்கள் எல்லாம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. கதறக் கதற களுத்துறை ஐயரை விரட்டிப் பிடித்து உருக்கிய தார்ப்பீப்பாவுள் அமுக்கும் கொடூரமான முகங்கள் மட்டும்தான் கண்களுள் நிறைந்தது. என்னைத் தவிர எங்கள் பாடசாலையில் படித்த யாருக்குமே அன்பான சிங்களவர்களது முகமே சேதிகளோ தெரியாது. அவர்கள் எப்போதாவது யாழ்ப்பாணத்து பேக்கரிகளில் ரொட்டி சுடுகிற சிங்களவர்களை மட்டும்தான் கண்டிருந்தார்கள். தென் இலங்கையில் தமிழர்கள் தாக்கப் படும் சேதி கேட்டு ஆத்திரமடைந்த கும்பல்களால் யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களின் பேக்கரிகள் சில உடைக்கப் பட்டதாகச் சேதி வந்தது. அது பற்றிப் பேசியவர்கள் சிங்களவர்களைப் போல தமிழர்கள் யாரும் கொள்ளையடிக்கவில்லை என்றார்கள்.

6

அம்மாவைத் துன்புறுத்தி துடுவிலில் இருந்து நெடுந்தீவுக்கு அப்பா இழுத்துவந்த கதையை முன்னரே சொல்லியிருக்கிறேன். நான் இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் எல்லாம் நெடுந்தீவில்தான் படித்தேன். எங்கும் நீலவானமும் நீலக் கடலுமாகப் பரந்துகிடந்த அந்தத் தீவின் கருகிய புல்வெளிகளும் மண்ணும்கூட எனது கண்களில் நீலக் கோலமாகவே பரந்து விரிந்தது. இன்றும் எனது நினைவுகளில் அவை நீலப் படமாகவே அசைகிறது. அந்த தீவில் என்னை அரவணைத்துப் பொத்திக்கொண்ட நீலக் கடலும் மண்ணும் விண்ணும் காற்றும் எனக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை. . அங்கு நடந்த எனது நீல நாட்களின் ஒவ்வொரு கவடும் வாழ்வாகச் செளித்தது. சின்ன வயதுகளில் அந்தத் தீவில் நான் கண்ட பலர் பழமொழியும் கவிதையும் பேசினார்கள். பேச்சுக்கு நடுவே திடார் திடாரென அந்தத் தருணத்தில் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கும் பாடல்களையும் எடுத்து விட்டார்கள். சுருக்குக் கயிற்றைத் தலைக்குமேல் சுளற்றிக் கொண்டு மாட்டுகளுக்குப் பின்னே திரிகிறவர்களிடம்கூட ஏட்டிலும் எழுத்திலும் அகப்படாத கிராமத்து மனிதனின் ஞானமும் கலைகளும் சுடர்ந்தது. என்னிடத்தில் அன்புகாட்டிய தீவின் முதியவர்கள் தங்கள் பழமொழிகளாலும் பாடல்களாலும் 'ஒன்றில் மோதலிலே சா, இன்றேல் காதலிலே சா ' என்னும் பணியாமையும் காதலும் கிளரும் தங்கள் வாழ்வின் தத்துவத்தை எனது பிஞ்சு மனசில் பயிர் செய்து விட்டனர்.

நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அம்மாவின் நிர்ப்பந்தத்தால் ஆங்கிலம் படிப்பதற்காக அப்பா என்னை மத்துகமவுக்கு அழைத்துப் போனார். நான்காம் , ஐந்தாம், ஆறாம் வகுப்பெல்லாம் மத்துகமவில்தான் படித்தேன். அப்பாவின் கடையின் ஓரத்தில் விநாசித்தம்பி என்று ஒரு புங்குடுதீவுக் காரர் புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் அங்கு புத்தகங்களோடு புகையிலை, சுருட்டு, பீடி, சீகரட், சிட்டுக்குருவி லேகியம் எல்லாம் சில்லறை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கிருபாகரன் என்று அவருக்கு ஒரு மகன். என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவர். நன்றாகப் பாடுவார், நாடகங்கள் நடிப்பார். எப்பொழுதும் பெரியார், அண்ணா, கருணாநிதி என திராவிடப் புத்தகங்களாகத் தேடி எடுத்துப் படிப்பார். தமிழரசுக் கட்சிப் பத்திரிகையான சுதந்திரனில் அவரது கவிதைகள் வெளிவரும். எனது பெயரில்கூட சுதந்திரன் சிறுவர் பகுதிக்கு கதைகள் எழுதி அனுப்புவார். நாங்கள் இருவரும் பள்ளியில் படித்ததைவிட அந்தப் புத்தகக் கடையில் படித்ததுதான் அதிகம்.

மத்துகம ரப்பர் தோட்டங்கள் நிறைந்த கிராமம் அல்லவா. கிராமங்களில் வாழும் சிங்களவரும் இரப்பர் தோட்டத் தொழிலாளிகளான இந்திய வம்சாவளித் தமிழர்களும்தான் அப்பாவின் கடையில் முக்கியமான வாடிக்கையாளர்கள். சிங்கள பெளத்தர்களின் விசாகப் பெருநாளிலும் சைவத் தமிழர்களின் பொங்கல் தீபாவளி நல்நாட்களிலும் தமிழ் சிங்கள கிறிஸ்துவர்களின் கிறிஸ்மஸ் புதுவருட நாட்களிலும் கடையில் விஜாபாரம் ஜே ஜே என்றிருக்கும். முஸ்லிம்களின் நேன்புத்திரு நாட்களின்போது தொலைவிடங்களில் இருந்தெல்லாம் முஸ்லிம்கள் எங்கள் கடைக்கு வருவார்கள். இதைவிட இன்னொரு முக்கியமான நாளும் இருந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒரு சேரக் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டில் எங்கள் கடை வியாபாரம் மட்டுமல்ல மத்துகம பிரதேசமே களை கட்டும். குயில்களின் இன்னிசையோடு தேன் சிந்த வரும் வசந்தம் யாரையும் பேதப் படுத்தாது .எல்லோர் பாதைகளிலும் முற்றங்களிலும் மலர் சொரிந்தும் எல்லோரது கைகளிலும் காய் கனிகள் தந்தும் வசந்தம் மனிதர்கைளை வாழ்தும். வாழவைக்கும். சிங்களக் கிராம வாசிகள் புத்தாண்டைக் கொண்டாடி அனுபவிக்கும் அழகு வசந்தத்தின் வசந்தமாகும். குழித்து மலர் சூடிப் புத்தாடை கட்டி மத்தளத்தைச் சூழ மொய்த்திருந்து தாளம் தட்டிப் பாட்டிசைக்கும் சிங்களக் கிராமத்து அழகியரின் கலை ஆழுமையில் அந்தநாட்களிலேயே கிறுங்கிப் போயிருக்கிறேன். வானளாவிய பலாமரங்களில் நீண்டு நெடிய ஊஞ்சல் கட்டி எதிரும் புதிருமாக இருவர் ஏறி மாறி மாறி வலித்து ஊஞ்சலாடும்போது சேர்க்கஸ் பார்ப்பதுபோல இருக்கும். ஒரு புத்தண்டில் எனது பள்ளியின் சிங்களப் பிரிவில் படிக்கும் சிற்றிளம் பெண்ணான சுவர்ணலதாவின் தெருவுக்குப் போயிருந்தேன். சுவர்ணலதா தன்னை விடச் சற்று வயதுக்கு மூத்த ஒருத்தியோடு ஊஞ்சல் ஏறி பலமாக ஊஞ்சல் வலித்து, தேவதையாக பலாமர கொம்பர்களுக்கிடையில் பறந்து கால்களால் இலைகளைத் தொட்டு வந்தபோது எனக்கு மனசு துணுக்குற்றது. பக்கத்தில் சிங்களப் பையன்களும் அப்படிப் பேய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். சுவர்ணலதா அந்தப் பையன்களோடு சேர்ந்து என்னையும் ஆடச் சொன்னாள். அது ஒரு ஆண்பிள்ளை தயங்குவதற்க்கு இடம் தரக்கூடிய தரணமல்லவே. சுவர்ணலதா கேட்டுக் கொண்டதால் ஒரு சிங்களப் பையன் ஊஞ்சலால் இறங்கி எனக்கு இடம் தந்தான். சுயம்வர மண்டபத்தில் வில்லெடுத்த இராமனைப்போல நடந்துபோய் ஊஞ்சலைப் பற்றினேன். முதல் ஊசலே அச்சம் தந்தது. படிப்படியாக வீச்சு பலாமர உச்சத்தை நோக்கி அதிகரித்து. இதன்மேல் எனது ஆண் வீராப்பு துணைவர மறுக்க நடுங்கும் கால்கள் சறுக்கி ஊஞ்சல் கயிறில் தூங்கி நிலத்தில் இழுபட்டு வீழ்ந்தேன். நல்ல வேளையாக உடலில் பட்ட அடி ஒன்றும் பலமில்லை. சுவர்ண லதாதான் முதலில் ஓடி வந்து என்னை அள்ளி எடுத்தாள்.

வசந்த நாட்களில் மலையகத் தமிழர்கள் ரப்பர்த் தோட்ட குடியிருப்புகளின் முன்றலில் பந்தல் கட்டி காமன் கூத்து ஆடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் புத்தாடை அணிகிற நாள் சித்திரை வருடப் பிறப்பாகவே இருக்கும். தேயிலை ரப்பர் மலைகளை விடவும் ஓங்கி உயரும் துயரங்களை எல்லாம் எட்ட உதைத்துத் தள்ளிவிட்டு, மாளாச் சுமைகளை எல்லாம் மீறித் துளிர்த்துப் பூக்கிற நம்பிக்கையை அவர்கள் அந்த வசந்த விழா நாட்களில்தான் கண்டடைகிறார்கள் போலும். இந்திய வம்சாவழித் தமிழர்களான ரப்பர்த் தோட்ட அலுவலர்களதும் கங்காணிகளதும் நகர்ப் புறத்து வர்த்தகர்களதும் பிள்ளைகள் பலர் என்னுடன் படித்ததனர். அதனால்பண்டிகை நாட்களில் அவர்களுடன் ரப்பர்த் தோட்டக் குடியிருப்புகளுக்கும் போய் புதுவருடம் கொண்டாடி வர வாய்க்கும்.

பண்டிகை நாட்களில் வந்து சேருகிற தாழ்க் காசுகளால் கல்லாப் பெட்டி நிறைந்துவிடும். சில்லறைக் காசுகளை நிலத்தில் வரிசையாக அடுக்கியிருக்கும் சவர்க்காரப் பெட்டிகளில்தான் போடுவார்கள். எங்கள் கடைக்கு இவர்களைவிட முக்கியமன வேறு சில வடிக்கையாளர்களும் இருந்தார்கள். இரப்பர் தோட்ட அதிகாரிகளான வெள்ளைக்காரர்களும் அவர்களைப் போலவே உடுத்தி, அவர்களைப் போலவே இஸ் புஸ் என ஆங்கிலம் பேசுகிற சில உயர் வர்க்க இலங்கையர்களும் கடைக்கு வந்தால் நேரே சாய்ப்புச் சாமான் பக்கம்போய் நின்று கொள்வார்கள். வெள்ளையருக்கோ இலங்கை அவர்களது தேயிலை ரப்பர்த் தோட்டமும் களியாட்ட அரங்கும் மட்டுமே. இலங்கை அரசியலில் அவர்களது எதிர்பார்ப் பெல்லாம் இறுக்கமான தொழிற் சட்டங்களும் ஈவு இரக்கமற்ற சட்ட ஒழுங்கு பராமரிப்பும்தான். மற்றப் படி அரசியல் பேசும்போதெல்லாம் கற்பனையில் லண்டனில் உள்ள கைட்பாக் மூலைக்குப் போய் விடுவார்கள். அந்த நாட்களில் எல்லாம் ஆங்கிலம் பேசும் இலங்கைப் பெருங்குடி மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பதை அவர்களது பெயரையும் திருமணமான பெண்களின் உடைகளையும் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களது ஏக்கமெல்லாம் வெள்ளையர்கள் உருவாக்கிய பொற் காலத்தை இழந்து போகிறது பற்றியதாகவே இருந்தது. சந்திக்குச் சந்தி மொழிவாரி அரசியல் இழுபறிகளால் இலங்கை மக்கள் அணிபிரிந்து மோதிக்கொண்டிருக்கையில் கடைக்கு வரும் மேட்டுக் குடிகள் பேசுகிற இரண்டுவரி அரசியல் இவ்வளவுதான். சிங்களம் போல தமிழுக்கும் சம அந்தஸ்து வேண்டும் என விவாதிக்கும் அப்பாவிடம் அவர்கள் சிங்களமும் தமிழும் சோறு போடாது என்பார்கள். பரிபாலனம் கறுப்பனுக்குச் சரிவராது அது வெள்ளையனுக்குத்தான் சரி என அடித்துச் சொல்வார்கள். நாடு குட்டிச் சுவராகப் போகிறது என மூக்கால் அழுவார்கள். மொழிச் சண்டை தொழிற் சண்டை என நாட்டைக் குளப்பிவிட்டு கம்யூனிஸ்டுகள் அரசைக் கைப்பற்றி விடுவார்கள் என்பது பற்றி அப்பாவை அவர்கள் அடிக்கடி எச்சரித்தார்கள். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால்ப அவர்கள் உங்கள் கடையைப் பறித்து கூட்டுறவுக் கடையாக்கி விடுவார்கள்,. உங்கள் பிள்ளைகளைக்கூட அரசாங்கம் எடுத்துவிடும். பெண்களை எல்லாம் பொதுச் சொத்தாக்கிவிடுவார்கள் என அவர்கள் அச்சுறுத்தினார்கள்.

இத்தகைய மேட்டுக் குடி வாடிக்கையாளர்களுக்காக டின் உணவுவகைகளோடு கார்லிக்ஸ், ஓவல்டின், சீஸ், அவுஸ்திரேலியாவில் இருந்து பீப்பாக்களில் வருகிற புத்தம் திராட்சைப் பழம், கலிபோர்ணிய அப்பிள். பேனாக்கள், கைக்கடிகாரம், மருந்துப் பொருட்கள், டார்ச் லைட் மற்றும் வானொலிப் பெடிகளுக்கான பட்டறி, (அப்போது ரன்சிஸ்டர் வரவில்லை) அஸ்பிரின், இருமல் சிறப் போன்ற ஆங்கில மருந்துகள், பீங்கான் பாண்டங்கள், முள்ளுக் கரண்டிகள் என காசு மேசையின் பின் பக்கமாக ஒரு தனிச் சாய்ப்புச்

சாமான் பிரிவே கடையில் இருந்தது. சாய்ப்புச் சாமான்கள் வாங்க வருகிறவர்களோடு அப்பா தடக்கி தடக்கி ஆங்கிலம் பேசுவார். அந்த நாட்களில் அப்பா தபால்மூலம் ஆங்கிலம் படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

8

அப்போதெல்லாம் சிகரட் புகைக்கிறவர்கள் குறைவு. யாழ்ப்பாணத்துப் புகையிலையும் சுருட்டும் இல்லையென்றால் தென் இலங்கையில் சிங்களவர்களுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாளிகளுக்கும் பொழுதும் விடியாது, கக்கூசுக்கும் போகாது. மத்தியானம் சாப்பிடுகிற உணவுகூட ஒழுங்காகச் செமிக்காது. யாழ்ப்பாணத்துச் சுருட்டு அத்தனை மதுரமாய் இருக்குமாம். சில வீடுகளில் ஆண்கள் புகைத்த சுருட்டின் மீதியை பெண்கள்கூட இரகசியமாக எடுத்துப் புகைப்பார்களாம். மலேசியா சிங்கப்பூர் போன இளைஞர்கள் அனுப்புகிற பணத்தோடு இப்படி சிங்களவரும் மலையாளிகளும் அள்ளித் தருகிற பணமும் சேர்ந்து யாழ்ப்பாணத்து மேல்சாதிகளைப் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தது. பணம் கொஞ்சம் கீழ் மட்டங்களுக்கும் சிந்தியதி யாழ்ப்பாணத்தின் சமூக ஒழுங்குகளை எல்லாம் புரட்டிப் போட ஆரம்பித்தது. ஒருமுறை அப்பாவைச் சந்திக்க வந்த இளைஞர்கள் சாதிக் கொடுமைக்கு எதிராகப் பேசினார்கள். தமிழரசுக் கட்சி சாதிக் கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை என அவர்கள் குற்றம் சுமத்திய பொழுது அப்பா கொஞ்சம் எரிச்சல் அடைந்தார். எல்லாம் படிப்படியாக மாறிக் கொண்டு வருகின்றது. சாதி பகுபாட்டை மறந்து தமிழர்கள் ஒற்றுமைப் பட்டு வருவது கொம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை அதனால்த்தான் நளவரையும் பள்ளரையும் தூண்டி விட்டுக் குட்டையைக் குழப்பப் பார்க்கிறார்கள் என்று அப்பா சொல்வார். . கொம்யூனிட்டுகள் சிங்களவர்களின் அடிவருடிகளாகி விட்டார்கள். உங்களைப் போன்ற இளைஞர்கள் அவர்களிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என அப்பா வலியுறுத்துவார். கம்யூனிஸ்டுகள் சிங்களவரின் அடி வருடிகள் என்பதை இளைஞர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இறுதியில் நெடுந்தீவில் எல்லாச் சாதியினரும் கலந்து கொள்கிறமாதிரி ஒரு சமபந்தி போசனம் ஏற்பாடு செய்வதாக முடிவாயிற்று. சாப்பாடுகள் எல்லவற்றையும் தானே ஒழுங்குபண்ணுவதாக அப்பா பிடிவாதமாகச் சொன்னார். உணவை எல்லோரும் சேர்ந்து சமைக்க வேண்டும், பிள்ளையார் கோவில் உள் மண்டபத்தில் சமபந்தி போசனம் ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கைகளை அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் கோவிலுக்குள் உயர்சாதியினர் மட்டும்தான் போகலாம் என்பதுதான் தமிழரசுக் கட்சியின் கொள்கையா என ஒருவன் கூச்சலிட்டான். எனக்குப் பயமாய் இருந்தது. இது தமிழர் அரசுக்கான போராட்டமா ? அல்லது உயர்சாதித் தமிழரது ஆதிக்கத்துக்கான போராட்டமா ? என யாரோ கேட்டார்கள். அப்பா நின்று நிதானித்துப் பொறுமையாகப் பேசினார். சமயத்துக்குள் அரசியலையும் அரசியலுக்குள் சமயத்தையும் கொண்டுபோகக் கூடாது என்பதுதான் தமிழரசுக் கட்சியின் கொள்கை என்றார். படிப்படியாக எல்லாம் சரியாகி கொண்டு வருகிறது என்றார். இந்தக் காலத்து இழைஞர்களுக்கு வேகம் அதிகம் என பாராட்டவும் செய்தார். இறுதியாக அந்த இளைஞர்கள் அரை மனதுடன் அப்பாவின் திட்டத்துக்கு இசைந்து போனார்கள். சமபந்தி போசனத்தில் கலந்து கொள்ள ஒடுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த சிலரை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு அழைத்து வருவதாகச் சொன்னார்கள். வந்தவர்களுள் தீவிர வாதியாக இருந்த தாடி கார இளைஞரை பக்கத்தில் அழைத்து உங்களுக்காக வனியசிங்கத்தையோ அல்லது இராசவரோதயத்தையோ பிரதம பேச்சாளர்களாக சேர்த்துக் கொள்ளலாம். என்றார். வனிய சிங்கம் முக்கால் பங்கு கொம்யூனிஸ்ட் கால் பங்கு தமிழரசுக் கட்ட்சி என்றார். தந்தி மூலம் பத்திரீகைகளுக்குச் செய்தி கொடுக்கவும் முடிவானது. தந்திச் செலவையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார்.

அப்பா இரண்டொரு வருடத்துக்கு ஒருமுறையேனும் யாழ்ப்பாணத்துப் புகையிலை வியாபாரிகளுடன் கேரளா எல்லாம் போய் வந்துகொண்டிருந்தார். ஆறு மாசம் சிங்கள பகுதியில் வியாபாரம் மூன்றுமாசம் வியாபாரப் பயணங்கள் மிகுதி மூன்றுமாசம் குடும்பம் என அவரது வாழ்க்கை போய்க்கொண்டிந்தது.

9

வாயாடி நம்பர் வண் என எனக்குப் புதிய பட்டம் சூட்டுவதற்க்காக மலையாள மண்ணில் இருந்து எனது ஊருக்கு லாம் மாஸ்டர் தம்பதிகள் வந்து சேரும்வரை கலிமாதான் எனது பட்டப் பெயராக இருந்தது. எனக்கும் தம்பிமாருக்கும் மட்டுமல்ல, எனது அப்பா, தாத்தா அவர்களது ஆண் சகோதரர்கள் என எனது தந்தை வழிச் சமூகத்துக்கே பல தலை முறைகளாக கலிமா தான் பட்டப் பெயர்.

எனது தந்தையாரின் ஊரான நெடுந்தீவு பட்டப் பெயர்களுக்குப் பெயர்போனது. கவிதைக்கு அடி எடுத்துக் கொடுப்பதைப் போல பட்டப் பெயர் வைக்கிறதில் பெயர்போன நாட்டுக் கவிகள் சிலர் எப்போதும் அந்தத்தீவில் இருந்தார்கள். கட்டணம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு துண்டு புகையிலைக்கோ அல்லது ஒரு வாய் வெற்றிலை பாக்குக்கோகூட பல தலை முறைகள் நிலைக்கக் கூடிய ஒரு நல்ல பட்டப் பெயரை பொன்னில் நகை அடிப்பதுபோல இயற்றித் தருவார்கள். சகோதரர்களோடு ஒற்றுமையும் தந்திரமும் கள்ளத்தனமும் உள்ள ஒருவருக்கு கக்கையர் என பட்டம் வைத்தால் அந்தப் பட்டப் பெயர் காக்கையரின் ஆண் வாரிசுகளுக்குத் தலை முறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்து வாய்மொழி வளக்கில் குடும்பப் பெயர் போல நிலைத்துவிடும். எல்லோரும் அவர்களைக் காக்கையர் கூட்டம் என்பார்கள். எனது ஊர் முன்னோர்கள் ஒருவரது பரம்பரைக்கும் அவரது இயல்புகளுக்கும் தொடர்புண்டு எனக் கருதினார்கள். எங்கள் ஊரைப் பொறுத்து பட்டப் பெயர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரதும் மரபணு அறிக்கையாகவே தொடர்ந்தது. ஒருவருக்குக் கலியாணம் பேசினாலும் சரி அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் வைப்பதானாலும் சரி அவர்கள் என்ன கூட்டம் என்பதை முதலில் விசாரிப்பார்கள்.

எனது அப்பா வழிப் பாட்டி காக்கையர் கூட்டத்தைச் சேர்ந்தவர். காக்கையர் கூட்டத்தைப் பற்றி சார்பானவர்களிடம் விசாரித்தால் 'அவங்கள் காக்கையர் கூட்டம், நல்ல புத்தி சாதுரியமான ஆக்கள். கொஞ்சம் கள்ளப் புத்தி இருந்தாலும் சகோதரங்கள் நல்ல ஒற்றுமை. ஒண்டை ஒண்டு விட்டுக் கொடுக்காதுகள். நீ அவையோட சம்மந்தம் வைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ' என்பார்கள். எதிரானவர்களை விசாரித்தால் 'ஐ ஐயோ உனக்கு வேற இடம் கிடைக்காமல் போயும் போயும் கக்கையர் கூட்த்துக்கிளையா மாப்பிளை எடுக்கப் போகிறாய் ?. ' என்பார்கள். அவங்கள் ஒற்றுமையாய் இருந்தாலும் சரியான தந்திரக் காறர். காகம் மாதிரி எப்பவும் யாரிட்ட எதை தட்டிப் பறிக்கலாம் என்கிற கள்ளப் புத்தி. எதற்க்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு எனப் புத்தி சொல்வார்கள். யோசித்துப் பார்த்தால் எனது முன்னோர்கள் ஒருவனுக்குப் பட்டப் பெயர் சூட்டுவதற்கூடாக அவனைப் பற்றிய தங்களது சமூக விமர்சனத்தையும் வைத்தார்களோ என எண்ணத் தோன்றும். ஐந்தாறு தலை முறையின் முன் பொது மற்றும் வலிமை இல்லாதவர்களது நில புலங்களை எதாவது காரணம் சொல்லி அபகரித்து வேலிகட்டி சொந்தங்கொண்டாடிய ஒருவர் இருந்தார். அவரை ஒரு இடத்தில் மலம் கழிக்க அனுமதித்தாலும் ஆபத்து, அந்த இடத்தையும் வேலி கட்டி சொந்தம் கொண்டாடி விடுவார் என்கிற வசவுக் கருத்தில் `பீச்சிக் கட்டியார்` எனப் பட்டம் வைத்து விட்டார்கள். கோவில் சொத்தை அபகரித்த ஒருவருக்கு `தெய்வம் தின்னி` என்பது பட்டப் பெயர்.

எங்களைக் கலிமா கூட்டம் என்பார்கள் என்றேன் அல்லவா. பல தலை முறைகளுக்குமுன் வர்த்தகரான எனது மூதாதையர் ஒருவர் சொந்த பந்தம் ஊர் மரபு மரியாதை ஒன்றும் பார்க்காமல் தனக்கு லாபம் வந்தால் சரி எனக் காரியமாற்றினார். போன இடமெல்லாம் ஊர்ச் சம்பிரதாயங்களுக்கு அமையாமல் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்துச் சண்டை வளர்த்து ஆதிக்கம் செய்ய முனந்தார். அவருக்கு ஊரை தின்ன வந்த நவீன கலியுக மிருகமான குதிரை என்கிற கருத்துத் தொனிக்க `கலிமா` எனப் பட்டம் வைத்து விட்டார்கள். அந்தப் பெயர் பல நூற்றாண்டுகளைத் தாண்டி பேச்சு வளக்கில் எங்கள் குடும்பப் பெயராகவே நிலைத்து விட்டது. எனது அப்பாவின் பெயர் வேலுப்பிள்ளை. ஊரில் போய் வேலுப்பிள்ளை என பெயர் சொல்லி விசாரித்தால் தெரியாது. 'இங்க நூறு வேலுப் பிள்ளை இருக்கு நீ எந்த வேலுப்பிள்ளையக் கேட்கிறாய் ' என விசாரிப்பார்கள். பின்னர் காதுக்குள் குனிந்து மெதுவாக வேலுப்பிள்ளைக்கு என்ன பட்டப் பெயர் என விசாரிப்பார்கள். கலிமா என்றால் ஓ அவரா அவரை தெரியாத ஆட்கள் யார் என்றபடி வீட்டுக்கு வழி காட்டுவார்கள்.

லாம் மாஸ்டரும் அவரது அழகிய மனைவியும் ஊருக்கு வருகிற வரைக்கும் சின்னப் பையனான எனக்குக் கூட கலிமாதான் பட்டப் பெயர். ஏன் பல நூற்றாண்டுகளுக்குமுன் எனது ஊரவர்களுக்கு குதிரை மீது அத்தனை வெறுப்பு ? இதுதப் புதிரை எனது குடும்பக் கதைகளில் வந்த தகவல்களும் ஆசிரியர்கள் சொன்ன கருத்துகளும் பின்னர் நான் வாசித்தவையும்தான் விடுவித்தன. அந்தக் காலத்தில் நெடுந்தீவுக்கு பருத்தித் தீவு எனவும் பசுத் தீவு எனவும் பெயர்கள் இருந்தது. இராமேஸ்வரம் கோவிலுக்கு பாலும் பூக்களும் அங்கிருந்து போனதாக ஐதீகம். அங்கிருந்து பருத்தியும் பாற் பொருட்களும் இராமேஸ் வரத்துக்குப் போனதாம். திரும்பி வருகிற படகுகளில் சோழ மண்டிலக் கரைகளில் இருந்து யாழ்ப்பாண ராச்சியத்துக்குப் புலம் பெயருகிறவர்கள் நெடுந்தீவில் வந்து இறங்கினார்கள். ஊர் முழுவதும் பருத்தி தோடங்களாகவும் புல்வெளிகளாகவும் இருந்தது. ஒல்லாந்தர் குதிரை வளர்பதற்க்காக, எங்கள் ஊர்க்காரரின் பருத்தித் தோட்டங்களையும் புல்வெளிகளையும் ஆக்கிரமித்தார்கள். எனது முன்னோர்களை அவர்களது நீர்நிலைகளில் இருந்தும் வளமான நிலங்களில் இருந்தும் விரட்டி விட்டார்கள். புல்வெளிகளை அகட்டவும் மாரி வெள்ளத்தை அகற்றவும் ஊரின் நீர் நிலைகளை கடலுக்கு வெட்டி விட்டனர். ஊருள் கடல் புகுந்து சில பகுதிகள் உவரானது. குதிரைகளின் மேச்சலிலும் புழுதி கிழப்பும் பாச்சலிலும் ஊரே பலைவனமாகத் தொடங்கியது. சமய வழிபாடுகளைத் தடைபண்ணினார்கள். ஊரில் உள்ள எல்லோருமே கிறிஸ்துவர்களாகி தங்களுக்குக் குதிரை மேய்க்க வேண்டுமென ஒல்லாந்தர்கள் எதிர் பார்த்தார்கள். காலம் காலமாக தங்கள் குலதெய்வ வளிபாடுகளை விட்டு விட்டு இந்துக்களாக மாறவே மறுத்த எனது தீவின் மக்களில் பலர் கிறிஸ்துவர்களாக மாற மறுத்துக் கிளற்ச்சி செய்தார்கள்.

அந்த நாட்களில் எங்கிருந்தோ வந்திறங்கிய குதிரைகள் எஞ்சியிருந்த எனது முன்னோர்களின் தோட்ட நிலங்களையும் புன்செய்களையும் அழித்தன. ஒல்லந்தரை எதிர்த்தெழுந்த புதல்வர்களையும் வளமான நிலங்களையும் பறி கொடுத்தபின் உயிர் போனாலும் ஒல்லந்தர்களுக்குக் குதிரை மேய்க்கும் கூலியாட்களாக மாறுவதில்லை என்கிற சபதங்களோடும் தங்கள் குலதெய்வங்களோடும் ஊர்க் கோடிக்கு ஒதுங்கிச் சென்ற குடும்பங்களில் எனது மூதாதையர்களின் குடும்பமும் ஒன்று. ஊர்க் கோடியில் தரிசாகக் கிடந்த கல் நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்தார்கள். குதிரை அங்கும் வந்து வேலி பாய்ந்து பயிர் பச்சைகைளை தின்றது. போரும் அழிவும் புதுமைகளும் நிறைந்த கலியுகத்தின் வரவை அறிவிக்கும் கட்டியங் காரனாகவே எனது ஊருக்கு குதிரை கொண்டு வரப்பட்டது. அதனால்த்தான் குதிரைகள் மீது நூற்றாண்டுகளின் முன்னம் வாழ்ந்த என் முன்னோர்களுக்கு அத்தனை கோபம். அப்பாவைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு பிறர் சொல்கிற பதில்களைக் கேட்டிருக்கிறேன். 'யார் கலிமா வேலுப்பிள்ளையை பற்றிக் கேட்கிறீங்களே ?. அவற்ற அப்பன் கலிமா கூட்டம். அவற்ற தாய் காகையர் கூட்டம். இரண்டு விந்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?. இதுக்குமேலே சொல்லிறதுக்கு என்ன இருக்கு. இனி நீங்களே யோசிச்சுப் பிடிய்கோ ' என்பார்கள். எனது பாட்டன் வழி மூதாதையர்கள் ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளற்ச்சிக் காரர்களாகவும் அதேசமயம் ஒல்லாந்தரையும் அவர்களது குதிரைகளையும் போல ஊரைச் சுரண்டி உலையில் போடுவதிலே கருத்துள்ளவர்களாகவும்மிருந

Posted

நான் யாழ்க் களதில் எழுதுவதே யாழ்க்கள குடும்பத்தோடு ஆரோகியமான விவாதங்களில் ஈடுபடுகிற விருப்பத்தில்தான். உரை நடை இலக்கியத்துக்கு புதியவன் என்கிற வகையில் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வரவேற்க்கிறேன். குறுநாவல் மட்டதில் இருந்து நாவலுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இலக்கு.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Posted

தொடக்கம் மட்டுமே வாசித்தேன். மிகுதியையும் வாசித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். காலத்தின் பதிவுகள் தானே கலை இலக்கியம் போன்றன. எனவே, உங்களின் இந்தக் குறுநாவல் ஊடாக ஈழத்தின் குறிப்பிட்ட காலத்தையும் மக்கள் வாழ்வையும் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். உங்கள் நாவல் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Posted

தொடக்கம் மட்டுமே வாசித்தேன். மிகுதியையும் வாசித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். காலத்தின் பதிவுகள் தானே கலை இலக்கியம் போன்றன. எனவே, உங்களின் இந்தக் குறுநாவல் ஊடாக ஈழத்தின் குறிப்பிட்ட காலத்தையும் மக்கள் வாழ்வையும் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். உங்கள் நாவல் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி இளைஞன். தாயக நிலைமையால் கலை இலக்கியத்துக்கு வெளியிலான ஆய்வு நடவடிக்கைகளில் என்னுடைய காலத்தை தொலைத்துவிட்டேன். இதை அறியாமல் குருட்டுத்தனமாக வைகிறவர்களைக் கண்டால் அருவருப்பாக இருக்கிறது. இனியென்றாலும் இலக்கிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும். போதிய தேடலும் ஆய்வுமின்றி இலக்கியத்தில் ஒரு வரிகூட என்னால் எழுதமுடிவதில்லை. இதுதான் என் பலமும் பலஹீனமும்.

Posted

உண்மைதான். தேடலும் வாசிப்பும் இன்றி படைப்புருவாக்கம் என்பது சாத்தியமற்றது என்றே சொல்லவேண்டும்.

Posted

உண்மைதான். தேடலும் வாசிப்பும் இன்றி படைப்புருவாக்கம் என்பது சாத்தியமற்றது என்றே சொல்லவேண்டும்.

உண்மையான பேச்சு இளைஞன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.