Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள்

வ.ஐ.ச.ஜெயபாலன்

செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among the Sri Lankan Tamil Diaspora

Authors: R. Oakley; V. I. S. Jayapalan ) அவரது மொழியாக்கம் ஆங்கில உளவியல் சஞ்சிகையான பொயற்றிக் திறப்பியில் வெளிவந்தது (http://www.informaworld.com/smpp/content~content=a713736723~db=all~order=page)

திருநெல்வாலி சுந்தரனார் பல்கலைக் களக BA external exam பாடநூலாக இருந்ததில் புலம்பெயர்ந்த தமிழ் மானவர்களுக்கு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆய்வுக்காக கனடா சென்றபோது மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நோர்வீஜிய மொழிபெயர்ப்புக்கு நோர்வீஜிய எழுத்தாளர் சங்கம் சிறந்த குடிபுகுந்த எழுத்தாளர் என்கிற விருதை புதிதாக உருவாக்கி வளங்கியது. ஒரு நோர்வீஜிய திரைப்பட இயக்குனர் இக்கதையை பதிவு செய்து வைத்திருக்கிறார். தமிழ் partner எதிர்பார்க்கிறார். எனது முதல் குறுநாவல் வரவேற்பைப் பெற்றபோதிலும் தொடர்ந்து அததிகம் எழுதவில்லை. சேவல் கூவிய நாட்கள் என இன்னொரு குறுநாவல் மட்டுமே எழுதினேன்.

வீட்டில் இருந்து பெரிய படைப்புகளை உருவாக்கக்கும் சாத்தியம் குறைவு. இன்னும் எழுதி முடிக்காத நாவல்களும் காவியங்களுமாகத் தவித்துக்கொண்டிருந்தபோது நண்பரனும் இலக்கிய ஆர்வலனுமான சுசீந்திரனின் அழைபின்பேரில் 1995 கோடைகாலத்தில் பெர்லின் சென்றிருந்தேன். என் நாவல் கனவைச் சொன்னபோது சுசீந்திரன் முதலில் இருந்து ஒரு குறுநாவல் எழுதிப்பார் என்று சொன்னான். செக்குமாடு பெர்லினில் தங்கியிருந்த வாரதில் எழுதியது.

அதன்பின்னர் மூன்று நாவல்கள் எழுதி லண்டன் நூகத்தில் (Archive)வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்காததால் பின்போடப் பட்டுள்ளது. 1824 - 2004 யாழ்ப்பாணக் கிராமத்துப் பெண்களின் 180 வருட மாறுதல்களை நாவலாக்க (உடுவில் மகளிர் கல்லூரி, வேம்பிராய் என்கிற கற்பனைக் கிராமம் மலேசியா கனடா என விரியும் தளம்)ஆரம்பித்து கனடா 3 தடவை சென்று வெளிக்கள வேலை செய்தேன். உடுவில் மகளிர் கல்லூரிக்கும் களவேலை தொடர்பாக போய்வந்தேன். உடுவில் ஞான வைரவர் கோவில் பக்கமாக நான் பிறந்தவீடு இன்று அன்னிய ராணுவதின் முகாமாகச் சிதைந்து கிடந்தது. என் நாவலை முடிக்க லண்டன் நூல்கத்தில் Arhaives ஒருமாதம் வாசிக்கவேண்டும். அதன்பின் கனடாவில் சில மாதங்கள் தங்கியிருந்து எழுதி முடிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. எனது காவியம் ஒன்று பெண்போராளிபற்றியது. கதையை பலதடவை வன்னி சென்ற காலங்களில் பல ஆண் பெண் போராளிகளுனடன் விவாதிதிருக்கிறேன். அதற்காகவும் லண்டன் திணைக்கள நூலகத்தில் வாசிக்க வேண்டும். அடுத்தது பறங்கிய காலத்தில் நெடுந்தீவில் வாழ்ந்த கிளற்சிக்காரனான என் மூதாதை குசுவன் கந்தன் பற்றியது. அதற்காக போத்துகல்லுக்கு போய்வர நூல்கத்திலும் வாசித்து வேண்டும். போத்துக்கலில் எழுத்தார்வமுள்ள தமிழர்கள் தொடர்பு தேடி வருகிறேன்.

யாழ் ஈனையதில் உள்ளவர்கள் உடுவில் மகளிர் கல்லூரியும் உடுவில் பற்றியும் நூல்கள் சஞ்சிகைகள் இருந்தால் பிரதி தந்துதவுவீர்களா. கனடாவில் இறுதி வெளிக்கள வேலைகளில் பங்குபற்ற விரும்புகிறவர்களும் என்னோடு தொடர்புகொள்ளலாம். என்னுடைடைய முயற்ச்சிக்கு உதவக்கூடிய்ய ஆவணங்களையும் நினைவுகலையும் வைதிருப்பவர்களது உதவியை நாடுகிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

visjayapalan@gmail.com

Edited by poet

நல்ல முயற்சி. ஆவணங்கள் ஏதும் கிடைக்கப்பெற்றால் அறியத் தருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. ஆவணங்கள் ஏதும் கிடைக்கப்பெற்றால் அறியத் தருகிறேன்.

நன்றி இளைஞன். வாழும் நாட்களில் கலைஞர்களுக்கு உதவும் மரபு நம்மிடமில்லை. வைதல்களோடுதான் என் முன்னோர்கள் பலர் போய்ச் சேர்ந்தனர். உன்னைப் போலல்ல இன்று தமிழனின் உலலகம் உலகளாவ விரிந்துவிட்டது. தகவல்கள் நேர்காணல்கள் வெளிக்கள வேலைகள் ஆவணங்கள் தேடுவது தமிழ் கலைஞர்களுக்கு இலகுவானதல்ல. ஏனைய சமுகங்களில் குறிப்பாக சிங்களவர் மதியிலும் கலை இலக்கிய இயக்கங்கள் பல்வேறு தளங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. அவர்களால் உலக தரத்துக்கு முனைவதும் சாத்தியமாகிறது. தமிழ்க் கலைஞர்களுக்கு அத்தகைய சமூகம் இல்லை. உங்கள் அன்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.