Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு புன்னகை-கோடி கண்ணீர்த்துளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புன்னகை-கோடி கண்ணீர்த்துளிகள்- சூரிய தீபன்

கிளிநொச்சி போயிருக்கிறீர்களா? தமிழீழத்தின் தலைமையிடமாய் தவிர்க்க முடியாத தற்காலிகத்தில் இயங்குகிற கிளிநொச்சி.

பார்க்க வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அது கொழும்பிலிருந்து அனுராத புரம் கடந்து, மதவாச்சி, வவுனியா, புளியங்குளம் தாண்டி, யாழ்ப்பாணம் செல்லுகிற ஏ-9 சாலையில் இருக்கிறது என்ற வெறும் நில அளவைக் கணக்கல்ல-அது.

"அதிகாரத்தின் வளர்ச்சி தர்க்க ரீதியாக தவிர்க்க முடியாத வகையில் அதிகாரத்தை அழிக்கும் உணர்வையும் வளர்த்தெடுக்கிறது." - பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் ழான் போத்ரியா கூறுவதுபோல் இனவெறியின் அழிவு எங்கிருந்து நிகழப்போகிறதோ, அந்த மையத்தில் இருக்கிறது கிளிநொச்சி.

ஆதிக்க மேலாண்மைகள் எப் போதும் தங்களுடைய தற்கொலையைத் தாமே தீர்மானித்துக்கொள்கின்றன. அழிவு அவைகளுக்கு வெளியிலிருந்து வருவதில்லை. நஞ்சைக் கருவிலேயே தனக்குள் சுமந்திருப்பதால் தற் கொலையை தானே வருவித்துக் கொள்கிற அனைத்து ஆதிக்க உச்சங்களைப் போலவே சிங்கள இன வெறிக் கொடூரம் தற்கொலையின் நிகழ்வில் இருக்கிறது. ஒரு குழு, ஒரு மக்கள் தொகுதி, ஒரு இனத்தின் மீது அதிகாரப் பிரயோகம் செய்து, அடக்கு முறையின் இரண்டாம் கட்டமான அழித்தொழிப்பு போர் நடத்துதல் வழியாக, தன்மீது தானே போர் நிகழ்த்திக்கொள்கிறது. தன்னழிவுப் போராய் உருமாற்றம் கொள்கிறது. இந்த உருமாறுதல் என்பதுதான் அதிகார மேலாண்மையின் தற்கொலை, மக்களின் எதிர்ப்புணர்வும், எதிர்ப்பை மையமாக்கிய போராளிகள் தலைமையும் அந்தத் தற்கொலையை விரைவுபடுத்த துணை செய்கிற விடயமேயன்றி அதன் சாவு முன்கூட்டியே குறியிடப்பட்டு விட்ட ஒன்றாக இருக்கிறது.

சிங்கள ஆதிக்கத்தின் சாவைக் கொண்டாடுகிற நாளில், தாயகத் தமிழர் கள், வரலாற்றை நடத்திய கிளிநொச்சி போய் வரும் வாய்ப்பு காத்திருக்கிறது.

2002 அக்டோபரில் யாழில் நடந்தேறிய "மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுப் பங்கேற்புக்கு ஈழம் சென்றோம். கொழும்பு நகர எல்லை தாண்டி, அனுராதபுரம் வந்து, பிறகுதான் தமிழ்மண் நில எல்லைகள் வருகின்றன.

அனுராதபுரம் இரண்டு நிகழ்வு களின், பெருமைக்குரிய இடமாக ஆகி யிருக்கிறது. ஒன்று-அதன் புரதானப் பெருமை. மற்றொன்று-கரும்புலிகளும், வான்படையும் இணைந்து அனுராதபுரம் ராணுவ விமான தளத்தை சின்னாபின்ன மாக்கி, 24 ராணுவ விமானங்கள், ஒரு ஆளில்லா வேவு விமானம் ஆகிய வற்றை அழித்த வீரப்போர்.

சிங்கள இன ஆதிக்கத்தின் முதல் அநீதி எப்போது தொடங்கியதோ, அந்த நாளிலேயே குண்டித் துணியை உதறி விட்டு, புத்தர் எழுந்து, தேசத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஒரு தோற்றத்தில், புத்தர் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டுவிட்டார் என்பதாகத் தோன்றும். ஆனால் முழுமையான கூட்டு அர்த்தத் தில் சக மனித உயிர்கள் மீது பெளத்த சிங்கள வெறியர்கள் நடத்திய கொலையாடலினால் அவர் நாடு நாடு கடத்தப்பட்டதுதான் உண்மை என்று புலப்படும். அவரை நாடு கடத்திய பின் அவருடைய பல்லை மட்டும் மிகப்பெரிய கோயிலில் ஒரு பூஜைப் பொருளாக மாற்றி வைத்துள்ள இடம் அனுராதபுரம். அந்தப் புராதனமும் வரலாற்றின் உச்சப் பதிவான கரும்புலிகளின் வீரநிகழ்வும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவையாகக் காட்சி தரும். இதுதான் வரலாற்றின் முரண் அவலம். அனுராதபுரத்தின் பெளத்த விகாரத்தை பழமைக்கும் பழமை வாய்ந்த மதவெறியின்- மவெறியுடனினைந்த இனவெறியின் குறியீடாகக் கொண்டால், விமானதளம் தகர்ப்பு விடுதலையின் குறியீடு எனக் காணலாம்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி யிருந்த போது எங்கள் பாதுகாப்புக்கு துணை வந்தார்கள் போராளிகள். யாழை விட்டு நீங்குகிற வரை, அவர்கள் சிறு ஒச்சமும் ஏற்படாமல், எங்களுடன் நடந்தார்கள். முதல் நாள் நள்ளிரவு வரையிலும் மாநாட்டு வேலைகளில் பணியாற்றியவர்கள் களைப்பைத் தூரவீசி, காலையில் எங்கள் ஐவரின் பாதுகாப்புக்குத் தயாரானார்கள். அந்த ஆறு போராளிகளுக்குத் தலைமை யேற்று எங்களுடன் வந்தவர் வீமன். மற்றவர்கள் "வீமண்ணா, வீமண்ணா" என்றுதான் அழைத்தார்கள்.

சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நோக்கிய புலிப் படையின் முன்னநகர் வில், முகமாலை சிங்கள இராணுவ முகாமை தகர்த்து வீழ்த்தியதில், முன்ன ணிப் பாத்திரம் வீமன். நான்கு நாட்கள் மாநாட்டின் இடைவெளியில், ஒரு நாள் முகமாலை களம் சென்று பார்த்தோம். களத்தில் நிலை கொண்டு போராடிய இடங்களையெல்லாம் காட்டினார் வீமன்.

அந்த வீமன் இன்றில்லை.

அனுராதபுரம் விமான தளத்தின் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் இரு பெண் போராளிகள் உட்பட 21 பேர் வீரமரணம் எய்தினர். கரும்புலிகளின் முதன்மைத் தாக்குதல் தளபதியாக இயங்கியவர் லெப். கேணல் இளங்கோ, அடுத்த தளபதியாக இயங்கினார் வீமன். அனைத்து விமானங்களையும் துப்புரவாக அழித்துத் துடைத்தபின், ஆளில்லா வேவுவிமானம் ஒன்று ஒளித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார் வீமன். அதை நோக்கி வேகமாய் ஓடுகிறார். வெடிகுண்டு வீசி எறிகிறார். விமானம் தீப்பிழம்பாகிறது. நான் மூன்றுமுறை காயம்பட்டுவிட்டேன்" என்று தலைைைமக்குத் தகவல் கொடுத்தபடியே சாவைத் தழுவுகிறார் லெப். கேணல் இளங்கோ.

எங்களுடன் வந்து, எங்களுக்குப் பாதுகாப்பு அளித்த போராளி வீமன், பிறகு கரும்புலிகள் அணியில் சேர்ந்திருக்க வேண்டும். கரும்புலி வீமன் இன்றில்லை. நேரடிப் பழக்கமில்லா, நாங்கள் பார்க்காமல் மறைந்த மாவீரர்கள் 18,000 பேர். நேர்ப் பழக்கமாகி, சில நாட் கள் எங்களுடனேயே இருந்த ஒருவர் மரணம் தாங்கிக்கொள்ளக்கூடிய தாயில்லை. இப்படியான ஆயிரமான போராளிச் சாவுகளால் கனத்துக் கிடக்கும் ஈழபூமியின் தற்போதைய தலைமை இடம் கிளிநொச்சி.

கிளிநொச்சி.

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்புகாலில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் மதிய உணவுக்கு அழைக்கப்பட்டோம்.

உரையாடலுக்கும் உணவருந்தி பின்னர் விடை பெறுதலுக்குமாய் மூன்று மணி நேரம்.

சுப. தமிழ்ச்செல்வன், எங்களுடன் கலந்துகொள்வார் என சிறிதும் எண்ணவில்லை.

புன்னகைவிலை மதிப்பற்றது. கோப நெருப்புக்கு எந்த மதிப்புமில்லை. எந்தச் சூழலில் சினம் வெளிப்படுகிறதோ, அந்தத் தருணம் மிக முக்கியம். வீரத்தின் இயக்கம் போலவே வீரத்துக்குள் ஒரு புன்னகை எப்போதும் உயிர்ப்போடு இருப்பதுதான் சரியான வழியில் காரியத்தைச் செலுத்தும் துடுப்பு, தமிழ்ச்செல்வன் நடைமுறையில் இந்தத் துடுப்பைத் தன்னுடன் எப்போதும் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். போராளிகளின் தலைவர் பிரபாகரனைக் கண்ட சூழல் எங்களுக்குள் அதிசயமாக இறங்கியிருந்தது. வானத்தின் வாசலில் நின்றால் என்ன பரவசமாக இருக்குமோ, அதே பரவசமாக தமிழ்ச் செல்வனும் எங்களில் இறங்கியிருந்தார்.

ஒரு சில மணி நேரம் திளைத்த அதிசயம் இப்போது அழிக்கப்பட்டு விட்டது.

ஒரு சில மணி நேரமும், ஒருசில நாட்களும் கண்ட வீரத் திருஉருக்களை இழப்பது தேற்றுதலுக்கு அப்பாற்பட்டது.

தமிழ்ச்செல்வனின் தாயும், ஒரு சகோதரியும், இரு சகோதரர்களும் கனடாவில் வாழுகிறார்கள். முதிய தாய் தன் மகனின் சடலத்தைக் கண்டு கதறி சோகத்தை இறக்கி வைக்கக்கூட இலங்கை அரசு அனுமதிக்க தயாரில்லை. இலங்கை அரசின் மறுப்பை, நார்வே பக்குவமாக புலிகளுக்குத் தெரிவித்து விடுகிறது. கனடாவில் பலநூறு பேர் பங்கேற்ற வீர வணக்க நிகழ்வில், மகனின் உடலுக்குப் பதில் மகனின் படத்துக்கு மெழுகுத்திரி ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்தினார் அந்த முதியதாய்.

அது சிங்களப் பாசிச அரசு.

ஆனால் தமிழகத்தின் தலை நகரில் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு வீர வணக்க ஊர்வலம் நடத்த குழுமியிருந்தோர் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இது என்ன அரசு?

மலருக்கு ஒப்பானது புன்னகை. ஒரு மலரின் மரணம் கோடிக் கண்ணீர்த் துளிகளை உற்பத்தி செய்யும் என்பதை அவருடைய புன்னகை சொல்லிக் கொண்டே இருக்கிறது. நெருப்புக் கங்கை விட, ஒரு புன்னகையை அணைத்து விடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை, சிங்கள இனம் எதிர் வரும் நடவடிக்கைகளில் உணரப்போகிறது.

"பிரிகேடியர் சுப. தமிழ்ச் செல்வனை படுகொலை செய்து விட்டோம் என்று மகிழ்ச்சியடையாதீர்கள். தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொலை செய்து முன்னேறுங்கள். இராணுவத்தை சுதந்திரமாக செயற்படவிடுங்கள்."

ஜே.வி.பி. இன வெறிக் கட்சியின் பரப்புரைச் செயலர் கொண்டாடி மகிழ்கிறார்.

"ஒரு சில படையினரோ, ஒரு சில அரசியல் தலைவர்களோ, ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வன் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு. தமிழீழத்திற்காக உயிர்களை இழந்த மாவீரர்கள் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற உழைப்பதே. தமிழ்ச்செல்வன் உயிருக்கானவிலை" என கரும்புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் கூறியிருப்பதே இதற்கான பதில்.

ஒரு புன்னகையைக் கொலை செய்வதற்கான விலை இதுதான். அந்தப் புன்னகை பயணம் செய்யும். அது விடுதலையின் நாளுக்காகப் போராடுகிற ஒவ்வொரு புல்லையும், ஒவ்வொரு பனையையும் போஷித்து வளர்க்கும். விடுதலைக்காக விதைக்கப்படட கல்ல றைகளில், விடுதலை விதை முளைக்காத கல்லறை எதுவும் இல்லை எனச் சொல்லியபடி பயணத்தை தொடரும்.

-தென் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ! இதைவிடச் சொல்லத் தெரியவில்லை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.