Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

Featured Replies

தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என 48 வயது சிங்கள மூதாட்டி ஒருவரை சிறீ லங்கா காவல்துறை கைது செய்துள்ளது. ஆதாரம் Daily Mirror

Police arrest Dambulla bomb suspect

A 48 year old Sinhala woman a resident of Kilinochchi who had brought the bomb which exploded in a private bus at Dambulla on Saturday was arrested by Dambulla police yesterday while she was undergoing treatment for burn injuries at the Dambulla hospital.

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை குண்டு தாக்குதலின் சூத்திரதாரியான சிங்கள பெண் பொலிஸாரால் கைது

2/8/2008 1:59:31 PM

வீரகேசரி இணையாம் - தம்புள்ளையில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற கோர பஸ் குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சிங்களப் பெண்மணி ஒருவரை தம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்குண்டுவெடிப்பில் சிக்குண்டு கால்கள் இரண்டிலும் கடுமையான எரிகாயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெறும் நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரிடம் பொலிஸார் தற்போது வாக்குமூலங்களை பெற்றுவரும் நிலையில் கண்டி கென்கல்லை எனும் இடத்தைச் சேர்ந்த பி.ஜி ஹேமலதா (வயது48) எனும் பெண்ணிடமும் வாக்குமூலம் பெற முற்பட்டனர். ஆயினும் சரியான சிங்கள உச்சரிப்பு கொண்டிராத அப்பெண் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த குற்றப்புலனாய்வுத் துறையினர் அவரை விசாரணைக்குட்படுத்தவே அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கண்டி கென்கல்லையைச் சொந்த இடமாகக்கொண்ட அப்பெண் தனது 14வது வயதில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிச்சென்று கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது 48 வயதான அப்பெண்ணுக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பதுடன் இருவரும் புலிகள் இயக்கத்தில் உள்ளனர் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் பல தடவைகள் ஓமந்தை ஊடாக தென்பகுதிக்கு வந்து சென்றதாக தெரிவித்துள்ள அப்பெண் கடந்த மாதம் 24ம் திகதி இறுதியாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவிக்கையில்,குறிப்பிட்ட குண்டுப்பொதி தன்னாலேயே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளதுடன் அது என்ன நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்பதுடன் பஸ்ஸினுள் அது வெடிக்கும் என தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் கூறியுள்ளார்.

பஸ் வண்டியானது பௌத்த யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு அனுராதபுரம் மகாபோதிக்குச் சென்றது என்பதுடன் அனுராதபுரத்தில் அக்குண்டு வெடித்திருந்தால் பெருமளவு உயிர்ச்சேதமும் பாரிய அரசியல் நெருக்கடிகளும் தோன்றியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.