Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவர்களை அழித்துவிடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அவர்களை அழித்துவிடுங்கள்"-

எஸ்.எம்.ஜி)

"கோத்தை படுகிற பாடு கிடக்க, குத்தியன் எதுக்கோ அழுதானாம்" என்றொரு பழமொழி இன்னும் ஈழத்தில் சில பகுதிகளில் வழக்கில் இருக்கிறது.

இலங்கையில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தப் பழமொழியைத்தான் நினைவூட்டுகின்றன.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தேர்தலில் போட்டியிடு வதற்காக ஒரு கூட்டணி அமைக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தாவின் சிந்தனைக்கு தமிழில் வியாக்கியானம் செய்யும் பொறுப்பை உடையவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.

கிழக்கு குறிப்பாக மட்டக்களப்பு பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலைபெற்று விட்டதாக அரசும் அதன் துணைப்படைகளும் அறிவித்த பின்பு அங்கு இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தல் என்னும் பெயரில் இன்றும் நிரந்தர வசிப்பிடமின்றி வாழும் அவலம் சொல்லி முடியாது.

அகதி முகாம்களில் தங்கியிருப்ப வர்களின் நிலையோ மோசம். 2. லண்டனிலிருந்து தினமும் இரவில் அரைமணிநேரம் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி. தமிழ் ஓசை நிகழ்ச்சியில்தான் இடம் பெயர்ந்த மக்களின் அவலங்களை அவர் கள் வாயினாலேயே அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் "தனிப்பெரும்" தலைவர் ஆனந்த சங்கரி சில வாரங்களுக்கு முன் மட்டக்களப்புக் குச் சென்றிருந்தார். அச்சமயம் பி.பி.ஸி. நிருபர்கள் நீங்கள் இவ்வளவு காலமும் கிழக்குப் பகுதிக்கு வராமல் இப்பொழுது வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று கேட்டார். இதற்கு "இவ்வளவு காலமும் வரக்கூடிய மாதிரியாகாவ இருந்தது?" என்று சங்கரி பதில் சொன்னார்.

சங்கரியார் வந்து போனதன் சந்தோஷமோ என்னவோ, ஆயுதந் தரித்த கும்பல் சில மட்டக்களப்பில் வீடு வீடாகப் புகுந்து மக்களை ஆயுத முனையில் மிரட்டி நகைகளையும் பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையைப்பற்றி வெளியே சொன்னால் உடலில் உயிர் இருக்காது என்று பயமுறுத்தியும் சென்றது. இதன் பின் கொள்ளைகள் நிறுத்தப்பட்டனவா அல்லது அவர் வெளியே செல்வது தடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

காலத்துக்கு காலம் வெள்ளை நிறவேன் வந்து கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும் பின்னர் சில காலம் ஓய்ந்திருப்பதும் கடந்த கால அனுபவம். கொழும்பில் கூட தமிழ் வர்த்தகர்களை வெள்ளைவேனில் வந்து மிரட்டியதும், முழத்துக்கு முழம் உள்ள சோதனைச் சாவடிகளையும் தாண்டி இந்தவெள்ளை வேன் எப்படி மிரட்டிப் பணம் கொள்ளையடித்தது என்று வர்த்தகர்கள் உரக்கக் குரல் கொடுத்த பின்தான் அது ஓய்ந்தது என்பதும் மறந்துவிட்ட சம்பவங்கள். சங்கரியாருக்கு பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பு வந்த பின் தேர்தலில் போட்டியிடுவதற்குள் ஆள் பிடிக்க மட்டக்களப்புக்குப் போனாரோ, தெரியவில்லை. அவர் அங்கு போய்த் திரும்பிய பின்னர்தான் வீடு வீடாக நகைகளும், பணமும் கொள்ளை யடித்தனர். இப்போது டக்ளஸ் அமைத் துள்ள கூட்டணியில் சங்கரியாரின் கூட்டணி இடம் பெற்றதாகத் தெரிய வில்லை. ஒருவேளை டக்ளசுடனோ வேறு யாருடனோ இரண்டறக் கலந்துவிட்டாரோ தெரியவில்லை.

இடம் பெயர்ந்த மக்கள் நிரந்தர வீடில்லாமலும் மீளக் குடியமர்ந்து விட்டதாக ஆளும் தரப்பு பெருமையுடன் பறைசாற்றினாலும் உணவுக்கும் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் களுக்கும் பாடாய்ப்படுகிறார்கள். இப்போது மழை வெள்ளத்தில் கூடாரங் களில் தங்கியிருக்கும் மக்களின் அவலம். எந்த நேரம், எவர் வருவார் யாரைக் கடத்திச் செல்வார்கள் என்ற பயம். இந்த அவல வாழ்வில் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா? வாக்களிக்காவிட்டால் எவர் என்னசெய்வார்களோ என்ற அச்சம் வேறு.

டக்ளஸ் தேவானந்தா தலைமை யிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை மக்கள் புலிகள் (இதன் தலைவரான கருணா கள்ளக் கடவுச் சீட்டில் நாட்டுக்குள் வந்ததாக இலண்டனில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு தண்டனை பெற்று சிறையில் உள்ளார்). தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகியவை இந்தப் புதிய கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றனவாம்.

இந்தக் கூட்டணியில் சேர்ந்துள்ள தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பு மக்களின் உரிமைகளுக்காக இக்கூட்டணி போராடுமென்று தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்குத் தலைமை வேண்டா மென்று தானே கருணா அணியை உருவாக்கியவர்கள் இப்பொழுது கருணாவையும் கைவிட்டு டக்ளஸ் தலை மையில் (மட்டக்களப்பு) உரிமைகளுக்காக எப்படிப் போராடுவார்கள்?

இது மட்டுமல்ல இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி (ராஜீவ்- ஜெயவர்த்தனா) வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெற தேர்தல் நடைபெற வேண்டுமென்றும் இது சம்பந்தமாக ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சவுடன் பேசியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சில தினங்களுக்கு முன தெரிவித்திருந்தார்.

"கிழக்கைப் பிடித்துவிட்டோம், வடக்கிலும் விடுதலைப்புலிகளை அழித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். புலிகளின் தலை வர்கள் இருக்குமிடங்கள் எங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவராகவும் அழித்துவிடுவோம்," மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கொத்தபயராஜபக்சா சொல்லியிருக்கிறார். பிரதமர் இரத்தின சிறீவாகிரம நாயகாவும் வெற்றி முழக்கம் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகள் இருக்கும் இடங்களையும் அவர்களைப் பற்றிய தகவல்களையும் பொதுமக்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மகிழ்ச்சியோடு கூறிவருகிறார். டக்ளஸ், ஆனந்த சங்கரி போன்றவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக சில தகவல்களை நன்றி கடனாகத் தெரிவித்திருக்கலாம்.

இன்று மக்கள் பாதுகாப்பாக எங்கேயும் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் மனித உரிமை ஆவணக்குழுவிடமே அடைக்கலம் தேடுகிறார்கள். விடுதலைப் புலிகளிடம் முன்பு போய் அடைக்கலம் தேடிப் பாதுகாப்பாக இருந்தார்கள். இன்று அங்கேயே தமிழ்ச் செல்வன் உயிரை விமானக் குண்டு வீச்சில் பறித்த பிறகு அங்கேயும் போக அஞ்சுகிறார்கள்.

ஐ.நா. சபைத் தலையிட்டு ஒரு முடிவு காணவேண்டும். 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அளித்த தீர்ப்பின் கணிப்பின்படி ஐ.நா. சபையே வடக்கு கிழக்கு மக்கள் ஈழக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை இலங்கை அரசின் எந்தத் தலையீடும் இல்லாமல் வாக்டுெப்பு நடத்த வேண்டும்.

இப்படி சுயேச்சையான சுதந்திர மான வாக்கெடுப்பு நடத்தினால் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் யாரை வெறுக் கிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து விடுவார்கள்.

1977தேர்தலின் போது ஐ.நா. தலையிட்டு இந்த வாக்கெடுப்பை நமீபியா, கிழக்குத் தைமூர் போன்று நடத்தியிருக்க வேண்டும். சிங்களத் தலைவாகளின் நரித் தந்திரத்தால் இனக் கலகத்தை தூண்டிவிட்டு இனஅரசிய

லில் ஈடுபட்டு குழப்பிவிட்டனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் ஐ.நா. சபை தலையிட்டு ஈழப்போராட் டத்திற்கு உலகில் புலம் பெயர்ந்து வாழ்ந்த தமிழீழ மக்கள் உட்பட தமிழீழத்திலுள்ள மக்களிடம் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தி முடிவு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.

இலங்கையின் பாதுகாப்புப் படைகள் தமிழ் மக்களின் பாதுாப்புக்காக தமிழ்ப் பிரதேசங்களில் பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாக்க அயல் நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். எஞ்சியவர்களில் தினமும் இரண்டு மூன்று ஏழை இளைஞர்கள் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் மற்றும் சிலர் அடையாளம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் உறவினர்கள் சமீபத்தில் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டனர். வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு முடிந்ததும் மூவரும் விடுவிக்கப்பட்டனர். இதிலிருந்தே இவர்களைக் கடத்தியவர்ள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதா?

தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும நிலைமை இப்படியிருக்க மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் தமிழ் அமைச்சரும் மகிந்த சிந்தனைக்குத் தமிழில் வியாக்கியானம் செய்பவருமான டக்ளஸ் தேவனாந்தா.

முன்பு நடந்த பொதுத் தேர்தல்களிலும் மக்கள் இடம் பெயர்ந்து அல்லல்பட்ட சமயத்திலும் இ.பி.டி.பி. தேர்தலில் போட்டியிட்டது. 94ஆம் ஆண்டில் தமிழ்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இ.பி.டி.பி. போட்டியிட்டது. ஐந்தாறு வாக்குகள் பெற்றவர்களும் தேர்தலில் வெற்றிபெற்தாக அறிவிக்கப் பட்டனர். இவர்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவாறு தேர்தல் விதிமுறைகளை மறுத்து தேர்தலில் போட்டியிடவில்லை என்று பெடரல் அமைப்பு தெரிவித்தது. ஆனாலும் அவர்கள் ஆறு வருடங்களும் எம்.பி.க்களாக இருந்து அனுபவித்தனர்.

தேர்தல் காலங்களில் வாக்குச் சீட்டுகளுக்கு விலை கொடுத்த சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. துணைப்படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று ஜெனீவா மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புப் பிரதிநிதிகளும் நாடு திரும்பியதும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் கூட இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப் பட்டனர். அன்று தொடங்கிய துப்பாக்கிச் சூடு படைகளின் பாதுகாப்புடன் இன்றும் நீடித்து வருகிறது. "சுடுகிறார்கள் கொல்கிறார்கள்" என்று ஓலமிட்டு சந்திரிகாவுக்கும் மற்றையோருக்கும் கடிதங்களாக ஏழுசிங்கள, ஆங்கில ஊடகங்களில் கடிதங்களாகவும் கட்டுரை களாகவும் வெளியிட்டு ஜனநாயகக் காவலர் ஆனந்த சங்கரிக்கு இப்பொழுது நாள்தோறும் ஏழு எட்டு, பத்து என்று தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப் படுவது தெரிவதில்லை.

இடம்பெயர்ந்த அகதிமுகாம்களின் அவல வாழ்வு; சுட்டுக்கொலை செய்வது; ஆட்களைக் கடத்தித் துன்புறுத்துவது- போன்ற அட்டுழியங்களால் தமிழ் மக்கள் உரிமை கோரவும் விடுதலை என்று சொல்வதற்கும் விடுதலைப் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும் முன் வரக்கூடாது என்பதை நிலை நிறுத்திவிட்ட திருப்தியில் இப்பொழுது உள்ளராட்சித் தேர்தல்களிம் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட ஆயத்தமாகிவிட்டார்கள் இந்த ஜனநாயக காவலர்கள்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.