Jump to content

தமிழ் மொழி இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் - தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி


Recommended Posts

தமிழ் மொழி இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தினார்.

உலகச் செம்மொழிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் மையப் பொருளை விளக்கி சிவத்தம்பி பேசியதாவது: தமிழ் பேசுவோர் காலம் காலமாக தங்களது கருத்துகள், சிந்தனைகள், அனுபவங்களைத் தமிழில் பதிவு செய்வதால் இம்மொழி செம்மொழி என்ற சிறப்பைப் பெறுகிறது. மொழி பேசுவோரின் வரலாறு, மக்களின் வாழ்க்கைத் திறன் ஆகியவை அந்த மொழியில் பதிவு செய்யப்படும்போது, மொழியின் சிறப்புத் தன்மை வெளிப்படுகிறது.

ஐரோப்பாவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கம், லத்தீன் ஆகியவைதான் சிறப்பு பெற்றன. ஐரோப்பிய நாகரிகத்துக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது கிரேக்க, லத்தீன் மொழி சார்ந்த நாகரிகம் தான். லத்தீன் ஐரோப்பாவில் அரசவை மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருந்தது. ரோமாபுரி ராஜ்ஜியத்தினர் ஆட்சி மூலம் லத்தீன் மொழியின் செம்மை காணப்படுகிறது. கிரேக்க லத்தீன் மொழிகள் தொன்மையும் சிறப்பும் கொண்டவை. அதே சமயம் அந்நாட்டு மனிதன் இயற்கையை ஆண்டான். இந்தியாவில் அக்காலத்தினர் இயற்கையால் ஆளப்பட்டு வந்தனர். அந்த மொழிகள் மனித மேம்பாடு, மானுட வளர்ச்சிக்கான வளங்களைக் கொண்டதாக இருந்தன. தமிழை திராவிட தேசப் பகுதிக்குரிய மொழியாகக் கருத இயலாது. இந்தியாவின் பண்டைய பண்பாடு, நாகரிகம் சார்ந்ததாகவே தமிழைக் கருத வேண்டும் என்றார் சிவத்தம்பி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த நிதியமைச்சர் க.அன்பழகன்: தமிழ் மொழி உலக அளவில் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டியதற்கு காரணங்கள் உண்டு. தொன்மை, இன்னும் பேசப்படுவது, தொடர்ச்சியாக வாழ்வது, இலக்கிய வளம் ஆகியவை மட்டும் அல்ல. தமிழின் இலக்கியங்கள் கூறும் கருத்துகள் உலகளாவிய வகையில் இருக்கின்றன. அதுவும் மிக முக்கியமான காரணம் ஆகும். உயர்ந்த கருத்துகள் கொண்ட மொழிதான் உலக செம்மொழியாகக் கருதப்பட வேண்டும் என்பதும் ஓரு நியதி. அதன்படி தமிழ் செம்மொழிக்கான சிறப்பு பெறுகிறது என்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. ஆறவாணன்: கிரேக்கம், லத்தீன், அரேபியம், சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட அம்மொழிகளைப் பேசுவோரின் செல்வாக்குதான் முக்கிய காரணமாக இருந்தது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துவிடுவதுடன் நிற்காமல் தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்கள் உயர்வு பெற்றாக வேண்டும். அதற்குப் பாடுபட்டாக வேண்டும். தொடக்க காலத்தில் தமிழ் அடிமை மொழியாக இருந்தது. பிறகு கூலி மொழியாக ஐரோப்பியர்களால் 15-ம் நூற்றாண்டில் அழைக்கப்பட்டது. தற்போது அகதி மொழியாகக் கருதப்பட்டு வருகிறது என்றார்.

மூலம்: தினமணி

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

பாவேந்தர் பாரதிதாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி;றநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழpயில் இயற்றல் வேண்டும். அது தான் தமிழினத்துக்குக் கூடிய நன்மை பயக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.