Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம்’

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங்கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார்.

வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு:

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்?

தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமிழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்பட்ட தமிழர் நிலத்தில் இயல்புநிலை தோன்றிவிட்டதென்று உலகிற்குக்காட்டுவதற் காக மோசடித் தேர்தலைச் சிங்கள ஆட்சியா ளர்கள் நடாத்துவது வழமை.

யாழ்.குடாநாடு ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இத்தகையதொரு மோசடித் தேர்தலைச் சிறி லங்கா அரசு நடத்தியிருந்தது. இப்போது தென் தமிழீழத்திலும் இத்தகையதொரு தேர்தலை நடத்த முனைகின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்ற பெய ரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற மகிந்த அரசு முற்படுகின்றது. வடக்கு, கிழக்கு என்று தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்ற பெயரில் நடக்கும் இந்தச் சதி முயற்சி மூலம் தமிழர் தாயகப் பிரதேசத்தைச் சிதைப்பதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என சிறிலங்கா அரசு நம்புகின்றது.

தமிழர் தேசியத்திற்குத் துரோகம் இழைத்த படி சிங்களப் பேரினவாதத்தின் கூலிப்பட்டாள மாகச் செயற்படும் துணை இராணுவக் குழுக் களைக் களமிறக்கி அவர்களைத் தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் போல காட்டும் அபத்த நாடகத்தை அரங்கேற்ற மகிந்த அரசு முற்படு கின்றது.

இத்தகைய அரசியல் சதிகளை அரங்கேற்று வதன் மூலம் தமது பேரினவாத அபிலாசை களை நிறைவேற்றி விடலாம் என்ற சிங்களத் தின் கதை ஒருபோதும் பலிக்கப்போவ தில்லை.

தமிழ் மக்களின் அபிலாசையான தாயகக் கோட்பாடு மிக வெற்றிகரமாகச் சிதைக்கப் பட்டு வருவதாகத் தமிழ் மக்கள் பெரும் கவலையுடன் கூறுகின்றனரே?

தமிழர் தாயகத்தின் சில பகுதிகளை ஆக்கிர மிப்பதாலோ, ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத் தில் மோசடித் தேர்தல்களை நடாத்துவதாலோ தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைத்து விட்ட தாகக் கூறமுடியாது.

தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் செய்யப்பட்டு வந்த நில அபகரிப்பு எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வளர்ச்சி மூலம் தடுக்கப்பட்டு வருகிறது என் பது எமது மக்களுக்கு நன்கு தெரியும்.

தமிழரின் படைப்பல அதிகரிப்புத்தான் சிறி லங்கா அரசின் இத்தகைய இராணுவ அரசியல் சதி முயற்சிகளை முறியடிக்கும் சக்தி கொண்ட தாகும். எனவே சிறிலங்கா அரசின் நடவடிக் கைகளைப் பார்த்து அவ நம்பிக்கை அடைவ தற்குப் பதிலாக ஒற்றுமையுணர்வுடன், சிறி லங்கா அரசின் இந்தத் திட்டத்தை முறியடிப் போம் எனத் தமிழ்மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.

இந்த வருட இறுதிக்குள் கிழக்குப் போன்று வன்னியும் விடுவிக்கப்பட்டு விடும் என்று அரசதரப்பு மிக அழுத்தம் திருத்தமாக உறுதியாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறது. இது பற்றி நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?

வன்னியைப் பிடிக்க முயன்ற சிறிலங்காப் படைகள் வன்னிப் போர்க்களத்தில் சிக்குண்டு திணறுவதுதான் தற்போதைய வன்னிக்கள யதார்த்தமாகும். கடந்த ஒருவருட காலமாக சிறிலங்காவின் போர் இயந்திரம் எமது தாக்கு தல்களால் முடங்கிப்போயுள்ளது.

அத்தோடு மாதம் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படைகள் கொல்லப் பட்டோ, காயமடைந்தோ களத்தை விட்டு அகற்றப்படுவதைச் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இது வன்னிப் போரரங்கு சிறிலங்காப் படை களுக்குப் புதைகுழியாக மாறி வருகின்றதென் பதையே காட்டுகிறது.

இந்த நிலையில் உண்மையான இராணுவ யதார்த்தத்தை மூடி மறைத்துப் போரில் புலி களை வெல்வது போல் பொய்யான புள்ளி விபரங்களை உலகிற்குக் கூறிச் சிறிலங்கா அரசு பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றது.

ஆனால் சிறிலங்காவின் இந்த பொய்ப் பிர சாரத்தை நம்பும் நிலையில் பெரும்பாலான உலக நாடுகள் இல்லை.

வன்னியில் தொடர்ச்சியாக விமானத்தாக் குதல் நடத்தப்படுகின்றது. தமிழீழ விடுத லைப் புலிகளின் இலக்குகள் மிகத் துல்லிய மாகத் தாக்கப்படுவதாக அரசதரப்பு கூறுகி றது. இந்த விமானத்தாக்குதல்களின் இலக்குகள், இழப்புகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பொதுமக்களை இலக்குகளா கக் கொண்டு சிறிலங்கா வான் படை நடாத்தும் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் குடும்பம், குடும்பமாக மக்கள் அழிக்கப் படுவது அனைவரும் அறிந் ததே. பொதுமக்கள் மீதான இந் தத் தாக்குதல்களையும் புலிக ளின் முகாம்கள் மீது நடாத்தப் பட்ட தாக்குதல்களாகவே சிறிலங்கா அரசு காட்டு கின்றது.

சிறிலங்கா வான்படை நடாத் தும் இந்த தாக் குதல்களால் மக் கள் குடியிருப்புக்கள் அழிக்கப் படுவதையும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுவதை யும் இங்கு இயங் கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நன்கறிந்துள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகள் பலமிழந்து விட்டதாகவும், அதனாலேயே அவர்களால் போரில் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை என்ற வாதமும், பிரசாரமும் மிக முனைப் பாக முன்னெடுக்கப்படுவது பற்றிய தங்க ளது கருத்து என்ன?

வன்னிப் பெருநிலப்பரப்பில் நீண்டதொரு போர் முனையை திறந்து உள்நுழைய முயலும் சிறிலங்காப் படையைத் தடுத்து நிறுத்தும் முதற்கட்ட நடவடிக்கையே இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் யுத்தமாகும்.

இந்த யுத்தத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறிலங்காப் படைகள் தாம் நினைத்த இலக்கு களையே எட்ட முடியாதுள்ளனர். எடுத்துக் காட்டாக மடுவை அவர்கள் கைப்பற்ற எடுத்த முயற்சியும் அதில் அவர்கள் முன்னேற முடி யாது திணறி வருகின்றமையும் நல்ல எடுத்துக் காட்டு.

இதன் அடுத்த கட்டமாக சிறிலங்காப் படை களால் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தாயகப் பிர தேசங்கள் எமது படையணிகளால் வெற்றி கொள்ளப்பட்டு மீட்கப்படும் என்பது உறுதி.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் மனிதஉரிமை மீறல்கள் நடப்பதாகவும், ஊடகச் சுதந்திரம் முற்றாக மதிக்கப்படுவதில்லை என்றும் குற் றச்சாட்டுக்கள் புலிகள் மீது முன்வைக்கப் படுகிறது. இது பற்றி நீங்கள் என்ன கூறு கிறீர்கள்?

இவை சிறிலங்கா அரசு சுமத்தும் பொய் யான குற்றச்சாட்டுக்களாகும். புலிகள் இயக்கத் தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு சிவில் நிர்வாகம் சீரான முறையில் முன்னெடுக்கப்படு கிறது என்பதை இங்குள்ள தொண்டர் அமைப் புக்கள் பகிரங்கமாகவே கூறிவருகின்றன.

சட்டம் ஒழுங்கு பேணும் முறை புலிகளின் நிர்வாகப் பகுதியில் திறமையாக நடைபெறு கிறது என்பதை ஏற்றுக்கொண்டு புலிகள் இயக் கத்தை மனம்விட்டுப் பாராட்டியுமுள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து செய்திகள் சேகரிக்க முயலும் வெளிநாட்டு ஊடகங்களை சிறிலங்கா அரசு தடுத்து நிறுத்தி விட்டு பொருத்தமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது வேடிக்கையானது.

சிறுவர் உரிமைகாப்பு, பெண்கள் நலன் காப்பு, முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் காப்பு என்ற விடயங்களில் புலிகள் இயக்கம் காட்டிவரும் அக்கறை அனைவரும் அறிந் ததே.

பெற்றோர்களை இழந்த மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பராமரிக்கவும், முதியோர்களைப் பாதுகாக்க மூதாளர் பேண லகங்கள் மற்றும் பல நலன்காப்பு அமைப்பு களை நிறுவி சர்வதேச நியமங்களுக்கமைவாக மக்களின் சமூக மேம்பாட்டிற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

அத்தோடு, மனிதஉரிமைகள் தொடர்பான கருத்தூட்டல்களையும் அவை தொடர்பான சர்வதேச விதிமுறைகளையும் புலிகள் இயக் கம் தொடர்ந்து கடைப்பிடித்தே வருகின்றது. அது சர்வதேச சமூகத்திற்கும் நன்கு தெரியும்.

அரச தரப்பும் அவர்களுடன் சார்ந்தவர்க ளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமி ழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசா ரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வரு கின்றனர். சர்வதேச ரீதியிலான பயங்கரவாத இயக்கங்களுடனும் விடுதலைப்புலிகளைத் தொடர்புபடுத்தி இந்தப் பிரசாரம் செய்யப் படுகிறது. இதுபற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்க ளுடன் புலிகள் இயக்கத்தை இணைத்துச் சிறி லங்கா அரசு செய்யும் பரப்புரை சர்வதேச ரீதி யாக எடுபடவில்லை என்பதே உண்மையா கும்.

இன்னொரு வகையாகச் சொன்னால் சிறி லங்கா அரசை ஒரு பயங்கரவாத அரசாகப் பார்க்கும் பார்வை உலக நாடுகளிடம் வளர்ந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

சிறிலங்காவுக்கான உதவி நிதிகளை நிறுத்து வதும், போர் ஆயுதங்களைக் கொடுக்க மறுப்ப தும், எச்சரிக்கைகளை, நிபந்தனைகளை விதிக்க முற்படுவதும் மேற்கூறிய கருத்தை நியாயப் படுத்துவதாகவே உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் புலிகள் இயக்கம் மீது பயங்கரவாத முலாம் பூசும் சிறிலங்கா அர சின் செயல் தற்போது உலகளாவிய ரீதியில் எடுபடுவதில்லை என்பதே உண்மை.

அரசதரப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை இனவிவகாரத் தீர்வு குறித்து எதுவும் உருப்படியாக முன்வைக்காத நிலையே இன்றுவரை தொடர்கிறது. இதுகுறித்து சர்வதேச சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

தமிழரின் பிரச்சினைக்கு உருப்படியான ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் எண்ணம் சிறிலங்கா அரசுக்கு எப்பொழுதும் இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவது மில்லை. அரைநூற்றாண்டு கால அனுபவத் தின் மூலம் தமிழினம் பெற்ற பாடமிது.

இந்த அரசியல் உண்மையை உலக நாடு களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என சர்வ தேச மட்டத்தில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக்கூறி வருகின்றோம்.

புலிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் சிறிலங்கா அரசு செய்யும் பொய்ப்பிரசாரங் கள் இப்பொழுது பெரிதாக எடுபடுவதில்லை. சிறிலங்கா அரசின் இனவெறிக் கொள் கையை கடும்போக்கை, சமாதானத்தில் நாட்டமில்லாத போர்வெறியை உலகம் மெதுமெதுவாகக் கண்ட றிந்து வருகிறது.

இந்த நிலையில் சிறிலங்கா அரசின் வர லாற்று ரீதியான,விட்டுக்கொடுக்காதபோ??்கும் அதன் தமிழின அழிப்பு நடவடிக்கைகளும் தமிழ்மக்களை தமக்கென ஒரு அரசுக்காகப் போராடுவதைத் தவிர வேறெந்த மாற்றுவழிக ளுக்கும் விட்டுவைப்பதாக இல்லை.

இதைத்தான் தமிழ்மக்களும் இரண்டு தட வைகள் 1977 2004 சனநாயகத் தேர்தல் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த மக்கள் ஆணைக்கு ஆதரவாக சர்வ தேச சமூகம் குரல்கொடுக்க வேண்டும் என்பது தான் எமதியக்கத்தினதும் தமிழ் மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென இன்றுவரை கூறுகின்றனர். ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அப்பால் படைநடவடிக்கை தொடர்வது மாத்திரமல்ல கிழக்கும் விடுவிக்கப்பட்டதாக அரசு அறி வித்துள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டுக்கு உங்களை தூண்டிய சக்திகள் குறிப்பாக சர்வதேச சமூகத்திடம் இது குறித்து ஆரய்ந்தீர்களா?

சம்பூரில் வாகரையில் மட்டக்களப்பு படு வான்கரையில் இங்கெல்லாம் நில ஆக்கிர மிப்பைச்செய்ய பெரும்போரை சிறிலங்காப் படைகள் செய்துகொண்டிருந்த பொழுதே நோர்வேக்கு ஊடாக சர்வதேச சமூகத்திடம் நாங்கள் கருத்துப்பரிமாற்றம் செய்தோம். சிறி லங்காவின் போர் வெறியை உலகின் முன் னால் அம்பலப்படுத்தும் அரசியல் கருத்தாடல் களை எமது இயக்கம் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றது.

ஆயினும் சர்வதேசசமூகத்தின் அபிப்பிரா யங்களை கருத்திலெடுக்கும் நிலையில் சிறி லங்கா அரசு இல்லை. இந்த அரசியல் யதார்த் தத்தை சர்வதேச நாடுகளும் உணர்ந்து வருகின்றன.

போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு தன்னிச்சையாக விலகிக்கொண்டு விட்டது. நோர்வேயின் மத்தியஸ்தமும் முடங்கிப்போய்க் கிடக்கின்றது... அதாவது சமாதான பேச்சுக்கான அனைத்துக் கதவுக ளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்தும் நீங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுவதிலும் நோர்வே யின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்தும் வலி யுறுத்திக் கொண்டிருப்பதிலும் அர்த்த மேதும் உண்டா?

சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் ஆவணத்தை நாங்கள் மீற வில்லை என்ற உண்மையை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

ஏனெனில் அரசியல் ஆவணங்களை ஒப் பந்தங்களை தான் விரும்பியநேரத்தில் செய்வ தும் தான் விரும்பியநேரத்தில் மீறுவதும் கிழித் தெறிவதும் சிறிலங்கா அரசின் அரசியல் வரலாறாகும். இதுவரை காலமும் தமிழர்க ளுடனான ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து வந்த சிறிலங்கா அரசு இப்போது சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறிச் செயற்படத் தொடங்கிவிட்டது. சிறிலங்கா அரசின் இந்தச் சட்டவிரோதச் செயலை பல உலக நாடுகளும் கண்டித்திருந்தன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகுவதிலும் அதைத் தொடர்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தை களை முன்னெடுத்ததிலும் அனுசரணையாளர் களாக செயற்பட்ட நோர்வே அரசின் வகி பாகம் மிக முக்கியமானதாகும்.

நோர்வே நான்கரை வருட காலமாக சமாதா னப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாள ராக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ள தன் காரணமாகவே நாம் நோர்வேயின் அனு சரணைப்பணியை வலியுறுத்தி வருகின்றோம்.

இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்ப தையே ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர் பார்த்துள்ளனர். இதுபற்றி உங்களது பதில் என்ன?

வன்னி மீது சிறிலங்காப் படைகள் தொடுத் துள்ள பெரும்போரை எதிர்கொண்டு முறிய டிப்பதுதான் புலிகள் இயக்கத்தின் இன்றைய பிரதான பணியாகவுள்ளது.

இதேசமயம் உலகளாவிய ரீதியில் ஓரங்கட் டப்பட்டுவரும் சிறிலங்கா அரசை மேலும் அம்பலமாக்கி சிறிலங்காவின் போர்க்கொள் கையை பலவீனப்படுத்தும் வகையிலான உலகளாவிய வேலைத்திட்டங்களை நாம் விரைந்து முன்னெடுத்து வருகின்றோம்.

அத்தோடு எமது இலட்சியத்தை நோக்கி எமது மக்களை அணிதிரட்டி போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு, நடவடிக் கைகள் குறித்து ?

எங்களைப் பொறுத்தளவில் ஈழத்தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பான ஒரு பகைமைப் போக்கையே இந்தியா கடைப்பிடித்துவருகின் றது.

சிறிலங்கா அரசின் போர்க் கொள்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக் கின்றது. சிறிலங்கா அரசுக்கான தமது ஆத ரவை இந்தியாவின் தேசியநலனுக்கு உகந்த செயலாக இந்தியகொள்கை வகுப்பாளர்கள் நோக்குவது தவறான மதிப்பீடாகும்.

வரலாற்றை நாம் ஒருமுறை பின்னோக்கிப் பார்த்தால் இந்தியா அரசியல், இராணுவ ரீதி யில் இடர்பட்டநேரங்களிலெல்லாம் இந்தியா வின் எதிரிகளுடன்தான் சிறிலங்கா அரசு நின்றிருக்கின்றது.

எனினும் சிறிலங்கா அரசுதான் தனது நண் பன் என்று இந்தியா நம்பிக்கொண்டிருப்பது விசித்திரமாகவுள்ளது.

தமிழ் சிங்கள இனப்பிரச்சினைக்கு அமைதிவழியில்தான் தீர்வுகாண வேண்டும் என்று இந்திய அரசு அறிக்கைகள் விடுத்தா லும் சிறிலங்கா அரசின் போர் முயற்சிக்குத் தான் அது உதவுகின்றது என்பதை இந்தியா வின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை தமிழ் மக்க ளைப் பொறுத்தவரையில் மிகவும் வேதனைக் குரிய விடயமாகவும் கண்டனத்துக்குரிய விடயமாகவுமுள்ளது.

சமாதான பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உண்மையிலேயே விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்களா?

சமாதான வழியில் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் மன நிலையில் சிறிலங்கா அரசு இல்லை. அதன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் ஆரம்பமானதுடன் அது இன்று தேசிய விடுதலைப் போராட்டமாகவும் வளர்ந்துமிருக்கிறது இதற்குக் காரணம்' சிறிலங்கா அரசின் சமாதானவிரோதப் போக்கேயாகும்.

எனினும் சமாதான வழியில் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணும் வாய்ப்பு எழுமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவே யுள்ளது.

சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிப் பதற்கு அரசாங்க தரப்பிலிருந்து எத்தகைய சமிக்ஞையை நீங்கள் எதிர்பார்கிறீர்கள்?

சமாதானப் பேச்சுவார்த்தையின் அனுசர ணையாளராக நோர்வே அரசையே நாம் ஏற் றுக் கொண்டுள்ளோம். நோர்வேயின் அனுசர ணையின் கீழ் பேச புலிகள் இயக்கம் தயாரா கவே இருக்கின்றது.

எனவே சிறிலங்கா அரசிடம் சமாதானப்பேச் சுக்கள் குறித்த எண்ணம் இருக்குமாயின் அதனை அவர்கள் நோர்வே அரசு ஊடாகத் தெரிவிக்கலாம்.

போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லாத ஒரு நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று கருது கிறீர்களா?

ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமானால், ஒரு வலுவான போர் நிறுத்த உடன்படிக்கையும் அதன் மூலமான பேச்சுவார்த்தைக்குச் சாதகமான சூழலும் அதா வது இயல்பு நிலையும் உருவாக்கப்பட வேண் டும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலி யுறுத்திவருகின்றோம்.

உலகில் தேசிய இனப்பிரச்சினைகள் வெற்றி கரமாக தீர்க்கப்பட்டமைக்கு இத்தகையதொரு அடிப்படையே காரணமாக இருந்துள்ளதை நாம் காணலாம்.

[நன்றி - வீரகேசரி] 12.04.08

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.