Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருப்பி [தொடர் கதை]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற

karuppibk4.jpg

கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...'

மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை.

இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்..

கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி

Edited by yarlpaadi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்.. நீங்க சொன்ன பைவ்ஸ்டார் பில்டிங் வந்தாச்சு... எந்தப்பக்கம் போகனும்?

அப்படியே நேரா போடுங்க... என்று சாரதிக்கு திசை காட்டினான் மணிவண்ணன்.

ஓகே ஓகே நிறுத்து நிறுத்து...

அவசர அவசரமாக கதவைத்திறந்து கொண்டவன்

எவ்வளவு ஆச்சு ..

28 ரூபா சார்..

ஓகே இந்தா பிடி..

சார் காலங்காட்டியும் முதல் சவாரி 50 ரூபாய்க்கு சில்லறை இல்லையே...

ஓகே பரவால நீயே வைச்சுக்கோ.... என்று மிகுதிப்பணத்தை விட்டுவிட்டு அவசர அவசரமாக அந்த கட்டிடத்தை நோக்கி ஓடினான் மணிவண்ணன்..

இன்னும் ஐந்து நிமிடம் தான்... ஐயோ போகனுமே...

அவன் மனது துடிதுடித்துக்கொண்டே அந்த வரவேற்புப் பகுதியை அடைந்தது..

எக்ஸ்க்யுஸ் மீ... வெல்கம் க்ரூப் இன்டர்வியு எங்க நடக்குது சொல்லமுடியுமா...

இரண்டாவது மாடியில ரூம் நம்பர் ஆறு...

ஓகே.. தாங்க்ஸ்

அவசர அவசரமாக அவளுக்கு நன்றி கூறிவிட்டு லிப்ட் நோக்கி ஓடலானான் மணிவண்ணன்..

அந்த நேரம் பார்த்து..

சார் .. சார் என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் அந்த டாக்ஸி ட்ரைவர்..

இவன் ஏன் ஓடி வாறான்... ஒரு கணம் தரித்து நின்றான் மணிவண்ணன்..

சார்..அவசரத்துல இந்த பேப்பர்கள் விழுந்து இருக்கிறத பாக்காம வந்திருக்கிங்க... உள்ள உங்க டிகிரி சர்டிபிகேட் ... அதான் கொடுத்திட்டு போகலாம் என்று வந்தன்...

ஓ மை காட்.. இது இல்லாம இன்றைக்கு இன்டர்வியுவா... ம் .. ரொம்ப தாங்க்ஸ்.... என்று அவனுக்கு நன்றி கூறிவிட்டு .. அடுத்த மூன்று நிமிடங்களில் இரண்டாம் மாடியில் ஆறாம் அறையருகே மணிவண்ணன்...

ஓ... எனக்கு முதலே இங்க இத்தனை பேரா? ஓரு பத்து பேர் இருப்பாங்களா..

அங்கே வரிசையில் கதிரையில் அமர்ந்திருந்தவர்களை தன் மனதுக்குள்ளேயே எடை போட்டவாறு காலியாக இருந்த அந்தக் கதிரையில் அமர்ந்து கொண்டான் மணிவண்ணன்.

ஓடி வந்த களைப்பு பதட்டம் எல்லாம் சேர்த்து அவனுக்கு நன்றாக மூச்சு வாங்கியது..

என்ன சார்? இவ்வளவு களைச்சு வந்திருக்கிங்க .. அருகில் இருந்தவன் மெதுவாகக் குரல் கொடுத்தான்

கொஞ்சம் தண்ணி கிடைக்குமா அவனை எதிர் கேள்வி கேட்டான் மணிவண்ணன்

அதோ அங்க இருக்கே என்று அந்த தண்ணீர் போத்தலை அவன் காட்ட.. நன்றி கூறிவிட்டு எழுந்து சென்ற மணிவண்ணன் ஒரு கப் தண்ணீரை அருந்திக்கொண்டான்..

இப்போது அவன் மனது மெதுவாக அமைதி கண்டது.. ஆனாலும் சிந்தனைகள் சிதறத்தொடங்கின

கருப்பி.. என்னால நம்பவே முடியலயே .. ஒரு பெருமூச்சுடன் கடவுளே.. என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்..

மிஸ்டர் மணிவண்ணன்.. மிஸ்டர் மணிவண்ணன் என்று அந்த க்ளார்க்கின் குரல் இரண்டு தடவை கேட்டது

சுதாரித்துக்கொண்ட மணிவண்ணன் அவசர அவசரமாக திரும்பி யெஸ்.. என்றான்

உள்ளே வாங்க.. அவனுக்கான அழைப்பு

தன் சிதறிப்போன சிந்தனைகளை ஒருமுகப்படுத்திக்கொண்ட மணிவண்ணன் அந்த அறைக்குள் நுழைந்தான்

கடிகார முற்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன

சுமார் அரை மணி நேரம் இருக்கும் ...

அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது

அப்படி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ... மணிவண்ணன் பணிக்கப்பட்டான்.

மீண்டும் வந்து கதிரையில் அமர்ந்து கொண்டான் மணிவண்ணன்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அவனருகே வந்த அந்த க்ளார்க் ..

மிஸ்டர் மணிவண்ணன் இந்த விசிடிங் கார்டுல இருக்கிற அட்ரசுக்கு உடனடியா கிளம்புங்க.. அங்க உங்களுக்கான செகன்ட் இன்டர்வியு இருக்குது..

இன்னும் ஒரு இன்டர்வியுவா

அவனுக்குள்ளேயே ஒரு கேள்வி ..

எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் மாஸ்டர்ஸ் முடிச்சுருக்கன்...

ஒரு பைசாக்கு பிரயோசனமில்லை

என்னதான் செய்ய என்று தன்னைத்தானே உள் மனதில் நொந்து கொண்டவன் வெளிப்புறத்தில் சிரித்தபடி அந்த விசிடிங் கார்டை பெற்றுக்கொண்டான்

கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவுடன் தான் வெயிலின் அகோரமே தெரிய ஆரம்பித்தது

அப்பப்பா என்னே வெயில் என்னே வெயில்.. அங்கே அவன் எதிரே வந்த ஆட்டோ வண்டியை நிறுத்தி ஏறிக்கொண்டான்...

பாதையெங்கும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு.

ஆரம்பமே விறுவிறுப்பாக போகின்றது.

வாசிக்க ஆவலாய் இருக்கேன்.

அது யாருங்க பட்சி.

கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற

நல்லவேளை ஆரம்பத்திலேயே எழுதிட்டிங்க. அந்தளவில் சந்தோசமும் நன்றியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறுத்து நிறுத்துயா... அங்க பாரு..

ப்ரேக் கட்டை அரைவாசியும்.. அந்த பூட்ஸ் கால்கள் அரைவாசியுமாய் தேய்ந்து.. மண்ணில் புழுதி கிளப்பியபடி அந்த சைக்கிள் வண்டி நின்றது...

ஏய்..யாரு..யாரது..

அதிகாரக்குரலில் கர்ஜித்தபடியே சைக்கிளில் இருந்து இறங்கினார் அந்த போலீஸ்காரர்..

சைக்கிளை மிதித்து வந்தவரும் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வந்து இணைந்துகொண்டார்...

புழுதியில் கால்படிய அந்த மரத்தில் சாய்ந்திருக்கும் மணிவண்ணனின் தாடையை கஷ்டப்பட்டு தேடிப்பிடித்துக்கொண்டது அந்த போலீஸ்காரரின் கைத்தடி..

தன் பலத்தால் அவன் முகத்தை நிமிர்த்த முனைந்தார் அவர்..

இதையெல்லாம் கவனத்திலெடுக்கும் நிலையில் மணிவண்ணனின் சூழ்நிலையில்லை..

யாருப்பா இவன்.. முழு ட்ரவுசர் வேற போட்டிருக்கான்.. கையில பைல் ..

முன்னாலிருப்பவரை விலக்கிக்கொண்ட மற்றவர் ..

தம்பி...ஹலோ... யார் அது.. எழுந்திரு எழுந்திரு என்று அதிகாரமாகவே அழைத்துப்பார்த்தார்..

மணிவண்ணனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை..

ஒருவேளை லூசா இருக்குமோ.. இந்த ராத்திரியில ஏதோ வெளியூர் போற மாதிரி உடுத்துக்கிட்டு... என்று ஒருவர் கிசுகிசுக்க... இல்லைண்ணே... ஒரு வேளை ஏதாச்சும் லவ்வு கிவ்வு பெய்லியராச்சோ...

என்னப்பா இவன்.. எதற்கும் தன் தடியால் மேலும் பலமாக அவன் தாடையை நிமிர்த்த முனைந்தார்..

இந்தத்தடவை அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை..

மணிவண்ணன் நிமிர்ந்தான்...

வெறிச்சோடிய முகத்துடன் அவர்களைப் பார்த்தான்...

பின்பு தன் நிலையை உணர்ந்துகொண்டவனாக மெதுவாக எழும்ப முற்பட்டான்...

தடுமாறிய அவன் கைகளைத்தாங்கி அவனைத் தூக்கிவிட்டார்கள் அந்த போலீஸ்காரர்கள் இருவரும்..

தாங்க்ஸ் சார்...

நாகரிகமான அவன் பதிலைப்பார்த்து வியந்துபோன போலீஸ்காரர்களில் ஒருவர்... என்ன தம்பி.. பாத்தா படிச்சபுள்ள மாதிரி இருக்கிங்க..இந்த ராத்திரி நேரத்துல அதுவும்.. இது ரொம்ப மோசமான இடமாச்சே .. இங்க என்ன பண்றிங்க..

அவர் கேட்ட கேள்வியில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அதை வெளியில் சொல்ல மணிவண்ணனால் முடியவில்லை..

ஒன்றுமில்லை சார்.. மன்னிச்சுக்கங்க..

மன்னிப்பெல்லாம் எதுக்குப்பா.. அவ்வளவு நல்ல ஏரியா இல்லை ... நல்ல வேளை எங்க கண்ணுல பட்டிங்க... உள்ளதையெல்லாம் சுருட்டிருவாங்க இங்க உள்ளவங்க... சரி சரி .. என்னவோ தெரியல.. சீக்கிரமா கிளம்புங்க...

தயவாக அவர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்....

இதைக்கேட்ட மணிவண்ணனின் முகத்தில் லேசாக ஒரு புன்முறுவல்...

ஒரு இரண்டடி எடுத்து வைத்திருப்பான்...

அப்போது கையில் ஒரு சிறிய நோட் புக்குடன் அவன் எதிரே வந்த போலீஸ்காரர்... உங்க பேரு என்ன தம்பி... என்று ஆரம்பித்து மணிவண்ணன் பற்றிய விபரங்கள் சிலவற்றை குறித்துக்கொண்டார்...

தள்ளாடித்தள்ளி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான் மணிவண்ணன்...

அதிஷ்டவசம் .. அந்தப்பகுதியால் ஒரு ஆட்டோ வந்தது..

மணிவண்ணன் நடப்பதைப்பார்த்த வண்டி.. மெதுவாக நின்றது..

தலையை வெளியே காட்டி... சார் வண்டி வேணுமா.. என்றான் அந்த ஆட்டோக்காரன்..

பதிலே பேசாத மணிவண்ணன் ஏறி அமர்ந்து கொண்டான்...

அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவன் வீடு...

அந்த வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறான் மணிவண்ணன்... வீட்டின் வலப்புறம் காணப்படும் மாடிப்படிகளில் மெதுவாக ஏறி.. அந்த கும்மிருட்டில் ஒருவாறு பூட்டைத்திறந்து கொண்டு உள்ளே சென்றவனுக்கு...பசியும் தாகமும் அலையாய் உருவெடுத்தது..

உடல் களைப்பை விட உள்ளக்களைப்பு அவனை வாட்டி எடுத்தது... இருந்தாலும் பசி தாங்க முடியவில்லை... மதியமும் ஏதோ ஒரு காரணத்திற்காக தியாகம்.. அவனால் மேலும் பொறுக்கமுடியவில்லை...

எழுந்தான்...

அந்த சுவரோரம் சிறிய சின்க்... முகத்தை அலம்பிக்கொண்டான்...

தனியாக வாழ்பவன்... எப்போதாவது ஒரு நாள் சமைப்பதுண்டு... வீட்டில் உணவு எதுவும் இல்லை...

ஆடை மாற்றிக்கொண்டான்...

கொஞ்சம் தண்ணீர்.... மடக் மடக் என குடித்துக்கொண்டவன்.. வெளியேறினான்..

தெருவோரம் அந்த பாஸ்ட் புட் உணவகம்.... மூன்று மணிவரை திறந்திருக்கும்...

உள்ளே சென்ற மணிவண்ணன்... ஒரு சிக்கன் புரியானி என்றான்...

இதோ அஞ்சு நிமிசம் சார் என்றவனிடம் தலையை ஆட்டிவிட்டு... காற்றோட்டத்திற்காக வெளியே வந்தான்...

சார் டைம் என்ன ஆச்சு..

கையைப்பார்த்த மணிவண்ணன்...

சாரி... என்று திரும்பினான்... கையில் கடிகாரம் இல்லை..

திரும்பிய வேகத்தில் அவன் மூச்சுக்குழாய் அடைத்துப்போகும் அளவுக்கு ஒரு மனம்....

தன்னை அடையாளங்கண்டுகொண்டான் என்பதை உணர்ந்த அவன்.. இரண்டு தடவை குனிந்து மணிவண்ணனுக்கு சலாம் போட்டுக்கொண்டான்...

குடித்திருக்கும் அவனை விட்டு தூர விலகினான் மணிவண்ணன்..

தன் அருகில் நின்றவன் விலகியதை வெட்கமாக நினைத்தவன் மணிவண்ணனுக்கு அருகில் வந்து.. என்னைக்கும் இல்லை சார்.. இன்னைக்குத்தான் சும்மா குடிச்சு பாத்தன்.. ரொம்ப நாறுதா என்றான்..

அவனின் அப்பாவித்தனத்தை உணர்ந்த மணிவண்ணன்.. என்ன குடிச்சிருக்க என்றான்..

இதோ என்று கள்ளச்சாராய போத்தலை நீட்டினான் அவன்..

சார்... இன்னைக்கு ஒரு நாள் தான் இனி குடிக்கமாட்டேன்... சத்தியமா குடிக்க மாட்டேன் ... என்றான்..

அடிக்கடி குடி குடி என்று கூறிக்கொண்டு போத்தலை நீட்டியபடி நிற்கும் அவனைப் பார்க்கும் போது மணிவண்ணனுக்கு ஏதோ தோன்றியது...

திடீரென அவன் கையில் இருந்த போத்தலைப்பிடுங்கி.... மூச்சு விடாமல் அதில் இருந்த மிகுதியை குடித்தான் மணிவண்ணன்...

மணிவண்ணனின் கண்கள் சிவந்தன... இந்தா.. இனி நீ குடிக்காதே என்று அவன் கையில் போத்தலை கொடுத்துவிட்டு .. உள்ளே சென்று சிக்கன் புரியானியைப் பெற்றுக்கொண்டவன் ... வீடு நோக்கி நடந்தான்..

கையில் இருந்த போத்தல் பறிபோன வேகத்தைக்கண்ட ஆச்சரியத்தில் இருந்து அந்தக் குடிகாரன் இன்னும் மீளவில்லை...

வீட்டுக்கதவை திறந்தான் மணிவண்ணன்...

அந்தக்கோப்பையை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிப்பதற்காக சிங்க்கில் இருந்த குழாயைத் திறந்தான்...

அப்போது...

அவனையே அறியாமல் அடிவயிற்றில் இருந்து வாரியெடுத்து வீசியது...

ப்பாக்.........

பெரியதொரு வாந்தி...

அவன் வயிறெல்லாம் எரிந்தது..

தண்ணீர் ... தண்ணீர் ...அவசர அவசரமாக தண்ணீரைக் குடித்தான்...

தலை சுற்றியது... கண்கள் இருண்டன....

அவன் மனமும் போராடிப்பார்க்கிறது....

கட்டிலில் சாய்ந்தான்..

அவன் கண்கள் சுழன்றன...

சிந்தனைகள் சிதறின...

அந்த இடைவெளியில் அவன் கண்களுக்குள் கருப்பி...

கண்ணைப் பலமாக மூடினான்...

திடீரெனத்திறந்தான்...

முடியவில்லை... அவனால் முடியவில்லை...

இப்போது அவன் உள்ளத்துக்குள் கருப்பி.... இதயத்தைத் தட்டினான்...

நெஞ்சைத்தடவினான்... கருப்பி... அவன் உதடுகள் உச்சரித்தன...

அவன் மூளை வேகமாக வேலை செய்தது....

திடீரென எழுந்தான்....

சிக்கன் புரியாணியை அள்ளி இரண்டு வாய் மென்றிருப்பான்...

அவனால் முடியவில்லை... உறக்கம் அவனை ஆட்கொண்டது....

கருப்பியின் நினைவுகளும் அவனோடு உறங்கிக்கொண்டது...

மறுநாள் காலை ... விடிந்ததே தெரியவில்லை...

கண்விழித்த மணிவண்ணனுக்கு தலையைத்தூக்க முடியவில்லை...

ஒரு விதமான வலியுணர்வு...

இருந்தாலும் ஏதோ ஒரு ஞாபகம் வந்தவனாய் எழுந்தான்...

தடால் ... புடால் சத்தங்களின் நடுவே காலைக்கடன்களை முடித்தான்...

இன்று ஒரு கசுவல் லுக்...

இதோ வெளிக்கிளம்பிவிட்டான்....

அதே கோயில் வாசல்...

மணிவண்ணனின் கண்கள் கருப்பியைத் தேடுகின்றன...

நாலாபக்கமும் சிதறி விழும் அவன் பார்வையில் ஏனோ அவள் இதுவரை சிக்கவில்லை...

திடீரென... அதோ .. அதோ ... கருப்பியின் கையில் இருந்த குழந்தை...

அந்தக்குழந்தையைக் கண்டதும் மெதுவாக அதன் அருகில் சென்றான் மணிவண்ணன்...

பாப்பா..உன் பேர் என்ன... குழந்தையை அன்பாக விசாரித்தான்...

குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது...

உன் பேர் என்ன பாப்பா... குழந்தை மீண்டும் சிரித்தது...

தலையை வலமும் இடமுமாக வளைத்து... தன் கண்களை விரித்து அவனைப்பார்த்தது...

அப்போது அங்கே வந்த அந்தப் பிச்சைக்காரி.... இதைக்கேட்டாள்..

அந்தப் புள்ளை ஊமைங்கோ.. அதுக்கு பேச வராது... என்று கூறிக்கொண்டே தன் பாட்டில் சென்று கொண்டிருந்தாள்..

மணிவண்ணனின் கண்கள் கலங்கி இதயம் பதைத்துப்போனது...

அந்தப்பிள்ளையை அப்படியே தூக்கி வாரி... கொஞ்சிக்குலாவ வேண்டும் போல் இருந்தது ... ஆனால் .. ஆனால்.... நான் யார்... நான் எப்படி... எப்படி தூக்குவது... ஒரு பிச்சைக் காரக்குழந்தையை நான் தூக்குவதை யாரும் பார்த்தால்... பார்த்தால் பரவாயில்லை... என்ன நடக்கும் ... மணிவண்ணனின் மூளை பல வகையில் சிந்தித்துக்கொண்டிருக்க.... மறுபுறத்தில்...

யக்கோ ... என் குழந்தையைக் கண்டியளா... கருப்பி தன் குழந்தையைத் தேடிக்கொண்டு வருகிறாள்...

இப்போதுதான் குழந்தை அருகால் சென்ற அந்தப் பிச்சைக்காரி... உன் புள்ள எவனையோ வளைச்சுப்போட்டுட்டு நிக்குதிடியோவ்.. என்று கருப்பியின் கன்னத்தில் தடவி ஒரு செல்லத்தட்டு தட்டிக்கொண்டு போனாள்...

குழம்பிப்போன கருப்பி... ஓடிவந்தாள்...

தன் குழந்தை யாரோ ஒருவனிடம்.. . இல்லை.. இல்லை.. அந்த மணிவண்ணனிடம்....

சிந்திக்க நெடுநேரம் எடுக்கவில்லை... மறு கணம்

ஐயோ... என் குழந்தை....

புள்ள புடி காரன் என் குழந்தையை தூக்குறான்.... ஐயோ காப்பாத்துங்களேன்...

யாராவது வாங்களேன்...

அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்தேறின...

மணிவண்ணன் சுதாரித்துக்கொள்வதற்குள்... கருப்பியின் கூக்குரல் கேட்டு கோயிலுக்கு வந்த கூட்டம் கூடியது... மணிவண்ணன் சுற்றி வளைக்கப்பட்டான்...

புரிந்துகொள்ள முடியாமல் திணறும் அவனது சட்டையில் ஓரு கை ... அவன் முன்னோக்கி இழுக்கப்படுகிறான்... பின்னந்தலையில் படீர் என்று ஒரு அறை... திரும்புவதற்குள்.. யாரோ ஒருவன் மூக்கில் குத்திவிட்டான்... வழியும் இரத்தத்தைத் துடைப்பதற்குள் வயிற்றில் இடி... காலால்...கையால்... தடியால்.. ஆம் .. மணிவண்ணன் நையப்புடைக்கப்படுகிறான்...

எதிர்க்கும் சக்தியில்லாமல் மணிவண்ணன் அப்படியே நிலத்தில் வீழ்ந்தான்...

பிச்சைக்காரக்குழந்தையைப் பிடிக்க வந்த புள்ளைபுடி காரன் என்று அவன் மீது சராமரியான எச்சில் வந்து விழுந்தது... அவனால் எழுந்திருக்க முடியவில்லை...

அனைத்தும் நடந்து முடியவும் .. அந்தப்பக்கம் ரோந்து வந்த போலீஸ் வண்டி அந்த இடத்தில் வந்து ப்ரேக் போடவும் நேரம் சரியாக இருந்தது...

தள்ளுங்க .. தள்ளுங்க.. என்று கூடியிருந்த மக்கள் விலக்கப்பட்டு மணிவண்ணன் எழுப்பப்பட்டான்...

அவன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது...

அந்த இரத்தக்கறைகளுக்கு மத்தியில் மெதுவாகத் திறந்த அவன் கண்களுக்கு நேர் எதிரே கருப்பி.... கையில் குழந்தை....

மெதுவாகத் தன் தலையை உயர்த்தி கருப்பியைப் பார்த்தான்....

அதற்குள் அவனை இழுத்து வண்டியில் ஏற்றிக்கொண்டார்கள்... வண்டி நகர்கிறது... மணிவண்ணனின் பார்வை கருப்பியை விட்டு அகலவில்லை...

அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்துகொண்டாள் கருப்பி..

இடது புறம் இருந்த குழந்தையை வலப்புறம் இடுப்பு மடிப்புக்கு மாற்றிக்கொண்டாள்...

இடக்கையால்.. தன் அழுக்குப்பாவாடையில் ஒரு பகுதியை உயர்த்திஎடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள்....

மணிவண்ணணைப்பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்துவிட்டு..

இடக்கையை நீட்டி .. உள்ளைங்கையில் துப்பினாள்...

உள்ளைங்கையை மேலெடுத்து நெற்றியில் மேல் நோக்கி நீவினாள்..

அவள் நெற்றியெங்கும் அந்த வெற்றிலை கலந்த எச்சில் படலம் பற்றிக்கொண்டது...

திரும்பினாள்... கால்களை பூமியில் தேய்த்தவாறே நடக்கலானாள்...

மணிவண்ணனை ஏற்றிய வண்டியும் காவல் நிலையம் நோக்கி நகர்ந்தது..

நாளை தொடரும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்.. இன்ஸ்பெக்டர் சார்...

வண்டியின் பின்னால் இருந்த கான்ஸ்டபிளின் சத்தம்...

என்னையா...

சார்.. பையனுக்கு இரத்தம் வழிஞ்சு கொண்டே இருக்கு... ஏதாச்சும் ஆகிடப்போகுது... எதுக்கும் ஹாஸ்பிட்டல் போயிட்டு போவமே...

போலீஸ் வண்டி திசை திரும்பியது...

அவசர சைரனை எடுத்து வண்டியின் மேற்புறத்தில் பொருத்திக்கொண்டார் இன்ஸ்பெக்டர் வெற்றி...

பத்து நிமிட அதிவேக ஓட்டம்... இதோ அரச மருத்துவனை வாசல்...

அவசர அவசரமாக இறங்கிக்கொண்ட போலீஸ்காரர்கள் ... கைத்தாங்கலாக மணிவண்ணன்அழைத்துச்செல்லப்ப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர் ...... என்ற அலறல் சத்தம்...

எங்கோ மேலெழுந்து ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்ற கருப்பியின் எண்ணங்கள் கலைந்தன...

திடுக்கிட்டாள் கருப்பி...

எங்கே.. எங்கே என் குழந்தை....

கருப்பியின் கண்கள் அலைமோதின...

எழுந்து ஓடினாள்....

அந்த சுவரோரம் இருந்த அந்தக் கிடங்கு... ஆம்... கருப்பியின் கண்கள் அகல விரிந்தன... பயங்கலந்த படபடப்புடன் எட்டிப்பார்த்தாள்...

ஐயோ..... கருப்பி அலறினாள்....

நிலத்தில் படுத்துக்கொண்டு... கிடங்கிற்குள் கையை இட்டு குழந்தையைத் தூக்க முனைந்தாள்... இல்லை... முடியவில்லை

கருப்பி அலறுகிறாள்...அழுகிறாள்...துடிக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசலில் நின்று வணக்கிவிட்டு ஓடி வந்த களைப்பையெல்லாம் போக்க...

தன் நெற்றியில் விரலை வைத்த கருப்பியை அவள் கைகள் தலை வரை கொண்டு சென்றது...

உச்சந்தலை சொறிகிறது... அவள் சொறிகிறாள்..

ஓடி வந்த களைப்பில் வழிந்தோடிய ஈர அடையாளங்கள் இன்னும் உலரவி்ல்லை.. அழுக்குப்பாவாடையில் ஒரு முனை இடுப்பில் சொருகிய நிலையில் நிற்கும் அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு....

அந்த ஈர்ப்பு... மணிவண்ணனின் தந்தையை மெதுவாக அடியெடுத்துவைக்கச்செய்தது..

அருகில் வந்தார்...

கருப்பி தன் தலையை பக்கவாட்டில் சரித்து அப்பாவியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..

அப்போது கட்டுக்கடங்காமல் விழுந்த அவள் பின்னிப்பழசாகிப்போன கேசத்திற்குள் விரலிட்டு தூக்கிச் சொருகிக்கொண்டாள்...

சட்டைப்பைக்குள் துலாவிய அவர் கைகளில் அந்த ஐநூறு ரூபாய் நோட்டு சிக்கியது...

வேணாமுங்கய்யா....

இல்லம்மா வச்சுக்கோ...

உதவி செய்தவரை வணங்கத்தானே வந்தோம்... எதற்கு பணமெல்லாம் என்று அவள் விலகினாலும் ... அவர் விடவில்லை... என்னவென்று சொல்ல முடியாத அந்த ஈர்ப்புக்கு அவருக்கும் அர்த்தம் தெரியவில்லை...

நடப்பதைப் பார்த்துக்கொண்டே ... தன் போர்வைக்குள்ளும்.. கட்டிலுலுமாய் மணிவண்ணன் நெளிந்துகொண்டான்.. தன் உருவம் வெளியே தெரியாமல் இருப்பதில் அவன் கவனம் ..

வேலாயுதம் முகத்திலும் டாக்டர் கிருஷ்ணன் முகத்திலும் ஒரு மலர்ச்சி...

கருப்பி தன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு ... போகிறாள்...

போகும் கருப்பியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே ... அறைக்குள் வந்தார் மணிவண்ணனின் தந்தை...

டாக்டர்... என்னமோ தெரியல.. அந்தப்பொண்ணு... எங்கயோ அன்யோன்யமா பார்த்துப்பழகின நினைப்பு.... என்று தட்டுத்தடுமாறிப் பேசினார்..

அவர் தோளைத் தட்டிய கிருஷ்ணன்...

சார்... ஒரே மாதிரி ஆறு பேர் இருப்பாங்க.... யாரையாவது பாத்திருப்பிங்க.. அவ முக சாயல் இப்படியிருந்திருக்கலாம் என்று காரணம் கூற வர...

இல்லை டாக்டர்... அந்தப்பொண்ண நான் நல்லா பாத்துப் பழகியிருக்கன் போலயிருக்கே... என்றார்

தன் தலையில் கை வைத்தார்...

வேலாயுதத்தைத்ப் பார்த்தார்...

டாக்டர் கிருஷ்ணனுக்கும் வேறு பதில் சொல்லத் தெரியவில்லை...

அந்த நேரத்தில்...

அப்பா....

மூவரும் ஒரு கணம் திடுக்கிட்டார்கள்...

மணிவண்ணனின் தந்தை குழம்பியே போனார்..

பல வருடங்களுக்குப் பின்னர் இந்த வார்த்தையைக் கேட்டபோது... அவரால் தாங்க முடியவில்லை...

வேலாயுதத்தின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்...

கிருஷ்ணனின் முகமும் மலர்ந்தது...

என்னப்பா.... அவசர அவசரமாக ஆனந்தத்தில் மணிவண்ணன் அருகே ஓடிச்சென்று அமர்ந்துகொண்டார்.... அவன் தந்தை..

உங்க செல்போன் கொஞ்சம் கொடுங்க...

இந்தா ... எடுத்துக்கோ... மணிவண்ணனின் தந்தையின் வார்த்தைகளில் என்றுமில்லாத உற்சாகம் தெளித்தது...

ஒரு போன் போட்டுக்கறன்...

தாராளமா போடுப்பா... அதெல்லாம் ஏன் சொல்லிக்கிட்டு.... அவர் சந்தோசத்தின் உச்சியில் திகழ்ந்தார்...

மணிவண்ணன் மெதுவாகத்தன் கட்டிலை விட்டு எழுந்தான்...

பாத்து...பாத்துப்பா... பெற்ற மனம் துடித்துப்போனது...

இதைப்பார்த்த வேலாயுதத்தின் கண்கள் கலங்கியே போனது...

மணிவண்ணன் அந்த அறையின் மூலை வரை நடந்து சென்றான்... அவன் தனிமையை விரும்புவதை உணர்ந்து கொண்ட மூவரும் அறையை விட்டு வெளியேறினர்....

செல்போனில் அந்த நம்பரை டயல் செய்தவன்.. சத்தமே வெளியே வராமல் இரகசியமாக கதைத்தான்... தன்னை யாரும் பார்க்கிறார்களா என்பதை அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.